Lankamuslim.org

Archive for திசெம்பர் 2010

யாழ் மாநகரசபையின் துணை மேயர் பதவி இன்னும் கிடைக்கவில்லை !

leave a comment »

யாழ் மாநகரசபையின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும், ஒளிவிழாவும் கடந்த திங்கட்கிழமை-27-12-2010-பிற்பகல் நடைபெற்றுள்ளது .

மாநகர சபை மேயர் யோ.பற்குணராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெயனரல் ஜி.ஏ.சந்திரசிறி, முஸ்லிம் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் சர்வமத தலைவர்கள், மாநகர ஆணையாளர் சரவணபவ, மாநகரசபை எதிர்கட்சித் தலைவர் றெமிடியஸ் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்துள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 31, 2010 at 3:48 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மழையால் வடக்கு நோக்கிய பயணம் தடைப்பட்டது

leave a comment »

புலிபயங்கரவாதிகளினால் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட நிலையில் புத்தளத்தில் வாழந்து வந்த வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, தண்ணீர் போன்ற பிரதேசங்களை சேந்த முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் தமது பிரதேசங்களுக்கு சென்று மீள் குடியேற்றதுகான ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள தயாரான நிலையில் தற்போது நாட்டின் பெய்துவரும் கடும் மழை காரணமாக அந்த முயற்சி பிட்போடப்பட்டுள்ளது.

என்று எமது lankamuslim.org புத்தளம் செய்தியாளர் தெரிவிக்கின்றார் இவர்கள் புத்தளத்தின் பல பகுதிகளில் இருந்து நேற்றும் , இன்றும்  பஸ்களில் புறப்பட்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் மழை காரணமாக அந்த திட்டம் பிட்போடப்பட்டுள்ளது இதற்கான பயண ஏற்பாடுகளை மீள் குடியேற்ற அமைச்சு செய்துள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 30, 2010 at 1:57 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொது நிறுவனங்களின் பெயர் மாற்றம் பெறுகின்றது

leave a comment »

தனியார் நிறுவனங்களில் பெயர் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில்  ‘சிலோன்’ என்று இதுவரை வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த சொல் இனிவரும் காலங்களில் ‘ஸ்ரீ லங்கா’ என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதன் பிரகாரம் நீண்டகாலம் ‘சிலோன்’ என்ற பெயருடன் இயங்கிவந்த பொது நிறுவனங்கள் ‘சிலோன்’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘ஸ்ரீ லங்கா’ என்ற பெயருக்கு மாற்றம் காணவுள்ளது. பான்க் ஒப் சிலோன், சிலோன் பெற்றோலியம் கோப்பரேஷன், சிலோன் இலக்ட்ரிசிட்டி போர்ட் போன்றவைகளும் பெயர் திருத்தத்துக்கு உட்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை மேற்குலகின் ஆக்கிரமிப்பில் இருந்த போது ஆங்கிலேயர்களினால்  ‘சிலோன்’ என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தது என்பது குறிபிடத்தக்கது

Written by lankamuslim

திசெம்பர் 30, 2010 at 1:27 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டக்களப்பில் 60 ஆயிரம் ஏக்கர் பயிர் நாசம்

leave a comment »

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் வேளான்மைச் செய்கை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே நெற் பயிர்கள் குடலைப் பருவத்தில் அறக்கொட்டியான் நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ள. இவ்வேளையில் மழை வெள்ளம் காரணமாக அதற்கான கிருமிநாசினியைக் கூட விசிற முடியாத நிலையில் விவசாயிகள் பலரும் தற்போது கவலை கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 30, 2010 at 12:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் முஸ்லிம்கள் 8 வீதம்: சிறையில் 21 வீதம்

leave a comment »

பஷீர் அலி
இன்று கல்வி முஸ்லிம் சமூகத்தில் காணாமல் போன சொத்தாகப் போயுள்ளது. அதனைத் தேடியெடுத்து சமூகமயப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்த கல்வி முன்னேற்றத்திலேயே முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றம் தங்கியுள்ளது என பபுவாநியுகினி இஸ்லாமிய அமைப்பின் தலைவரும் சர்வதேச இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதியுமான தொழிலதிபர் ஏ.எம் பஸ்லுல் ஜிப்ரி தெரிவித்தார். இன்று மாலை கொழும்பில் (2010.12.29) இஸ்லாமிய ஆய்வு அமைப்பு (IRO) ஏற்பாடு செய்திருந்த விஷேட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இஸ்லாமிய ஆய்வு அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபத்தில் தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 30, 2010 at 10:57 முப

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மேலும் இரண்டு பிரதியமைச்சுகள் ?

with 3 comments

எதிர்வரும் ஜனவரி மாதம் மேலும் 8 பேர் பிரதியமைச்சர்கள் பதவியேற்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன இவர்களில் இரண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சர்களாகப் பதவியேற்பர் என்று தெரியவருகின்றது அந்த முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு பேர் யார் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கபடுகின்றது

எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி இந்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொள்வர் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2010 at 3:53 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை பலஸ்தீனை சுதந்திர தனி நாடாக அங்கீகரிக்கும் ?

with one comment

இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களிடம் முஸ்லிம்கள் இழந்துள்ளன நிலம்

இலங்கை இஸ்ரேலையும் அங்கீகரிக்குமான ?: சுதந்திர பலஸ்தீனை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இன்றுவரை  அரசாங்கம் பாலஸ்தீனை கொள்கையளவிலேயே ஏற்றுக் கொண்டிருந்தது. இப்போது முழுமையான சுதந்திர நாடாக அங்கீகரிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.

