Lankamuslim.org

அரசியல் களம்

with 2 comments

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் களம்

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் அமைப்பின் ஸ்தாபகருடனான நேர்காணல்

Lankamuslim.org:இலங்கை முஸ்லிம்களால் இலங்கைக்கு வெளியில் உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட பலமான அமைப்பாக ஐக்கிய ராஜ்யத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் Sri Lanka Islamic Forum UK -SLIF UK- என்ற அமைப்பு கருதப்படுகின்றது. இந்த அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளாக இலங்கை முஸ்லிம்களின் சமூக, சமய, பண்பாட்டு, கலாசார மற்றும் சமூக, அரசியல் தளங்களில் ஒரு பறந்து பட்டதும் சமமானதுமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் ஒரே அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது . ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் என்ற இந்த அமைப்பை ஐக்கிய ராஜ்யத்தில் தோற்று வித்தவர்களில் ஒருவரும் அதன் முன்னாள் தலைவருமான அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் (இஸ்லாஹி). MA. இலங்கை வந்துள்ளார். விரிவாக

~~~~~~~~~~~~

ஒரு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு நிகழும் அவலங்களை அந்த பிரதேசத்துடன் மட்டும் வைத்து பார்க்கமுடியாது

Lankamuslim.org:கருப்பு ஒக்டோபர் மாதமான இந்த மாதத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றபட்டார்கள். முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த இத்தகைய அவலங்கள் ஒரு போதும் எவருக்கும் நிகழக்கூடாது. இந்த கருப்பு ஒக்டோபர் தொடர்பாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் தலைவரும், உலகின் பல நாடுகளுக்கும் சென்று இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபடுபவரும், இஸ்லாஹியா அரபு கலாசாலையின் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை தொடர்பு கொண்டு lankamuslim.org உரையாடியது அதன் போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில் சுருக்கமாக் இங்கு தரப்படுகின்றது. விரிவாக

~~~~~~~~

கருப்பு ஒக்டோபர் தொடர்பாக பாராளுமன்றத்தில் கவனயீர்ப்பு பிரேரனை

lankamuslim.org: பாராளுமன்றத்தில் கருப்பு ஒக்டோபர் தொடர்பாக கவனயீர்ப்பு பிரேரனை ஒன்றை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கான ஏற்பாடுகளை வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் மேற்கொண்டு வருகின்றார். இதற்கான வேண்டுகோளை   கடந்த 14 ஆம் திகதி lankamuslim.org எமது இணையத்தள குழுமம் சார்பாக அமைச்சரிடம் முன்வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. எமது வேண்டுகோளை கவனத்தில்கொண்ட பிரதியமைச்சர் அந்த கவனயீர்ப்பு பிரேரனை இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத ஆரம்ப வாரத்தில் கொண்டுவரப்படும் என்று நேற்று எமக்கு தெரிவித்தார்.விரிவாக

~~~~~~~~

பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத்துடனான பேட்டியின் முழுவடிவம்

M.ரிஸ்னி முஹம்மட்: வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் எழுத்தாளருமான பசீர் சேகுதாவூத்தை lankamuslim.org பேட்டி கண்டது இதன் போது எம்முடன் அவர் பகிர்ந்தவற்றை நான்கு பகுதிகளாக பதிவு செய்திருந்தோம் தற்போது அந்த போட்டி முழுவதையும் பதிவு செய்கின்றோம். முஸ்லிம் அரசியல் வாதிகள் மத்தியில் அடிக்கடி முஸ்லிம் தேசியம் என்ற பிரயோகத்தை பயன்படுத்துபவராக நீங்கள் இருகின்றீர்கள் என்ற வகையில் முஸ்லிம் தேசியம் என்று எதை நீங்கள் அடையாளப் படுத்துகின்றீர்கள் ? விரிவாக

~~~~~~~

ஸியாரம் உடைப்புக்கு நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வேன்: நீதியமைச்சர்

‘அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன். ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன்’ என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். விரிவாக

~~~~~~~

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

lankamuslim.org: நேற்று முன்தினம் இரவு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று பாதுகாப்புச் செயலாளரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா lankamuslim.org க்கு வழங்கிய தகவலை இங்கு தருகின்றோம் .

நேற்று முன்தினம் இரவு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று பாதுகாப்புச் செயலாளரின் இல்லத்தில் இடம்பெற்றது இந்த சந்திப்பில் மூன்று விடையங்கள் தொடர்பாக பேசப்பட்டது.விரிவாக

