Lankamuslim.org

Archive for ஜூன் 2010

நல்லகுடியாறு முஸ்லிம் கலவன் பாடசாலை நாமல்வத்த வித்தியாலையமாக மாறுகின்றது

with one comment

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மொறிவேவ  நல்லகுடியாறு  தமிழ் மொழி முஸ்லிம் கலவன் பாடசாலைக்கு தமிழ் மொழி தெரியாத சிங்கள மொழி பேசும் அதிபர் ஒருவர் நியமிக்கபடுள்ளதாகவும் குறித்த முஸ்லிம் கலவன் பாடசாலை நாமல்வத்த  வித்தியாலையம் என்று பெயர் மாற்றம் செய்யபடுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இந்த முஸ்லிம் கலவன் பாடசாலை 1975 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவந்த பாடசாலை 1990 புலிகளினால் இந்த பகுதி மக்கள் வெளியேற்றத்துடன் மூடப்பட்டுள்ளது. தற்போது புலிகளின் தோல்வியை தொடர்ந்து மீள் குடியேறிய மக்களுடன் மீண்டும் ஆரம்பிக்கபட்டுள்ள பாடசாலைக்கு சிங்கள அதிபர் நியமிக்க பட்டுள்ளதோடு பெயரும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது ,தற்போது இந்த பாடசாலையில் 75 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றார்கள் இவர்களில் எவரும் சிங்கள மொழி மாணவர்கள் இல்லை என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

இந்த அதிபர் நியமனம் , பெயர்மாற்றம் ஆகியன கல்வி வளைய அதிகாரியின் பரிந்துரைக்கு அமைய மேற்கொள்ள பட்டதாக மாகான கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது

Written by lankamuslim

ஜூன் 30, 2010 at 9:43 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முல்லைத்தீவில் 23 முஸ்லிம் குடும்பங்கள் மீள் குடியேற்றம்

leave a comment »

1990ம் ஆண்டு முல்லைத்தீவில் இருந்து வெளியேற்ற பட்டு புத்தளத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம் குடும்பங்களில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 92பேர் எதிர்வரும் 30ம் திகதி கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் மீள்குடியேற்ற உள்ளதாக முல்லைத்தீவு அரசஅதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது . முதற் தடவையாக வெளியேற்றபட்ட முஸ்லிம் குடும்பங்கள்  மீள்குடியேற்றப்படுகிறது. புத்தளத்தில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் தங்கியுள்ள தமிழ் குடும்பங்களுமாக மொத்தமாக 218 குடும்பங்களைச் சேர்ந்த 642பேர்  கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள 19 கிராமசேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக மாவட்ட திட்டப் பணிப் பாளர் எஸ். சிறீரங்கன் கூறினார். மேற்படி 19 கிராமசேவகர் பிரிவுகளிலும் ஏற்கனவே பலர் மீள்குடியேற்றப்பட்டுள்ளர் என்று தெரிவிக்கபட்டுள்ளது

Written by lankamuslim

ஜூன் 29, 2010 at 10:10 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அது அல்லாஹ்வின் அருட்கொடை . அவன் நாடியவருக்கு அதனை வழங்குகிறான் (அல் குர்ஆன் 5:54)

leave a comment »

M.ஷாமில் முஹம்மட்

ஆப்கானிஸ்தானின் கனிமத் தாதுக்கள் ஒரு பார்வை

உலகில் இன்று அதிகமாம ஆச்சரியமாக பார்க்கப்படும் விடையமாக ஆப்கானிஸ்தானின் கனிமத் தாதுக்கள் விடயம் கருதபடுகின்றது ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ள கனிமத் தாதுக்களின் மதிப்பு மட்டும் ஒன்று தொடக்கம் இரண்டு ட்ரில்லியன் டொலர்கள் என தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு ட்ரில்லியன் டொலர்கள் என வைத்து கொண்டாலும் 1 ட்ரில்லியன் டொலர் இதை பில்லியன் கணக்கில் -மில்லியன் கணக்கில் அல்ல – சொன்னால் 1000 பில்லியன் டொலர்கள் ஆகும் இவ்வளவு பெரிய கனிமத் தாதுக்களை ஆப்கானிஸ்தான் எப்படிப் பயன்படுத்தப் போகிறது இதை அமெரிக்காவும் மற்ற மேலாதிக்க நாடுகளும் எப்படி சுருட்டப் போகிறது என்பது தான் இன்றைய பொருளாதார உலகின் பிரதான வினா இந்த வினாக்களுக்கு அப்பால் சில விடையங்களை நாம் பார்போம்

லித்தியம் ,இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் இரத்தினம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான் கண்டுகொண்டது என்று அமெரிக்கா கூறியது ஆனால்  முதல் முதலில் 1974ஆம் ஆண்டு தெற்கு காபூல் பகுதியில் பல மில்லியன் தொன் நாகம் இருப்பதாக அறியப்பட்டது இந்த தெற்கு காபூலின் நாகப் படிவு பற்றிய ஆய்வை 1974 ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசு ரஷ்யா உதவியுடன் மேற்கொண்டது விரிவாக பார்க்க..

Written by lankamuslim

ஜூன் 29, 2010 at 9:05 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஏகபோக வர்த்தகத்துக்கு இடமளிக்கலாகாது!

leave a comment »

இன்றைய தினகரன் ஆசிரியர் தலையங்கம்:

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியில் தனியார் துறையினரின் ஏகபோகம் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அன்றாடம் நாம் பயன்படுத்துகின்ற அரிசி, பருப்பு, சீனி, கடலை, பயறு, கோதுமை, கெளபி, மாசி உட்பட ஏராளமான உணவுப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்பொருட்களை தனியார் துறையினரே வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகின்றனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியானது புறக்கோட்டை வர்த்தகர்களின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்து வருவதாக அக்காலம் தொடக்கமே குறை கூறப்பட்டு வருகிறது. தாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான விலையை அவ்வர்த்தகர்களே தீர்மானிப்பதாகவும் பாவனையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 28, 2010 at 9:09 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15 ஆவது வருட நிறைவு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது

leave a comment »

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15 ஆவது வருட நிறைவு விழா மடவளை மதீனா தேசிய பாடசாலையில் அஷ்ரப் கேட்போர் கூடத்தில் மிகவும் விமர்சையாக நேற்று சனிகிழமை நடைபெற்றுள்ளது காலை 9.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்சிகள் மூத்த ஊடகவியலாளர் என் . எம் அமீன் தலைமையில் நடைபெற்றுள்ளது பிரதம அதிதியாகக் பிரதமரும் புத்த சாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான டீ. எம். ஜயரத்ன கலந்து கொண்டு சிறப்புறையாற்றியுள்ளார் , இந்த கூட்டத்தில் கண்டி ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் மௌலவி எம் .எச் .எம் புர்ஹானும்  விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார் இந்த நிகழ்வில்  பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா,ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹகீம் ஏ. எச். எம். அஸ்வர், எம். எச். ஏ. ஹலீம் உட்பட பலர் உரையாற்றியுள்ளனர் அதே வேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி நடத்தப்படக்கூடாது என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியானமை குறிபிடதக்கது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 27, 2010 at 5:45 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தென்பகுதி முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் புதிய சாவால்கள்

leave a comment »

S.M.அப்துல்லாஹ்

தென்பகுதி முஸ்லிம்கள் மஸ்ஜிதுகளை நிர்மானிபதிலும் நிர்வாகம் செய்வதிலும் புதிதாக பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதை நாம் செய்திகளில் ஊடாக அறிய முடிகின்றது கடந்த மாதம் குருநாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ பிரதேச மெல்சிறிபுர கிராமத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றை இட நெருக்கடி காரணமாக விரிவாக்க எடுக்கப்பட்ட முயற்சியை விரும்பாத பௌத்த மத குழு என்று தெரிவிக்கபடும் குழு மஸ்ஜித்தை தாக்கியது மஸ்ஜிதுக்கு சேதங்களை ஏற்படுத்தியது என்ற செய்தியை நாம் அறிவேம்

இருவாரங்களுக்கு முன்னர் கொழும்பு கொம்பனத்தெரு பகுதியில் அமைத்துள்ள பல ஜும்மாஹ் மஸ்ஜிதுகளுக்கு சென்ற தம்மை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகம் செய்துகொண்ட சாதாரன உடையணிந்த நபர்கள் அங்கு மஸ்ஜித் நிர்வாக உறுபினர்களை அழைத்து விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் செய்திகள் வெளிவந்தன இந்த விசாரணையின் போது தொழுகைகளுக்காக மஸ்ஜிதுக்கு எந்த வகையான நபர்கள் வருகை தருகின்றார்கள் , மஸ்ஜிதுகளின் வருமான மூலங்கள் என்ன ?, மஸ்ஜிதுகளின் சொத்துகள் எங்கு எங்கு உள்ளது ? பற்றிய விபரங்கள், கொம்பனத்தெரு முஸ்லிம்களின் தொகை என்ன? போன்ற விபரங்கள் திரட்டப்படுள்ளன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 26, 2010 at 5:59 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

கண்டி வட்டாரத்தென்னை மத்ரஸாவும் தக்கியாவும் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ளது

leave a comment »

கண்டி வட்டாரத்தென்னை என்ற பிரதேசத்தில் நீண்டகாலமாக இயங்கிவந்த அல் குர் ஆன் மாலை நேரபடசாலையும் தக்கியாவும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ளது இது பற்றி அறிவிக்கப்பட்டும் செய்தியில்  சில மாதங்களுக்கு முன்னர் குடிபோதையில் வந்த பெரும்பான்மை  இன காடையர்கள் சிலர்    தக்கியாவை தாக்கி  சேதம ஏற்படுத்தியுள்ளனர் இதை தொடர்ந்து கைதான இவர்கள் கண்டி நீதிமன்ற நீதிபதியால் எச்சரிக்க பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர்.

