Lankamuslim.org

Archive for மே 2010

மனிதாபிமான உதவி கப்பல்கள் மீது இஸ்ரேலிய பயங்கரவாத வெறியாட்டம்

leave a comment »

காஸாவுக்கு நிவாரண் பொருட்களை ஏற்றி சென்ற கப்பல்களை இஸ்ரேல் பயங்கரவாதிகள் தாக்கி பலரை கொலைசெய்துள்ளனர்: முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமுகமாக சைப்ரஸ் நாட்டின் துறை முகத்திலிருந்து நிவாரண உதவிப் பொருட்கள் கொண்ட ஒன்பது கப்பல்கள் கொண்ட நிவாரண தொகுதியை  காஸாவில் இருந்து 65 K.M தூரத்தில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து  இஸ்ரேலிய பயங்கரவாத கடற்படையும்  , விமான படையும் சுற்றிவளைத்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் 6 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது ,15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயம் அடைத்துள்ளதாகவும் இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம் சற்று முன்னர் அறிவித்துள்ளது ஆனால் கொல்லப்பட்டுள்ளவர்கள் 20 விடவும் அதிகம் என்று  இஸ்ரேல ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல் தொகுதி நேற்று புறப்பட்டு இன்று அதிகாலை காஸாவை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த கப்பல் தொகுதி முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு பெருட்களை ஏற்றி சென்றுள்ளது மிக மோசமாக தாக்கப்பட்டுள்ள மனிதாபிமான நிவாரண உதவியாளர்கள் 50 நாடுகளிலிருந்து 800 பிரதிநிதிகள் கொண்ட பிரீடம் போளோடில்லா Freedom Flotilla Convoy Video விரிவாக பார்க்க..

Written by lankamuslim

மே 31, 2010 at 4:51 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பியுள்ளார்

with one comment

இவர் டாக்டர் ஸாகிர் நாயிக்குடன் Concept of God in Hinduism & Islam என்ற தலைப்பில் சிறந்த மிகவும் பிரபல்யமான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிபிட தக்கது

சர்வதேச வாழும் கலை அமைப்பின்  இஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ  ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பியுள்ளார்  கொலை செய்ய வந்தவன் யார், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது “இச்சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது’ என்று ரவிசங்கர் தெரிவித்தார். நேற்று நிகழ்ச்சி முடிந்த பின், ரவிசங்கர் காரில் ஏறுவதற்காக வெளியில் வந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரவிசங்கரை நோக்கி   சுட்டுள்ளான். துப்பாக்கியால் சுட்டவனை ஆசிரம பாதுகாவலர் மற்றும் பக்தர்கள் சேர்ந்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்தாகவும் ஆசிரம வட்டாரம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ; நான் அமைதியையும், ஆன்மிகத்தையும் பரப்பி வருகிறேன் . இது தான் எனது இலட்சியம். எனக்கென எதிரிகள் யாரும் இல்லை. எனது ஆசிரமத்தில் நடந்த சஸ்தாங் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தான் என் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என நினைக்கிறேன். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. மற்ற மத ரீதியிலான அமைப்பினர் யாரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கவில்லை என்று கூறியுள்ளார் . என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

மே 31, 2010 at 11:51 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகான முஸ்லிம்களின் கல்வி பின்னடைதுள்ளது

leave a comment »

கல்முனை சமூக முனேற்ற ஆய்வு மையம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கடந்த காலங்களுடன் ஒப்டுகையில் கிழக்கு மாகான முஸ்லிம்களின்  கல்வி பின்னடைதுள்ளது என்று தெரிவித்துள்ளது இந்த  ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்விக்கான வசதி வாய்புகள் குறைத்தன காலங்களில் கல்வியில் கிழக்கு மாகான முஸ்லிம் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் கடந்த ஐந்து வருடங்களாக பின்னடைதுள்ளது என்று தெரிவித்துள்ளது சுனாமியின் பின்னர் எமது சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் கல்வி வறுமையை போக்குவதற்கு புத்திஜீவிகள் , பொது அமைப்புகள் , சமூக நலன் விரும்பிகள் ஒன்றிணைத்து செயல்படவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வளங்கள் கொண்ட பாடசாலைகள் குறைவாக இருந்தது ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்பட்டது , மாலை நேர வகுப்புகள் பெரிதாக இருக்கவில்லை ஆனால் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் சிறப்பாக இருந்தது என்று கூறும் இந்த அமைப்பு முஸ்லிம்களின்  கல்வி பின்னடைவுக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்ட சில அடிப்படையான காரணங்கள் என்று அந்த அமைப்பு சில வற்றை சுட்டி காட்டியுள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 31, 2010 at 10:37 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரைம்ஸ் ஒவ் இந்தியா’வுக்கு ‘Times of India’ ஜனாதிபதி நேற்று வழங்கிய பேட்டியில் இருந்து

leave a comment »

ரைம்ஸ் ஒவ் இந்தியா’வுக்கு ‘Times of India’ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று  அளித்த பேட்டியில் இப்படிக் கூறியுள்ளார்.

ரைம்ஸ் ஒவ் இந்தியா’ யாவின் நிரூபர்    ஒருநாள் முழுவதும் கடும் வேலைக்குப் பின் எப்படி ஆறுகிறீர்கள், படங்கள் பார்பதுண்டா ? என்று வினவியதற்கு -இந்திப் படம் பார்த்து மகிழ்கிறேன். அண்மையில் சாருக்கானின் படமான “எனது பெயர் கான்’ என்ற படத்தைப் பார்த்தேன். இது மேற்குலகில் முஸ்லிம்கள் படும் இன்னல்களை மிகவும் நன்றாக விவரிக்கின்றது. எம்மை மனித உரிமைகளை மீறுகிறோம் என்று குறை கூறுபவர்கள் இக்குற்றத்தையே தமது சொந்த நாடுகளில் செய்கிறார்கள் என படத்தைப் பார்த்த பின் நினைவில் கொள்கிறேன்-  Shahrukh Khan’s film “My Name Is Khan.” It has captured the discrimination of Muslims in the West so well. I remember thinking after watching the film that people who are accusing us of human rights violations are themselves doing so in their own country என்று  தெரிவித்துள்ளதுடன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 31, 2010 at 9:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிளிநொச்சி கணேசபுரத்தில் மனிதப்புதைகுழி

leave a comment »

கிளிநொச்சி நகரை அண்டிய கணேச புரத்தில் மனிதப் புதைகுழி இருப்பது குறித்து வெளியான தகவலை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலசலகூடக் குழியைத் துப்புரவு செய்ய முற்பட்ட வேளை, அங்கு கறுப்புப் பொலித் தீனால் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் இருப்பதை வீட்டின் உரிமை யாளர் கண் டுள்ளார். இதுகுறித்து உரிமையாளரான நவரத் தினம் என்பவர் கிராம சேவையாளரின் உத வியுடன் பொலிஸில் முறைப்பாடு செய் துள்ளார். இந்த முறைப்பாட்டை அடுத்து கிளி நொச்சி நீதிவான் எஸ். சிவகுமார் சடலங் கள் இருப்பதாகக் கூறப்படும் மலசலகூடக் குழியை (புதைகுழியை) நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். சம்பவ இடத் தில் நீதிவான் விசாரணையும் நடத் தினார். கிளிநொச்சி வைத்தியசாலை டாக்டரும் அங்கு பிரசன்னமாகி இருந்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 31, 2010 at 9:04 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வானாறு முஸ்லிம் கிராமத்தை கந்தளாய் பிரதேசசெயலர் பிரிவுடன் இணைக்க வேண்டாம்

leave a comment »

திருமலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வானாறு முஸ்லிம் கிராமத்தை திருமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் பிரதேசசெயலர் பிரிவுடன் இணைப்பதற்கு அங்கு வாழும் முழு முஸ்லிம்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்க படுகின்றது  கந்தளாய் பிரதேசசெயலகம் சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் ஐந்து பிரதேச செயலகங்களுள் ஒன்று. வானாறு கிராமம் கிண்ணியா பிரதேச செயலகத்தின்கீழ் வருகிறது. கிண்ணியா பிரதேச செயலகம் பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்டுள்ளது. திருமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகங்களுள் சேருவில, கந்தளாய், கோமாரங்கடவல, மொரவேவா, பதவியா ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட பிரதேசசெயலகப் பிரிவுகளாகும். வானாறு முஸ்லிம் கிராமத்தை கந்தளாய் பிரதேச செயலகத்துடன் இணைப்பதன் உள்நோக்கம் தங்களுடைய பகுதியில் பெருமெடுப்பிலான சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காகவே இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 30, 2010 at 8:44 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

Webster Tarpley: பாகிஸ்தானில் இடம்பெறும் கொலைகளை செய்வது அமெரிக்கா

leave a comment »

Webster Tarpley அமெரிக்க புலனாய்வு எழுத்தாளரும் ஊடகவியலாலருமான இவர் பாகிஸ்தான் மக்கள் சந்தைகளிலும் , பொது இடங்களிலும் கொல்லபடுவது அமெரிக்காவினால் என்று கூறுகின்றார்