பாலஸ்தீனுக்கான  இலங்கைத்தூதுவர் கலாநிதி திஸ்ஸ ஜயசிங்க இது தொடர்பாக கருத்துத்துரைகையில்  உலகின் பல நாடுகள் சுதந்திர பாலஸ்தீனை ஏற்றுக் கொண்டு அறிவித்திருக்கின்றன. இவ்வாறானதொரு நிலைமையில் மிக நீண்ட காலமாக பாலஸ்தீனுக்கு ஆதரவளித்து வரும் இலங்கையும் சுதந்திர பாலஸ்தீனை அங்கீகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2010 at 8:56 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பாதியரியார் மீது தாக்குதல்

leave a comment »

மன்னாரில் சிறுவர் இல்லமொன்றைச்சேர்ந்த சிறுமியர் சிலர் மீது பாலியல் குற்றம் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார் ஒருவர் மீது வவுனியா சிறைச்சாலைக் கைதிகள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்க படுகின்றது

பாலியல் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாதிரியாரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதவான் கே.ஜீவராணி உத்தரவிட்டார். அதன்பிரகாரம் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வேளை அவரை ஏனைய கைதிகள் தாக்கியுள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2010 at 8:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மலைநாட்டு முஸ்லிம்கள் மத்தியில் அதிகரிக்கும் சமுக சீர்கேடுகள் !!

with 4 comments

மலைநாட்டு முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவிலான சமுக சீர்கேடுகள் ஏற்பட்டுவருவதாக சமுகநலனில் அக்கறை கொண்ட ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் குறிப்பாக கண்டி, மாத்தளை புறநகர் பகுதிகளில் பல முஸ்லிம் பெண்கள் பெற்றோரின் விருப்புக்கு மாறன அந்நிய வாலிபர்களுடன் காதல் கொண்டுள்ளதாகவும் , இன்னும் பலர் அந்நிய யுவதிகளுடனும் வாலிபர்களுடன் பெற்றோரின் விருப்புக்கு மாறக வீட்டைவிட்டும் வெளியேறி சென்று திருமணம் முடிதுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

சில பாடசாலைகளில் மாணவிகள் சிலர் பாடசாலை வேளைகளில் பாடசாலையையும் பெற்றோரையும் ஏமாற்றிவிட்டு அந்நிய வாலிபர்களுடன் சுற்றித்திரிவதாகவும் தெரிவிக்கின்றனர் இந்த சம்பவங்கள் முஸ்லிம்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு, புத்தளம் போன்ற பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் இல்லை என்றும் இஸ்லாமிய அறிவு குறைந்த முஸ்லிம்கள் சிதறிவாழும் பகுதிகள் அவதனிக்கபடுவதாகவும் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2010 at 7:55 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சம்மாந்துறையில் மதில் இடிந்து விழுந்து சிறுவன் வபாத் !

with one comment

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சம்மாந்துறை விளினையடிச் சந்தியில் நள்ளிரவு 12.30 அளவில் வீட்டு மதில் உடைந்து விழுந்ததன் காரணமாக வீட்டில் உறங்கிகொண்டிருந்த 12 வயது சிறுவன் முஹம்மத் றிப்கான் என்ற சிறுவன் ஸ்தலத்திலேயே வபாத்தகியுள்ளார்.

அங்கு பெய்துகொண்டிருந்த கடும் மழை காரணமாக வீட்டின் சுவர் உடைந்து விழுந்துள்ளது என்று தெரிவிக்கபடுகின்றது . இந்த சம்பவத்தில் வீட்டிலிருந்த மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறித்த சிறுனின் தாய் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார் என்று எனது lankamuslim நிந்தவூர் செய்தியாளர் தெரிவிக்கின்றார் படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 28, 2010 at 5:41 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய உளவு அமைப்புக்கு புதிய தலைவர்

leave a comment »

இந்தியா தான் வெளிநாடுகளை உளவறியவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உருவாக்கப்பட்ட அமைப்பான   “றோ”-RAWவின் புதிய தலைவராக  சஞ்சீவ் திரிபாதி -Sanjeev Tripathi- என்பவர் நியமிக்கப்படுகிறார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் றோ அமைப்பின்  விமானப்  ஆய்வு மையத்தின் தலைவராக Air surveillance devision of the RAW இருக்கிறார். டிசம்பர் 30 ஆம் திகதி முதல் அவர் 2 ஆண்டுகளுக்கு இப் பொறுப்பில் இருப்பார்

தற்போது றோவின் தலை வராக இருப்பவர் கே.சி.வர்மா. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தான் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்பே பதவி விலக வர்மா முடிவெடுத்துள்ளார்.இதையடுத்து அவரது இடத் திற்கு திரிபாதி கொண்டு வரப் படுகிறார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 28, 2010 at 9:48 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய பாதுகாப்புச் செயலாளர் அரசியல் தலைவர்களை சந்தித்து வருகின்றார்

leave a comment »

இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குழு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது இவர் மூன்று தினங்களுக்கு முன்னர் இலங்கை வருகின்றார் என்று செய்திகள் வெளியானமையும் குறிபிடத்தக்கது .

Written by lankamuslim

திசெம்பர் 27, 2010 at 7:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பட்டதாரி ஆசிரியர்கள் 216,641- விபச்சாரிகள் 40,000!!

leave a comment »

தொழிலாளிகள் இருப்பதாக சுகாதார அமைச்சின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. தற்போது இனம் காணப்பட்டுள்ள பாலியல் தொழிலாளிகளின் எண்ணிக்கையே இவ்வாறு அறிவிக்க முடிந்ததாகவும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் சுகாதார அமைச்சின் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த டாக்டர் சுஜாதார சமரக்கோன் தெரிவித்துள்ளார். இப்புள்ளிவிபரத்தகவல்கள் உண்ணிப்பாக அவதானிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் இரண்டு இலட்சம் பேரளவில் இவர்களை நாடிச்செல்வதாகவும், இணங்காணப்பட்ட பாலியல் தொழிலாளிகளில், எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகி இருப்பவர்கள் 3000 ற்கும் மேல் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். அவருடைய அறிக்கையின் படி  விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 27, 2010 at 5:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்பாணத்தில் நடந்தது களியாட்ட விழா: ஆனந்தசங்கரி

leave a comment »

நேற்று இடம்பெற்றது ஒரு களியாட்டவிழா, அவ்விழாவிற்கு செல்லும் மனநிலையில் நாங்கள் இல்லை, ஏனெனில் இன்றும் யுத்தத்தின் தாக்கத்தால் பல மக்கள் இன்றும் இறந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நாம் அவர்களுடன் இணைந்து செத்தவீட்டை கொண்டாடுவதா? களியாட்ட விழாவை கொண்டாடுவதா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தினத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவத்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 27, 2010 at 4:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறுபான்மை இனத்தவர்கள் பெரும்பான்மை இனத்தவருடன்; கருத்தரங்கு

leave a comment »

சிறுபான்மை ,இனத்தவர்கள் பெரும்பான்மை ,இனத்தவருடன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றி விளக்குவதற்காக விரைவில் கருத்தரங்கொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மடவளை மதீனா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.