இந்த வழக்கில் நீதிபதி தக்கியா நிர்வாகத்தை அங்கு கருமங்களை தொடர்ந்து செய்யுமாறு கூறியுள்ளார் எனிலும் அச்சம் காரணமாக குறித்த அல் குர் ஆன் மாலை நேரபடசாலை மற்றும் தக்கியா நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது இந்த நிர்வாகத்தின் முடிவு கண்டியில் மஸ்ஜிதுகள் , முஸ்லிம் பாடசாலைகள் , அல் குர் ஆன் மாலை நேரபடசாலைகள் போன்றவற்றை மூடிவிடுமாறு அச்சுறுத்தும் சக்திகளை மேலும் அச்சுறுத்த  தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை குறிப்பு :2.7.2010-பிந்திய தகவல்களின் பிரகாரம் கண்டி வட்டாரத்தென்னை  அல் குர் ஆன் மாலை நேரபடசாலையும் தக்கியாவும் இயங்கிகொண்டிருப்பதாக அறிய முடிகின்றது

Written by lankamuslim

ஜூன் 26, 2010 at 12:50 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கண்டி முஸ்லிம் சர்வதேச பாடசாலைக்கு அச்சுறுத்தல்

leave a comment »

கண்டி அரும்பொலை என்ற பிரதேசத்தில் முஸ்லிம்களால் நடாத்தப்படும் இஸ்லாமிய முறையிலான சர்வதேச பாடசாலை ஒன்று இயங்கிவருகின்றது இந்த சர்வதேச பாடசாலையில் கற்கும் மாணவியர் இஸ்லாமிய உடையிலான சீருடை அணிந்து பாடசாலைக்கு சென்றுவருகின்றனர் இந்த பாடசாலையை உடனடியாக மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தும் சுவரொட்டிகள் அந்த பிரதேசத்தில் ஓட்டபட்டுள்ளதாக தெரியவருகின்றது

இந்த ஆங்கில மொழி பாடசாலை இஸ்லாமிய கல்வி முறை சார் நடைமுறை பின்பற்றபடுவதாக அறியமுடிகின்றது  , இவ்வாறான பல அச்சுறுத்தல்களை கண்டி மாவட்ட முஸ்லிம்கள் அண்மைகாலமாக எதிர்கொள்வதாக அறிய முடிகின்றது

Written by lankamuslim

ஜூன் 26, 2010 at 12:22 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐ.நா நிபுணர்கள் குழு இலங்கை மீது விசாரணைகளை மேற்கொள்ளாது

leave a comment »

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு இலங்கை மீதான போர்க்குற்றசாட்டுகள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்க 3 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவுக்கு டாரூஸ்மான்- Marzuki Darusman- என்பவரின் தலைமையில் நியமிக்கப்பட்டது இதற்கு இலங்கை தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் நிபுணர்கள் குழு இலங்கை நுழைய அனுமதிக்கப்பட்டமாடார்கள் என்று அறிவித்தது இதை தொடர்ந்து ரஷ்யா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை அல்லது பொதுச் சபை இலங்கையுடன் ஆலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் ரஷ்ய அரசாங்கம் தெரிவித்தது  தற்போது  ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் நெசிர்கி- Nesirky- இலங்கை  விடையத்தில் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு இலங்கையை போர்க்குற்றசாட்டுகள் தொடர்பில் புலனாய்வு செய்யவோ , விசாரணைகளை மேற்கொள்ளவோ நியமிக்கப்படவில்லை – “It’s not a question of speaking to witness,” Nesirky said, emphasizing twice that it is “not an investigation, not an inquiry, not a probe,”என்று தெரிவித்ததாக Inner City Press- தெரிவித்துள்ளது

Written by lankamuslim

ஜூன் 25, 2010 at 11:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகள்

leave a comment »

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் நாடு கோவையில் நடைபெறுகின்றது இதற்கு பல இலங்கையர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் இந்த வகையில் தமிழ் பேசும் பலரும் அங்கு சென்றுள்ளனர் அவர்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷிர் சேகுதாவுத், ஹசன் அலி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர் இவர்கள் கோவையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொது அரங்க நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சரின் அழைப்பினை ஏற்று சென்றுள்ளனர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு  ஜூன் 24 முதல் 27 வரை என்ற கால அட்டவணையில் அடைபெற்றுகொண்டிருகின்றது இந்த மாநாட்டிற்கான நிர்வாக ஏற்பாடுகளைச் செய்ய தனி அலுவலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கே. அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய செய்திகள் குறிபிடுகின்றன

Written by lankamuslim

ஜூன் 25, 2010 at 10:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த கூட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை

leave a comment »

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா  போரத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி  நடத்தப்படக்கூடாது என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் பி.எம்.முர்ஷிதீன் தமது அங்கத்துவத்திலிருந்து வெளியேற்றப்படக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.லஃபார் தாஹிர் நேற்று இத்தடை உத்தரவை பிறப்பித்தார்.

கொழும்பு 10.மாளிகாவத்தை,ஸ்ரீ சத்தர்ம மாவத்தை,இலக்கம் 239 ஐச் சேர்ந்த பி.எம்.முர்ஷிதீன் சார்பில் சட்டத்தரணிகள் எம்.ஆர்.எம் பஸீம்,என்.எம்.ரியாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் சிரேஷ்ட சட்டத்தரணி பாரூக் தாஹிர் ஆஜரானார்- தமிழ் மிரர்

Written by lankamuslim

ஜூன் 24, 2010 at 9:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

டாக்டர் ஸாகிர் நாயக் பிரிட்டன் நுழைவு தடைக்கு சாவால் !

leave a comment »

சர்வதேசரீதியாக  ஜனரஞ்சகமாக மதங்களுகிடையிலான உறவு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் பிரபல்யமான பேச்சாளரான ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்தது   இதை தொடர்ந்து அந்த  தடையை சட்டரீதியாக எதிர்கொள்ள  ஸாகிர் நாயக் பிரிட்டனில் மிக  சிறந்த சட்ட ஆலோசகர்கள் , மற்றும் சட்டத்தரணிகள் மூலம்  நுழைவு தடையை நீக்க தேவையான நடவடிகளைகளை மேற்கொண்டுவருகின்றார் தான் என்ன காரனங்களுக்காக பிரிட்டனுக்குள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டேன் என்பதை இந்திய தொலைகாச்சி ஒன்றுக்கு கடந்த 19 ஆம் திகதி வழகிய பேட்டியில் இரண்டு காரணங்களை கூறியுள்ளார் ஒன்று இஸ்லாம் பிரிட்டனிலும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளிலும் வேகமாக பரவிவருவதை சகிக்கமுடியாமை இரண்டாவது அரசியல் ரீதியாக பிரிட்டன்  பயங்கரவாதத்துக்கு எதிரானது என்பதை காட்டுவதாகும் என்று தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

ஜூன் 24, 2010 at 11:24 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க Darusman தலைமையில் குழு

leave a comment »

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு இலங்கை மீதான போர்க்குற்றசாட்டுகள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்க 3 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவுக்கு பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது அந்த நிபுணர்கள் குழுவின் தலைமை பொறுப்பிற்கு டாரூஸ்மான்- Marzuki Darusman- என்பவர் நியமிக்கப்பட்டமை முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தோனேசியாவின் முன்னாள் சட்ட மா அதிபரான டாருஸ்மான் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திகொண்டவர் எனவும், இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட சர்வதேச முதன்மையாளர் குழுவிலும் டாரூஸ்மான் அங்கம் வகித்ததுடன், இதன் போதே அவர் முரண்பாடானவர் என அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 24, 2010 at 9:54 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டக்களப்பின் சுவடுகள்: எம்.எஸ்.ஏ.அஸீஸின் மரணம்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்

” நாலு சாதி மனிதரும் சேர்ந்து நடந்தால்
நல்ல மழை பெய்துலகு உயர்ந்து வாழுமே”
சின்னவப் புலவர் (1877 -1966) (“அம்பாரைக் கொலனி”-கும்மிப் பாடல்கள்)

மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் முகவரிகளில் ஒருவராகத் திகழ்ந்த பிரபல சமூக சேவகரும் முன்னாள் அட்டாளைசேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை ஆகியவற்றில் அழகியற்கலை (Fine Arts ) விரிவுரையாளராக பனியாற்றி, பின்னர் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நீன்ட காலம் பிரதி அதிபராகவும் சிறிது காலம் அதிபராகவும் பதவியுயர்வு பெற்று ஓய்வு பெற்ற பிரபல ஓவியர் கலாபூஷனம் அல் ஹாஜ் ஜனாப் முஹமது ஷா முஹமது அசீஸ் (சமாதான நீதவான்) சென்ற வியாழக்கிழமை (17 ஜூன் 2010) இலண்டனில் தனது எண்பத்தியொரு வயதில்  விரிவாக பார்க்க..