அமெரிக்க புலனாய்வு எழுத்தாளரும் ஊடகவியலாலருமான வேப்ச்ட்டர் தர்ப்லே- Webster Tarpley – பாகிஸ்தானில் நடைபெறும் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் அமெரிக்கா என்றும் பிளக் வேட்டர் -Black-Water என்ற அமெரிக்காவின் தனியார் இராணுவம் இந்த குண்டுகளை வைப்பதாகவும் தொடர்ந்தும் குற்றம் சாட்டிவருகின்றார் அமெரிக்கா பாகிஸ்தானில் தனது நலன்களை பேணும் இராணுவ குழுக்களை உருவாக்கியுள்ளதாகவும் அவற்றை பயன் படுத்தி அழிவு நாசவேலைகள் செய்வதாகவும் பாகிஸ்தானில் பரவலான குற்றசாட்டுகள் உள்ளன Webster Tarpley சில மாதங்களுக்கு முன்னர் வழங்கியுள்ள அவரின் பேட்டியை இங்கு பார்க்கவும் வீடியோ

Written by lankamuslim

மே 30, 2010 at 7:57 பிப

அப்கான் இல் பதிவிடப்பட்டது

வீடுகள் தகர்ப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை!

leave a comment »

கொம்பனித்தெரு பகுதியிலுள்ள வீடுகளை சட்டவிரோதமாக கட்டப்பட்டவை என்று கூறி   இடித்து தகர்த்து   அகற்றியமை தொடர்பான  பாராளுமன்றத்தில்  ஒத்திவைப்பு வேளை பிரேரணை  ஒன்று  கொண்டுவரப் படவுள்ளதாக  தெரிய வருகின்றது சட்டவிரோதமாக கட்டிடங்கள்  என்று  தகர்க்கப்பட்டமையால் முஸ்லிம்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்    எதிர் வரும் பாராளுமன்ற அமர்வின் போது  இந்த ஒத்திவைப்பு  பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வீடுகள் தகர்க்கப்பட்டமையை பாராளுமன்றத்தில் பாராளுமன்ற  உறுபினர்களின் கவனத்துக்கு கொண்டுவந்து அங்கு  பாதிக்கப் பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு உரிய நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க முழு முயற்சிகளையும் மேற்கொள்ள  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

மே 29, 2010 at 2:43 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை கடலுக்கு சென்ற மூன்று ஆழ்கடல் மீனவர்களை காணவில்லை !

leave a comment »

கல்முனை பிரதேசத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மூன்றுஆழ்கடல் மீன்பிடி மீனவர்களை காணவில்லை  கடந்த 18ம் திகதி பகல் 2மணியளவில்  ஆழ்கடல் இயந்திரப்படகு மூலம் மீன்பிடிக்கச் சென்ற இந்த மூன்று மீனவர்களும்   நேற்று இரவுவரை  கரைக்குத் திரும்பவில்லையென கல்முனையில் .இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன  இயந்திரப்படகு மூலம் கடலுக்கு சென்ற  கல்முனைக்குடியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் மற்றும்  ஹஜ்  முஹம்மட் அஸ்வர்  வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.மாஹிர் ஆகியோர்  காணாமல் போயுள்ளவர்களாவர். இது சம்பந்தமாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக ஆழ்கடல் இயந்திரப்படகு உரிமையாளர் எம்.றபீக் தெரிவித்துள்ளாக அறிய முடிகின்றது

Written by lankamuslim

மே 29, 2010 at 1:58 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேர்தல் முறை மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

leave a comment »

தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துகள் ஆளும்தரப்பிலும் எதிர் தரப்பிலும் தோன்றியுள்ளதால், இவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் முறை தொடர்பான மாற்றங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது முன்னர் இந்த வருடம் நவம்பர் மாதம் முடிவதற்கு முன்னர் தேர்தல் முறை மறுசீரமைப்பு ஒன்றை கொண்டுவர அரசு முடிவு செய்திருந்தது எனிலும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படாததன் காரணமாகவே அரசு இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்க படுகின்றது.

தேர்தல்முறை மாற்றம் தொடர்பான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு அரசியல் கட்சிகளுக்கும், சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனிலும் ஒருசாரார் தேர்தல் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையை மீண்டும் அமுல்படுத்துமாறும் மற்றும் ஒருபிரிவினர் விகிதாசார பிரதிநிதித்துவ முறையையும் , தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையையும் உள்ளடக்கிய ஒரு கலப்புத் தேர்தல் முறையை கொண்டுவருமாறும் கூறுவதாக தெரிவிக்கபடுகின்றது

தற்போது உள்ள தேர்தல் முறையை மாற்றும் போது தமது பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையிலான முறை ஒன்றை அமுலுக்கு கொண்டுவருமாறு முஸ்லிம் , தமிழ் கட்சிகள் வலியுறுத்து வருகின்றமை குறிபிடதக்கது மேலும் அரசுக்கு ஆதரவு வழங்கிவரும் முஸ்லிம் , தமிழ் கட்சிகள் தமது பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையிலான முறை ஒன்றுக்கே தமது ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது

Written by lankamuslim

மே 29, 2010 at 12:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இப்பாகமுவ மஸ்ஜித் நிர்மாண பணிகளை மீள ஆரம்பிக்கப் பணிப்பு

leave a comment »

இணைப்பு-3

குருநாகல் மாவட்டத்தில்  இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெல்சிறிபுர கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் துரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான கோகறல்லயில் உள்ள ஹெலை பகுதியில் அமைத்துள்ள  நூர் ஜும்மாஹ் மஸ்ஜிதின் உள்பகுதியினுள் 20.5.2010 அன்று நுழைந்த பெரும்பான்மை இன   குழுவொன்று அங்கிருந்த மின்சார விளக்குகள் ஏனைய உபகரணங்கள் என்பன வற்றை அடித்து உடைதுள்ளதுடன் மஸ்ஜிதின் கட்டிட தொகுதிக்கும் சேதம் ஏற்படுத்தினர்  இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆந்த மஸ்ஜிதின் நிர்மான பணிகளை மீட்டும் தொடங்குமாறு மஸ்ஜித் நிர்வாகத்தை கேட்டுள்ளது இந்த மஸ்ஜித் தாக்கப்பட்டது தொடர்பாக இப்பாகமுவ பிரதேச செயலாளர் மேற்கொண்டு வரும் விசாரணை அறிக்கை வெசாக் விடுமுறைகளுக்குப் பின்பே தமக்கு கிடைக்கும் என்றும் எனிலும் அதற்கு முன்பே மஸ்ஜித் நிர்மான பணிகளை ஆரம்பிக்குமாறு நிர்வாகத்தினரை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுகொண்டுள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 29, 2010 at 11:47 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மஸ்ஜித் 20 வருடங்களின் பின்னர் இயங்க தொடங்கியுள்ளது

with one comment

யாழ்ப்பாணம் பெரிய பள்ளி- The Jaffna Grand Mosque இன்று மீண்டும் 20வருடங்களில் பின்னர் திறந்துவைக்கப்பட்டு நிகழ்சிகள் நடைபெறுகின்றது என்று எமது யாழ் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 3000 தொடக்கம் 4000 வரையிலான முஸ்லிம்கள் தொழக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது இன்று நண்பகல் இடம்பெற்ற ஜும்மா தொழுகையுடன் இந்த மஸ்ஜித் திறக்கப்பட்டுள்ளது .

1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிகள் புலிகளினால் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், இந்த மஸ்ஜிதும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஏனைய 20 மஸ்ஜிதுகளும் கைவிடப்பட்டிருந்தது. தற்போது மஸ்ஜிதுகள் ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது இன்றைய நிகழ்ச்சியில் மௌலவி அப்துல் ஹாலிக் ஜும்மாஹ் குத்பாவை நிகழ்த்தியுள்ளார் , யாழ்ப்பாணம் மற்றும் பிறமாவட்ட ஆலிம்கள் மற்றும் பொது மக்கள் பலர் இதில் கலந்துகொண்டுதுள்ளனர்

போர்த்துகீசர் காலத்தில் போத்துக்கீசர்கள் யாழ்பாணத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க சர்வதேச வியாபாரிகளாக முஸ்லிம்களை  கண்டனர் கொழும்பு துறை பகுதியில் இருத்த முஸ்லிம்களில் அணைத்து கட்டிடங்களும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 28, 2010 at 4:39 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கண்டி , அக்குரணை, கம்பளை பிரதேசங்களுக்கு பி.ஐ.டி.பற்றீரியா

leave a comment »


டெங்கு நோயைப் பரப்பும்  நுளம்பைக் கட்டுப்படுத்தும் பி.ஐ.டி.பற்றீரியாவை இறக்குமதி செய்து  கண்டி மாவட்டத்தில்   பயன் படுத்தத் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மைந்திரிப்பால சிரிசேன தெரிவித்துள்ளார். கடந்தவருடம் கியூபா நிபுணர்குழு இலங்கைக்கு விஜயம் செய்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கண்டி நகர், அக்குரணை, கம்பளை ஆகிய இடங்களில் இது பயன்படுத்தப் படவுள்ளது.

