Lankamuslim.org

Archive for the ‘இஸ்லாமி சட்டம்’ Category

கவர்ச்சிக்கும் ஹிஜாபுக்கும் உள்ள வித்தியாசம் ?

leave a comment »

Hejab

சிந்தனைக்கு ஒரு படம்

கவர்ச்சி யாக ஆடை அணித்து தன்னுடைய அங்கங்களை உலகுக்கு காட்டும் ஒரு பெண்ணுக்கும் தன்னுடைய உடலை முழுமையாக ஆடைகளால் மறைத்து கண்ணியமாக நடக்கும் ஒரு பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் மேல் உள்ள படத்தை பார்த்தால் புரியும்

Written by lankamuslim

நவம்பர் 6, 2009 at 9:37 முப

இஸ்லாமி சட்டம் இல் பதிவிடப்பட்டது

ஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை

leave a comment »

InfantReadBook-main_Full

ஒவ்வொரு  குழந்தையும்  தன்னுடைய அகீகாவுக்கு அடைமானமாக இருக்கிறது தனது ஏழாம் நாளில் தனக்காக (ஆடு)  அறுக்கப்படும், அந்த குழந்தையின் தலை முடி இறக்கபடும், பெயர் வைக்கப்படும்

நபிமொழி

நூல்:  நஸயீ, -4149
அல்லாஹ்வின் தூதரின் சுன்னாக்கள்

ஏழாம் நாளில் ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் கொடுப்பது சிறப்பு
ஒரு ஆடு கொடுப்பது போதுமானது .

ஏழாம் நாளில் குழந்தையின் தலை முடி இறக்குவது

ஏழாம் நாளில்பெயர் வைப்பது
ஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இஸ்லாம் அனுமதிக்காதவை

1.குழந்தை பிறந்தவுடன் அதனை கணவனின் தாயே முதலில் தூக்க (ஏந்துதல்)வேண்டும்.
2. குழந்தையின் காதில் பாங்கு, இகாமத் சொல்லி ஊத வேண்டும்.
3.குழந்தை கண்னை திறக்கும் போது அதன் தந்தை முன்னே நிற்கக் கூடாது.
4.குழந்தை பிறந்து 19வது அல்லது 30வது நாளில் தலை முடியை மழிப்பது.
5.விழுந்த தொப்புள் கொடி, தாயின் தலை முடி, களைந்த நகம் ஆகியவற்றை  நாற்பதாவது தினத்தன்று புதைத்து தொடக்கைக் கழிப்பது.
6.நெருப்பினால் சுட்ட இரும்பைக் கொண்டு குழந்தையின் தலைக்கு மேல் சுற்றுவது.
7.குழந்தைக்கு பாலூட்டும் போது தாய் கணவனை நினைப்பது.
8.குழந்தை சிரிக்கும் போது மலக்குகள் பூக் கொத்தைக் காட்டி சிரிக்க வைக்கின்றார்கள் என நம்புவது.
9.குழந்தை அழுதால் மலக்குகள் பூவைப் பறித்துக் கொண்டார்கள் எனப் பேசுவது.
10.குழந்தைக்கு பெயர் சூட்டுவதை தனியான விழாவாகக் கொண்டாடுவது.
11.சூட்டிய பெயரை கணவனின் தாய் தான் முதலில் அழைப்பது.
12.குழந்தையின் பெயரை மூன்று தடவைகள் கூப்பிடுவது.
13.குழந்தையை ஜெய்லானி, தெவட்டகஹ போன்ற தர்ஹாக்கள் நிறைந்த இடத்திற்கு எடுத்துச் சென்று கப்ரில் கிடத்துவது.
14.குழந்தைக்கு பாவா பெயர் சூட்டுவது.
15.பிறந்து நாற்பதாம் நாள் குடும்பத்தார், சுற்றத்தார் அனைவருக்கும் விருந்தளிப்பது.
16.நாற்பது நாள் வரை குழந்தையின் தாய் தொழாமல் இருப்பது.
17. 40ம் நாளைக்கு முதல் நாளன்று தாய் உபயோகித்த அனைத்து பொருட்களுடன் சுவரைக் கூட தேய்த்துக் கழுவுவது.
18. 40வது அன்று குழந்தையுடன் சேர்ந்து தாயும் குளித்தால்தான் கடமை நீங்குமென்று நம்புவது.
19. குழந்தைக்கு பேய், பிசாசின் தீங்கிலிருந்து காக்க ஹஸ்ரத்மார்களை வைத்து துஆ ஓதி மந்திரித்து தாயத்துக் கட்டி விடுவது.
20. குழந்தை அழுதால் பீங்கான்களில் இஸ்ம் எழுதி அவற்றை கரைத்துக் குடிக்கக் கொடுப்பது.
21.குழந்தை பிறந்தால் அவ்வீட்டிற்கு புதிய ஷைத்தானும் கூட வருவதாக நம்புவது.
22.குழந்தை பிறந்த வீட்டினுடைய முன் கதவில் வேப்ப இலைகளைக் கோர்த்து வைப்பது.
23.குழந்தை பிறந்து 40 வது தினத்தில் தாய், குழந்தை புத்தாடை அணிந்து விழாக் கொண்டாடுவது.
24.குழந்தையின் இடுப்பில் நாடா அணிவிப்பது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 26, 2009 at 9:58 பிப

இஸ்லாமி சட்டம் இல் பதிவிடப்பட்டது

இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?

leave a comment »

1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள்,ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில்,கையில்தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா,கத்தம்.
29. அங்கே சரஸ்வதி , லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது,யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.
ஒரு நறுக்கு -அல்- பாகவி

Written by lankamuslim

ஓகஸ்ட் 14, 2009 at 9:12 பிப