Written by lankamuslim

ஜூன் 24, 2010 at 9:09 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையர்கள் சென்னை விமான நிலையத்தில் ஆயுதங்களுடன் -செங்கட்டிகளுடன் – சிக்கினர் ??

leave a comment »

இலங்கையர்கள் சென்னை  விமான நிலையத்தில் ஆயுதங்களுடன் சிக்கினர் என்று சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்திய செய்திகளில் இலங்கையை சேர்ந்த மூன்று முஸ்லிம் நபர்கள் சிக்கியதாக இந்திய செய்தி தாள்களிலும் , இந்திய இணையத் தளங்களிலும் அதை தொடர்ந்து இலங்கையின் சில இணையத் தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன அதன் உண்மை தன்மை இன்று வெளியான இந்திய செய்திகளில் வெளியாகியுள்ளது அந்த செய்தி இங்கு தரபடுகின்றது

Laptop Computer ( லப்டொப் கணினி) வழங்குவதாக 15 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு செங்கட்டி வைத்துள்ள பொதியை இலங்கை வர்த்தகருக்கு கொடுத்து ஏமாற்றிய குற்றச்சாட்டுகளுக்காக சென்னை விமான நிலையப் பொலிஸார் மண்ணடியைச் சேர்ந்த வர்த்தகரொருவரை கைது செய்துள்ளனர் .

மொஹமட் ஹசன்,மொஹமட் றபீ, மொஹமட் பௌஸி ஆகியோர் கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர்களாகும். அவர்கள் புடவை மற்றும் பாதணிகள் வியாபாரத்திற்காக அடிக்கடி சென்னைக்கு வந்து செல்வது வழக்கமாகும். கடந்த வியாழக்கிழமை அவர்கள் சென்னைக்கு வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை அவர்கள் திரும்பிச் செல்லவிருந்தனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 23, 2010 at 11:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நிபுணர்கள் குழு நியமனம் அவசியமற்றது: அரசு

leave a comment »


ஐக்கிய நாடுகளின் பொதுச்  செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு நியமனத்திற்கு அரசு தனது கடுமையான எதிர்ப்பை காட்டியுள்ளது. இறுதி போரின் போது யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக அரசின் மீதான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காகன ஆலோசனைகளை வழங்க இந்த நிபுணர்கள் குழு நியமிக்கப்பட உள்ளது.

நிபுணர்கள் குழு நியமனம் தேவையற்றதென ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன எனினும் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பான் கீ மூனுக்கு ஆலோசனைகளை வழங்க 3 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவொன்றை பான் கீ மூன் எதிர்வரும் திங்கட்கிழமை நியமிப்பதில் மாற்றம் இல்லை என தெரிவிக்கியபடுள்ளது நிபுணர் குழு உருவாக்கத்துக்கு ஐநா பாதுகாப்புச் சபை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Written by lankamuslim

ஜூன் 23, 2010 at 10:04 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தென் கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதியாக டாக்டர் சபீனா இம்தியாஸ் நியமனம்

leave a comment »

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் கலாநிதி பட்டம் -Phd- பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணி மற்றும் முதல் முஸ்லிம் பெண் பீடாதிபதி என்பது குறிபிடதக்கது , இவர் பற்றி இவரின் காலபகுதியில் பேராதனை பல்கலைக்கழக சக மாணவர் ஒருவர் குறிபிடும்போது இவர் கல்வியில் மட்டுமல்லாது பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக இஸ்லாமி நிகழ்சிகள் உட்பட ஏனைய நடவடிகைகளிலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியவர் என்று தெரிவித்தார்

கலாநிதி சபீனா இம்தியாஸ் பீடாதிபதியாக நியமிக்கப்பட முன்னர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். கல்முனையை பிறப்பிடமாக கொண்ட சபீனா இம்தியாஸ், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழம் என்பவற்றின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது

Written by lankamuslim

ஜூன் 23, 2010 at 9:03 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனையில் சுனாமியால் வீ டுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது

leave a comment »

கல்முனை பிர தேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை குடியில் கடந்த 2004 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை இரவேளிக்கன்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று குழுக்கள் முறையில் தொடர் மாடி வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

கல்முனை பிரதேச கல்முனை குடி பகுதியில் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்க மக்களுக்கு வீடுகளை கையளிப்பதில் ஏற்பட்டு வரும் தாமதத்தை கண்டித்து 16.6.2010 அன்றும் அதற்கு முன்னரும் கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுடன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கண்னங்கர கலந்துரையாடி வாக்குறுதி வழங்கியமைக்கு அமைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் நேற்று பபகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

Written by lankamuslim

ஜூன் 22, 2010 at 5:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற போர்வையில் சிறுபான்மையினர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை ?

with one comment

கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் உள்ள கனிகளை சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற போர்வையில் சுவீகரிப்பதற்கு மேற்கொள்ளப் படும் முயற்சியல் தமிழ் , மற்றும் முஸ்லிங்களின் கரையோரப் பிரதேசங்களில் உள்ள அதிகமான காணிகள் பறிபோகுமென அச்சம் தெரிவிக்க பட்டுள்ளது அமைச்சர் பீ . தயாரத்ன பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பிவைத்த கடிதம் ஒன்றில் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் உள்ள சகல கணிகளையும் அரசாங்கம் உடனடியாக சுவீகரிக்க வேண்டும் என்றும் சுற்றுலாத்துறை , ஏனைய அபிவிருத்தி பணிகள் அங்கு மேற் கொள்ளப்பட்ட வேண்டுமென்றும் வலியுறு த்தியுள்ளார் என்றும்

கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் உள்ள மக்கள் நூற்றாண்டு காலமாக அங்கு வாழ்ந்து வந்தாலும் பெரும்பாலானோர் 1989 முதல் அதற்கான உறுதிப்பதிரங்களை – போர்மிட்- வைத்துள்ளனர் எனிலும் இந்த காணிகளுக்கான உறுதிப்பதிரங்கள் கள்ளத்தனமான முறையில் பெரும்பான்மையினர் பலரின் பெயர்களுக்கு வழங்க பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக பத்திரிகை செய்தியொன்று தெரிவிக்கின்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 22, 2010 at 9:03 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் புறம்பான முறையில் கையாளப்படவேண்டும்:அமைச்சர் மில்ரோய்

leave a comment »

மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ மற்றும் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் வி. முரளீதரன் ஆகியோர் யாழ்ப்பணம் சென்று யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரதான குடியிருப்பு பகுதியான சோனகர் தெரு –Moor Streets- பகுதிக்கு வியஜம் செய்து தகர்ந்து கிடக்கும் முஸ்லிம் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்துள்ள மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ 1990 ஆம் ஆண்டு இரு மணிநேரத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவது புறம்பான முறையில் கையாளப்படவேண்டும் என்றும் வெளியேற்ற படும்போது இரண்டு பேருடன் இருந்தவர்கள் இன்று பல குடும்பங்களாக இருக்கின்றார்கள் இவர்கள் மீளக் குடியேற்றுவதற்கு போதிய வசதிகள் செய்யப்படவேண்டும் இது குறித்து ஜனாதிபதியுடன் விசேடமாக கலந்துரையாடுவேன் , வட பகுதி முஸ்லிம்களது நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் நாடுகளினதும் கவனத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடியேற்ற அமைச்சராக மில்ரோய் பெர்ணாண்டோ பதவியேற்ற பின்னர் 2010-06-17 அன்று யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ வியதின் போது இவற்றை தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 21, 2010 at 10:11 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசியல் சாசனத் திருத்தங்கள் பாராளுமன்றம் வருகின்றது

leave a comment »

அரசியல் சாசனத் திருத்தங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பிலான வரைவுத் திட்டங்களுக்கு அமைச்சரவை கடந்த 9ம் திகதி அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் தவணைக்காலம், தேர்தல் முறைமை, 17 ஆவது திருத்தச் சட்ட மூலம் மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற தொடர்பிலான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பான வரைவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு விரைவில் விளக்குவார் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும்,  ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் தவணைக் காலத்தை நீட்டிக்கும் முனைப்புக்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்கப்பட மாட்டாது என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

ஜூன் 20, 2010 at 9:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளத்தில் முறையற்ற மின்சார விநியோகத்தால் உயர்தர மாணவர் மரணம் ?

with one comment

மின்சாரத்தாக்குதல் காரணமாக புத்தளம் ஸாஹிரா தேசியக்கல்லூரியின் உயர்தர மாணவரான முஹம்மத் ஹாஷிக் வயது 18 என்பவர் வபாதாகியுள்ளார் மேலும் ஒரு கற்பிணி பெண்ணும் அவரின் கணவரும் மின்சாரத்தாக்குதல் காரணமாக புத்தளம் தள வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கற்பிணி பெண்ணின் நிலை தீவிரமாக கண்காணிக்க பட்டுவருவதாக வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது மரண விசாரணை அதிகாரி நந்தன விமலவீர தெரிவித்துள்ள கருத்தில் தொலைகாட்சி எண்டனா மின்கம்பிகள் மீது விழுந்து அதை தொடர்ந்து மின்கம்பிகள் வீட்டின் மீது விழுந்து இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் கொங்கிரீட்  போஸ்டுகளுக்கு பதிலாக PVC பைப்பை பயன்படுத்தி இந்த மின்கம்பிகள் தற்காலிகமாக இணைக்க பட்டமையால் தொலைகாட்சி எண்டனா மின்கம்பிகள் மீது விழுந்து அதை தொடர்ந்து மின்கம்பிகள் குறித்த வீட்டின் மீது விழுந்துள்ளது என்றும் மரண விசாரணை ஆரம்பிக்க முன்னர் குறித்த மின்கம்பிகள் சீர் செய்யப்பட்டுள்ளது இந்த தகவல் நீதி மன்றத்துக்கு கையளிக்கபடும் என்றும் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன .

Written by lankamuslim

ஜூன் 20, 2010 at 7:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் நுழைவு அனுமதி மறுப்பு இனவாத Geert Wilder க்கு முழு அனுமதி

with one comment

சர்வதேசரீதியாக  ஜனரஞ்சகமாக மதங்களுகிடையிலான உறவு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் பிரபல்யமான பேச்சாளரான ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி.இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளாராம் .

ஏற்க முடியாத நடத்தை “unacceptable behaviour” என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாம் ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் வழமை போன்று பல உரைகளை நிகழ்த்தவிருந்தார் இந்த நிலையில் இவர் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு மூன்று வருட கால தடை விதித்துள்ளதாக மற்றும் ஒரு செய்தி குறிபிடுகின்றது . அதேவேளை Geert Wilder என்பவர் நெதர்லாண்ட்டில் அல் குர்ஆன் பாசிச புத்தகம் அதை தடை செய்யவேண்டும் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 20, 2010 at 2:09 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிளக் வேட்டர் -Blackwater Worldwide- பற்றி சுதந்திர ஊடகவிலாளரும் நூல் ஆசிரியருமான Jeremy Scahill

leave a comment »

File:Blackwater Scahill.jpg

M.ரிஸ்னி முஹம்மட்

பிளக் வேட்டர் -Blackwater Worldwide- பற்றி சுதந்திர ஊடகவிலாளரும் -Blackwater: The Rise of the World’s Most Powerful Mercenary Army -என்ற மிகவும் பிரபல்யமான நூலை எழுதியவருமான ஜெர்மி இஸ்காஹில் -Jeremy Scahill- வழகியுள்ள பேட்டி

இவரின் பேட்டியை பார்பதற்கு முன்னர் இங்கு தரப்படும் Blackwater Worldwide சமந்தமான விபரங்களை படித்து விட்டு பார்க்கவும் விளங்குவதற்கு இலகுவாக அமையும்

பிளக் வேட்டர் 1997 இல் எரிக் பிரின்ஸ் – Erik Prince- என்பவனால் உருவாக்கபட்ட அமெரிக்க தனியார் இராணுவ கம்பனி. இது Xe Services LLC என்றும் அழைக்கபட்டது இந்த நிறுவனம் 2007 இல் Blackwater Worldwide என்று பெயர்மாற்றம் பெற்றது இந்த தனியார் இராணுவ அமைப்பு ஒரு வருடத்துக்கு 400,00 உறுபினர்களை பயிற்சி வித்து வருகின்றது. இது இரண்டு பிரதான பிரிவாக இயங்கி வருகின்றது ஒன்று அமெரிக்க தேசிய பாதுகாப்புகான வெளிப்பாட்டையான நடவடிக்கை பிரிவு இரண்டாவாது அமெரிக்க தேசிய பாதுகாப்புகான இருண்ட அல்லது இரகசிய பிரிவு இந்த அமைப்பின் வெளிப்பாட்டையான நடவடிக்கை பிரிவு பொதுவாக அமெரிக்காவிலும் அமெரிக்கா தளம் அமைத்துள்ள 75 நாடுகளிலும் செயல் படுகின்றது இருண்ட அல்லது இரகசிய பிரிவு குறிப்பாக ஈராக் , ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , யமன் போன்ற நாடுகளில் இயங்கு கின்றது இந்த இருண்ட அல்லது இரகசிய பிரிவு அமெரிக்க CIA உளவு அமைப்புடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டுள்ளது ,இந்த பிரிவு கொலை , கடத்தல் , அழிவு நாசவேலை போன்றவற்றை செய்து வருகின்றது இதை செய்வதற்கு அமெரிக்க ஒபாமா நிர்வாகம் முழு அனுமதி வழங்கிவருகின்றது என்று குற்ற சாட்டுகள் உள்ளன. Video விரிவாக பார்க்க…

Written by lankamuslim

ஜூன் 20, 2010 at 1:16 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முன்னாள் புலிகளின் தலைவர் K.P அரசுடன் களத்தில்

leave a comment »

ஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணருக்கு கே. பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய பிரத்தியேகப் பேட்டி புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆதரவாளர்கள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளனர். புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது.

கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் குமரன் பத்மநாதன் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 20, 2010 at 12:43 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடி ‘மஸ்ஜிதுல் அக்ஸா’ கட்டுமான பணிகள் இடைநிறுத்தம் !

leave a comment »

பலஸ்தீனத்தில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸின் தோற்றத்தில் காத்தான்குடியில் ஒரு மஸ்ஜித் கட்டபடவுள்ளது ,பத்து கோடிரூபா ஜனாதிபதி நிதியில் இருந்து பதிய காத்தான்குடி பெரிய ஜும்மாஹ் மஸ்ஜித்துதான் பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸின் தோற்றத்தில் அமைக்கப்பட வுள்ளது இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் நிதியில் இருந்து இலங்கையில் நான்கு மத வழிபாட்டு தளங்களை அமைக்கும் திட்டதின் கீழ் இதற்கு நிதி ஒதுக்க பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 19, 2010 at 5:35 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொழும்பில் தேசிய வெற்றி விழா மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு

leave a comment »

தேசிய வெற்றி விழா மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு கொழும்பில் நடைபெற்றுகொண்டிருகின்றது  பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு காலை 8 மணிக்கு காலி முகத்திடலிலும் மாலை 4.30 மணிக்கு படைவீரர்களின் தேசிய நினைவு தின வைபவம் பாராளுமன்ற மைதானத்திலும் நடைபெறுகின்றன . ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் முப்படைகளின் தளபதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் .

Written by lankamuslim

ஜூன் 18, 2010 at 3:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட இரண்டு ஜும்மாஹ் மஸ்ஜிதுகள் மீண்டும் இயக்கம் பெறுகின்றது

with 2 comments

வடமாகான முஸ்லிம்கள் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றிய பின்னர் முல்லைதீவு, விடத்தில்தீவு ஆகிய மாவட்ட மஸ்ஜிதுகளும் வடமாகானத்தின் நூற்றுகணக்கான மஸ்ஜிதுகளை  போன்று கைவிடப்பட்டன இங்கு இருந்த பல மஸ்ஜிதுகள் மிக மோசமாக சிதைவடைந்தன தற்போது இந்த இரண்டு மாவட்ட மஸ்ஜிதுகளும் ஓரளவு சீரமைக்கபட்ட நிலையில் 20 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது முதல் ஜும்மாவை முல்லைதீவு ஜும்மாஹ் மஸ்ஜித் இன்றும்  18.6.2010, விடத்தில்தீவு ஜும்மாஹ் மஸ்ஜித் எதிர்வரும் வெளளிகிழ மை 25.6.2010  திகதியும் நடாத்தவுள்ளது .

முல்லைதீவு முஸ்லிம்கள் பல சிரமங்கள் மத்தியில் தங்களுடைய பிரதேசத்திற்குச் சென்று தமது வீடுவாசல்களையும், காணிகளையும் பார்வையிட்டு வருகின்றனர். எனிலும் அண்மையில் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 18, 2010 at 9:43 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டக்களப்பு மாவட்ட உயர்மட்ட அதிகாரபூர்வ கூட்டதுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை !

with one comment

33 கிராமங்களையும் ஆயிரக் கணக்கான விவசாய காணிகளையும்  நூற்றுக்கணக்கான மக்களையும்   இழந்தவர்கள்   மீள்குடியேற்ற, அபிவிருத்தி கூட்டத்தில்  புறக்கணிப்பு  !

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும். பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை நடை பெற்ற உயர்மட்ட தீர்மானங்களை எடுக்ககூடிய கலந்துரையாடலுக்கு மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ மற்றும் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் வி. முரளீதரன் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் அழைக்க படவில்லை என்று குற்றம் சட்ட பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 33 முஸ்லிம் கிராமங்கள் கைவிடப்பட்டுள்ளது ஆயிர கணக்கான விவசாய காணிகள் பறிபோயுள்ளது நூற்று கணக்கான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பிரதிநிதிகள் அந்த மாவட்டத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி தொடர்பான அதிகார பூர்வ தீர்மானமிக்க கூட்டதுக்கு அழைக்க படவில்லை ஆளும் தரப்பு பிதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 17, 2010 at 8:30 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொம்பனத்தெரு மஸ்ஜிதுகளில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை ??

leave a comment »

கொழும்பு கொம்பனத்தெரு பகுதியில் அமைத்துள்ள பல ஜும்மாஹ் மஸ்ஜிதுகளுக்கு சென்ற தம்மை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகம் செய்துகொண்ட சாதாரன உடையணிந்த நபர்கள் அங்கு மஸ்ஜித் நிர்வாக உறுபினர்களை அழைத்து விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் செய்திகள் வெளிவந்துள்ளன இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது இந்த விசாரணையின் போது தொழுகைகளுக்காக மஸ்ஜிதுக்கு எந்த வகையான நபர்கள் வருகை தருகின்றார்கள் , மஸ்ஜிதுகளின் வருமான மூலங்கள் என்ன ?, மஸ்ஜிதுகளின் சொத்துகள் எங்கு எங்கு உள்ளது ? பற்றிய விபரங்கள், கொம்பனத்தெரு முஸ்லிம்களின் தொகை என்ன? வெளிநாடுகளிலிருந்து உதவி கிடைக்கப் பெறுகின்றதா ? உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பல கேள்விகளை எழுபியுள்ளனர் என்று நாம் தொடர்புகொண்ட எம்மை இது பற்றி தொடர்புகொண்ட நபர்களும் இந்த சம்பவத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.

இது பற்றி லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் செய்தியை பதிவு செய்துள்ளதுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது இந்த நடவடிக்கை கொம்பனத்தெரு முஸ்லிம்கள் மத்தியில் அச்ச உனர்வை ஏற்படுத்தியுள்ளது சட்ட விரோதமானவை என்று கூறி 20 கும் அதிகமான முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் தகர்க்க பட்டமையை தொடர்ந்து இந்த மஸ்ஜிதுகள் விசாரணை விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 17, 2010 at 2:45 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நிர்மாணிக்கப்படும் மின் காற்றாலைகளுக்கு பொறியிலாளர்கள் எதிர்ப்பு

leave a comment »

புதள்ளம் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கடற்கரை பிரதேசத்தில் சுமார் 4500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் கற்றலை நிலையங்களை அமைக்கும் இந்தியாவின் முயற்சிக்கு இலங்கை மின்சார பொறியிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். -இதற்கான ஒபந்தம் இந்தியா இலங்கையில் 50 வருடங்கள் குறித்த கடற்கரை பரப்பில் இந்தியா நிலை கொள்ள ஏதுவாக அமையும் என்று தெரிவிக்கபடுகின்றது – இந்நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதமூலம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கரையோர பிரதேசங்களை 50 வருடங்கள் ஆக்கிரமிப்பதுடன் உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்பனை செய்தபின்னர் மீதமுள்ள மின்னை கேபல்களினால் இந்தியாவிற்கு அனுப்புவதற்கும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் மின்சார பொறியிலாளர்கள் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிகின்றன அத்துடன் 50 வருட காலத்திற்கு இலங்கை கடல் பிரதேசங்களை இந்தியாவிற்கு வழங்க கூடாதென அவர்கள் மேலும் தெரிவித்தனர். இது பெரும் அநீதி எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று செய்திகள் தெரிவிகின்றன

Written by lankamuslim

ஜூன் 17, 2010 at 1:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரதேச செயலாளர், கிராம சேவகர் பிரிவு எல்லை நிர்ணயங்கள் முஸ்லிம்களுக்கு நிவாரனம் வழங்குமா ?

leave a comment »

S.M.அப்துல்லாஹ்
இலங்கையில் வாழும் சமூகங்களில் மிகவும் சிறிய நிலப்பகுதிகளில் செறிவாகவும் நெருக்கடிகளுடனும் வாழும் சமுகமாக இலங்கை முஸ்லிம் சமூகங்கம் வாழ்ந்து வருகின்றது என்பது ஒரு பொதுவான உண்மை உதாரணமாக இலங்கையின் கிழக்கில் அமைந்துள்ள முஸ்லிம் பிரதேசமான காத்தான்குடி இது தெற்காசியாவிலேயே மக்கள் நெரிசல் அதிகமாக கொண்ட நகரங்களில் ஒன்றாகும். அதேபோன்று முஸ்லிம்கள் எங்கு வசித்தாலும் அவர்கள் தங்களின் மக்கள் தொகைக்குரிய நிலபரப்பில் வாழ்வதில்லை அவர்களின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் போது அவர்கள் வாழும் நிலம் மிகவும் சிறிய அளவில் இருப்பதை பொதுவாக இலங்கை முழுவதும் அவதானிக்க முடியும் யாழ்ப்பாணம் தொடக்கம் மாத்தறை வரை இந்த நிலைதான் காணப்படுகின்றது என்பது பொதுவாக அனைவராலும் ஏற்றுகொள்ளபடுள்ள உண்மை இந்த வகையில் இன்று பிரதேச செயலாளர்களின் எல்லைகளையும் கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகளையும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தல் என்ற அரசின் நடவடிக்கை முஸ்லிம் பிரதேசங்களிலும் சற்று முக்கியத்துவதுடன் பார்க்கப்படுகின்றது

எல்லை மறுசீரமைப்பு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நாட்டிலுள்ள பிரதேச செயலாளர்களின் எல்லைகளையும் கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகளையும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தல் என்பன மக்கள் தொகை , அரசியல் உறுப்புரிமை என்பனபோன்ற காரணங்களினால் முக்கியத்துவம் பெறுகின்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 17, 2010 at 12:39 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

வருடங்கள் 6: கல்முனையில் சுனாமியால் பாதிக்கபட்ட பலருக்கு இன்னும் வீடுகள் வழங்கப்படவில்லை

leave a comment »

இன்று கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்

கல்முனை பிரதேச கல்முனை குடி பகுதியில் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்க மக்களுக்கு வீடுகளை கையளிப்பதில் ஏற்பட்டு வரும் தாமதத்தை கண்டித்து இன்று கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளையும் விரைவாக பகிர்ந்தளிக்குமாறு கோரியே இந்த ஆர்பாட்டம் நடைபெருள்ளது சர்வதேச நிறுவனங்களால் கடந்த 2004 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட பல வீடுகள் இதுவரையில் கையளிக்கப்பட வில்லை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுடன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கண்னங்கர கலந்துரையாடி மீண்டும் வாக்குறுதிகளை வழங்கி சென்றுள்ளார்.இவ்வாறு பலதடவைகள் ஆர்ப்பாட்டமும் வாக்குறுதிகளும் வழங்கபப்ட்டு வருகின்றன என்று கல்முனையில் இருந்து நாம் பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

ஜூன் 16, 2010 at 4:45 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையின் பிராந்திய அரசியல் காய்நகர்த்தல்: இலங்கையின் கட்டுபாட்டில் இந்தியா

with one comment

M. ஷாமில் முஹம்மட்

ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான லின் பாஸ்கோ இன்று வருகிறார் அரசியல் நல்லிணக்கம்,அகதிகளின் மீள்குடியேற்றம்,மனிதஉரிமைகள் தொடர்பாக இலங்கைத் தலைவர்களுடன் லின் பாஸ்கோ கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என்று தெரிவிக்கபடுகின்றது , அதே வேளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் விசேட தூதுவர் சமந்தா பவர் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் போர்க் குற்ற விவகாரங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் டேவிட் பிரஸ்மன்,கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பட்டனீஸ் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் சமாதான ஏற்பாட்டாளரும் மீள்குடியேற்றம் மற்றும் மீள் நிர்மாணத்துறை பிரதிநிதியுமான யசூசி அகாசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் ஆகியோருக்கிடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது

இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து சர்வதேச சமூகம் திருப்தி காண முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோதப் படுகொலைகளுக்கான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார் தமது நாட்டின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தி வரும் இலங்கை  இஸ்ரேலின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார் இது இப்படி இருக்க இலங்கை நிலைவரம் தொடர்பாக இன்று புதன்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஆராயவுள்ளது பிரிட்டிஷ் பிரதான எதிர் கட்சியான தொழிற்கட்சியை சேர்ந்த உறுப்பினர் சியோபாயின் மக்டொனாக் இவ்விவகாரம் தொடர்பான விடயத்தை சபையில் எழுப்பவுள்ளதாக தெரிகின்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 16, 2010 at 11:18 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் சொத்தாகும்

leave a comment »

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் நியமணம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைமைத்துவம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத். மேலும், கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் சொத்தாகும். இதனை யாருக்கும் விட்டுக்கொடுக்க தயார் இல்லை. இது சம்பந்தமாக ஒரு இணக்கத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவம் வராத பட்சத்தில், ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து பிரியவும் தயார் என அவர் தெரிவித்தார்.

இந்நியமனம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்ஹவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து தமது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இது தெரியாமல் தான் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் நியமணம் தொடர்பில் கலந்துரையாடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 16, 2010 at 9:02 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தம் தேர்தல் முறையில் மாற்றம் எப்போது மக்கள் பார்வைக்கு ?

leave a comment »

உத்தேச அரசியலமைப்பு  சீர்திருத்தங்களை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ இன்று கோரிக்கை விடுத்துள்ளார். உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு முன்னராகவே, அது தொடர்பில் வெளிப்படுத்துமாறும் ரணில் விக்கிரமசிங்ஹ கோரிக்கை விடுத்துள்ளார்

சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகள், அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு கருத்தொருமைப்பாட்டைப் பெற்று அதனடிப்படையில் அரசாங்கத்துடன் பேசுவதென்ற நிலைப்பாட்டுக்கு தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணைத்து கட்சிகளும் வரவேண்டிய தேவை அரசியல் தளங்களில் உணர்தபடுகின்றது ஆனாலும் நடைமுறையில் அவை எந்த அளவு ஒருமைப்பாட்டுடன் அரசியல் நடவடிக்கைகளை ஒருங்கமைகின்றன என்பது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 15, 2010 at 7:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அங்கிகாரம் பெற்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமாக ஜாமியா நளீமியா

leave a comment »

பேருவலை ஜாமியா நளீமியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மாதம் 12 திகதி தொடக்கம் இன்று வரை வரைநடைபெற்றுகொண்டிருக்கும் இஸ்லாமிய கண்காட்சியின் அதன் தொடக்க நாளான 12 ஆம் திகதி அங்குரார்பன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜித்த சேனரத்ன பேருவலை ஜாமியா நளீமியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை அங்கிகாரம் பெற்ற சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு தான் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார் பேருவலை ஜாமியா நளீமியா காலாபீடம் ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்துகுரிய தகமைகளை கொண்டிருந்தாலும் இலங்கையில் ஆரம்பத்தில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கபடாமையால் இது தொடர்ந்தும் அங்கிகாரம் பெறாத பல்கலைக்கழகமாக இருந்து வந்துள்ளது என்பது குறிபிடதக்கது தற்போது அரசாங்கம் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கி வருவதால் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஜாமியா நளீமியா நிர்வாகம் இதை அங்கிகாரம் பெற்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமாக அல்லது அங்கிகாரம் பெற்ற சர்வதேச விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 15, 2010 at 9:58 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் தீயசக்திகள் சதித்திட்டம் : பிரதமர் ?

with one comment

பிரதமர் முஸ்லிம்கள் மத்தியில் ஆற்றிவரும் உரைகளின்போது முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும்  நாட்டிலும் உள்நாட்டு வெளிநாட்டு சதிகள் பற்றி பேசிவருகின்றார். முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மார்க்க ரீதியிலான பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேட சில முஸ்லிம் அரசியல் வாதிகள் முயன்று வருவதாகவும் இலங்கையில் வாழும் சமூகங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த முயலும் வெளிநாட்டு சக்திகளுக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் துணை போக கூடாது என்று கடன் 3.6.2010 அன்று பிரதமர் டீ. எம். ஜயரத்ன தனது அலுவலகத்தில் சந்தித்த இலங்கை ஜம்மியதுல் உலமா பிரதிநிதிகள் மத்தியில் பேசும்போது கூறியுள்ளார் அதேபோன்று நேற்று 13.6.2010  அன்று நடைபெற்ற அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் வைரவிழா மாநாடு கொழும்பு கிரேண்ட் ஓரியன்டல் ஹோட்டலில் நடைபெற்றபோதும் பிரச்சினையின்றி வாழ்ந்த மக்களைப் பிளவுபடுத்தி பிரிவினையை ஏற்படுத்தி நிலைமைகளைச் சீர்குலைக்க பல சக்திகள் இன்று திட்டமிட்டு வேலை செய்கின்றன. இந்தச் தீய சக்திகள் குறித்து முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டு என்றும் பலம் குன்றிய நாடுகளை மேலும் பலவீனப்படுத்தி பிளவுகளையும் அதிகரித்து மிலேச்சத்தனமான செயல்கள் மூலம் தமது இலட்சியங்களை வெற்றிகொள்வதே இந்தச் சக்திகளின் உபாயமாகுமெனவும் தெரிவித்துள்ளார் மேலும் அங்கு உரையாற்றுகையில் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2010 at 10:35 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நளீமியாவின் கிலாபத்தை நினைவு படுத்தும் துருக்கிய காட்சியறை

leave a comment »

அல் குர்ஆனின் விஞ்ஞான  அற்புதங்களும் ,மனித நாகரிகத்துக்கு முஸ்லிம்களின் விஞ்ஞான பங்களிப்பும் என்ற தலைப்பில் பேருவலை ஜாமியா நளீமியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தின் ஜூன் மாதம் 12 தொடக்கம் , 15 ஆம் திகதி வரை என்ற கால அட்டவணையில் கண்காட்சி நடைபெற்று வருகின்றது இங்கு 3 பிரிவுகளாக காட்சி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன இதில் விசேட காட்சியறைகள் ஒன்றில் துருக்கிய காட்சியறை அமைக்க பட்டுள்ளது இங்கு இஸ்லாமிய கிலாபத் காலபகுதியில் உருவாக்கப்பட்ட , பயன்படுத்தபட்ட பல்வேறுபட்ட பொருட்களின் சில மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளது இந்த காட்சி அறை கிலாபத் சிந்தனையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்று எமது செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார் 3.3.1924 ஆம் ஆண்டு துருகியில் இஸ்லாமிய கிலாபத் அழிக்க படும்வரையிலான காலபகுதில் 13 நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இறுதியாக துருக்கியில் அழிவுகளில் இருந்து பாதுகாக்கபட்ட சில பொருட்களின் சில மாதிரிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளது இஸ்லாமிய கிலாபத்தை இறுதியில் ஐரோப்பியர் துருக்கியில் வைத்து வீழ்த்தினர் கிலாபத் வீழ்த்தப்பட்டு 86 வருடங்கள் கடந்துள்ளது உலகம் முழுவதிலும் முஸ்லிம் உம்மாஹ் அதன் வழியை சுமந்து கொண்டிருகின்றது என்பது குறிபிடதக்கது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2010 at 9:14 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ள போதும் கிழக்கில் பதட்டம் தொடர்கின்றது

leave a comment »

இந்து சமுத்திரத்தின் அந்தமான், நிக்கோபார்  தீவுகளில் 7.5 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 7.5 ரிச்டர் அளவுகோலில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், இலங்கையின் மத்திய பகுதி, கிழக்கு மற்றும் மேற்கு கரையோரப் பிரதேசங்களில்-கொழும்பு, கண்டி, அனுராதபுரம், மட்டக்களப்பு- நிலநடுக்கத்திற்கான அறிகுறி உணரப்பட்டிருந்தது என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது . மட்டக்களப்பு , கல்முனை , அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சுனாமி அப்பிரதேசங்களில் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை எனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது இலங்கையின் கிழக்கு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைக் கோபுரத்தின் ஊடாக எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு அறிவித்தலும் விடுக்கப்பட்டதை அடுத்து கரையோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 13, 2010 at 8:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை இந்தியாவுடன் 7 சீனாவுடனும் 7 ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு தலை,சீனாவுக்கு வால் ?

leave a comment »