இது அதிகரித்த செலவை ஏற்படுத்திய போதும் இம்முறையைக் கையாண்டு டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும்படி ஜனாதிபதி ஆலோசனைக்கு அமைவாக  சுகாதார அமைச்சு இதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது . கண்டி மாவட்டத்தில் கடந்த வருடம் வேகமாக டெங்கு பரவிய இடங்களான அக்குரணை , கண்டி நகர், கம்பளை ஆகிய பகுதிகளில் இம்முறையும் டெங்கு வேகமாக தலைகாட்ட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்க படுகின்றது  .

Written by lankamuslim

மே 27, 2010 at 5:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்கள் கைது

leave a comment »

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இரு பிரதேசங்களையும் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகும் போது அவர்களிடமிருந்த கையடக்க தொலைபேசிகளில்  புலிகளுக்குச் சார்பான வீடியோ காட்சிகள் இருந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார் . வடக்கின் பாண்டிருப்பு மற்றும் எருவில் போன்ற பிரதேசங்களைச் சேர்த்த இவ்விருவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடுத்தே இந்த கைது இடம்பெற்றதாகவுநாடு கடந்த தமிழீழ அரசாங் அவர் கூறியுள்ளார்

Written by lankamuslim

மே 27, 2010 at 5:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆபாச இணையத்தளங்கள் செல்போனில் தடை

leave a comment »

கையடக்க தொலைபேசி மூலமான ஆபாச இணையத்தளங்களைத் தடை விதிக்க கொழும்பு சிறுவர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் கையடக்க தொலைபேசி ஊடாக பார்ப்பதை தடை செய்யக் கோரி வழக்கு ஒன்றை பதிவு செய்தனர் இது தொடர்பில் உரிய கையடக்க தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெற்றொர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொடர்ச்சியான முறப்பாடிகளை அடுத்தே இந்த பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று பொலிஸின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவித்தது. இது தொடர்பாக பல பெற்றோர் கருத்து தெரிவிக்கையில் இலங்கை இளம் சமூதாயத்தை அழிவில் இருந்து பாதுகாக்க இந்த உத்தர பெரிய பங்குவகிக்கும் என்று தாம் நம்புவதாக கூறினர்

Written by lankamuslim

மே 27, 2010 at 11:13 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசியல் நிறுவனத்தையும் இழந்து , உரிமைக்கான குரலையும் இழப்பதா அரசியல் சாணக்கியம் ?

leave a comment »

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை அரசுடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக தெரிய வருகின்றது குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான முயற்சிகள் நடைபெறுவதாக எமது நிந்தவூர் செய்தியாளர் Lankamuslim.org க்கு தெரிவிக்கின்றார் கடந்த இரு வாரங்களில் இது பற்றிய ஆளும் தரப்புடன் முஸ்லிம் காங்கிரசை இணைக்க தேவையான முயற்சிகளை அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கின்றார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஹசன் அலியும், பைசர் காஸிமும் நிந்தவூரை சேர்ந்தவர்கள் என்பதால் நிந்தவூரில் நடைபெற்ற இதற்கான கூட்டம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஹசன் அலியும், பைசர் காஸிமும் கலந்து கொண்டனர் என்றும் அங்கு சரியான தீர்மானத்துக்கு வரமுடியாது போனதாகவும் எனிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் காஸிமை ஆளும் தரப்புடன் இணைப்தற்கான வேறு ஒரு முயற்சியும் நடை பெறுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

இதே வேளை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தமை குறிபிடதக்கது எனிலும் முஸ்லிம் காங்கிரஸ் அவற்றை மறுத்தமையும் நினைவிருக்கும் . அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும் பான்மை பலத்தைப் பெற இன்னும் 6 உறுப்பினர்களே தேவையாகவுள்ள இந்நிலையில்.. விரிவாக பார்க்க..

Written by lankamuslim

மே 26, 2010 at 12:35 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

உலக சாதனைகளுக்கு சொந்தக்காரன் பரீட் நஸீர் மரணம்

leave a comment »

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட எட்டு உலக சாதனைகளுக்கு சொந்தக்காரரான பரீட் நஸீர் தனது 58ஆவது வயதில் வெளியேற்றபட்ட வடமாகாண முஸ்லிம்களுக்கான புத்தள மீள் குடியேற்ற முகாம் ஒன்றில் வபாதானார் இவர் பல உலக சாதனைகளை படைத்துள்ளார் தனது 20 வயதில் முதல் உலக சாதனையை பதிவு செய்த  இவர் . யாழ்ப்பாணத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு சைக்கிளை பின்புறமாக செலுத்தியமை, 500 விஷப்பாம்புகளுடன் இருந்தமை, 72 மணித்தியாலங்கள் தொடர்ந்து பந்தைத் தட்டி சாதனை படைத்தமை, 3 நாள்கள் தொடர்ச்சியாக நடனம் ஆடியமை, 72 மணிநேரமாக கைகோர்த்து நடனம் ஆடியமை ஆகியன இவர் படைத்த சாதனைகளாகும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 25, 2010 at 3:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை இஸ்லாமிய அழைப்பு பணியின் ஒரு புதிய அத்தியாம்

with 2 comments

இஸ்லாமிய அழைப்பு பணியை சர்வதேசரீதியாக  ஜனரஞ்சகமாக மேற்கொண்டு வரும் அனைவராலும் அறியப்பட்ட டாக்டர் ஸாகிர் நாயக் இலங்கையில்   நேற்று  23-05-2010 ஞாயிறு- கொழும்பு சுகததாச வெளியரங்கில் நேற்று  மாலை 6.00 தொடக்கம் இரவு 9.00 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்ட   நிகழ்ச்சியில் “Peace through religion” மதத்தின் ஊடாக  சமாதானம் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்   இந்த நிகழ்சிக்கு இலங்கை பூராவும் இருந்து 45,000 கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் இந்த நிகழ்வில் இருவர் இஸ்லாத்தை தமது வாழ்க்கை முறையாக ஏற்று கொண்டுள்ளனர்  என்பதுடன் அதிகமான முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் கலந்து கொண்டு தமது வினாவுக்கு  விளக்கங்களை பெற்றுகொண்டனர்

இங்கு கருத்து தெரிவித்த ஒரு கிருஸ்தவ சகோதரர் “இவ்வளவு காலமும்  கிருஸ்தவ ஆலையங்கள்  கற்றுத்தராத பைபிளை சில நிமிடங்களில் நீங்கள் எனக்கு கற்று தந்தீர்கள்” என்று குறிபிட்டார்  என்பதுடன் விளக்கங்களின் பின்னர்   இஸ்லாத்தை ஏற்றுகொண்டார்  இன்னும்  பலர் தமது சந்தேகங்களுக்கு தெளிவை பெற்றுகொண்டனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2010 at 8:15 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அனர்த்த நிவாரண களத்தில் இஸ்லாமிய நிறுவனங்கள்

leave a comment »


இலங்கையில் பல பிரதேசங்களில் தற்போது அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தனது சமூக சேவை  பிரிவை நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது   இலங்கை ஜமாஅதே இஸ்லாமி இருபது வருடங்களுக்கும்  அதிகமான  வருடங்கள் சமூக சேவை பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனமாகும்  தற்போது இது  கொழும்பு மற்றும்  பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் இந்த நிவாரண நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றது , அதேவேளை  அல் முஸ்லிமாத் என்ற முஸ்லிம் பெண்களுக்கான அமைப்பும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது என்பது குறிபிடதக்கது  முஸ்லிம் நிறுவனங்களில் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில்  நாட்டில் உள்ள அணைத்து மஸ்ஜிதுகளின் ஊடாகவும் நிவாரண பணிகளுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மஸ்ஜிதுகளில் இதற்கான அறிவித்தல்களை காணக் கூடியதாகவுள்ளது என்று எமது செய்தியாளர்கள் தெரிவிக் கின்றனர்

Written by lankamuslim

மே 24, 2010 at 6:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்

leave a comment »


பான் கீ மூனிடம் அரசாங்கம் கோரிக்கை

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளர் பான் கீ முனை இன்று சந்தித்தார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2010 at 4:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ மஸ்ஜித் விவகாரம்

leave a comment »

இணைப்பு-2

குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெல்சிறிபுர கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் துரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான கோகறல்லயில் உள்ள அமாம்பொல பகுதியில் மஸ்ஜித் ஒன்றில் கடந்த வியாழன் 20.5.2010- இரவு மஹ்ரிப் தொழுகையின் பின்னர் 7.00 மணியளவில் நுழைந்த சிங்கள இன குழுவொன்று அங்கிருந்த மின்சார விளக்குகள் ஏனைய உபகரணங்கள் என்பன வற்றை அடித்து உடைதுள்ளதுடன் மஸ்ஜிதின் கட்டிட தொகுதிக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர் என்று அங்கிருந்து நாம் பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன அதை தொடர்ந்து அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அங்கு கூடிய முஸ்லிம்கள் ஜும்மாஹ் தொழுகையை சேதமாக்க பட்ட மஸ்ஜிதுக்கு வெளியில் வீதியில் நடாத்த ஆயதங்களை செய்த போது போலீஸ்  விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2010 at 10:06 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

Dr. ஸாகிர் நாயக் இன்று கொழும்பில்

leave a comment »

இஸ்லாமிய அழைப்பு பணியை சர்வதேசரீதியாக  ஜனரஞ்சகமாக மேற்கொண்டு வரும் அனைவராலும் அறியப்பட்ட டாக்டர் ஸாகிர் நாயக் இலங்கை இன்று வருகின்றார் – இன்ஷா அல்லாஹ்-  இன்று 23-05-2010 ஞாயிறு- கொழும்பு சுகததாச வெளியரங்கில் இன்று மாலை 6.00 தொடக்கம் இரவு 9.00 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  நிகழ்ச்சியில் “Peace through religion” மதத்தின் ஊடாக  சமாதானம் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தவுள்ளார்  இதற்கான ஏற்பாடுகளை  ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனம் மேற்கொள்கின்றது அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Written by lankamuslim

மே 23, 2010 at 3:22 பிப

யாழ்ப்பாணம் பெரிய பள்ளி Grand Mosque 20 வருடங்களின் பின்னர் திறக்கபடுகின்றது

with 2 comments

யாழ்ப்பாணம் பெரிய பள்ளி- The Jaffna Grand Mosque இந்த  மாதம் 28 ஆம் திகதி மீண்டும் திறக்கபடும் என்று அந்த மஸ்ஜிதின் நிர்வாகம் அறிவித்துள்ளது இந்த மஸ்ஜிதின் படங்கள் தகவல்கள் என்பன எமது இணையத்  தளத்தில் பதிவுகள் செய்யப்பட்டு அது பற்றிய தகவல்களும் தொடர்ந்தும் வழங்கபட்டது தற்போது புனர் நிர்மான வேலைகள் நடைபெறுகின்றது இந்த மஸ்ஜித் முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ளது இது யாழ்ப்பாணத்தின் முதல் ஜும்மாஹ் மஸ்ஜித் என்பது குறிபிடதக்கது , இது 1713 ஆண்டு  கட்டப்பட்டுள்ளது அதன் பின்னர் நான்கு தடவைகள் விஸ்தரிக்க பட்டுள்ளது , 20 வருடங்களின் பின்னர் இந்த மாதம் 28ஆம் திகதி வெள்ளி  கிழமை  சும்மாஹ் தொழுகையுடன் மஸ்ஜித் இயங்க மீண்டும் ஆரம்பிக்கும் இன்ஷா அல்லாஹ- சிறப்பு குத்பா பேருரை அஷ்ஷெய்க் M .Jஅப்துல் ஹாலிக் அவர்களால் நடத்தப்படும் 1996 இல் யாழ் குடாநாடு  புலிகளின்  பிடியில் இருந்து விடுவிக்கபட்ட  பின்னரும்  யாழ்ப்பாணம் பெரிய பள்ளி- The Jaffna Grand Mosque – முஸ்லிம்கள் அங்கு இல்லாமையால் கைவிடப்பட்ட சிதைந்த நிலையில் இருந்தமை குறிபிடதக்கது  யாழ் குடாநாட்டில் 20 கும் அதிகமான மஸ்ஜிதுகள் இருக்கின்றன தற்போது படிப்படியாக    மஸ்ஜிதுகள்  பழையை நிலைக்கு ஓரளவு திரும்பி வருகின்றது என்பது மிகவும் மகிழ்ச்சியான தகவல்

Written by lankamuslim

மே 23, 2010 at 11:16 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய விமான விபத்தில் 158 பேர் மரணம் அதில் 103 பேர் வரை முஸ்லிம்கள்

with 2 comments

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

துபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று அதிகாலை 2.30 மணி அளவில் புறப்பட்டு வந்தது. போயிங் 737 வகையைச் சேர்ந்த அந்த விமானத்தில் 160 பயணிகள் மற்றும்   8 விமான ஊழியர்கள் என மொத்தம் 168 பேர் இருந்துள்ளனர் அதிலும் கேரளா மாநிலத்தை சேர்த்தவர்கள் அதிகள் இருந்துள்ளனர் இவர்களில்  105 வரையிலான  முஸ்லிம்கள் இருந்தமை விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெயர் பட்டியலை பார்க்கும்போது தெரிய வருகின்றது  அதில் 103 பேர் வரை வபாத்தாகியுள்ளனர், பயணிகளில் 8 பேர் உயிர் தப்பியுள்ளனர்   .

சுமார் 4 மணி நேர, நேரடி பயணத்துக்குப் பிறகு அதிகாலை 6.30 மணியளவில் அந்த விமானம் மங்களூர் விமான நிலையத்தை நெருங்கியுள்ளது விமான பிரயாணிகள் பட்டியலை பார்க்க..

Written by lankamuslim

மே 22, 2010 at 10:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காலநிலை அனர்த்தம்: 5 லட்சத்தி 50 ஆயிரம் பேர் பாதிப்பு , 26 பேர் மரணம்

leave a comment »

மண் சரிவு அபாயம் நிலவும் இடங்களாக மாத்தளை, கண்டி, கேகாலை, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா ஆகிய பிரதேசங்கள் அறிவிக்க பட்டுள்ளது நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மலைப் பாங்கான பகுதிகளில் வாழும் மக்கள், மிக்க அவதானத்துடன் இருக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவிலும் மண் சரிவு அபாயம் நிலவுகிறது.இங்கு இராணுவத்தினர் உசார் நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது.

நாட்டில் பெய்துவரும் அடைமழை மற்றும் அசாதரண காலநிலை காரணமாக இன்று கலை வரை  26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 550 000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றது. இடம்பெயர்ந்த மக்கள் அரச கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Written by lankamuslim

மே 21, 2010 at 11:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பலஸ்தீன மக்கள் அகதிகளாக்கப்பட்ட தினம் :கலதாரியில்

leave a comment »

இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவராலயம் அல் நகபா என்று அழைக்கபடும்  பலஸ்தீன  மக்கள் இஸ்ரேல பயங்கரவாதத்தால்  அகதிகளாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று  மாலை புகைப்படக் கண்காட்சி ஒன்றை   ஏற்பாடு செய்திருந்தது. புகைப்படக் கண்காட்சியை இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் டாக்டர் அன்வர் அல் அகார் ஆரம்பித்து வைத்து உரையாறியுள்ளார்  அங்கு பலஸ்தீன மக்களில் அவலங்களை சித்தரிக்கும் படங்களும்  , பலஸ்தீன மக்களின் பூர்விகத்தை  எடுத்து காட்டும் சான்றுகளும் காட்சிக்கு வைக்க பட்டிருந்தது , கடந்த புதன் கிழமை – 2010 மே மாதம் 12ம் திகதி  இலங்கைக்கான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தூதுவர் ஏற்பாடு செய்த  விழா ஒன்றுக்காக  விருந்துபசாரம் ஒன்று கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்படிருந்து  இந்த நிகழ்வை ஆட்சேபித்து ஆர்பாட்டம் ஒன்று  கோல் பேஸ் ஹோட்டலில் முன்பாக நடைபெற்றது

பயங்கரவாத நாடான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகாரசபை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் உள்ள பஸ்தான் காலனியை முற்றுமுழுதாக நிர்மூலமாக்குவதற்கான திட்டங்களில் முழுமூச்சாக இறங்கியுள்ளது’ என்று ஹமாஸ் பேச்சாளரான பவ்ஸி பர்ஹூம் குற்றஞ்சாட்டியுள்ளார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 21, 2010 at 11:21 பிப

பலஸ்தீன், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

திருகோணமலையில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்ற உத்தரவு

leave a comment »

https://i0.wp.com/www.srilankaexoticholidays.com/hotelspix/ClubOceanicNEW.jpg

திருகோணமலை மாவட்டத்தின் படுக்காடு, முதலைமடு பகுதிகளில் உள்ள தமிழ் முஸ்லிம்களின் காணிகளில் அத்துமீறி குடியேறி உள்ள சிங்கள மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு திருகோணமலை மாவட்ட செயலாளர் மூதூர் மற்றும் சேருநுவர பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட செயலாளர் தலமையில் மூதூர் மற்றும் சேருநுவர பிரதேச செயலாளர்களின் பங்குபற்றலுடன் சேருநுவர பிரதேச செயலகத்தில் உயர்மட்ட சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தங்களது பாரம்பரிய காணிகளில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியேறியிருப்பதாகவும், இவர்களை வெளியேற்றி தங்களின் காணிகளை பெற்றுத்தருமாறு திருகோணமலை மாவட்ட செயலாளரிடம் வேண்டியிருந்தனர். இதற்கிணங்க திருகோணமலை மாவட்ட செயலாளர் இன்று நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பிலேயே அத்துமீறி குடியேறி உள்ள சிங்கள மக்களை வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், தேவைப்படின் பொலிஸாரின் உதவியைப் பெறுமாறும் அவர் குறிப்பிட்டார் என்று தெரிவிக்க படுகின்றது

Written by lankamuslim

மே 21, 2010 at 9:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இப்பாகமுவ பிரதேசத்தில் மஸ்ஜித் ஒன்று தாக்கப்பட்டு மின் விளக்குகள் உடைக்கப்பட்டுள்ளது

with one comment

இணைப்பு-1

குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  மெல்சிறிபுர  கிராமத்தில்   அமைந்துள்ள  மஸ்ஜித் ஒன்றில் நேற்று இரவு மஹ்ரிப்  தொழுகையின் பின்னர் 7.00 மணியளவில்  நுழைந்த சிங்கள இன குழுவொன்று   அங்கிருந்த மின்சார விளக்குகளை அடித்து   உடைதுள்ளனர் என்று தெரிவிக்கபடுகின்றது    40 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இந்த மஸ்ஜித் இட நெருக்கடி காரணமாக மஸ்ஜித்தை விரிவாக்க எடுக்கப்பட்ட முயற்சியை விரும்பாத சிங்கள இன குழுவொன்று இதை செய்துள்ளதாக அங்கு இருந்து   கிடைக்கும் செய்திகள் தெரிவிகின்றன  . இதுபற்றி தெரியவருவதாவது, இந்த மஸ்ஜித்தை  விஸ்தீரனம் செய்வதற்கான முயற்சியில் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக மஸ்ஜித்தின்  நிர்வாக சபையினர் ஈடுபட்டு வந்த போதும் . சிங்கள  பெரும்பான்மை இன  பிரதேசவாசிகளின் எதிர்ப்பின் காரணமாக விஸ்தரிப்பு  நடவடிக்கை தொடர்ந்தும் தடுக்கபட்டதாகவும் . கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மஸ்ஜிதை  விஸ்தீரனம் செய்வதற்கான அனுமதியை இப்பாகமுவ பிரதேச செயலாளர் வழங்கியிருந்தார் என்றும் . இதற்கிணங்க நிர்வாக சபையினர் மஸ்ஜித்தை  விஸ்தீரனம் செய்யும் நடவடிக்கையில் நேற்று முதல் ஈடுபட்டனர். இதனை கண்ணுற்ற   சிங்கள  பெரும்பான்மை இன பிரதேசவாசிகள் குழு ஒன்று நேற்று இரவு 7.00 மணியளவில் மஸ்ஜிதை  உடைபதற்கு முயன்றுள்ளது   இதில்  மஸ்ஜிதில் இருந்த மின்சார விளக்குகள்  அடித்து   உடைக்க பட்டுள்ளது    இதை தொடர்ந்து   போலீஸ்  தலையிட்டுள்ளதாக  தெரியவருகிறது.

Written by lankamuslim

மே 21, 2010 at 9:00 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேலிய வெறியாட்டத்தை நினைவுபடுத்தும் மியூஸ் வீதி வீடுகள் தகர்ப்பு

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுடன் இலங்கைக்கு ஏற்பட்டுவரும் கள்ளக்காதல் முஸ்லிம் குடியிருப்புகளை தகர்ப்பதற்கு இலங்கையை தூண்டியுள்ளதா என்ற கேள்வியை எழுப்புகின்றது கடந்த புதன் கிழமை – 2010 மே மாதம் 12ம் திகதி  இலங்கைக்கான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தூதுவர் ஏற்பாடு செய்த  விழா ஒன்றுக்காக  விருந்துபசாரம் ஒன்று கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்படிருந்து  இந்த நிகழ்வை ஆட்சேபித்து ஆர்பாட்டம் ஒன்று  கோல் பேஸ் ஹோட்டலில் முன்பாக நடைபெற்றது  இந்த நிகழ்வுகள்  ஜனாதிபதி தான் பலஸ்தீன மக்களின் தோழன் என்று மேடைகளில் கூறுவதை கேள்விக்குள்ளாகியுள்ளது     பலஸ்தீனத்தை  ஆக்கிரமித்து பலஸ்தீன மக்களின் சுதந்திரத்தை மறுத்தது  அவர்களை அரை நூற்றாண்டுக்கு மேலாக அடிமைபடுத்தி வைத்திருக்கும் இஸ்ரேலிய பயங்கரவாதம் பாலஸ்தீன  குடியிருப்புகளை தினமும் இவ்வாருதான் தகர்த்து வருகின்றது இன் நிலையில் இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் இலங்கைக்கும்  இஸ்ரேலுக்கும்  கள்ளக்காதலா என்று கேட்க தூண்டுகின்றது    இலங்கையின் மிக நெருக்கமான நாடு ஈரான் பல உதவிகளை செய்து வருகின்றது என்பதும் இஸ்ரேல் என்ற சட்டவிரோத  நாட்டை  உலக வரைபடத்தில் இருந்து அழிப்போம் என்று கூறியுள்ளமை குறிபிடதக்கது – கீழ் காணும் மியூஸ்வீதி வீடுகள் தகர்ப்பு சமந்தாமான  வீடியோ யா-டிவியின் தயாரிப்பு

Written by lankamuslim

மே 20, 2010 at 8:55 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காலநிலை அனர்த்தம்: 5 லட்சம் பேர் பாதிப்பு , 17 பேர் மரணம்

leave a comment »

தாழமுக்கத்தினால் காரணமாக  கடும் காற்றும் இடிமின்னலுடனும் கூடிய மழை மண்சரிவு என்பன நாடு முழுவதும்   தாகத்தை ஏற்படுத்தியுள்ளது  அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  A.H.M. பௌசி  நாட்டில் பரவலாகப் பெய்துவரும்  மழை மற்றும் வெள்ளப்பெருக்கு , மண்சரிவு காரணமாக இதுவரை 5 லட்சம்   பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார், இதற்கு இதுவரை   17 பேர் மரண மடைந்துள்ளனர் என இடர்முகாமைத்துவ நிலைய அறிவித்துள்ளது கொழும்பு , காலி , களுத்துற , கம்பஹா ஆகியன மோசமாக பாதிக்க பட்டுள்ள பிரதேசங்களாகும் நுவரெலிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதால்  அனர்த்த அவசரகால நிலை அறிவிக்க பட்டுள்ளது நேற்றிரவு யாழ் குடாநாட்டிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது, திருகோணமலையை கடும் காற்றுடன் கூடிய மழை தாக்கியமையும் குறிபிடதக்கது

Written by lankamuslim

மே 20, 2010 at 12:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸாராஹ் மாலினி பெரேரா என்ற எழுத்தாளர் நீதிமன்றில்

leave a comment »

S.M.அப்துல்லாஹ்

ஸாராஹ் மாலினி பெரேரா என்ற எழுத்தாளர் நேற்று 19.5.2010 நீதிமன்றில்  தன் மீது சுமத்த பட்டுள்ள குற்றங்களை மறுப்பதற்காக ஆஜரானார் இவர் மீது இரண்டு சட்டத்தின் இரு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது ஆந்த இரண்டு சட்ட பிரிவுகளும் மற்றவர்களின் மதத்தை நிந்திப்பதன் ஊடாக அவர்களை நிந்திப்பது தண்டனைக்குரிய குற்றமாக கூறுகின்றது அதன் முதல் சட்ட பிரிவில் குற்ற வாளியாக காணப் பட்டால் கூடியது ஒரு வருடமும் இரண்டாவது சட்ட பிரிவில் குற்ற வாளியாக காணப் பட்டால் கூடியது இரண்டு வருடங்களும் இரண்டு பிரிவுகளிலும் அபராதத்துடன் தண்டனையும் வழங்க முடியும் என்று அவரின் சட்ட தரணி Lakshan Dias கூறியுள்ளார்

நேற்று நடைபெற்ற வழக்கில் இவரின் சட்டத்தரணி ஸாராஹ் பௌத்த மதத்தை நிந்திக்க முனைய வில்லை என்றும் கிரிமினல் குற்றம் இவர் மீது சுமத்துவதற்கான எந்த அடிப்டையும் இல்லை என்றும் தனது வாதத்தை முன் வைத்துள்ளார் எனிலும் நேற்று நடைபெற்ற வழக்கை நீதிபதி ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார் இருந்த போதும் இந்த வாழ்கை மீளாய்வு செய்முமாறு வழக்கு இலங்கை சட்டமா அதிபருக்கு- Attorney General of Sri Lanka அனுப்பிவைக்க பட்டுள்ளது என்பது குறிபிடதக்கது விரிவாக பார்க்க..

Written by lankamuslim

மே 20, 2010 at 11:52 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஸாராஹ்வின் வழக்கு மீண்டும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி

leave a comment »

ஸாராஹ் மாலினி பெரேரா  19.5.2010 நீதிமன்றில்  தன் மீது சுமத்த பட்டுள்ள குற்றங்களை மறுப்பதற்காக ஆஜரானார் நேற்று நடைபெற்ற வழக்கில் இவரின் சட்டத்தரணி ஸாராஹ் பௌத்த மதத்தை நிந்திக்க முனைய வில்லை என்றும் கிரிமினல் குற்றம் இவர் மீது சுமத்துவதற்கான எந்த அடிப்டையும் இல்லை என்றும் தனது வாதத்தை முன் வைத்துள்ளார் எனிலும் நேற்று நடைபெற்ற வழக்கை நீதிபதி ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார் இருந்த போதும் இந்த வாழ்கை மீளாய்வு செய்யுமாறு வழக்கு இலங்கை சட்டமா அதிபருக்கு- Attorney General of Sri Lanka அனுப்பிவைக்க பட்டுள்ளது என்பது குறிபிடதக்கது

இவர் மீது இரண்டு சட்டத்தின் இரு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது ஆந்த இரண்டு சட்ட பிரிவுகளும் மற்றவர்களின் மதத்தை நிந்திப்பதன் ஊடாக அவர்களை நிந்திப்பது தண்டனைக்குரிய குற்றமாக கூறுகின்றது அதன் முதல் சட்ட பிரிவில் குற்ற வாளியாக காணப் பட்டால் கூடியது ஒரு வருடமும் இரண்டாவது சட்ட பிரிவில் குற்ற வாளியாக காணப் பட்டால் கூடியது இரண்டு வருடங்களும் இரண்டு பிரிவுகளிலும் அபராதத்துடன் தண்டனையும் வழங்க முடியும் என்று அவரின் சட்டத்தரணி Lakshan Dias கூறியுள்ளார்

Written by lankamuslim

மே 20, 2010 at 11:46 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையிலும் “லைலா” புயல் எச்சரிக்கை

leave a comment »

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள லைலா புயல் இலங்கையின் சப்பிரகமுவா, மேல், தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களைத் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவிலும் இந்தியாவின் சென்னை நகருக்கு நிலைகொண்டுள்ள இந்த புயல், இந்தியாவின் சென்னை நகருக்குக் கிழக்கே 185 கிலோமீற்றர் தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு தென்மேற்கே 540 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை இன்று திருகோணமலையில் வீசிய கடும் புயல் காற்று காரணமாக 200 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்க படுகின்றது .

Written by lankamuslim

மே 19, 2010 at 5:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் வீட்டு திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட வறியவர் பெயர்கள் நீக்க படுகின்றதா ?

leave a comment »

சிறுபான்மை பெயர்களுக்கு பதில் பெரும்பான்மை பெயர்கள் ?

பயங்கரவாதம் காரணமாக புத்தளத்தில் வசிக்கும் முஸ்லிம்ளுக்கு உலக வங்கியின் உதவியுடன் வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்க பட்டபோது முன்நாள் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் , மற்றும் பிரதி அமைச்சர் பாயிஸ் ஆகியோரின் முயற்சியால் புத்தளம் தேர்தல் தொகுதியில் வாழ்ந்து வரும் மிகவும் வறிய குடும்பங்களுக்கும் வீடுகளை நிர்மாணித்து வழங்க உலக வங்கி இணங்கியது இதன் பிரகாரம் 600 வீடுகளை புத்தளம் மாவட்டம் புத்தளம் தேர்தல் தொகுதியில் இருக்கும் மிகவும் வறிய குடும்பங்களுக்கு நிர்மாணித்து கொடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது

600 வீடுகளும் மிகவும் வறிய நிலையில் உள்ள விதவைகள் , அனாதைகள் , ஓலைக்   குடிசையில் வசிப்போர் என்ற பொருளாதாரத்தில் மிகவும் அடிமட்டத்தில் இருக்கும் குடும்பங்கள் நேர்முக தெரிவின் மூலம் தெரிவு செய்யப்பட்டு அரச அதிபரினால் இவர்களுக்கு வீடுகளை  நிர்மாணித்து கொடுக்குமாறு சிபாரிசு செய்யப்பட்டது  இவ்வாறு மிக தகுதியான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2010 at 1:59 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

11 பேர் மரணம், 392,000 பேர் பாதிப்பு

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை அலரி மாளிகையில்  காலநிலை அனர்த்தம் மற்றும்  நிவாரணம் தொடர்பாக அமைச்சர்கள் ,அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் நேற்று இரவு வரை 11 பேர் மரணம் அடைந்துள்ளனர் இவர்களில் 9 பேர் வெள்ளத்தினாலும் 2 பேர் மின்னலாலும் மரணம்  அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது, புத்தள மாவட்டத்தில் ஒரு தாய் வெள்ளத்தில் முழ்கி  மரணம் அவரின் மகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது நாடு முழுவதும் 392,000 பேர் பாதிக்கபட்டுள்ளனர் இதில் கொழும்பு மாவட்டத்தில் 21,404 குடும்பங்களும், களுத்துறை மாவட்டத்தில் 5082 குடும்பங்களும் காலி மாவட்டத்தில் 1,300 குடும்பங்களும், குருணாகல் மாவட்டத்தில் 44 குடும்பங்களும், புத்தளம் மாவட்டத்தில் 140 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகா மைத்துவ நிலையம் தெரிவிக்துள்ளது ,இந்த வரை ௧௧ பேர் அனர்த்தம் காரணமாக மரணமாகியுள்ளனர் என்று தெரிவிக்க படுகின்றது . இதேவேளை களனிகங்கையின் நீர் மட்டம் 4 அடி 4 அங்குலமாக உயர்வடைந்து ள்ளதுடன் ஆற்றை அண்டிய பகுதியிலுள்ள மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். களுகங்கையின் நீர்மட்டம் 4 அடி 5 அங்குலமாக உயர்ந்துள்ளது. குக்குலே கங்க நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தாழ்ந்த பகுதிகளி லுள்ளவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது வீடியோ இணைப்பு. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2010 at 9:51 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாடு கடந்த தமிழீழ அரசு அரசுக்கு புதிய தலைவலி ?

with one comment

S.M.அப்துல்லாஹ்

பிரபாகரன் கொல்லப்பட்ட  தினமான நேற்று மே 17 இல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான முதல் அமர்வு தொடங்கப்பட்டுள்ளது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான  அங்குரார்ப்பணக் கூட்டம் நேற்று  பிலடெல்பியா நகரில் ஆரம்பமாகி உள்ளது இந்த நிகழ்வில் உலகின் பல பாகங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்க படுகின்றது  மே மாதம் 17 – 19 ஆம் திகதிகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் கூடும் என்ற அறிவிப்புக்கு ஏற்ப அங்கு தற்போது நடைபெற்று வருகின்றது

இவர்கள் குறிப்பிடும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான முதல் அரச அவையின் பிரதிநிதிகளாக 135 பேர் இருப்பர் இதில் 115 பேர் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர்  ஏனைய 20 பேர் தெரிவு செய்யப்பட்ட 115 பிரதிநிதிகளால் தெரிவு செய்யபடுவர் என்று உருத்திரகுமாரின் அறிக்கை  சொல்கின்றது எனிலும் நேற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகளாக நேரடித் தேர்தல்கள் மூலம் இதுவரை  87 பிரதிநிதிகள் மட்டும் தான் கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான குழுவினால் அங்கீகரிக்க பட்டுள்ளனர் விரிவாக பார்க்க…

Written by lankamuslim

மே 18, 2010 at 5:31 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

உலகில் கிலாபத் ஏற்படுத்துவதை தடை செய்வதுதான் ஆப்கான் போரின் நோக்கம்

with one comment

போரின் உண்மையான நோக்கத்தை உறுதிப் படுத்தியுள்ளார் ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் இராணுவ தளபதி றிச்சர்ட்  டன்னத்ட் General Richard Dannatt:

கடந்த வருடம் ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் இராணுவ தளபதி றிச்சர்ட்  டன்னத்ட் General Richard Dannatt – ஆப்கான மீதான போர் கிலாபத்- இஸ்லாமிய ஆட்சிமுறை – மீண்டும் ஏற்படுத்தப்படாமல் தடுக்கும் போர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் இவர் BBC’s Today program இக்கு கடந்த 14ஆம் திகதி வழங்கிய செவ்வியில் ‘  இஸ்லாமிய திட்டமுறை Islamist agenda ஒன்று இருக்கிறது அதை நாம் தென் ஆப்கானிஸ்தானில் அல்லது ஆப்கானிஸ்தானில்  அல்லது தெற்கு அசியாவில் அவற்றை எதிர்க்காவிட்டால் ,  அதன் செல்வாக்கு வெளிப்டையாக வளரும் அது நன்றாக வளரக்கூடியது அது தெற்கு அசியாவில் இருந்து மத்திய கிழக்கு , வட ஆபிரிக்கா நோக்கி 14 ஆம் , 15 ஆம் நூற்றாண்டு கிலாபத்தின் பதிவுகளை கொண்டிடு நகர்வதை நாம்   காணமுடியும்’  என்று கூறியுள்ளார்

இந்த ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் இராணுவ தளபதி    றிச்சர்ட்  டன்னத்ட் General Richard Dannatt பிரிட்டிஷ்  புதிய பிரதமரான கமிரோனின் – Prime Minister Cameron-தற்போதைய ஆலோசகர் என்பதும் இஸ்லாமிய  கிலாபத் முறைமையை கடுமையாக எதிர்ப்பவர் என்பதும்   குறிபிடதக்கது. இவர் BBC’s Today program க்கு வழங்கிய செவ்வியை கேட்பதற்கு -:   OurUmmah.org

Written by lankamuslim

மே 18, 2010 at 10:21 முப

அப்கான் இல் பதிவிடப்பட்டது

மே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும்

leave a comment »

எஸ்.எஸ்.எம்.பஷீர்

“நமது தாய் நாடானதும் நமது   மூதாதயர்கள் 2600 ஆன்டுகள் வாழ்ந்ததுமான இலங்கை குடியரசின் குடிமக்களாய் இருப்பதிலும் நாம் பெருமை அடைகிறோம் . இலங்கையின் தேசிய தனித்துவத்தின் பிரிக்கமுடியாத ஒற்றுமையின் ஒரு அங்கம் நாம். ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவென்றால் இலங்கை குடியரசின் ஒற்றுமைக்கும் , வலிமைக்கும், இறைமைக்கும், அச்சமின்றி சுயநலமின்றி உழைத்தலாகும்”

-கலாநிதி பதியுதின் மஹ்முத்

இலங்கை அரசு சென்ற வருட மே மாத யுத்த வெற்றியினை ஓராண்டின் பின்னர் இம்மாதம் 11 ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை யுத்த வீரர்கள் ஞாபகார்த்த தினமாக பிரகடன‌ப்படுத்தி நாடு முழுவதும் நினைவு கூரும் நிகழ்சிகளை நடாத்தியுள்ளனர்.இந்த யுத்த வெற்றி பல பெறுமதிமிக்க பொது மக்களினது உயிர்களையும் காவுகொண்டுள்ளது என்பதற்கு அப்பால் , இந்த உள்நாட்டு யுத்தம் மூன்று தசாப்தஙகளாக பலரை அங்கவீனர்களாக மனநோயாளிகளாக உடமைகளும் இடமும் இழந்த மக்களாகவும் மாற்றியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த ஈடு செய்யமுடியாத இழப்புக்களின் மத்தியில் இவ் யுத்த வெற்றிக்காக பல சிங்கள தமிழ் முஸ்லிம் இளைஞர்களும் இவ்யுத்தத்தில் பங்காளிகளாகி ஆயிரக்கனக்கில் உயிரை அவயங்களை இழந்திருக்கிறார்கள் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 18, 2010 at 9:59 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் விலாசம் தொலையப் போகின்றது SLMC

leave a comment »

அரசாங்கம் முன்னெடுக்கப்  போகும் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை மாற்றங்களால் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இன மக்களின் அரசியல் விலாசம் தொலைந்து விடப்போகிறது. எனவே அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறைகூவல் விடுத்துள்ளது.

அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான கோரிக்கையை விடுக்கவுள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி மேலும் தெரிவிக்கையில், “தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம் எம்மை பலவீனப்படுத்தி பெரும்பான்மையை பலப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது.

இதனை அரசாங்கத்திற்குள் பதவிகளை வகிக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதை வெளியிலுள்ள நாம் புரிந்து கொண்டுள்ளோம். உள்ளே இருப்பவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள் விரிவாக பார்க்க…

Written by lankamuslim

மே 17, 2010 at 7:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈரானில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

leave a comment »

G- 15 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈரான் சென்றுள்ளார்.  ஈரான் நாட்டு வர்த்தக அமைச்சர் மெஹ்தி ஹசன்பார் விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வரவேற்றார்  அதன்போது  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈரான் ஆன்மீக தலைவர் அயத்துல்லா கமெனியை சந்தித்து உரையாற்றினார் .  இலங்கையின் ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கும் உமா ஓய திட்டத்திற்கும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கும் ஈரான் பாரியளவில் உதவி செய்து வருகிறது என்பதுடன் இலங்கையின் தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு என்பது குறிபிட தக்கது

Written by lankamuslim

மே 17, 2010 at 5:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டின் பல பகுதிகளில் மோசமான காலநிலை

leave a comment »

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 700 கிலோமீற்றர் தொலைவில் கொண்டுள்ள தாழமுக்கம், தென் மேல் பருவப் பெயர்ச்சி என்பனவற்றால் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடைமழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்

தொடரும் கால நிலை மாற்றத்தினால் நாட்டின் வடக்கு, கிழக்கு, சப்பிரகமுவ, மத்திய, மேல் மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனவும் இதுவரை நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் ,

அதேவேளை, இடி, மின்னலின் போது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது கடந்த சனிக்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்திருப்பதுடன் மூவர் படுகாயமடைந்த னர் என்பது குறிபிட தக்கது ஹபரவெவ எனும் பிரதேசத்திலுள்ள வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஐவரே மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்

Written by lankamuslim

மே 17, 2010 at 3:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசு முஸ்லிம் காங்கிரஸ் உறுபினர்களை பிரித்து எடுக்க முயற்சி ?

leave a comment »

ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ்  உறுபினர்களுடன் அரசு தனிப்பட்ட முறையில்   பேச்சுக்களை நடத்தி தம் பக்கம் இணைக்க முயல்கிறது  ஆனால், எம்மவர்கள் சோரம் போக மாட்டார்கள். சிறுபான்மைக் கட்சிகளைப் பலவீனப்படுத்தி நாட்டில் பெரும்பான்மை இனத்தை பலப்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும் ”  என்று  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்பாளர்களை தெரிவு செய்து அவர்களிடம் இறைவனை முன்னிறுத்தி சத்திய பிரமாணம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானமை குறிபிடதக்கது

Written by lankamuslim

மே 17, 2010 at 3:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி பிழையான தகவலால் வழி நடாத்தப் பட்டாரா?

with 2 comments

கொம்பனித்தெரு பகுதியிலுள்ள வீடுகளை  இடித்து தகர்த்து அகற்றியமை பற்றி ஆஸாத் சாலி

கொம்பனித்தெரு பகுதியிலுள்ள வீடுகளை  இடித்து தகர்த்து அகற்றியமை பற்றி கருத்து தெரிவித்துள்ள கொழும்பு நகர முன்நாள் பிரதிமேயர்  ஆஸாத் சாலி   கொம்பனித்தெருவில் வசிக்கும் ஒரு சிலர் என்னுடன் தொடர்பு கொண்டு மியூஸ்  வீதியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான 21 வீடுகளை உடைப்பதற்கு  உள்ளதாகவும் அதனால் உடனடியாக அவ்வீடுகளை விட்டும் வெளியேறுமாறு அறிவித்தல் வந் துள்ளதாகவும்  தெரிவித்தார்கள்

அப்போது நான் வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்திக்க விருப்பதாகவும்  அதற்கு முன்னர் எனக்கு அது சமந்தமான அனைத்து ஆவணங்களையும் கொண்டுவந்து தருமாறு கேட்டு கொண்டேன் எனிலும் எந்தவொரு தகவல் களையும்  எனக்கு தரவில்லை

எனினும்  நான் ஜனாதிபதியை சந்தித்த போது  இவ்வீட்டு பிரச்னை சமந்தமாக பேசினேன் அதாவது இவ்விடத்தில் இவர்கள் கடந்த 85 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றார்கள் அதனால் ஒன்றும் செய்து விடவேண்டாம்  என்றேன் அதனை அவர் ஏற்றுகொண்டார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 17, 2010 at 11:38 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து கோல்பேஸ் ஹோட்டல் முன் ஆர்பாட்டம்

with 2 comments

கடந்த புதன் கிழமை – 2010 மே மாதம் 12ம் திகதி  இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் ஏற்பாடு செய்த சுதந்திர தின விழாவிற்காக விருந்துபசாரம் ஒன்று கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்படிருந்து  இந்த நிகழ்வை ஆட்சேபித்து ஆர்பாட்டம் ஒன்று  கோல் பேஸ் ஹோட்டலில் முன்பாக நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன  பலஸ்தீனத்தை  ஆக்ரமித்து பலஸ்தீன மக்களின் சுதந்திரத்தை மறுத்தது  அவர்களை அரை நூற்றாண்டுக்கு மேலாக அடிமைபடுத்தி வைத்திருக்கும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தை கண்டிக்கும் பதாகைகளை சுமந்தவர்களாக இந்த ஆர்பாட்டத்தில்  கலந்து கொண்டவர்கள்  ஈடுபட்டுள்ளனர்  ஆர்பாட்டம் நடை பெற்றுகொண்டிருக்கும்போது கோல் பேஸ் ஹோட்டலில் நிர்வாகம் பறந்து   கொண்டிருந்த  இஸ்ரேல் ஆக்ரமிப்பு கொடியை அகற்றியுள்ளது  என்றும் தகவல் தெரிவிக்கின்றது இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் இந்தியாவில் இருந்து செயல்படுகின்றார் என்பது குறிபிடதக்கது

Written by lankamuslim

மே 17, 2010 at 10:04 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாண சபையின் புதிய சுகாதார அமைச்சராக முஹம்மத் சரிப் சுபைர்

with 2 comments

கிழக்கு மாகாண சபையின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மொகமட் சரிப் சுபைர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை பதவியேற்கிறார். பதவி ஏற்பு விழா நாளை திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு திருகோண மலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற வுள்ளது கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டி இடுவதற்காக மாகாண அமைச்சர் பதவியையும், சபை உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்த அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் சுபைர் புதிய அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். இவர் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது   இவர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின்  உறுப்பினர் என்பது குறிபிடதக்கது

Written by lankamuslim

மே 16, 2010 at 1:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நாளை:G-15

leave a comment »

தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ஏற்றுக்கொள்வார்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நாளை ஆரம்பமாகும் G – 15 நாடுகளின் உச்சி மாநாட்டில் ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்திடமிருந்து தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வார்

G – 15 நாடுகளின் 14 ஆவது உச்சி மாநாட்டுக்கு அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.

G – 15 அமைப்பில் அங்கம் வகிக்கும் 18 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டார்கள். G – 15 அரச தலைவர்களின் 14 ஆவது உச்சி மாநாடு நாளை ஆரம்பமாகிறது. நேற்றைய மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Written by lankamuslim

மே 16, 2010 at 11:43 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்-கெஹலிய ரம்புக்வெல்ல

leave a comment »

புலம்பெயர் தமிழ் மக்கள்  மற்றும் சர்வதேச ஊடகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம்  தயார் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் தவறான வழியில் நடத்தியிருப்பதுடன், இதனால் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை முன்னெடுத்துவருவதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார்.

சில சர்வதேச ஊடகங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாக கூறிய அமைச்சர், யுத்தத்தின் பின்னரான இலங்கையின் உண்மை நிலைமை தொடர்பான செய்திகளை தவறாக வெளியிட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

எனவே, புலம்பெயர் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள்  மற்றும் சர்வதேச ஊடகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்

Written by lankamuslim

மே 16, 2010 at 11:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பஸ் சாரதிகளை கண்காணிக்க விசேட பிரிவு

leave a comment »

பஸ் செலுத்தும் சாரதிகள் , மற்றும் பஸ் நடத்துனர்கள் வாகனங்கள் செலுத்தும் போது பின்பற்றவேண்டிய சட்டதிட்டங்கள் பேணப்படுகின்றதா என்பதை காண்காணிக்க விசேட பிரவு ஒன்று ஏற்படுத்தப்பட இருக்கிறது பஸ் செலுத்தும்போது மூன்றில் இரண்டு வீதமான பஸ் சாரதிகள் மது போதையில் வாகனங்களை செலுத்துவதாக தெரிவிக்க படுகின்றது இது பற்றி தெரிவித்துள்ள பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோகன திஸ்ஸநாயக பஸ் ஓட்டிச்செல்லும் சாரதிகள் வாகனங்கள் ஓட்டும்போது பின்பற்றவேண்டிய சட்டதிட்டங்கள் பேணப்படுகின்றதா என்பதை காண்காணிக்க விசேட பிரவு ஒன்று ஏற்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார் இவர் மேலும் தெரிவிக்கையில் சில பஸ் சாரதிகள் ஜனாதிபதியின் படத்தை பஸ்ஸில் ஒட்டியவாறு மது போதையில் பஸ் ஓட்டிச்செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் வானங்கள் ஓட்டும்போது சாரதிகள் செல்லிட தொலைபேசிகளை பாவிப்பதை தவிர்க்கும் சட்டத்தினை கருத்தில் கொள்வதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

மே 15, 2010 at 1:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹஜ்ஜை நிறைவேற்ற 8 ஆயிரம் பேரை அனுமதிக்க கோரிக்கை

leave a comment »

இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற 8 ஆயிரம் பேருக்கு அனுமதி கோரியபோதும் உடனடியாக 2800 பேருக்கு மட்டும் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஹஜ் கோட்டா வழங்குவதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஹஜ் முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தலைமையிலான குழு சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் அப்துல் சலாம் அல் பாஸியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது

இலங்கையில் இருந்து 8 ஆயிரம் பேரை ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்குமாறு அமைச்சர் பெளஸி கோரியுள்ளார். இது குறித்து உயர் மட்டத்துடன் கலந்துரையாடி அறிவிப்பதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதேவேளை அமைச்சர் பெளஸி சவூதி அமைச்சருடன் ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திடவுள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது கடந்த முறை  இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற இறுதி நேரத்தில்  6 ஆயிரம் பேர் வரை அனுமதிக்க பட்டனர் என்பது குறிபிட தக்கது

Written by lankamuslim

மே 15, 2010 at 10:14 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனையில் 3 கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர்

leave a comment »

கல்முனைப் பகுதி வீடொன்றில் கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். L.T.T.E உறுப்பினர்களைத் தேடுவதாகக் கூறி இவர்கள் நேற்றுப் பகல் வீடொன்றுக்குள் நுழைந்து வீட்டைச் சோதனையிடும் போர்வையில் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுள்ளனர்.

அவ்வேளையில் வீட்டில் பெண்ணொருவர் மட்டுமே இருந்துள்ளார் என்று தெரிவிக்க படுகின்றது கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தங்க நகைகள் சிலவற்றைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதேவேளை சில தினங்களுக்கு முன்னர் கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இயங்கி வந்த தனியார் நிறுவனம் ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. அங்கு இருந்த பத்து இலட்சம் ரூபா பணமும் , பொருட்களும் கொள்ளை யிடபட்டமை குறிபிட்டதக்கது

Written by lankamuslim

மே 14, 2010 at 8:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வீடுகளை இடித்து தகர்த்து அகற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

with 2 comments

இணைப்பு-4

கொம்பனித்தெரு பகுதியிலுள்ள வீடுகளை இடித்து தகர்த்து அகற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் இடம்பெற்றுள்ளது . இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முந்நாள் நாடளுமன்ற உறுப்பினர் சபீக் ராஜாப்டீன் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்  கலந்துகொண்டனர் ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டவர்கள் ஆங்கிலம் , சிங்களம் , தமிழ் , மற்றும் விசேடமாக அரபு மொழியிலும்  எழுதப்பட்ட பதாகைகளை  சுமந்தவாறு ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர், இந்த ஆர்ப்பாட்டத்தை கொழும்பு குடியிருப்பு பாதுகாப்பு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது

Written by lankamuslim

மே 14, 2010 at 7:41 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காலியில் கடும் மின்னல் தாக்குதல் பலர் வைத்தியசாலையில்

leave a comment »

இன்று அதிகாலை தொடக்கம் கொழும்பு  காலி , களுத்துறை போன்ற பிரதேசங்களில்  இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருக்கின்றது. காலி பிரதேசத்தில் கடும் மின்னல் தாக்குதல் காரணமாக ஒரு தொலை தொடர்பாடல் கோபுரம் செயலிழந்துள்ளது டன் பலர்  மின்னல் தாக்குதல் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக காலி தகவல்கள் தெரிவிக்கின்றன, மின்னல் தாக்குதல்  அதிகரித்திருப்பதால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாரு வேண்டப்படுகின்றார்கள்

Written by lankamuslim

மே 14, 2010 at 4:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொம்பனித்தெருவில் வீடுகள் இடிப்பு: கடும் மழையிலும் ஆர்ப்பாட்டம்

leave a comment »

இணைப்பு-3

கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியில் அமைந்திருந்த வீடுகளை அகற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் கடும் மழைக்கு மத்தியிலும்  நடைபெற்றுள்ளது

பொலிஸாரின்  பாதுகாப்புக்கு மத்தியில் நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டுள்ளனர்  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதாக அறிய முடிகின்றது

Written by lankamuslim

மே 14, 2010 at 3:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்

leave a comment »

அமைச்சரும் யு.என்.எப்.யின் தலைவருமான விமல் வீரவன்ச தேர்தல் முறை  மாற்றங்கள்  செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்   கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசியல் சாசனத்தில் மூன்று கட்டங்களாக திருத்தங்கள் கொண்டு வரப்படும் எனவும், முதலாவது கட்டத்தில் ஜனாதிபதி முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் எனவும் அடுத்த   கட்டங்கள்   தேர்தல் முறைமை மாற்றம்  இலங்கையில் செனட் சபை ஒன்றை  உருவாக்குதல் தொடர்பான மாற்றங்கள் செய்யப்படும் என்றும்  செனட் சபை உருவாக்குதல் தொடர்பிம் புதிய சட்ட மூலங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைக்கு இந்தியா கட்டளைகளைப் பிறப்பிக்கக் கூடாது என்று அங்கு தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

மே 14, 2010 at 9:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் அமைச்சர்கள் கொம்பனித்தெரு பிரச்சனைக்கு உடன் தீர்வு காண முன்வரவேண்டும்

leave a comment »


M.ஷாமில் முஹம்மட்

கொழும்பு கொம்பனித்தெருவில் நிர்மாணிக்க பட்டிருந்த சுமார் 25 வீடு களை சட்டவிரோதமாக கட்டபட்டவை என்று கூறி அவை உடைக்கப்பட்டது ஆனால் பாதிக்க பட்ட அந்த பகுதி  மக்கள் அவை பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த போது    சட்ட பூர்வமாக தமக்கு வழங்கப்பட்டவை என்று தொடர்ந்தும் கூறி உடைக்க பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க தீர்மந்துள்ளனர் நீண்ட காலமாக இந்த பகுதியில் வசித்து வரும் இவர்கள் தமது காணி , மற்றும் கட்டுமானங்கள் சட்ட பூர்வமானவை   என்பதை காட்டும் ஆவணங்களை வைத்திருப்பதும், அவர்கள் தமது நகர சபைக்கு வரி செலுத்துவதும் அவர்கள் சட்ட பூர்வ உரிமையுடன் இருந்தமையை காட்டுவதாக தெரிவிக்க படுகின்றது .

அது மட்டுமின்றி இவர்களை வெளியேற்றியமை , நிர்மாணங்களை உடைத்தமை போன்ற நிகழ்வுகள் குறுகிய கால அவகாசம் மட்டும் கொடுக்க பட்ட நிலையில் நடை பெற்றுள்ளது இவர்கள் மூன்று நாட்கள் மட்டும் அவகாசம் வளங்கபடுள்ளனர்  என்பது குறிபிடதக்கது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 13, 2010 at 8:44 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது