Lankamuslim.org

Archive for the ‘அப்கான்’ Category

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் தொடர்ந்தும் நிலைகொள்ளுமாம்

leave a comment »

ஆப்கானிஸ்தானில் இருக்கும் நேட்டோ   படை 2014 ஆம் ஆண்டுக்கு பின்னரும் நீண்டகாலத்திற்கு நீடிப்பதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இது தொடர்பாக நேட்டோவின் தலைமை செயலரான அண்டர்ஸ் போக் ராஸ்முஸ்ஸன் கூறுகையில், நேட்டோ நாட்டை விட்டு வெளியேற தாலிபான்கள் காத்திருந்தால் அது அவர்களுக்கு ஏமாற்றம் தான் என்றும், தாங்கள் நீண்டகாலம் அங்கிருக்க போவதாக கூறியுள்ளார்

அத்தோடு தாம் இராணுவ செயல்களோடு நிறுத்திவிடாமல் மற்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தாங்கள் உணர்ந்து கொண்டு விட்டதாகவும் அவர் கூறினார். போர்த்துகலில் நடைபெற்ற நேட்டோ மாநாடு ஒன்றில் அவர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 21, 2010 at 10:04 முப

அப்கான் இல் பதிவிடப்பட்டது

Webster Tarpley: பாகிஸ்தானில் இடம்பெறும் கொலைகளை செய்வது அமெரிக்கா

leave a comment »

Webster Tarpley அமெரிக்க புலனாய்வு எழுத்தாளரும் ஊடகவியலாலருமான இவர் பாகிஸ்தான் மக்கள் சந்தைகளிலும் , பொது இடங்களிலும் கொல்லபடுவது அமெரிக்காவினால் என்று கூறுகின்றார்

அமெரிக்க புலனாய்வு எழுத்தாளரும் ஊடகவியலாலருமான வேப்ச்ட்டர் தர்ப்லே- Webster Tarpley – பாகிஸ்தானில் நடைபெறும் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் அமெரிக்கா என்றும் பிளக் வேட்டர் -Black-Water என்ற அமெரிக்காவின் தனியார் இராணுவம் இந்த குண்டுகளை வைப்பதாகவும் தொடர்ந்தும் குற்றம் சாட்டிவருகின்றார் அமெரிக்கா பாகிஸ்தானில் தனது நலன்களை பேணும் இராணுவ குழுக்களை உருவாக்கியுள்ளதாகவும் அவற்றை பயன் படுத்தி அழிவு நாசவேலைகள் செய்வதாகவும் பாகிஸ்தானில் பரவலான குற்றசாட்டுகள் உள்ளன Webster Tarpley சில மாதங்களுக்கு முன்னர் வழங்கியுள்ள அவரின் பேட்டியை இங்கு பார்க்கவும் வீடியோ

Written by lankamuslim

மே 30, 2010 at 7:57 பிப

அப்கான் இல் பதிவிடப்பட்டது

உலகில் கிலாபத் ஏற்படுத்துவதை தடை செய்வதுதான் ஆப்கான் போரின் நோக்கம்

with one comment

போரின் உண்மையான நோக்கத்தை உறுதிப் படுத்தியுள்ளார் ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் இராணுவ தளபதி றிச்சர்ட்  டன்னத்ட் General Richard Dannatt:

கடந்த வருடம் ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் இராணுவ தளபதி றிச்சர்ட்  டன்னத்ட் General Richard Dannatt – ஆப்கான மீதான போர் கிலாபத்- இஸ்லாமிய ஆட்சிமுறை – மீண்டும் ஏற்படுத்தப்படாமல் தடுக்கும் போர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் இவர் BBC’s Today program இக்கு கடந்த 14ஆம் திகதி வழங்கிய செவ்வியில் ‘  இஸ்லாமிய திட்டமுறை Islamist agenda ஒன்று இருக்கிறது அதை நாம் தென் ஆப்கானிஸ்தானில் அல்லது ஆப்கானிஸ்தானில்  அல்லது தெற்கு அசியாவில் அவற்றை எதிர்க்காவிட்டால் ,  அதன் செல்வாக்கு வெளிப்டையாக வளரும் அது நன்றாக வளரக்கூடியது அது தெற்கு அசியாவில் இருந்து மத்திய கிழக்கு , வட ஆபிரிக்கா நோக்கி 14 ஆம் , 15 ஆம் நூற்றாண்டு கிலாபத்தின் பதிவுகளை கொண்டிடு நகர்வதை நாம்   காணமுடியும்’  என்று கூறியுள்ளார்

இந்த ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் இராணுவ தளபதி    றிச்சர்ட்  டன்னத்ட் General Richard Dannatt பிரிட்டிஷ்  புதிய பிரதமரான கமிரோனின் – Prime Minister Cameron-தற்போதைய ஆலோசகர் என்பதும் இஸ்லாமிய  கிலாபத் முறைமையை கடுமையாக எதிர்ப்பவர் என்பதும்   குறிபிடதக்கது. இவர் BBC’s Today program க்கு வழங்கிய செவ்வியை கேட்பதற்கு -:   OurUmmah.org

Written by lankamuslim

மே 18, 2010 at 10:21 முப

அப்கான் இல் பதிவிடப்பட்டது

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளும் பெண்களுமாக 33 பேர் படுகொலை

leave a comment »

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில்   நேட்டோ    படை  நடத்திய மிகவும் மோசமான வான் தாக்குதல் ஒன்றில் 33 பொதுமக்கள்  கொல்லப்பட்டதை நேட்டோ ஒப்புகொண்டுள்ளது  தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள  உருஸ்கான் மாகாணத்தில் நடத்தப்பட்ட  மிகவும் மோசமான  தாக்குதலில் அதிகமான குழந்தைகளும்  பெண்களும் கொல்லப்பட்டதாக ஆப்கானிய பொம்மை  அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார் .  தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக வந்து கொண்டிருந்த போராளிகளை தாம் அழித்து விட்டதாக நேற்று   நேட்டோ படை  தெரிவித்தமை குறிபிடதக்கது . விரிவாக பார்க்க…


We are unable to identify your browser, For mobile site click here.

//

Written by lankamuslim

பிப்ரவரி 22, 2010 at 7:56 பிப

அப்கான் இல் பதிவிடப்பட்டது

சிறுவர்களை கொடுரமாக கொன்று சாதனை படைக்கும் ஆப்கான் ஆக்கிரமிப்பு படை

leave a comment »

ஆறு, ஒன்பது மற்றும் 10 ஆம் தரங்களில் கல்வி கற்கும் 8 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேரை மூன்று வீடுகளிலிருந்து அழைத்து வந்து சுட்டுக் கொன்றுள்ளமை தெரியவந்துள்ளது

ஆப்கானிஸ்தான் வீடொன்றில் தூக்கத்திலிருந்த 8 சிறுவர்கள் உட்பட 10 பேரை வெளியே இழுத்து வந்து ஒரு அறைக்குள் வைத்து பின்புறமாக கைகளை கட்டி  சுட்டுக் கொன்றதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் மீது கடந்த  புதன்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 8 பேர் பாடசாலை சிறுவர்களென அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கொல்லப்படுவதற்கு முன்னர் சிலருக்கு கைவிலங்கு இடப்பட்டு  சித்திரவதை செய்யப்பட்டதாக  உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர் .ஆனால்  பயங்கரவாதிகளே கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரிவாக பார்க்க

இது தொடர்பான எமது கட்டுரைகள்

Written by lankamuslim

ஜனவரி 3, 2010 at 5:33 பிப

அப்கான் இல் பதிவிடப்பட்டது