சீனப் பதில் பிரதமர் சியாங் டிஜியாங் பிரதமர் டி.எம்.ஜயவர்த்தனவை நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார் இந்தச் சந்திப்பின் போது 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன எனப் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை – சீனா இடையிலான பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு, அம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான உதவி, தென் மாகாணத்தில் அதிவேக பாதை அமைத்தல், தொழிநுட்ப ரீதியிலான ஒத்துழைப்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கான உதவி வழங்குதல் உள்ளிட்ட மேலும் சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒருமைப்பாடு, ஏற்றுமதி மற்றும் விமான சேவை என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இவை முறித்து இரு நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியா சென்ற ஜானதிபதி இந்தியாவுடனும் 7 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்பது குறிபிட்டதக்கது இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 12, 2010 at 4:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜாமியா நளீமியா கண்காட்சி இன்று ஆரம்பம்

leave a comment »

அல் குர்ஆனின் விஞ்ஞான அற்புதங்களும் ,மனித நாகரிகத்துக்கு முஸ்லிம்களின் விஞ்ஞான பங்களிப்பும் என்ற தலைப்பில் பேருவலை ஜாமியா நளீமியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தின் ஜூன் மாதம் 12இன்று தொடக்கம் , 15 ஆம் திகதி வரையுள்ள நாட்களில் நடைபெறவுள்ளது இங்கு 3 பிரிவுகளாக காட்சி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன அல் குர்ஆனின் விஞ்ஞான அற்புதங்கள் என்ற பிரிவில் புவியியல், மனிதக் கட்டமைப்பு, வானவியல், விலங்கியல் தாவரவியல், சமுத்திரங்கள் போன்ற துறைகளில் அல் குர்ஆன் முன்வைக்கும்  விஞ்ஞான உண்மைகள் காட்சிகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்களின் அறிவியல் துறை பங்களிப்பு என்ற பிரிவில் இயற்கை விஞ்ஞானம் , சமூக விஞ்ஞானம், அரபு எழுத்துகளை , மற்றும்  மூன்றாவது பிரிவில் விசேட காட்சியறைகள் ஒன்றில் துருக்கிய காட்சியறை இரண்டில் ஈரானிய காட்சியறை என்று மிகவும் சிறப்பாக அமைக்க பட்டுள்ளது

Written by lankamuslim

ஜூன் 12, 2010 at 4:08 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தனிநபர் ஒத்திவைப்பு பிரோரணைக்கு நாடாளுமன்றத்தில் தடை

leave a comment »

கொம்பனித்தெருவில் வீடுகள் விவகாரம்

கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியில் சட்ட விரோத வீடுகள் என்று 22 வீடுகள் அகற்றப்பட்டமை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் தனிநபர் ஒத்திவைப்பு பிரோரணை ஒன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்வைத்தார். எனினும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களின் மூலம் தெரியவந்ததே ஒழிய, வழக்கை பதிவு செய்துள்ளதாக உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிக்கவும் இல்லை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்து கொள்வது என்று அறிவிக்கவும் இல்லை. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 12, 2010 at 3:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் மாணவிக்கு பௌத்த விஹாரையில் பாராட்டு

with 4 comments

முஸ்லிம்கள் செறிந்த வாழும்  தர்கா நகரின் பத்திராஜா கொட எனும் பகுதியை சேர்ந்த எம் . எச் . நூர் ஹஸீமா ஹாரிஸ் என்ற மாணவி இலங்கை தேசிய சிறுவர் சம்மேளனத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டமையை பாராட்டும் முகமாக பத்திராஜா கொட பிரதேச ஸ்ரீ விவேகாரமயவில் அந்த மாணவியை பாரட்டும் நிகழ்ச்சி ஒன்று விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பெரும் திரளான சிங்கள மக்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பாராட்டும் , பரிசளிப்பும் வழங்க பட்டதாகவும் அறிய முடிகின்றது    விஹாராதிபதி மற்றும் சிங்கள , முஸ்லிம் அரசியல் வாதிகள் பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் வருகை தந்த பிரமுகர்களை விஹாரையின் பிரதான மண்டபத்துக்கு அரபு கசிதா- இறுதி தூதரை புகழும் பாடல்களுடன் அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது இவ்வாறான  இந்த நிகழ்வு தர்கா நகரின் நடந்த முதல் நிகழ்வாக பார்க்க படுகின்றது

Written by lankamuslim

ஜூன் 12, 2010 at 2:28 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முன்னால் புலிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும்

with one comment


பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கிழக்கு மாகாண பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும், கிழக்கின் உதயம் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் கண்காணிப்பு விஜயமொன்றை நேற்று முன்தினம் மேற்கொண்டுள்ளார் இதன் பின்னர் . வெலிகந்த, சேருநுவர இடைத்தங்கல் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களுக்கு சென்ற கோத்தபாய, புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் புலிகளின் உறுப்பினர்கள் குறித்து ஆராய்ந்துள்ளார். புனர்வாழ்வு முகாம்களில் பல்வேறு தொழில் பயிற்சிகளை பெற்று வரும் முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் பாதுகாப்புச் செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது . பாதுகாப்புச் செயலாளருடன் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளும் நேற்று முன்தினம் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்

Written by lankamuslim

ஜூன் 12, 2010 at 1:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நியமனங்களின் போது முஸ்லிம்கள் புறகணிப்பு

with one comment

திருகோணமலை மாவட்ட மாகாண சபையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குணவர்த்தன என்பவர் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டமையால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டாவதும் மூன்றாவதுமான இடங்களில் இருக்கும் முஸ்லிம்களான திருகோணமலை மாவட்ட வேட்பாளர் டாக்டர் லாபிர் மற்றும் மூதூர் பிரதேச வேட்பாளர் தௌபீக் என்பவர்கள் புறகணிக்கபட்டு நான்காவது இடத்தில் இருக்கும் காமினி என்பவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார் இந்த நடவடிக்கை மாகாண சபை நியமன விதிகளை மீறும் செயலாக பார்கபடுகின்றது என்பதுடன் மாகண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்த திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களை ஏமாற்றும் நடவடிக்கையாக சுட்டிக்காட்டதக்கது

அதேபோன்று ஜனாதிபதியால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனத்தின் போதும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் மீன் பிடித்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயும் நியமிக்கப்பட்டுள்ளார் இந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்பது குறிபிடதக்கது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 11, 2010 at 5:56 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரிசானாவின் பெற்றோர் விடுதலை கோரி மனித உரிமை ஆணைக்குழுவிடம் மனு செய்துள்ளனர்

leave a comment »

2005ஆம் ஆண்டு சவூதி அரேபியா நாட்டுக் கைக்குழந்தையொன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ரிசானா நபீக் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டார் இவரின் வறுமையில் வாடும் பெற்றோர் ரிஸானாவை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர், ரியாத்திலுள்ள சட்டப் பிரதிநிதி ஊடாக இந்த கருணை மனு அரசாங்க மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பண்டார அல் ஐபானிடம் கையளிக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன . இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணான ரிசானா தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த முறை இவரின் வழக்கு நீதிமன்றம் வந்தபோது அப்துல்லா அல் ரசீம் என்ற நீதியரசர் ரிசானாவின் வாக்குமூலத்தை மொழிபெயர்த்த இந்திய மொழிபெயர்ப்பாளரை மொழிபெயர்ப்பு பிழை என்பதால் நீக்குமாறும் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிபிடதக்கது.

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய ரிசானா வீட்டு எஜமானின் குழந்தை மரணமடைந்தது தொடர்பாக அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். சவூதி அரேபிய நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. இதனையடுத்து 2009ம் ஆண்டு ரிசானா நௌபீக் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ததை அடுத்து விசாரணைகள் சவூதி அரேபிய நீதிமன்றத்தில் மீட்டும் ஆரம்பமானது

Written by lankamuslim

ஜூன் 11, 2010 at 10:42 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் இராணுவத்தை அனுப்பி காஸாவை பாதுகாக்க கோரும் ஆர்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

காஸா இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவ முற்றுகைக்குள் 1.6 மில்லியன் பாலஸ்தீனிய காஸா மக்கள் போதுமான எந்த உணவு , மருந்து , மருத்துவம் எதுவும் இன்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையால் காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில் பெண்கள் , சிறுவர் , சிறுமியர் ,வயோதிபர் என்ற பாகுபாடுகள் இன்றி வதைக்க படுகின்றனர் .  வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான , மின்சாரம், தண்ணீர், உணவு, மருந்து, சமையல் வாயு, எதுவுமே காஸா வுக்குள் இஸ்ரேலியஆக்கிரமிப்பு படையால் அனுமதிக்க படுவதில்லை இரண்டு வருடங்களுக்கு முன்னர் S.S. Free GAZA என்ற கப்பல்கள் 2008 ஆம் ஆண்டில் காஸாவை அடைந்தது அதன் பின்னர் எந்த நிவாரண உதவி கப்பல்களும் அனுமதிக்க படவில்லை மருத்துவமனைகளில் சிகிச்சை இன்றி குழந்தைகளின் இறப்புவீதம் மிக மேசமாக அதிகரித்துள்ளது. நான்கு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வது என்பது மிகவும் கடினமாக மாறிவருகின்றது காஸா  வில் 70 வீதமானவர்கள் மிகவும் மோசமான வறுமை நிலையில் போதுமான உணவு இன்றி உள்ளனர் முஸ்லிம் எகிப்து காஸாவின் பக்கமுள்ள தனது எல்லையை மூடி காஸா முஸ்லிம்களை பட்னி போட்டு கொலை செய்ய இஸ்ரேலுக்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கிவருகின்றது எகிப்து ஜனாதிபதி ஹு சனி முபாரக் ஒரு முஸ்லிம் உம்மாவின் துரோகியாக தன்னை அடையாளபடுத்தினார் காஸா மக்கள் வேறு வழி இன்றி காஸா வுக்கும் எகிப்துக்கும் இடையில் நிலக் கீழ் சுரங்கம் Video விரிவாக பார்க்க…

Written by lankamuslim

ஜூன் 10, 2010 at 3:33 பிப

பலஸ்தீன் இல் பதிவிடப்பட்டது

கொம்பனித்தெரு குடியிருப்பு அகற்றப்பட்டமை தொடர்பான நூல் வெளிவந்துள்ளது

with one comment


அண்மையில் கொழும்பு,கொம்பனித்தெரு பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் சட்டவிரோதம் எனக் கூறி அரசாங்கத்தினால் இடித்து தகர்த்து அகற்றப்பட்டன. இவற்றின் உண்மைத்தன்மையை விளக்கும் ஆவணங்களுடன், நூலொன்று வெளியிடப்பட்டுள்ளது. முஸ்லிம் தகவல் நிலையம் -MIC-தன்னுடைய பத்தாவது ஆண்டு நிறைவைமுன்னிட்டு இதனை வெளியிட்டது.ரண்முத்து ஹோட்டலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற் வைபவம் ஒன்றில் நூலின் பிரதிகள் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது நூலின் பிரதியொன்றை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீமிடம் முஸ்லிம் தகவல் நிலைய செயலாளர் ஸுஹைர் காரியப்பர் கையளிப்பதை படத்தில் காணலாம் இந்த நிகழ்வில் முஸ்லிம் சமூக பல்துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர் இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக சட்டத்தரணி அஸீஸ் The President of the Bar Association of Sri Lanka கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்

Written by lankamuslim

ஜூன் 10, 2010 at 12:08 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை கடலில் காணாமல் போன மூவரில் ஒருவர் மட்டும் உயிருடன்

leave a comment »

கல்முனையிலிருந்து வெளியிணைப்பு இயந்திரப் படகில் மீன் பிடிக்கச் சென்று கடந்த மாதம் 18ந் திகதி காணாமல் போன மூவரில் இருவர் 19 நாட்களின் பின்னர் கரை சேர்ந்தபொழுதும் பின்னர் அவரில் ஒருவர் வபாத்தானார். சாஹித் அப்துல் சமத் -வயது 36-, உமர் லெப்பை அப்துல் ரஹ்மான் -வயது 46-, அச்சி முஹம்மத் அஸ்வர் -வயது 27- ஆகியோரே கல்முனையிலிருந்து மீன் பிடிக்கச் சென்றவர்களாவர். மேற்படி இரு மீனவர்களும் திருகோணமலையிலிருந்து 301 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள கடற்பரப்பிலிருந்து கடற்படையினர் இவர்களை மீட்டு திருமலை துறைமுகத்தில் வைத்து சிகிச்சை யளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் உமர் லெப்பை அப்துல் ரஹ்மான் வபாத்தாகியுள்ளார் .

சிகிச்சையின் பின்னர் சாஹித் அப்துல் சமத் அவரது சொந்த ஊரான கல்முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் சாஹித் அப்துல் சமத் கருத்துத் தெரிவிக்கையில், ‘நாங்கள் மூவரும் 18ம் திகதி கடலுக்குச் சென்றோம். வலை கட்டி அடுத்த நாள் காலை கரைவருவதற்கு வள்ளத்தில் வலைகளை ஏற்றிவிட்டு வெளியிணைப்பு இயந்திரத்தை இயக்க ஆரம்பித்தபோது அதன் சாவி உடைந்துவிட்டது. விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 10, 2010 at 12:26 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி மஹிந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சந்திப்பு

leave a comment »

இந்தியா இலங்கை இடையே ஏழு உடன்பாடுகள் கையெழுத்தாகியுள்ளன. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இந்த உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன. நான்கு நாள் இந்திய விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று(புதன்கிழமை) இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இதர தலைவர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.

இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப் பகிர்வு, பாதுகாப்பு விடயங்கள், இருவழி வர்த்தகம், போக்குவரத்து சேவைகள் உட்பட பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை இலங்கை அரசு விரைவாக செய்ய வேண்டும் என இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 9, 2010 at 11:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையால் சுடப்பட்ட அஹமத் லுக்மான் தனது பயங்கரத்தை விபரிக்கின்றார்

leave a comment »

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் நிவாரண உதவி கப்பல்கள் மீது நடத்திய தாக்குதலில் இலங்கையை சேர்ந்த  அஹமத் லுக்மான் மற்றும் இவரின் சகோதரி தஸ்லீம் மரியம் இருவரும் சகோதரர்கள் இவர்கள் டாக்டர் லுக்மான் தாலிப் என்பவரின் பிள்ளைகள் என்று அறிய முடிகின்றது இதில் அஹமத் லுக்மான் காலில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் துளைத்த கடும் காயங்களுடன் தற்போது துருக்கியின் ஸ்தான்புல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்  இவர் தனது பயங்க அனுபவங்களை விபரிக்கிறார்

Written by lankamuslim

ஜூன் 9, 2010 at 10:35 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரசை கழட்டி விட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு !

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் திங்கள்  நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசும் பேச்சுவார்த்தையாக இருந்ததே தவிர, இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையாக இருக்கவில்லை. தற்போதைய சுழ்நிலையில், இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பங்குபற்ற வேண்டும். அவ்வாறு இரு கட்சிகளும் இணைந்து பங்குபற்றுவதன் மூலமே வட கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கும். அவ்வாறில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாயின், முன்னைய பேச்சுவார்த்தைகள் போன்றே பயணிக்கும் என்று    தெரிவித்துள்ளார் இது வழமையாக தமிழ் தரப்பால் முஸ்லிம் தரப்புக்கு நிகழ்வது போன்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை    கழட்டி விட்டுள்ளது என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்

Written by lankamuslim

ஜூன் 9, 2010 at 9:25 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேலை கண்டித்து சபையில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை

leave a comment »

பலஸ்தீனத்துக்குச் சென்ற  துருக்கி உதவிக் கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டிப்பது தொடர்பாக சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்று இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படவுள்ளது ஆளும்  தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் சபை ஒத்திவைப்பு பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

பலஸ்தீன அகதிகளுக்கு அத்தியா வசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற  கப்பல்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய தாக்குதலினால் பலர் உயிர் இழந்தனர். இரு இலங்கையர்கள் உட்பட ஏராளமான மனிதாபிமான உதவியாளர்கள் காயமுற்றனர். இச்சம்பவம் தொடர்பாக இலங்கை மக்களின் கண்டனத்தை தெரிவித்து சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படுவதுடன் விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கபடுகின்றது .

Written by lankamuslim

ஜூன் 9, 2010 at 8:51 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி மஹிந்த இந்திய செல்கின்றார் சீனாவின் உதவிப்பிரதமர் இலங்கை வருகின்றார்

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த இன்று இந்தியா புறப்பட்டு செல்லவுள்ளார் இவர் இந்திய விஜயத்தின் போது  இலங்கை அரசியல் , பொருளாதார , மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இந்திய பிரதமருடன் பேசுவார் என்று தெரிகின்றது நேற்று இது பற்றி கருத்து தெரிவித்த ஜே.வி.பி. இலங்கை அரசால் தயாரிக்கப்பட் டுள்ள அரசமைப்புத் திருத்தங்களை இந்தியா செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய அரசிடம் காண்பிக்கவுள்ளார் என்றும் இந்தியாவின் ஒரு மாநிலம் போல் இலங்கை செயற்படுகிறது என்றும் ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது . அதே வேளை நாளை மறுதினம் வியாழக்கிழமை இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயும் முகமாக சீனாவின் உதவிப்பிரதமர் சாங்டிஜாங் அடங்கிய குழுவினர் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளனர் வரும் இந்தக் குழுவினர் சீனா வின் நிதி உதவியுடன் இங்கு மேற்கொள் ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிடுவர். அத்துடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர், சபாநாயகர் மற்றும் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடு வதுடன் அபிவிருத்திப் பணிகளைச் சார்ந்த அதிகாரிகளுடனும் கலந்துரையாடவுள்ளனர் என்று தகல்கள் தெரிவிக்கின்றன .

Written by lankamuslim

ஜூன் 8, 2010 at 12:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது