Lankamuslim.org

ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு சிறைத்தண்டனை !!

with 3 comments

boஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை பொது பலசேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தால் இந்த தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக அவருக்கு 3000 ரூபா அபராதமும் பாதிக்கப்பட்டவருக்கு 50000 ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது

2016 ஜனவரி 25ம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தார் இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பிற்கு இன்று திகதி குறிக்கப்பட்டிருந்த நிலையில், ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

ஜூன் 14, 2018 இல் 12:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. அலுத்கமையில் கலவரத்தை தூண்டியமைக்கா – இல்லை

    முஸ்லிம்களை இழிவுபடுத்தியமைகாகவா ? இல்லை

    அல்லாஹ்வை கேவலபடுத்தி பேசியமைக்காகவா ? இல்லை

    4 போலிஸ் டீம் போட்டு அவரை தேடிய போது 25 கடைகாலுக்கி தீ வைத்தமைக்காகவா ? இல்லை

    ஆக மொத்தத்தில் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களுக்குகாக அல்ல

    Asaf

    ஜூன் 14, 2018 at 4:53 பிப

  2. அலுத்கமை கலவரம் நடந்து 1500 நாட்கள் கடந்தும் நீதி இல்லை !!
    அல்லாஹ்வின் லப்பை என கூறியமைக்கும் நீதி இல்லை
    ஆனால் NGO காரன் எக்னெலிகொடவின் மனைவிக்கு ஏசியமைக்கு 6 மாத சிறை நல்லா இருக்குடா உங்க ஊட்டு ஞாயம் …

    உங்க உம்மா உம்மா எங்க உம்மா சும்மா !

    Asaf

    ஜூன் 14, 2018 at 4:54 பிப

  3. அரசாங்கம் இராணுவ வீரர்களுக்கு எதிரான முன்னெடுத்த அடக்குமுறைகளுக்கு எதிராக
    செயற்பட்டமைக்கு ஞானசார தேரருக்கு கிடைத்த பரிசு இச் சிறைதண்டனை ஆகும். இது குறித்து
    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கவனத்தில்
    கொள்ளவில்லை என்றால் ஒட்டுமொத்த பௌத்தர்களையும் வீதியில் இறக்கி போராட தயாராக உள்ளதாக
    பொது பல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஹோமாகம நீதவான் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்
    ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மகால் கந்த சுகத தேரர் ஊடகங்களுக்கு கருத்து
    தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

    பௌத்த பிக்குகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்கப்படும் வரை எமது போராட்டத்தை
    நிறுதப்போவதில்லை. ஞனசார தேரர் கைது செய்யப்பட்டிருந்தாலும், எதிர் காலத்தில் அவர்
    இல்லாமல் போனாலும் அவரது குரல் என்றும் ஓயப்போவதில்லை.

    பௌத்த பிக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை எமது
    போராட்டம் ஓயப்போவதில்லை. அதே வேலை இன்று முதல் புதிய வகையில் எமக்கான நீதிக்காக
    போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

    இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே கடந்த தேர்தலில் இந்த அரசாங்கம் பாரிய தோல்வியை
    சந்திக்க நேர்ந்தது. அது மாத்திரமல்ல எதிர்வரும் தேர்தலிலும் இந்த அரசாங்கம் தோல்வியையே
    சந்திக்கும் என்பதில் மாற்றம் இவ்லை.

    ஞனசார தேரர் விரைவில் விடுதலை செய்யப்படுவார். அதற்காக எந்த மட்டத்திலும் சென்று போராட
    நாம் தயாராகவுள்ளோம். எவ்வாறிருப்பினும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள்
    பற்றி பேசுவதை நிறுத்தப்போவதுமில்லை. அதனை யாராலும் நிறுத்தவும் முடியாது.

    Ibrahim Ali

    ஜூன் 14, 2018 at 6:15 பிப


பின்னூட்டமொன்றை இடுக