இந்நாட்டில் சிறுபான்மை என்ற ,இனபேதம் ,இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இருப்பினும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை சார்ந்து வாழும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் உண்டு’ என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

திசெம்பர் 27, 2010 at 11:32 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பெளத்த கொடிக்கு கொடுக்கப்படும் அந்தஸ்து ஏனைய மதக் கொடிகளுக்கும் வழங்கப்படும்:ஜனாதிபதி

with one comment

பெளத்த கொடிக்கு நாட்டில் கொடுக்கப்படும் அதே அந்தஸ்தையும் கெளரவத்தையும் ஏனைய மதங்களின் கொடிகளுக்கும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்துள்ளார். நாட்டின் பிரதான மதங்களின் கொடிகளான இந்துக்களின் நந்திக்கொடி, முஸ்லிம்களின்  பிறைக்கொடி, கத்தோலிக்கர்களின் புனித பாப்பரசருக்கான வெள்ளை – மஞ்சள் கொடி ஆகியவற்றிற்கும் பெளத்த கொடிக்கு கிடைத்திருக்கும் அதே மதிப்பையும் மரியாதையையும் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்து சகல மதக் கொடிகளையும் ஜனரஞ்சனப்படுத்துவேன் என்று ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

இங்கு முஸ்லிம்களின் கொடி எது என்பது பற்றிய தீர்கமான பார்வை இல்லாத நிலையில்   பச்சை நிற  பிறைக்கொடி முஸ்லிம்களின் ,இஸ்லாத்தின் கொடி என்று கருதப்படுகின்றது முஸ்லிம்களின் கொடி பாகிஸ்தானின் தேசிய கொடியாகவோ அல்லது வேறு ஒரு முஸ்லிம் நாட்டின் தேசிய கொடியாகவோ இருக்கமுடியாது முஸ்லிம்களின் கொடியென்றால் அது நிச்சயமாக இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்  படுத்தவேண்டும்  விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 27, 2010 at 9:22 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வருடங்கள் 6: சுனாமியால் பாதிக்கபட்ட 2000 பேருக்கு இன்னும் வீடு இல்லை

leave a comment »

சாய்ந்தமருது:சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 6 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இலங்கையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் வீடுகளை இழந்தவர்களின் வீடில்லா பிரச்சினை இன்னமும் தீர்ந்தபாடில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்.

இம்மாவட்டத்தில் சுனாமியினால் இருப்பிடமிழந்தவர்களில் அநேகமானோருக்கு மீண்டும் இருப்பிடங்கள் கிடைத்துவிட்ட போதிலும் குறிப்பாக சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 405 குடும்பங்கைளக் கொண்ட சுமார் 2000 பேர் இன்னமும் தற்காலிக இருப்பிடங்களிலும் உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளிலும் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றார்கள் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 26, 2010 at 7:26 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சுனாமி சுட்டு ஆறு வருடங்கள்

leave a comment »

S.M.அப்துல்லாஹ்

கடந்த 2004 டிசம்பர் 26ம் நாள் ஞாயிறு காலையில் கிருஸ்தவ மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மகிழ்ச்சிகரமான வேலையில் இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்ச மனித உயிர்களை பறித்தும் பல்லாயிரம் கோடிகளுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்பட்டதையும் நாம் கண்ணீர் சிந்தியதையும் மறந்திட முடியாது

ஒரு சில நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 10 நாடுகளில் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் மூன்று லட்சம் வரையான மக்கள் அழிந்தனர் ! ஆசியா தன் வரைபடத்தில் சில கிராமங்களை இழந்து விட்டிருந்தது . அவற்றில் பல மனிதர்களால் நிரந்தரமாக கைவிடப்பட்ட கிராமங்களாக போய்விட்டது விரிவாக பார்க்க Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 26, 2010 at 1:38 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையிலுள்ள 200 அறப்பு கல்லூரிகளுக்கும் ஒரு பாடத்திட்டம் வேண்டும்

leave a comment »

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு, ‘வாமி’ இயக்கத்துடன் இணைந்து முஸ்லிம் கல்விமான்களுக்கான ஒரு செயலமர்வை அண்மையில் கொழும்பில் நடத்தியுள்ளது.  அச்செயலமர்வில் முஸ்லிம் சமூகம் கல்வித்துறையில் எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் சாதனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு ௪௫ ஆண்டுகால வரலாற்றை கொண்டுள்ளது என்றும் முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைக்கு பல தீர்வுகளையும் கண்டுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது இங்கு பல முஸ்லிம் கல்வியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் இவர்கள் பல விடையங்களை சுட்டிக்காட்டியுள்ளன ,அங்கு உரையாற்றிய கலாநிதி என் .எஸ் .எம் அனஸ் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 26, 2010 at 9:00 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொம்பனித் தெருவில் பள்ளிகள், மத்ராஸாக்கள் அகற்றப்படுமென்பது விஷமத்தனமான பிரச்சாரம்

leave a comment »

கொழும்பு கொம்பனித் தெரு வாழ் குடியிருப் பாளர்களுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்ப டமாட்டாது. அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு என்றே அரசாங்கம் பல திட்டங்களை தீட்டியுள்ளது. ஆகவே கொம்பனித் தெருவில் பள்ளிகள், மத்ராஸாக்கள் அகற்றப்படும், மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற விஷமத்தனமான பிரசுரங்களை சிலர் தமது சொந்த அரசியல் நோக்கத்துக்காக பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். இதனை நம்பி கொம்பனித் தெரு வாழ் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டியதில்லை.