~~~~~~~

இலங்கை அரபு கலாசாலைகளுக்கான ஒரு பொதுப் பாடத்திட்டம் தயார்: அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார்

lankamuslim.org: அரபு கலாசாலைகளுக்கான பொது பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப் படுத்தும் முயற்சி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் உப தலைவர்களுள் ஒருவரும் ஜாமியா நழீமியாவின் பிரதிப்பணிப்பாளரும், இத்திஹாதுள் மதாரிஸில் அரபியா ஒன்றியத்தின் உறுப்பினருமான அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹமத் அவர்களை lankamuslim.org தொடர்பு கொண்டபோது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். விரிவாக

~~~~~~~

முஸ்லிம்களின் வரலாற்று சின்னமொன்று உடைத்தெரியப் பட்டுள்ளது

lankamuslim.org: வட மத்திய மாகாணமான அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் ஊர்வளமாக வந்த பெரும்பான்மை இனக் குழுவொன்று மிகவும் பழமையான ஸியாரம் ஒன்றினை உடைத்து தகர்த்துள்ளது என்று அனுராதபுரம் பிரதேச மக்கள் lankamuslim.org க்கு தெரிவித்தனர். அநுராதபுரம், குருணாகல் சந்தியில் அமைந்திருந்த எல்லாளன் சிலை அமைந்துள்ள பகுதியில் ஒட்டுப் பள்ளம் என்று அழைக்கபடும் மிகப் பழமைவாய்ந்த முஸ்லிம் ஸியாரம் ஒன்றினை நேற்று மாலை அங்கு வந்த ஒரு குழுவினர் முற்றாகத் தரைமட்டமாக்கிச் சென்றுள்ளனர். விரிவாக

~~~~~~~

யாழ்ப்பாணம் முஸ்லிம் பகுதி சிதைவுகளில் இருந்து மெல்ல முன்வருகின்றதா ?

lankamuslim.org: வடமாகாண முஸ்லிம்கள் புலிப் பயங்கரவாதிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு எதிர்வரும் கருப்பு ஒக்டோபருடன் 21 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இந்த நிலையில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை மேற்கொண்ட சக்திகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்டுள்ள நிலையிலும் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மந்தகரமாக உள்ளது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களில் ஓர் அளவு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று வருகின்றபோதும் யாழ்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் மிகவும் மந்தகரமாகவுள்ளது. விரிவாக

~~~~~~~

பாதுகாப்பை பிரதேசத்தின் இளைஞர்களை கொண்டு ஏற்பாடு செய்து வருகின்றோம்

M.ரிஸ்னி முஹம்மட்: பிரதேசத்தின் பாதுகாப்பை பிரதேசத்தின் இளைஞர்களை கொண்டு ஏற்பாடு செய்து வருகின்றோம் போலீசாரை மக்கள் கண்டாள் அச்சப்படுகின்றனர் என்று மாகாண சபை உறுப்பினர்  எஹ்யா ஆப்தீன் தெரிவித்தார். புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தல் கடந்த வெள்ளிகிழமை தொடக்கம் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இது புத்தளம் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் மர்ம மனிதன் தொடர்பாக அசாதாரண நிலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வடமேல் மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எஹ்யா ஆப்தீனுடன்  lankamuslim.org தொடர்பு கொண்டு இது தொடர்பாக வினவியபோது விரிவாக

~~~~~~~

புது டில்லியில் இருந்து எமக்கு எந்த அழைப்பும் வரவில்லை: ரவூப் ஹகீம்

M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கை இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுவதற்கு வருமாறு இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , நீதியமைச்சருமான ரவூப் ஹகீமை lankamuslim.org தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான எந்த அழைப்பும் எமக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.விரிவாக

~~~~~~~

வவுனியா பட்டானிசூர் காணி முஸ்லிம்களுக்கு சொந்தமானது :அமைச்சர் ரிஷாத்

M.ரிஸ்னி முஹம்மட்: வவுனியா நகர சபைக்கு சொந்தமான குமரன்காட்டுப் பகுதியில் இந்துக் கோவிலுக்கு அருகில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நகர சபையின் அனுமதி இன்றி இராணுவத்தின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணித்து வருவதா வெளியான செய்திகளை வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மறுத்தார். மேற்படி குற்றசாட்டு தொடர்பாக அவரை lankamuslim.org தொடர்பு கொண்டபோது அங்கு பள்ளி வாசல் கட்டப்படவில்லை ஒரு கலாச்சார மண்டபமும் ஒரு கடைத் தொகுதியும் நிர்மானிக்கப்படுகின்றது. அந்த காணி முஸ்லிம்களுக்கு சொந்தமானது. முன்னர் அந்த காணியின் ஒரு பகுதி முஸ்லிம்களால் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வழங்கப்பட்ட கணியில்தான் தற்போது கோவிலும் கடைத் தொகுதியும் கட்டப்பட்டுள்ளது. விரிவாக

~~~~~~~

யாழ்.மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் தொடர்ந்தும் சபை பகிஷ்கரிப்பு

இஷாக்: யாழ்.மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் மாநகர சபை அமர்வை தொடர்ந்தும் பகிஷ்கரித்து வருகின்றனர். கடந்த மாதம் ஜூலை 28 ஆம் திகதி மூன்று கோரிக்கைகள் அடங்கிய விசேட கவனயீர்ப்பு பிரரேரணையினை முன்வைத்து வெளியேறிசென்றனர். இருந்தும்  இது வரையிலும் முன்வைக்கப்பட்டகோரிக்கைகள் தொடர்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர்கள் தமது பகிஷ்கரிப்பை தொடர்ந்து வருகின்றனர் விரிவாக

~~~~~~~

ரமழான் மாத விடுமுறை தொடர்பான விடையத்தை பல கோணங்களில் பார்க்க வேண்டும் : அஷ்ஷெய்க். அகார்

lankamuslim.org: ரமழான் மாதத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக கடந்த மாதம் தொடக்கம் முஸ்லிம் அரசியல் வாதிகள் மத்தியில் இழுபறிநிலை தோன்றியுள்ளது. இது தொடர்பாக சமூக, இஸ்லாமிய சிந்தனையாளரும், ஜாமியா நழீமியா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளரும், அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் உபதலைவருமான அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்தை தொடர்பு கொண்டு lankamuslim.org வினவியபோது அவர் ‘இந்த விடயம் ரமழான் மாதத்தில் முஸ்லிம் பாடசாலைகளை நடத்துவதா, இல்லையா  என்பதுடன் மாத்திரம் சமந்தப்பட்ட ஒரு விவகாரம் மட்டுமல்ல. இதை பல கண்ணோட்டங்களில் ,பல கோணங்களில் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.’ என்று தெரிவித்தார்.விரிவாக

~~~~~~~

பேரின அச்சுறுத்தலினால் பாத்தியா மாவத்தை மஸ்ஜித் மூடப்பட்டுள்ளது !

M.ரிஸ்னி முஹம்மட்:கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றுக்குள் பெளத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப் பட்டதால் மஸ்ஜித் நேற்று ஞாயிற்று கிழமையுடன் ஜமாஅத் தொழுகைகள் நடைபெறாது மூடப்பட்டுள்ளதாகவும் அந்த மஸ்ஜிதின் தினமும் தொழுகையில் ஈடுபட்டுவந்த நபர் முஹமத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.விரிவாக

~~~~~~~

முஸ்லிம் மாணவ மாணவியர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதா ?: பொறியலாளர் நிஷாத் பதில்

M.ரிஸ்னி முஹம்மட்: இராணுவ முகாம்களில் வதிவிட தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் மாணவ மாணவியர் தொடர்பாக தற்போது முகாம்களில் சாதகமான நிலை ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலர் தாம் பல மணிநேரம் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவை சந்தித்து இது பற்றி பேசியுள்ளதாகதாகவும் அதன் பின்னர் முஸ்லிம் மாணவர்களின் விடையம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.விரிவாக

~~~~~~~

முஸ்லிம்கள் அரபு மொழியை தமது பிரதான மொழியாக எடுத்துக் கொள்ளவேண்டும்

கடந்த நான்காம் திகதி ஆங்கிய பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரை ஒன்றை எழுதியுள்ள முஸ்லிம் எழுத்தாளரும், மனிதவுரிகளுக்கான  மற்றும் முஸ்லிம் சமூக செயல்பாட்டாளருமான   எம்.ஐ.எம்.மொஹிதீன் இலங்கை முஸ்லிம்கள் அரபி மொழியை கற்றுகொண்டு தமது பிரதான மொழியாகவும் வீடுகளிலும் பேசும் மொழியாக மாற்றிக்கொள்ளவேண்டும்  என்று தெரிவித்துள்ளார் இவரின் இந்த கட்டுரை ஊடங்களின் கவனத்தை பெற்றுள்ளது இவர் எழுதிய ஆங்கில கட்டுரை எமது ஆங்கில இணையதளமான lankamuslim.com இல் கடந்த 4 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது விரிவாக

~~~~~~~

முஸ்லிம்களின் கையை விட்டு போகும் புத்தளம் கற்பிட்டி:ஆப்தீன் யஹ்யா

M.ரிஸ்னி முஹம்மட்: கற்பிட்டி பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் காலக்கிரமத்தில் சிறுபான்மையாக மாறுவதற்க்கு அதிக வாய்புகள் காணப்படுவதாக வடமேல் மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆப்தீன் யஹ்யா எச்சரிக்கை விடுத்தார்

கற்பிட்டி பிரதேசத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அபிவிருத்தி செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக சுற்றுலாத் துறைக்கென பல்லாயிக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசு சுவீகரித்து வருவதன் மூலம் இது தத்துரூபமாக தென்படுவதாக அவர் தெரிவித்தார்.விரிவாக

~~~~~~

Written by lankamuslim

ஒக்ரோபர் 19, 2011 இல் 9:26 பிப

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. yes

    jm.nasreen

    ஜூன் 19, 2012 at 11:42 பிப

  2. NAMATHU SAMOOKA AVALANKALAI VELIKKONTU VANTHU THEERVUKALAI NOAKKI NAKARTHTHA SLMC AI PALAPPTUTHTHA VEALAI SEIYYUMAARU SAMOOKATHTHIN ANAITHTHU THARAPPAIYUM ALAIKKINREAN……………………………………………………………….

    YL.MANSOOR

    ஜூன் 8, 2014 at 1:25 பிப


பின்னூட்டமொன்றை இடுக