கொம்பனித்தெரு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த குழுவினருக்கு மேற்கண்டவாறு உறுதி அளித்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 26, 2010 at 8:30 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வன்னி மாவட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி முத்தலிப் பாவா பாரூக்

leave a comment »

வன்னி மாவட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினராக  சட்டத்தரணி முத்தலிப் பாவா பாரூக் தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நூர்தீன் மசூர் அண்மையில் காலமானதையடுத்தே அவரது இடத்திற்கு புதிதாக முத்தலிப் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனம் தொடர்பாகத் தேர்தல் திணைக்களம் விசேட வர்த்தமானி அறிவித்துள்ளதுடன், பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் இவரது நியமனம் குறித்து கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ஜனவரி மாதம் 4 ஆம், 5 ஆம், 6 ஆம் திகதியில் ஏதாவதொரு தினத்தில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து சத்தியப்பிரமாணம் செய்யுமாறும் அவர் கேட்டுள்ளார்

Written by lankamuslim

திசெம்பர் 26, 2010 at 8:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசியல் தீர்வு மீது புலிகள் அக்கரை கொள்ளாமையால் சமாதானப் பேச்சு செயலிழந்தது: நீதியமைச்சர்

with 3 comments

விடுதலைப் புலிகளுடனான சமாதான உடன்படிக்கையின் காலப் பகுதியில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுக்களின் போது கலந்து கொண்ட அரசியல் தலைவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் அதிகமாக அரசியல் தீர்வு குறித்தே பேசப்பட்டது. ஆனாலும் விடுதலைப் புலிகளுக்கு சமாதானப் பேச்சுக்களிலும் அரசியல் தீர்விலும் நாட்டம் இருக்கவில்லை.

மாறாக புலிகள் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருந்தனர். காவல்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை என சகல மட்டத்திலும் தம்மை பலப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை சமாதானப் பேச்சுக்களையும் கைவிட்டனர். இதன் பின்னரே அதன் முன்னெடுப்புகள் கைவிடப்பட்டன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 24, 2010 at 11:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை – இந்திய கப்பல் போக்குவரத்து கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளது

leave a comment »

இந்திய மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனமான இந்திய கப்பல் கூட்டுத்தாபனம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான கேள்விப் பத்திரத்தினையும் அந்த நிறுவனம் கோரியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா இலங்கை நாடுகளிடையே கப்பல் போக்குவரத்து சேவை அடுத்த மாதமளவில் ஆரம்பிக்கபடவுள்ளது. கொழும்பு- தூத்துக்குடி மற்றும் தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படும். அதன்பின் ஏனைய துறைமுகங்களுக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம் பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 24, 2010 at 11:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

துபாய் தூதரக அதிகாரியாக காதன்குடியை சேர்ந்த ஒருவர்

leave a comment »

காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் றஹீம் என்பவர் துபாயில் (Dubai) உள்ள இலங்கை தூதுவராலயத்தின் முதன்மை பொறுப்பதிகாரியாக (Consul General) இலங்கை வெளிநாட்டு விவகார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்

தற்போது ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் வர்த்தகப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (Minister – Commercial & Economics) கடந்த இரண்டரை வருடங்களாக கடமையாற்றி வரும் இவர் ஜேர்மனியில் இருந்தவாரே துபாய்க்கு முதன்மை பொறுப்பதிகாரியாக பதவி ஏற்று செல்லவுள்ளார்.

இந்த மாத இறுதிப் பகுதியில் தனது பதவிகளை முடித்துக் கொள்ளும் இவர், ஜனவரி 2011 முதற்பகுதியில் துபாயில் தனது கடமைகளை ஏற்கவுள்ளார் என்று காத்தான் குடி இன்போ இணைய செய்திகள் தெரிவிகின்றன

Written by lankamuslim

திசெம்பர் 24, 2010 at 11:25 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வருகின்றார்

leave a comment »

இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் இன்று இலங்கை வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கை வரவுள்ள அவர் எதிர்வரும் 27ம் திகதிவரை இங்கு தங்கியிருப்பதுடன், அரச பிரதிநிதிகள் பலரையும் சந்திக்கவுள்ளார்.  எதிர்காலத்தில் இரு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது தொடர்பில்  அவர் இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினருடன் பேசவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

Written by lankamuslim

திசெம்பர் 24, 2010 at 5:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ். மாவட்ட வாக்காளர்கள் 3 லட்சம் பேர் நீக்கம்

leave a comment »

2007ம் ஆண்டுக் மக்கள் தொகை மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,59,619 பேராகும். இதில் 3,70,620 பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாவர் என்று பதிவுகள் உள்ளன இதில் வாக்களிக்கத் தகுதியுள்ள 3,70,620பேரில் அதே தொகைதான் என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ். மாவட்ட வாக்காளர் பட்டியலிலிருந்து 300,000 பேரின் பெயர்களை தேர்தல் அதிகாரிகள் நீக்கியுள்ளனர்என்றும் யுத்தகாலத்தில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதால் இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 24, 2010 at 5:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் என்பது விட்டுகொடுக்க முடியாத எமது அடையாளம்

with 8 comments

M.ஷாமில் முஹம்மட்

இருப்பு  சிந்தனையை தீர்மானிக்கிறது இருப்பு என்பது புறச்சுழல் சிந்தனை என்பது அகச்சூழல் . ஒரு முஸ்லிமை பொருத்தவரை சிந்தனைதான் இருப்பை தீர்மானிக்க வேண்டும் ஒரு முஸ்லிம் விவசாயியாகவும் தொழிலாளியாகவும் முதலாளியாகவும் மத்தியதர உயர்தர  வர்க்கத்தவனாகவும் இருகிறான் இது வர்க்க அடையாளம் , ஒரு முஸ்லிம் வடக்கு சார்ந்தவனாக கிழக்கு சார்ந்தவனாக இருகிறான் இது பிரதேச அடையாளம், ஒரு முஸ்லிம் ஆணாகவோ பெண்ணாகவோ இருகிறான் இது பாலியல் அடையாளம் ஒரு குடும்பதுக்குள் தந்தையாக, தாயாக, மகனாக இருகிறான் இது உறவு முறை அடையாளம் .

இந்த அடையாளங்களைப்   போன்ற ஒரு அடையாளம்தான் மொழி அடையாளம் மொழி ரீதியாக தமிழ் பேசுபவானாக, சிங்களம் பேசுபவானாக, அரபு பேசுபவானாக, சீன மொழி பேசுபவானாக இருகிறான் இது மொழிஅடையாளம் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 23, 2010 at 8:11 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சகல குடும்பங்களையும் உள்ளடக்கிய திட்டம் தேவை.

leave a comment »

முஹம்மது சரீப்
புலிகளுடான இறுதி யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எதிர்   பார்த்ததை விட குறைந்தளவிலேயே உள்ளது. மன்னார் மாவட்டத்தின் சில முஸ்லிம் குடியிருப்புகள் 1991இன் ஆரம்பத்திலேயே இரானுவக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டன.  இதனால் மன்னார் நகரப்பகுதி முஸ்லிம்கள் 1992 க்கு பிற்பாடு மன்னார் நகர் சென்று சென்று வியாபாரம் செய்து வந்தனர்.

வவுனியா-மன்னர் வீதியின் இடைநடுவே புலிகள் இராணுவத்தின் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வந்நததால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் இருந்தது. அத்துடன் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்கள் வீடு கடைகள் கட்டிடங்கள் என்பன புலிகளாலும் அவர்களைச் சார்ந்த சில விஷமிகளாலும் அழிக்கப்பட்டிருந்தன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 23, 2010 at 7:02 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

சட்டவிரோத காணி பிடிப்பால் பட்டானிச்சூர் குளம் மூடப்படும் நிலை: ரிஷாத்

leave a comment »

மக்களுக்குக் காணி தேவைப்படும்போது அதனை முறையாக வழங்க வேண்டும். ஆனால், சில அதிகாரிகள் அதனைத் துஷ்பிரயோகம் செய்வதனால் அரச காணிகள் சட்டவிரோதமாகப் பிடிக்கப்படுகின்றன. முன்னர் தமிழ் இயக்கங்கள் காணிகளைப் பிடித்து மக்களுக்கு வழங்கி வந்தது. இதனால் பட்டானிச்சூர் குளம் மூடப்படும் நிலையிலுள்ளதாக ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் வன்னி அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர் வவுனியா பிரதேசத்தில் குளங்களை அதிகளவான மக்கள் சட்டவிரோதமாகப் பிடிப்பதனால் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 22, 2010 at 6:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கம்பளை ரஹ்மானிய்யா முஸ்லிம் வித்தியத்துக்கு கணினிப் பிரிவை ஏற்படுத்தித் தாருங்கள்

leave a comment »

கம்பளை இல்லவதுரை ரஹ்மானிய்யா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் நன்மை கருதி கணினிப் பிரிவொன்றை ஏற்படுத்தித் தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பளை நகரில் இயங்கும் முதலாவது தமிழ் மொழிமூலப் பாடசாலையாகிய இல்லவதுரை ரஹ்மானிய்யா முஸ்லிம் வித்தியாலயத்தில் பெரும்பாலும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றனர். இம் மாணவர்கள் தமக்குக் கணினி வசதி இன்மையால் தரம் 10 மற்றும் தரம் 11 தகவல் தொழில்நுட்ப பாடங்களை கற்றுக் கொள்வதில் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 22, 2010 at 5:11 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டின் பல பகுதிகளில் சுனாமி ஒத்திகை

leave a comment »

சுனாமி வரும் வேலைகளில் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் ஒத்திகை நிகழ்வொன்று இன்றைய தினம் இன்னும் நான்கரை மணி நேரத்தில் பி.ப 3 மணிக்கு நடைபெவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்திகையானது சுநாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

திசெம்பர் 22, 2010 at 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நிலம் விழுங்கும் பூதம்!

with 2 comments

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப்நகர் பிரதேசத்தில் குடியிருக்கும் 31 பொதுமக்களை அவர்களின் 66 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர,இரு வாரங்களுக்கு முன்னர்  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார் இது தொடர்பான செய்திகள் பலவற்றை எமது இணையத்தளம் பதிவு செய்து வருகின்றது இந்த வகையில் ஊடகவியலாளர் மப்றூக் எழுதியுள்ள நிலம் விழுங்கும் பூதம்! என்ற தலைப்பில் ஆக்கம் ஒன்று தமிழ் மிரர் இணையத்தில் வெளியாகியுள்ளது அந்த ஆக்கத்தை lankamuslim.org இங்கு பதிவு செய்கின்றது நன்றி தமிழ் மிரர்

மப்றூக்– உன் உம்மா – உம்மா, என் உம்மா சும்மாவா? என்று நம்மவர்கள் பேச்சு வழக்கில் கேட்பதுண்டு! ஒரு நீதியினை ஒருவர் தனக்கு ஒருவாறாகவும், அடுத்தவருக்கு வேறாகவும் பயன்படுத்தும் போது, பாதிக்கப்படுபவர் மேற்கண்ட கேள்வியினைக் கேட்பார்! விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 22, 2010 at 1:55 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

இந்த நாடு அனைவர்க்கும் சொந்தமானது: ஜனாதிபதி, இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு: கலாநிதி குணதாச

leave a comment »

இலங்கை சனத்தொகையில் நான்கு முதல் ஐந்து சதவீதத்தைக் கொண்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு இலங்கை நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்ததை தற்போது மிக சூட்சுமமான முறையில்வேறு சிலர் பெற முயற் சிக்கின்றனர் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக் கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர நேற்று குற்றஞ்சுமத்தினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் அங்கு மேலும் தென் மாகாணம், மேல் மாகாணம் ஆகிய பகுதிகளிலேயே பெரும் எண்ணிக்கையான மக்கள் வாழ்கின்றனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 22, 2010 at 9:38 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐ.நா. குழுவை அனுமதிக்க முடியாது: அரசின் தீர்மானத்துக்கு : சம்பிக்க கண்டனம்

leave a comment »

ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவை இலங்கைக்கு அனுமதிப்பதென அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை ஜாதிக ஹெல உறுமயவின் அமைப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்வதற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவைச் சந்தித்துப் பேசுவதற்கும் ஐ.நா. ஆலோசனைக்குழுவை அனுமதிப்பதென்பது அந்தக் குழுவுக்கு அங்கீகாரமளிப்பதாகவே அமைந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 21, 2010 at 11:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தப்லீக் ஜமாஅத்தின் சர்வதேச மாநாடு

leave a comment »

எதிர்வரும் டிசம்பர் மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை மூன்று தினங்கள் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் என்ற பிரதேசத்தில் தப்லீக் ஜமாஅத்தின் சர்வதேச மாநாடு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இம்மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்தும், முஸ்லிம்கள் கலந்துக் கொள்கின்றனர். 25 ஏக்கர் நிலப்பரப்பில் இம்மாநாடு நடைபெறவிருக்கிறது. லட்சக்கணக்கான மக்ககள் இதில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்க படுகின்றது இதில் தப்லீக் ஜமாஅத்  அறிஞர்கள் பலர் உரையாற்றவுள்ளனர்

Written by lankamuslim

திசெம்பர் 21, 2010 at 7:35 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பான சிபாரிசுகளை செய்ய புத்திஜீவிகள் குழு: நீதியமைச்சர்

with one comment

முஸ்லிம் தனியார் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருதற்கு தேவையான சிபாரிசுகளை செய்வதற்கான இஸ்லாமிய புத்திஜீவிகளை கொண்ட குழுவொன்றை நியமிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றது இவர்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தில் செய்யவேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள், சேர்க்கைகள் தொடர்பாக சிபாரிசுகளை செய்வார்கள்

இலங்கையில் முஸ்லிம் காதி நீதிமன்றங்கள் விரிவான சட்ட திருத்தங்களுக்கு உட்டபடுத்த வேன்டியுள்ளது என்று நேற்று புத்தளம் சென்ற நீதியமைச்சர் ரவூப் ஹகீம் அங்கு பல இடங்களில் கலந்துரையாடல்களிலும், கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார் என்று lankamuslim.org புத்தளம் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் அவர் தற்போது காதி நீதிபதிகள் சபையின் அமர்வுகள் கொழும்பு, புத்தளம் , கல்முனை ஆகிய பிரதேசங்களில் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 21, 2010 at 6:46 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அஷ்ரப் நகர முஸ்லிம்களின் காணி அனுமதி ரத்து திட்டமிட்ட இனத்துவேசச் செயல்:தவிசாளர் அன்சில்

with one comment

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப்நகர் பிரதேசத்தில் குடியிருக்கும் 31 பொதுமக்களை அவர்களின் 66 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர,இரு வாரங்களுக்கு முன்னர்  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அஷ்ரப் நகரைச் சேர்ந்த  பொதுமக்கள் தமது காணிகளுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரத்தினைப் புதுப்பிக்கவில்லை என்றும், அதன் காரணமாக – இவர்களின் காணி உத்தரவுப் பத்திரம் வலுவிழந்து போயுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 20, 2010 at 6:41 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறுபான்மை இன முஸ்லிம்களின் அரசியல் வழிகாட்டி அல்லாமா இக்பால்:ரவூப் ஹக்கீம்

with 2 comments

பாகிஸ்தானின் பெரும் கவிஞரும், சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளருமான அல்லாமா இக்பாலின் நினைவு தின வைபவம் அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிலையத்தில் இடம்பெற்றது. அல்லாமா இக்பால் கவிஞராக மட்டும் பெரும்பாலானவர்களால் அறியப்பட்டாலும் அவர் மிகவும் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர் என்பது பலரும் அறியாத விடையம் பாகிஸ்தான், இலங்கை நட்புறவுச் சங்கம் இந்த வைபவத்தை ஏற்பாடு செய்தது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்  தெரிவித்ததாவது,

பாகிஸ்தான் சிந்தனையாளர் அல்லாமா இக்பாலின் பெருமைகள் இந்தியா, இலங்கை, மலேஷியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களிடையே நீங்கா நினைவுகளாக உள்ளன. அன்னாரின் அரசியல், இலக்கிய வழிகாட்டல்கள் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களுக்கு சிறந்த முன்மாதிரி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 20, 2010 at 9:51 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நடைமுறையில் முஸ்லிம் மீள் குடியேற்றம் நடைபெறுகின்றதா ?

with 2 comments

யாழ்ப்பாணத்தில் இருந்து  புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களில்  650 வரையான  குடும்பங்கள் தம்மை யாழ்பாணத்தில் குடியேற்றுமாறு கூறி அதற்குரிய ஆவணங்களில் பதிவுகளை மேற்கொண்டுள்ளது  என்றும்  இருப்பினும் யாழ்ப்பாணம்  வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தேவையான பதிவுகளை மேற்கொண்ட பின்னர் திரும்பி சென்றுள்ளதாகவும் எமது யாழ்ப்பாண செய்தியாளர் lankamuslim.org க்கு தெரிவிக்கின்றார்.

அதேவேளை மன்னார் தாராபுரம் மற்றும் தலைமன்னார்  ஆகிய இரண்டு கிராமங்களிலும் 1090 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்ய அழைத்து வரப்பட்டுள்ளதாக வர்த்தக கைத்தொழில் துறை அமைச்சார் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார் கடந்த 1990 ஆம் ஆண்டு புலி பயங்கரவாதத்தால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இவர்கள்    கற்பிட்டி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்  இவர்களில் ஒரு பகுதியினர்   இவ்வாறு கடந்த வாரங்களாக அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று எமது மன்னார் செய்தியாளர்  lankamuslim.orgக்கு தெரிவிக்கின்றார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 19, 2010 at 9:05 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நடைபெறபோகும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் விகிதாசார முறைப்படிதான் நடைபெறும் ?

with one comment

உள்ளுராட்சித் தேர்தல் முறை சீர்திருத்தச் சட்ட மூலம் ஜனவர் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசாரத் தேர்தல் முறையில்தான் உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடாத்தப்பட்டு என்று என்று தெரிய வருகின்றது .

ஏற்கனவே பல தடவை பிற்போடப்பட்ட உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடாத்தப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய உள்ளுர்ராட்சி தேர்தல் முறைக்கு அமைவாக விகிதாசார மற்றும் வட்டார கலப்பு தேர்தல் நடாத்து வதற்கு அரசு திட்டமிட்டுள்ளபோதும் குறுகிய காலத்துக்குள் வட்டார எல்லைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு சிக்கல்கள் தோன்றி இருப்பதால் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 19, 2010 at 1:00 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேலில் இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் !!

leave a comment »

புலிகளை மீண்டும் வலுவான சக்தியாக மாற்ற துடிக்கும் பலருக்கு இஸ்ரேல் என்றால் அவர்களுக்கு மிகவும் விருப்பமான குரு தேசம் அருட்தந்தை இமானுவேல் போன்ற களத்தில் துடிப்புடன் வேலை செய்பவர்களுக்கும், நிராஜ் டேவிட் போன்ற இலக்கிய மட்டங்களில் வேலைசெய்பவர்களுகும் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு முன்னுதாரணம் இவர்கள் தங்கள் எழுத்திலும் பேச்சிலும் இஸ்ரேலின் உதாரணத்தை கூற மறப்பதில்லை.

அழிக்கப்பட்ட புலிகளின் பொறுப்பாளர்கள் பலரும் இந்த கருத்தில்தான் இருந்தனர் பல முக்கிய புலி பிரமுகர்கள் இஸ்ரேலுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தனர் என்பதும் அவர்களில் பலர் நிராஜ் டேவிட் உட்பட இஸ்ரேலுக்கு சென்று வருகின்றனர் என்பதும் குறிபிடத்தக்கது இதை பயங்கரவாதம் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றது என்று விட்டுவிடலாம் ஆனால் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 18, 2010 at 12:19 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேல் உயர் மட்ட தூதுக் குழு இலங்கை வருகின்றது

with 3 comments

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவினைப் பலப்படுத்தும்   நோக்கில் இஸ்ரேல் உயர்மட்ட தூது குழுவென்று ஜனவரி மாதமளவில் கொழும்புக்கு வரவுலதாக அறிய முடிகின்றது இஸ்ரேல் ஆளும் தொழில் கட்சியின் பிரதிநிதி சலோன் சிம்ஹோண் தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கொழும்புக்கு வரவுள்ளது

கடந்த 2000 ஆம் ஆண்டில் இலங்கை இஸ்ரேலுடனான ராஜ தந்திர உறவுகளை ஏற்படுத்திய பின்னர் இரு நாடுகளுகிடையிலான உறவு வலுவடைந்து வருவதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன கடந்த மாதம் இலங்கைளிருந்து சுமார் 300 பேர் விவசாய தொழில் பயிற்சிக்கு உத்தியோக பூர்வமாக அனுப்பப்பட்டனர் என்பது குறிபிடத்தக்கது

Written by lankamuslim

திசெம்பர் 18, 2010 at 11:20 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

துப்பாக்கி வைதிருந்தவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை

leave a comment »

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக T56 ரக தன்னியக்கத்துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்ட பட்ட ஒருவருக்கு கல்முனை மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் கடந்த வியாழக்கிழமை இந்தத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்

சுலைமான் முகம்மத யூசுப் றியாஸ் என்பவர் மீது அனுமதிப்பத்திரமின்றி 2006.6.24 ஆம் திகதி T56 ரக தன்னியக்கத்துப்பாக்கி ஒன்றைத் தன் உடைமையில் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 17, 2010 at 3:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தோண்டி எடுக்கப்பட்ட ஜனாஸா மீண்டும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது !!

leave a comment »

கடந்த புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்ட அப்துல் மனாப் நிஜாமியாவின் மரணம் தற்கொலை என மட்டக்களப்பு சட்ட வைத்திய நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்ததனை தொடர்ந்து ஜனாஸா மீண்டும் பழைய இடத்தில் அன்றைய தினமே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது இரண்டு மாதங்களுக்கு முன் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது .

21 வயதான திருமணமாகி 14 மாதங்கள் கடந்த நிஜாமியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் கணவரின் தந்தை கல்முனை பொலிஸாருக்கு செய்திருந்த முறைப்பாட்டின் பிரகாரம் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எம்.றிஸ்வியின் உத்தரவின் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 17, 2010 at 3:17 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மன்னார்- இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பம்

leave a comment »

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடற்போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்

இதன் பிரகாரம், முதலில் கொழும்பு- தூத்துக்குடி மற்றும் தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படும். அதன்பின் ஏனைய துறைமுகங்களுக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம் பிக்கப்படும் மிகவும் குறைந்த செலவில் சில மணித்தியாலத்தில் இந்தியாவை அடைய முடியும் என்பது குறிபிடத்தக்கது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 17, 2010 at 11:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிங்களவர்கள் எவருடனும் சண்டையிடவில்லை. மத வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் இல்லை

leave a comment »

எல்லாவல மேத்தானந்த தேரர்:

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம், தமிழ்த் தேசி யம் என்று எவரும் உரிமை கொண்டாடமுடியாது. அதற் கான ஆதாரங்களும் இல்லை; வடமுனை முதல் தென்கரை வரை ஆட்சி புரிந்தவர்கள் சிங்களவர்கள் தான் என்று அடித்துக் கூறுகின்றார் எல்லாவல மேத்தானந்த தேரர். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஐக்கியத்துடன் இணைந்து வாழ்வோம்.

ஆனால் எந்தப் பிரதேசத்தையும் ஆளும் ஆட்சி அதி காரம் தமிழர்களுக்குக் கிடையாது. முழு நாட்டையும் ஆண்ட வர்கள் சிங்கவளர்கள் தான். அதற்கான ஆதாரங்களும், சரித்திரச் சான்றுகளும் நிறையவே உண்டு விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 17, 2010 at 11:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசிய கீதத்தை தமிழில் பாடலாம்: கெஹெலிய

leave a comment »

நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் தேசிய கீதத்தை அவரவர் தங்கள் மொழிகளில் பாடலாம். தமிழ் மக்கள் தமிழில் பாடலாம்; சிங்கள மக்கள் சிங்கள மொழியில் பாடலாம். அதாவது, அரசியலமைப்பில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதன்படி பாடலாம். அதனை மாற்ற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளமையானது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். அதாவது இந்த விடயத்தை அவர் புரிந்துகொண்ட அடிப்படையிலாகும் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 17, 2010 at 9:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அம்பன்பொல மஸ்ஜிதில் வெளிப் பிரதேச முஸ்லிம்கள் தொழுவதற்கு அச்சுறுத்தல் !

with one comment

அம்பன்பொல நூராணியா ஜும்ஆ மஸ்ஜிதில் வெளியார் தொழுகையில் ஈடு படமுடியாத நிலை தோன்றியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர் சில மாதங்களுக்கு முன்னர் இந்த மஸ்ஜிதில் இஷா தொழுகையின்போது கும்பல் ஒன்று மஸ்ஜிதினுள் நுழைந்து தொழுகையில் ஈடுபட்டவர்களை தாக்கி அவர்களை விரட்டியடித்தது மஸ்ஜிதுகும் சேதம் ஏற்படுத்தியது.

பின்னர் உரிய அனுமதியுடன் சிறிய அளவில் மஸ்ஜித் கட்டிடம் கட்டப்பட்டது தற்போது அங்கு வெளிப்  பிரதேச முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடகக் கூடாது என்று அச்சுறுத்தப் படுவதாக தெரிவிக்கபடுகின்றது

குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெல்சிறிபுர கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் துரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான கோகறல்லயில் உள்ள அம்பன்பொல கிராமத்தில் கடந்த மே மாதம் இந்த மஸ்ஜித் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 16, 2010 at 8:04 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலை அகற்றப்பட்டது

leave a comment »

பிரான்ஸில் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் சிலை புலிகளின் ஆதரவாளர்களினால் அமைக்கப்பட்டிருந்தது தற்போது அந்தச் சிலை அகற்றப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்த விடயம் குறித்து பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சுடன் அதிகளவு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்ததாக வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகமும் பேச்சாளருமான பந்துல ஜெயசேகர கூறியுள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 16, 2010 at 7:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய பிரதமர் மற்றும் முக்கிய புள்ளிகளை கொலை செய்ய புலிகள் திட்டம் ?

leave a comment »

இந்திய பிரதமர் மன்மோகன் மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரை சிங்கை கொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிடுவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்ததாக இந்திய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன.

புலிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிப்பதுடன் பிரதமர் மன்மோகன் சிங், இலக்குவைத்து பாரிய தாக்குதல்களை தொடுப்பதற்கும் திட்டமிடுவதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் வரவிருந்த நிலையில் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 16, 2010 at 10:06 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

DS என்ற பதவிநிலைகள் மீண்டும் A.G.A என மாற்றம் பெரும்!

leave a comment »

மாவட்டச் செயலாளர் பதவிகளைDivisional Secretary மீண்டும் அரசாங்க அதிபர் A.G.Aஎன மாற்றி அவர்களுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது குறித்து பொதுநிர்வாக, உள்ளுராட்சி அமைச்சு ஆராய்ந்து வருகிறது. இது தொடர்பாக இவ்வமைச்சு சட்டமா அதிபருடன் கலந்தாலோசனை நடத்தியதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று தெரிவித்துள்ளார் .

“இவ்விடயம் குறித்து நாம் சட்டமா அதிபருடன் நாம் கலந்தாலோசனை நடத்தினோம். அவர் இது குறித்து ஆராய்ந்து வருகிறார். மேலதிக பிரதேச செயலாளர்களை கண்காணிப்பதற்கு ஏற்ற வகையில் மாவட்ட செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 16, 2010 at 9:57 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உள்ளுராட்சி அரச நிர்வாக கிராமசேவை பிரிவுகளுக்கான எல்லைகள் மீள் நிர்ணயம்

with 4 comments

முஸ்லிம்களுக்கான ஒரு தேசிய செயலணி அவசியம்

அஷ்ஷெய்க் மஸீஹூத்தின்  இனாமுல்லாஹ்
கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தல் முறை சீர்திருத்தச் சட்ட மூலம் தற்போதைய அரசியலமைப்புடன் முரண்படவில்லை என நவம்பர் மாதம் 15ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவிப்புச் செய்தார்.

போருக்குப் பின்னரான இலங்கையில் சிறுபான்மையினரை  வெகுவாகப் பாதிக்கக் கூடிய பல்வேறு அரசியல் வியூகங்களைக் கொண்டுள்ள இந்தச் சட்ட மூலத்தை சர்ச்சைக்குரிய தற்போதைய அரசியலமைப்புடன் முரண்படச் செய்யும் வல்லமையோ பாராளுமன்றத்தில் சட்டமாவதை தடுத்து நிறுத்தும் அரசியல் பலமோ ஆளுமையோ தற்போதைய சிறுபான்மை அரசியல் கட்சிகளிடம் இல்லை விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 15, 2010 at 9:27 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளத்தில் வாலிபர் ஒருவர் வபாத்

leave a comment »

புத்தளத்தில் லோரி ஒன்றுடன் மோதுண்ட வாலிபர் ஒருவர் வபாத்தகியுள்ளார் நேற்று மாலை 3.00மணியளவில் கற்பிட்டி பள்ளிவாசல்துறை என்ற பிரதேசத்தில் வேகமாக சென்ற லோரி ஒன்றுடன் மோதுண்ட பௌசாத் என்ற 20 வயதுடைய வாலிபர் ஸ்தலத்தில் கொல்லபட்டார்.

புத்தளத்திலிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லோரியுடன் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது, வபாத்தானவர் பள்ளிவாசல் துறை தெம்பிலி புறம் என்ற இடத்தை சேர்ந்தவர் என்று எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

Written by lankamuslim

திசெம்பர் 15, 2010 at 12:31 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொள்ளை கோஷ்டியைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

leave a comment »

வறக்காப்பொல பிரதேசத்தில் கடந்த 10 திகதி அடவு பிடிக்கும் நிலையம் ஒன்றை கொள்ளையிட்டு சென்றவர்களை துரத்தி சென்ற பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து இருவரை கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். தப்பியோடியவர்கள் மீரிகம பிரதேசத்தினுள் உள்ள காடு ஒன்றினுள் சென்று பதுங்கினர். பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் இராணுவ மற்றும் விசேட அதிரடிப் படையிரால் காடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது.

முன்று நாள் தேடுதல் முடிவில் கொள்ளை கோஷ்டியைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழாவது நபர் காட்டினுள் இருந்த நீர் தேக்கம் ஒன்றினுள்ள மறைந்திருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவருகின்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 15, 2010 at 11:19 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் கட்சிள் ஒன்றிணைந்து பக்குவப்பட்ட அரசியல் போக்கினை வெளிப்படுத்த வேண்டும்: பஷீர்

with one comment

முஸ்லிம் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட்டு ஒரு பக்குவப்பட்ட அரசியல் போக்கினை வெளிப்படுத்த வேண்டும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். இவ்வாறு செயற்படும் போதுதான் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையில் முஸ்லிம் மக்களுக்கான அபிவிருத்தி உட்பட ஏனைய தன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மீது சிறுபான்மை இன மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஏறாவூரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 15, 2010 at 10:28 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது