Lankamuslim.org

Archive for ஜனவரி 2011

ஹுஸ்னி முபாரக் அரசுக்கு இஸ்ரேல் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது !

leave a comment »

OurUmmah: இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு எகிப்து ஹுஸ்னி முபாரக் அரசுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளை எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கை விமர்சிக்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளது இஸ்ரேலின் பிரபல தினப் பத்திரிகையான -Ha’aretz -வெளியிட்டுள்ள செய்தியில் இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சு தனது முக்கிய வெளிநாட்டு தூதுவர்களுக்கு எகிப்தின் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவதை கருத்தில்கொண்டு ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கை விமர்சிக்கவேண்டாம் என்று வலியுறுத்த கோரும் தகவகள் அனுப்பப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளது விரிவாக

Written by lankamuslim

ஜனவரி 31, 2011 at 9:18 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடியில் டாக்டர் சாகிர் நாயிக்

leave a comment »

இஸ்லாமிய அறிஞரான டாக்டர்  சாகிர் நாயிக் இலங்கை வந்துள்ளார். இதன்போது நேற்று அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் கலந்துரையாடல்களையும் மேற் கொண்ட இவர் இன்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் அதன் போது காத்தான்குடிக்கு சென்று பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஏற்பாடு செய்யப்படிருந்த நிவாரண உதவிகள் சிலதையும் பாதிக்க்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளார்

காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய பள்ளிவாயலுக்கு சென்ற இவருக்கு பெருந்திரளான மக்கள் வரவேற்பளித்துள்ளனர். இதன் போது இங்கு விஷேட உரையொன்றையும் நிகழ்த்தியுள்ளார் இது தொடர்பாக காத்தான்குடி இன்போ பதிவு செய்துள்ள வீடியோவை இங்கு தருகின்றோம்   விரிவாக Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 31, 2011 at 6:41 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கம்பளையில் பதினொரு முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்

leave a comment »

உள்ளூராட்சித் தேர்தலில் கம்பளை நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பதினொரு முஸ்லிம்களும் நான்கு தமிழர்களும் களத்தில் குதித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் எம்.எம்.எம்.ஹாரிஸ், என்.எம்.பாலின், ஆகிய முன்னாள் உறுப்பினர்களுடன் எம். எச்.எம்.பாஹிம், எம்.இர்பான், எஸ்.எம். அஸாம் ஆகியோரும் முஸ்லிம்கள் சார்பில் போட்டியிடும் அதேவேளை தமிழர்கள் சார்பில் தொழிலதிபர் அருணகிரிநாதனும் மயில்வாகனம் அமுதா என்ற பெண்ணும் போட்டியிடுகின்றார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முன்னாள் உறுப்பினர்களான எம்.ஆர்.எம். ஹுரைஸ், எம்.மின்ஹாஜ், எம்.எஸ்.எம். சிஹான் ஆகியோருடன் புதுமுகங்களான எம்.கியாஸ், எம்.இம்தி ஆகியோரும் முஸ்லிம்கள் சார்பில் போட்டியிடுகின்றனர். மேலும் தமிழர்கள் சார்பில் எஸ்.பாலு, ஜே.கமலதாஸன் ஆகியோரும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 31, 2011 at 5:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அம்பாறையில் 10 இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி

with 2 comments

அம்பாறையில் அனைத்து இடங்களிலும் ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகின்றது அதேவேளை அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் அக்கரைப் பற்று குடியிருப்பு போன்ற பகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றது ஆனால் இது தவிர்ந்த ஏனைய இடங்களில் தேசிய காங்கிரஸ் இணைத்து போட்டியிடுகின்றது சமாந்துரையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நௌசாத் தலைமையில் பொது முன்னணியுடன் இணைந்து வெற்றிலை சினத்தில் போட்டியிடுகின்றது.

புத்தளத்தில் ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகின்றது புத்தள மாவட்டத்தில் சிலாபம் பிரதேச சபைக்கான முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது அதேபோன்று மாத்தளை மாவட்டம் உக்குவளை கண்டி மாவட்டம் அக்குரணை பிரதேச சபைக்கான முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 31, 2011 at 10:58 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எருக்கலம்பிட்டியில் மீள் குடியேற சென்றவர்கள் விசனம்

leave a comment »

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்தில் மீள்குடியேறியுள்ள மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக அம்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்புலி பயங்கரவாதிகளினால் 1990 ஆம் ஆண்டு பலவந்தாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம் மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். சுமார் 700 குடும்பங்கள் தற்போது தமது சொந்த விருப்பத்தின் பேரில் மீண்டும் மன்னார் எருக்கலம்பிட்டியில் குடியேறி வருகின்றனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 31, 2011 at 10:17 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

லங்கா இ நியூஸ் அலுவலகம் எரிப்பு உடனடி விசாரணை

leave a comment »

லங்கா இ நியூஸ் இணையத்தள அலுவலகம் தீப்பற்றிக் கொண்டது தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சற்று முன்பு பொலிஸ் மா அதிபரை பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

ஜனவரி 31, 2011 at 10:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எமக்கு நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை

leave a comment »

பெருவெள்ளத்தின் காரணமாக கிழக்கில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் இவர்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் பல இஸ்லாமிய மற்றும் அமைப்புகள் இணைந்து நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது

ஆனாலும் பெருவெள்ளத்தாள் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு இந்த நிவாரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று முறைப்பாடு தெரிவிக்கப் படுகின்றது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 31, 2011 at 10:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸ் இன்று நீதிமன்றம் செல்கின்றது

leave a comment »

உள்ளூராட்சி சபை தேர்தலுக் காக தாக்கல் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸின் வேட்பு மனுக் கள் நிராகரிக் கப்பட்ட மைக்கு எதி ராக இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கடந்த 27ம் திகதி வேட்பு மனுக்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்பட்ட போது ஸ்ரீல மு. காங்கிரஸினால் தாக்கல் செய்யப்பட்ட சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் தனித்து போட்டியிடவென உக்குவளை பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு மாத்தளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 31, 2011 at 9:15 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நிருபமா ராவ் ஜனாதிபதி சந்திப்பு

leave a comment »

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார். நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்த சந்திப்பின்போது பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக தமிழக மீனவர்கள் இருவர் ஒரு மாதத்துக்குள் கொல்லப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டு விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 31, 2011 at 9:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

டாக்டர் சாகிர் நாயிக் நாளை மட்டக்களப்புக்கும் விஜயம் செய்கின்றார்

leave a comment »

இஸ்லாமிய அறிஞரான டாக்டர் . சாகிர் நாயிக் இலங்கை வந்துள்ளார். இதன்போது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா , மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் கலந்துரையாடல்களையும் மேற் கொண்டுள்ளார் இவரின் விஜயம் தனிப்பட்ட விஜயமாக அமைத்துள்ளதா தெரியவருகின்றது இவர் நாளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் அதன் போது காத்தான்குடிக்கும் செல்லவுள்ளார் இதன்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதுடன் அங்கு மஸ்ஜித் ஒன்றிலும் உரையாற்றவுள்ளார் என்று தெரியவருகின்றது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 30, 2011 at 8:54 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிங்களத் தீவுக்கு பாரதி கட்டிய பாலமும் வ உ சிதம்பரம் அனுப்பிய கப்பலும் !

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்

“பொய்ம்மை தீர, மெய்ம்மை நேர வருத்த மழிய வறுமை          யொழிய
வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி) “  -சுப்ரமணிய பாரதி

எதிர்வரும் மாசி ( பெப்ருவரி) மாதக் கடைசியில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் மிடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. அதற்கான அறிவித்தல்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன.அதுவும் அந்த பயணிகளுக்கான கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்படும் கப்பலின் பெயரும் வ. உ .சி சிதம்பரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரபோராட்டத்தில் பிரித்தானியா அந்நிய ஆட்சியாளர்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் ஒன்றாக வ.உ.சி என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த வ. உ . சிதம்பரம்பிள்ளை பிரித்தானியா கப்பல்களுக்கெதிராக நடத்தி காண்பித்த சுதேசிய கப்பல் சேவையை குறிப்பிடலாம். பிரித்தானிய ஆட்சியாளர்களுக் கெதிராக கொழும்புக்கும் தூத்துக்குடிக்கு மிடையில் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 30, 2011 at 8:11 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு டாக்டர் ஸாகிர் நாயிக் விஜயம்

leave a comment »

செய்தி திருத்தும் பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் பஸ்லுல் ஜிப்ரி அவர்களின் அழைப்பின்- பேரில் உத்தியோகப் பற்றற்ற விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் ஸாகிர் நாயிக் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட நாளை திங்கட் கிழமை (31-1-2011) அங்கு விஜயம் செய்யவுள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கோடு நாளைக் காலை கிழக்கு மாகாணம் நோக்கி ஹெலிகப்டரில் மேற்கொள்ளவிருக்கும் இவ்விஜயத்தில் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தொழிலதிபர் அல்ஹாஜ் பஸ்லுல் ஜிப்ரி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் ஆகியோரும் செல்லவிருக்கின்றனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 30, 2011 at 2:34 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பதுளை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 98 முஸ்லிம்களும் 346 தமிழர்களும் போட்டி

leave a comment »

பதுளை மாவட்டத்தின் இரு நகர சபைகளினதும் 15 பிரதேச சபைகளினதும் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 346 இலங்கை , இந்திய தமிழர்களும் 98 முஸ்லிம்களும் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர் என்று தெரிவிக்கபடுகின்றது

மாவட்டத்தின் ஒரு இலட்சத்து பதினாறாயிரம் தமிழ் வாக்காளர்களையும் 40 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களையும் மையப்படுத்தியே, மேற்கண்ட வேட் பாளர்கள், தேர்தலில் போட்டியிடுகின்றனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 29, 2011 at 11:44 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹுஸ்னி முபாரக்கின் அறிவிப்பை ஆர்பாட்டக்காரர்கள் நிராகரித்துள்ளனர் !!

leave a comment »

OurUmmah: இணைப்பு-4 கடந்த 25 திகதி தொடக்கம் எகிப்து நாடு முழுவதும் இன்று ஐந்தாவது நாளாக மிக பாரிய ஆர்பாட்டம் நடைபெற்றுவருகின்றது நேற்று 28.01.2011- வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் நாடு பூராவும் ஆர்பாட்டங்கள் மீட்டும் புதிய வேகத்துடன் தொடங்கிய ஆர்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன ஹுஸ்னி முபாரக் பதவி விலகுவார் என்றும் அவரின் குடும்பத்தினர் நாட்டை விட்டும் ஓடி தப்பிவிட்டனர் என்றும் உறுதிப் படுத்த படாத செய்திகள் தெரிவிகின்றன

இந்த நிலையில் அரசாங்கத்தை தான் கலைத்துள்ளதாகவும் இன்று சனிக்கிழமை புதிய அரசாங்கள் பதவியேற்கும் என்றும் ஹுஸ்னி முபாரக் அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் நிராகரித்துள்ளதாக எதிர்கட்சியான இஹ்வானுல் முஸ்லிமீன் தெரிவித்துள்ளது விரிவாக பார்க்க

Written by lankamuslim

ஜனவரி 29, 2011 at 11:11 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிண்ணியா தேர்தல் களத்தில் மூன்று முஸ்லிம் பெண்கள் !

leave a comment »

கிண்ணியா நகரசபை மற்றும் பிரதேசசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மூன்று முஸ்லிம் பெண்ளை தேர்தலில் களம் இறக்கியுள்ளதாக கிண்ணியா தகவல்கள் தெரிவிகின்றன கிண்ணியாஅரசியல் வரலாற்றில் முஸ்லிம் பெண்கள் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

கிண்ணியா நகரசபைப் பட்டியலில் ஒருவரும் பிரதேசசபைப் பட்டியலில் இருவருமே போட்டியிடுகின்றனர். கிண்ணியா நகரசபை தேர்தலில் கே.ராளியா உம்மாவும்  கிண்ணியா பிரதேசசபை தேர்தலில் எஸ்.நளீமா மற்றும் எஸ்.ஐனூன் பீவி ஆகியோரும் வேட்பாளர்களாக பதிவாகியுள்ளனர்

Written by lankamuslim

ஜனவரி 29, 2011 at 10:56 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சட்டத்தரணி றிஸ்வான் தலைமையில் கிண்ணியா ஜமாஅத்தே இஸ்லாமியின் சுயேச்சை குழு

leave a comment »

கிண்ணியா ஜமாஅத்தே இஸ்லாமி எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறப்போகும் உள்ளூராச்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட சுயேச்சை குழுவாக கண்ணாடி சின்னத்தில் களமிறங்குகின்றது  கிண்ணியா ஜமாஅத்தே இஸ்லாமி சட்டத்தரணி றிஸ்வான் என்பவரை தலைவராக கொண்ட குழுவை களத்தில் இறகியுள்ளது என்பதுடன் இந்த குழுவில் அங்கம் வகிக்கும் அனைவரும் ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினர்கள் என்பதுடன் சட்டத்தரணி ரிஸ்வான் முஸாய்த் பாடத்திட்டங்களை பூர்த்தி செய்தவர் என்பது குறிபிடத்தக்கது

இந்த தகவல்களை எமது தேசிய செய்தியாளருக்கு திருகோணமலை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமியின் நாசிம் நிஜாம் ஆசிரியர் தெரிவித்துள்ளார் தமது அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைமை பீடம் எந்த பங்களிப்பையும் வழங்காது என்றும் கிண்ணியா ஜம்மியத்துல் உலமாவுடன் கலந்தாலோசித்து விரிவாக  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 28, 2011 at 3:42 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

301 உள்ளுராட்சி சபைகளினூடாக 3931 பேர் தெரிவு செய்யப்படுவர்

leave a comment »

301 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று அறிவித்தார். 4 மாநகர சபைகள், 39 நகர சபைகள் மற்றும் 258 பிரதேச சபைகள் என்பவற்றுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்தலின் மூலம் 3931 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 20ம் திகதி ஆரம்பமாகி நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 28, 2011 at 10:29 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மார்ச் 17, வேட்பு மனுத்தாக்களுக்கு இன்று இறுதிநாள்

leave a comment »

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. 301 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான காலஎல்லை இன்றுடன் நிறைவடைகின்றது இதேவேளை அக்குறணை பிரதேச சபைக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனு எதிர்கட்சி ஒன்றின் முறைப் பாட்டையடுத்து நிராகரிக்கப்பட்டுள்ளன என்று அக்குரணை செய்திகள் தெரிவிக்கின்றனர்.

யாழ் மாவட்டத்தில் 16 உள்ளூராட்சிமன்றங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் யாவும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தேர்தல் வேலைகளை கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் ஆரம்பித்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

ஜனவரி 27, 2011 at 4:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காலச்சார விழுமியங்களை பேணுவதற்கு எதிராக தடைகளை எனக்கு தெரிவியுங்கள்: அலவி மௌலான

with one comment

கொழும்பிலுள்ள பெண்கள் அரச பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றலாகி சென்ற ஆசிரியர் அபாயா அணிந்து சென்றமையால் குறித்த அந்த பாடசாலையில் அந்த ஆசிரியறுக்கு நியமனம் வழங்கமுடியாது என்று பாடசாலையின் பெரும்பான்மை இன அதிபர் தெரிவித்தமை தொடர்பாக மேல்மாகாண ஆளுநர் அளவி மௌலான தெரிவித்துள்ள கருத்தில் அபாய அணிந்து பாடசாலைக்கு இடமாற்றலாகி சென்ற முஸ்லிம் ஆசிரியருக்கு பதவியை வழங்க மறுத்த அதிபருக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படுமென தெரிவித்துள்ளார்

இந்த விவகாரம் தொடர்பாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளரிடம் அறிக்கை கோரியிருப்பதாகவும் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 27, 2011 at 3:14 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கண்டியில் அதிர்வு , நிந்தவூரில் குழிகள்

leave a comment »

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் 2 ஆம் பிரிவிலுள்ள வீடொன்றின் பின்புறமாக நிலம் வெடித்து பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளதுடன் அது சதுப்பு நிறைந்ததாகவும் மாறியுள்ளது சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் நிதி உதவியாளராகக் கடமையாற்றும் நிந்தவூர் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த எஸ்.எம்.தாஹிர் என்பவரது வீட்டிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் பின்புறமாகத் தானாக நிலவெடிப்பு ஏற்பட்டு சுமார் இரண்டு அடி அகலமான குழி ஏற்பட்டுள்ளதுடன், எட்டு அடிக்கு மேல் ஆழம் கொண்ட சதுப்பு மண் நிறைந்ததாகவும் இக்குழி காணப்படுகின்றது.

இக்குழியைச் சுற்றி நிலவெடிப்பு காணப்படும் அதேவேளை, குறித்த வீட்டின் பின்புறமாகவுள்ள மற்றொரு வீட்டின் சுவரிலும் வெடிப்பு ஏற்பட்டுக் காணப்படுகின்றது கடந்த முன்று தினங்களாக இரவு முழுவதும் பெய்த அடைமழையைத் தொடர்ந்தே இவ்வாறு நிலத்தில் வெடிப்புடன் கூடிய குழி ஏற்பட்டுள்ளது இந்த தகவலை எமது நிந்தவூர் lankamuslim.org செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார் அதேவளை விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 27, 2011 at 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எகிப்து ஜனாதிபதியின் மகன் நாட்டைவிட்டு ஓட்டம் ?

leave a comment »

கெய்ரோ: எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் கமால் முபாரக் குடும்பத்துடன் பிரிட்டனுக்குச் சென்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கமால் முபாரக்,அவரது மனைவி மற்றும் மகளைக் கொண்ட விமானம் மேற்கு கெய்ரோ விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குக் கிளம்பியுள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அரேபிய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 27, 2011 at 11:59 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாணத்துக்கு வெளியேயும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டி ?

with one comment

உள்ளூராட்சித் தேர்தலில் கிழக்குக்கு வெளியே பல மாவட்டங்களில் அரசுடன் இணைந்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன்பாடு கண்டிருந்த நிலையில் பல இடங்களில் உடன்படிக்கை மீறப்பட்டிருப்பதன் காரணமாக இறுதி நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தீர்மானித்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

இறுதி நேரத்தில் ஆளும் தரப்பு உடன்பாட்டை மீறியதன் காரணத்தால் அதனை சவாலாக ஏற்று தனித்துப் போட்டியிடத் தீர்மானித்திருப்பதாகவும் அவற்றுக்கான வேட்பு மனுக்கள் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டம் தெரிவித்தது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 27, 2011 at 10:03 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய தமிழக மீனவர்கள் தாக்கும் மூன்றாம் தரப்பு !

leave a comment »

தமிழக மீனவர்கள் கடலில் வைத்துத் தாக்கப்படும் சம்பவங்களுடன் அடையாளம் தெரியாத மூன்றாம் தரப்பு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கின்றது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களைத் தாக்குவது இலங்கை கடற்படையினர் அல்லர் என்றும் இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் மூன்றாம் தரப்பு ஒன்றே தொடர்புபட்டிருப்பதாகவும் இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவாசம் சந்தேகம் வெளியிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றனர்

சென்னையில் இருந்த பெளத்த விகாரை தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து காரியவாசம் டில்லியில் இருந்து உடனடியாகச் சென்னை விரைந்தார். அங்கு நிலைமைகளை நேரில் சென்று அவதானித்த பின்னர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார் விரிவாக பார்க்க Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 26, 2011 at 4:44 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இம்மாதம் ஆரம்பிக்க நடவடிக்கை

leave a comment »

மூன்று கட்டங்களைக் கொண்ட புத்தளம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் முதற்கட்ட பணிகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாக அனல் மின் நிலையத் திட்டத்தின் சிரேஷ்ட திட்டப் பணிப்பாளர் டபிள்யூ. டீ. என். சேவியர் கூறியுள்ளார்.

இந்த அனல்மின் நிலையத்தால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் குறிப்பிட்ட சேவியர் மின் உற்பத்தியின் போது வெளியேறும் புகை சுத்திகரிக்கப்பட்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே வெளியேற்றப்படும் என்றும் கூறியுள்ளார் இந்த மின் உற்பத்தி நிலையம் பிரதேசவாசிகளின் கடும் எதிர்ப்பின் மத்தியில் உருவாக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது விரிவாக படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 26, 2011 at 11:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலத்தில் 58,000 குடியிருப்புகளை நிர்மாணிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது

leave a comment »

Ourummah: காஸா மார்க்க விவகாரங்களுக்கான அமைச்சு இஸ்ரேல் ஆக்கிரமித்த ஜெருசலத்தில் 2020 ஆண்டுக்கு முன்னர் 58,000 யூத குடியிருப்புகளை நிர்மாணிக்க போடப்பட்டுள்ள திட்டம் தொடர்பில் தனது கவலையை வெளிபடுத்தியுள்ளது ஆக்கிரமிப்பு இஸ்ரேல், ஜெருசலத்தை யூதர்களுக்கான தலைநகராக அறிவித்து வருவதுடன் ஜெருசல 2020-Jerusalem 2020- என்ற திட்டத்திற்கு யூதர்களை கவரும் வகையில் பெரும் தொகை நிதியையும் ஒதுக்கி வருகின்றது

இந்த கட்டுமான திட்டம் ஜெருசலத்தில் இருக்கும் அரபு முஸ்லிம் மக்களை வெளியேற்றி அந்த நகரத்தை யூதர்களுக்கான புனித நகரமாக மாறிக் கொள்வதை இலக்காக கொண்டுள்ளது என்று – 24.01.2011-தெரிவித்துள்ளது விரிவாக

Written by lankamuslim

ஜனவரி 25, 2011 at 12:02 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அநுராதபுரம் சிறைச்சாலையில் மோதல் துப்பாக்கி சூடு

leave a comment »

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதல்களில் கைதிகள் 3 பேர் உயிரிழ ந்துள்ளதுடன் ,21 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 13 கைதிகளும், 8 சிறை அதிகாரிகளும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கபடுகின்றது தமது வசதிகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது அதிகாரிகள் தாக்கியதாகவும், கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

50 க்கும் மேற்பட்ட சிறைச்சாலைக் கைதிகள் கூரை மீது ஏறி மறியல் செய்ததுடன் அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது கற்க ளால் தாக்குதல் நடத்தியதாகவும் பின்பு இந்த நிலைமை மோசமடைய கலகக்காரர்களாக மாறிய கைதிகள் சிறைச் சாலைக்குள் தீ வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர் என்றும் இதன்போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுகின்றது

Written by lankamuslim

ஜனவரி 25, 2011 at 8:49 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய மீனவர்களை கொல்வது யார் ? இலங்கை தொடர்ந்து மறுத்து வருகின்றது

leave a comment »

கடந்த ஜனவரி 12ஆம் திகதி மற்றும் 23ஆம் திகதிகளில் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மீன்பிடித்துறை அமைச்சு இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை மனிதநேயத்துடன் நடத்துவது என்ற கொள்கையில் இலங்கை அரசாங்கம் உறுதியாக உள்ளதென அறிவித்துள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மனிதநேயத்துடனேயே நடத்துவதாகவும், அத்துமீறி அவர்கள் எவ்வாறான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதில்லை யென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 25, 2011 at 6:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கஷ்மீரில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற முயற்சி கஷ்மீரில் மீண்டும் பதட்டம்

leave a comment »

இந்திய குடியரசு தினத்தன்று, கஷ்மீரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாக பாரதிய ஜனதா கட்சி என்ற இனவாத கட்சி அறிவித்துள்ளதை அடுத்து, காஷ்மீரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது . ஏராளமான இந்திய பொலிஸார் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பா.ஜ., மாநில துணைத் தலைவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு, பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய குடியரசு தினத்தன்று காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றப் போவதாக பா.ஜ. அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காஷ்மீர் மாநில பா.ஜ. இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 25, 2011 at 6:24 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ருத்திர பூஜையில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா

with 24 comments

நேற்று மட்டக்களப்பில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் நடாத்திய ருத்திர பூஜை யில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா காவி சால்வை தரித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜீக்கு சாஸ்டாங்க முறையில் ருக்கூ செய்து கைகூப்பி வணங்குவதை போன்ற காட்சிகளை ITN தேசிய தொலைக்காட்சி சேவைகள் நேற்று காட்சிப் படுத்தியுள்ளது இந்த செயல் கடும் விமர்சனங்களை பெற்றுவருகின்றது கடந்த வருடம் ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்விலும் சாஸ்டாங்க முறையில் கைகூப்பி வணங்கி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது குறிபிடத்தக்கது Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 24, 2011 at 9:32 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்கா யாழ்ப்பாணத்துடன் நீண்ட கால தொடர்புகளை கொண்டது

leave a comment »

அமெரிக்காவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமான உறவுகள் 1813 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்துடன் நீண்டகால தொடர்புடையவர்கள் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பட்றீசியா புட்டெனிஸ் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தகவல் நிலையத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றுகையில் கூறினார்.

யாழ்ப்பாணத் நான்காம் குறுக்குத் தெருவில் யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் அமெரிக்க தகவல் நிலையம் திறக்கப்பட்டது. யாழ் இந்திய துணைத் தூதரக இணைப்பாளர் மகாலிங்கம், சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் சுகிர்தராஜ், யாழ் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 24, 2011 at 8:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அரசியல் சார்பற்ற நிலையில்தான் தொடர்ந்தும் இயங்குகின்றது’

with 4 comments

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி எதிர்வரும் உள்ளூராச்சி சபைகளுக்கான தேர்தலில் முதல் முறையாக அரசியல் களம் இறங்க தீர்மானித்துள்ளது என்ற தகவலை உத்தியோக பூர்வமாக பெரும் நோக்கியில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அதிஉயர் அதிகாரியை தொடர்பு கொண்டபோது எமது lankamuslim.org தேசிய செய்தியாளர்களுக்கு அவர்  தெரிவித்தவை இங்கு பதிவு செய்யப்படுகின்றது அவரின் வேண்டுகோளுக்கு அமைவாக அவரின் பதவி பெயர் , சொந்த பெயர் , அவரின் புகைப் படம் ஆகியன இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது

‘இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அரசியல் சார்பற்ற நிலையில்தான் தொடர்ந்தும் இயங்குகின்றது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஒரு அரசியல் இயக்கமல்ல கிண்ணியா சமுகத்தின் தேவையை கருத்தில் கொண்டு கிண்ணியா ஜமாஅத்தே இஸ்லாமி உறுப்பினர்கள் ஒரு அரசியல் முன்னெடுப்பை மேற்கொள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 24, 2011 at 3:37 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இஸ்லாமிய நோக்கியில் அணுகப்படவேண்டும்

leave a comment »

M.ஷாமில் முஹம்மட்

வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகிகொண்டுள்ளது நேற்று வெளியான ஒரு தகவலின் பிரகாரம் 1990 ஆம் ஆண்டு புலிகளின் பயங்கரவாத வெளியேற்றத்தின் பின்னர் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒரு பகுதியினரை கிளிநொச்சியில் மீள் குடியேற்றுவது தொடர்பாக யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபியான் மௌலவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றது இது தொடர்பாக எமது lankamuslim.org  செய்தியாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள தகவல்களின் பிரகாரம்.

யாழ்ப்பாணத்தில் இதுவரை 400 உட்பட்டதும் 350 க்கு மேற்பட்டதுமான குடும்பங்கள்தான் மீள் குடியேறியுள்ளது அவர்கள் பெரும்பாலும் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இவர்களின் 50 க்கு குறைவானவர்கள் மட்டும்தான் மீள் குடியற்ற நடவடிக்கைகளுக்காக காணிகள் வழங்கபட்டுள்ளது அதுவல்லாமல் யாழ்பாணத்தில் தம்மை பதிவு செய்து கொண்ட குடும்பங்களாக 1800 வரையான குடும்பங்கள் கணக்கிடப்பட்டுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 24, 2011 at 10:13 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

திடீர் நீரூற்றுடன் சாம்பல் நிற களி வெளியேற்றம் கொழும்பிலிருந்து பூகற்பவியலாளர்கள் விரைவு !

leave a comment »

திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் நேற்று திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் கூடிய நீர்க்கசிவுகள் வெளிப்பட்டதையடுத்து பிரதேசத்தில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியிலேயே இந்த நீர்க் கசிவுகள் உருவாகியுள்ளன. சுமார் 15 இடங்களில் நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக் கின்றன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 24, 2011 at 8:31 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசியல் யாப்பு பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டுமென மட்டும் கூறி நின்று விடவில்லை: பிரதமர்

leave a comment »

நேற்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற ‘சமாதானத்துக்கான அனைத்து மதங்களின் இலங்கைப் பேரவையின் தேசிய’ மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாறிய பிரதமர் ஜயரத்ன இலங்கையின் அரசியலமைப்பில் சகல மதங்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் சிங்கள பௌத்தர்களுக்கு இருக்கும் சட்டம், உரிமை கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் சமமானதாகுமெனவும் அனைத்து மதங்களும் ஒரே விதமாகவே மதிக்கப்பட வேண்டுமெனவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

இலங்கையில் அனைத்து மதங்களும் சமமானதே எந்தவொரு மதத்துக்கும் முன்னுரிமை இல்லை என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்திருக்கும் கருத்தானது அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு மட்டுமல்லாது நாட்டின் அரசியலமைப்புக்கும் முரணானது  விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 23, 2011 at 10:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காஷ்மீர் மனித உரிமை நிலவரம்: ஐ.நா. வுக்கு கவலையாம் !!

leave a comment »

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினருக்கு பெருமளவு அதிகாரங்களை வழங்கும் சிறப்புச் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்ற சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செகாக்யா வலியுறுத்தியுள்ளார்.

ற்கெனவே பல முறை ஐ.நா. மனித உரிமைப் பிரிவினர் காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக இந்திய அரசு தற்போது அவர்களது பயணத்துக்கு அனுமதியளித்திருந்தது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 22, 2011 at 12:07 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய உளவு பிரிவு இலங்கை விவகாரத்தில் மீண்டும் ?

leave a comment »

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்ற வேண்டும் என்று  கோரிக்கைகளை முன்வைத்து ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி- ENDLF- ஸ்ரீ பெரும் பதூரில் அமைந்துள்ள அமரர் ராஜிவ் காந்தியின் நினைவு மண்டபத்திலிருந்து 2,500 கிலோமீற்றர் நெடும் பயணம் ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ளது .

இந்த ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி அமைப்பு இந்தியாவின் நலன் கருதி இலங்கை தமிழ் வாலிபர்களை கொண்டு இந்திய உளவு பிரிவான ‘ரோ’ வினால் உருவாகப்பட்டு, விரிவாக Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 22, 2011 at 11:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அரசியலிலும் களமிறங்குகின்றது !

with 7 comments

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி எதிர்வரும் உள்ளூராச்சி சபைகளுக்கான தேர்தலில் முதல் முறையாக அரசியல் களம் இறங்க தீர்மானித்துள்ளது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 50ஆண்டு கால வரலாற்றில் இந்த தீர்மானம் ஒரு புதிய பாதையில் பயணிக்க தயாராகியுள்ளதை காட்டுவதாக அமைந்துள்ளது மட்டுமல்லாது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு இஸ்லாமிய இயக்கம் அரசியலில் குதிப்பது இதுதான் முதற்தடவையாகும்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர சபைக்கான தேர்தல் களத்தில் சுயேச்சை குழுவாக குதிக்க முடிவு செய்துள்ளது இந்த தகவலை எனது lankamuslim.org தேசிய செய்தியாளர் உறுதிப் படுத்தியுள்ளார் திருகோணமலை மாவட்டம் இலங்கைக்கு மட்டுமின்றி சர்வதேசத்தின் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 22, 2011 at 11:03 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அபாயாவுக்கு தடை, இஸ்லாம் பாடம் போதிக்க ஆசிரியரும் இல்லை !!

with 4 comments

கொழும்பிலுள்ள பெண்கள் அரச பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றலாகி சென்ற ஆசிரியர் அபாயா அணிந்து சென்றமையால் குறித்த அந்த பாடசாலையில் அந்த ஆசிரியறுக்கு நியமனம் வழங்கமுடியாது என்று பாடசாலையின் பெரும்பான்மை இன அதிபர் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது.

இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு 10 எல்லைக்குள் அமைந்திருக்கும்  பெண்கள் பாடசாலையான பெஸிபத்தேரியன் என்ற பாடசாலையில் 1200 மாணவிகள் கற்று வருகின்றார்கள் இவர்களில் மருதானை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை சார்ந்த 600 முஸ்லிம் மாணவிகள் கற்பதாக தெரியவருகின்றது அந்த பெண்கள் அரசபாடசாலையில் தமிழ் , சிங்களம் ஆகிய மொழிகளில் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 22, 2011 at 9:53 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதியை விசாரிக்க கோருகின்றது அம்னெஸ்டி

leave a comment »

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்குற்றங்கள் தொடர்பாக அவரை அமெரிக்கா விசாரிக்க வேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கோரியுள்ளது இந்த அம்னெஸ்டி இண்டர்நேஷனல் பக்கசார்பானதாக பார்க்கப்படுகின்றது

ஜனாதிபதியை விசாரிப்பது பற்றி அந்நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதிக்கான இயக்குனர் சாம் ஜாஃப்ரி பிபிசியிடம் கூறுகையில் இலங்கை இராணுவத்தின் மீது, நம்பத்தகுந்த, பாரதூரமான மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 21, 2011 at 7:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புறக்கணிக்குமாறு கோரிக்கை

leave a comment »

இதற்கிடையே, இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இலக்கிய விழாவை துருக்கியின் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரான ஆர்ஹான் பாமுக் அவர்களும் மற்றவர்களும் புறக்கணிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் புகழ் பெற்ற எழுத்தாளர்களான நோம் சாம்ஸ்கி மற்றும் அருந்ததி ராய் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காலி இலக்கிய விழாவில் எழுத்தாளர்கள் கலந்து கொள்வது, இலங்கையில் பேச்சு சுதந்திரத்தை நசுக்கும் செயலை நியாயப்படுத்துவது போலாகும் என இவர்கள் கூறுகின்றனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 21, 2011 at 6:46 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கில் விவசாயத்துறைக்கு பத்தாண்டு காலம் பின்னடைவு

leave a comment »

நிவாரணங்களை மேலும் 6 மாதம் நீடிப்பது பற்றி ஆராய்வு: கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் நிவாரணங்களை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொருளாதார பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக கிழக்கில் மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்துறையில் பத்தாண்டு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், இந்த நிலைமையின் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 21, 2011 at 6:41 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரதமர் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியை சாடியுள்ளார்

leave a comment »

பிரதமர் டீ.எம். ஜயரத்தின ஜாதிக்க ஹெல உறுமய கட்சி நாட்டில் மத சமூகங்கள் மத்தியில் பிரச்சினைகளை தோற்றுவிக்க முயல்வதாக தெரிவித்துள்ளார் ஜாதிக்க ஹெல உறுமய கட்சி பிரச்சினைகளை மக்களிடம் கொண்டுசெல்லாமல், அடுத்த மதங்களை விமர்சிக்காமல் அவற்றை அரசுடன் கலந்துரையாடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அனைத்து மதங்களும் சமமானதே எந்தவொரு மதத்துக்கும் முன்னுரிமை இல்லை என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்திருக்கும் கருத்தானது அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு மட்டுமல்லாது நாட்டின் அரசியலமைப்புக்கும் முரணானது என்று தெரிவித்திருக்கும் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமய இது தொடர்பில் பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியமை குறிபிடத்தக்கது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 20, 2011 at 1:34 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு:

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“ஒயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்”- சுப்ரமணிய பாரதி

இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களாக காலி இலக்கிய விழா (Galle Literary festival) எனும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இம்முறையும் இவ்விழா ஐந்தாவது வருடமாக எதிர்வரும் ஜனவரி 26 ம திகதி தொடக்கம் 30 ம திகதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் வழக்கம்போல் பல சர்வதேச புகழ் பெற்ற இலக்கியவாதிகள் பலர் கலந்து கொள்கின்றனர், அவர்களில் குறிப்பாக இலக்கியத்திற்காக 2006ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஒர்ஹான் பாமுக்கும் (Orhan Pamuk) கலந்து கொள்கிறார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 20, 2011 at 11:35 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

யாழ் முஸ்லிம்களில் 400 குடும்பங்கள் மட்டும் மீள் குடியேறியுள்ளன !

leave a comment »

இது யாழ் பெரிய பள்ளியல்ல அஹமதியா மஸ்ஜித்

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான உண்மையான தகவல்கள் பிரகாரம்  இது வரை யாழ்ப்பாணத்தில் 400 வரையான குடும்பங்கள்தான் மீள் குடியேறியுள்ளது அவர்கள் பெரும்பாலும் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கான உதவிகள் தொடர்பான நடவடிக்கைகள் தற்போது ஜனாதிபதி செயலகத்தினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது யாழ்ப்பாண lankamuslim.org செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

ஆனாலும் இதுவரை யாழ்பாணத்தில் தம்மை பதிவு செய்து கொண்ட குடும்பங்களாக 1800  வரையான குடும்பங்கள் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 19, 2011 at 11:32 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சகல மதங்களும் சமமானவை என்ற பிரதமரின் கருத்துரைக்கு ஹெல உறுமய விளக்கம் கோருகின்றது

leave a comment »

இலங்கையில் அனைத்து மதங்களும் சமமானதே எந்தவொரு மதத்துக்கும் முன்னுரிமை இல்லை என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்திருக்கும் கருத்தானது அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு மட்டுமல்லாது நாட்டின் அரசியலமைப்புக்கும் முரணானது என்று தெரிவித்திருக்கும் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமய இது தொடர்பில் பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு தேசிய நூலக ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 19, 2011 at 10:02 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை அல்-அக்ஸா மகாவித்தியாலயம் சரிந்து விழுந்தது

leave a comment »

பாடசாலை ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் பாடசாலைக் கட்டடம் சரிந்து விழுந்தது. தெய்வாதீனமாக மாணவர்களுக்கு ஏற்படவிருந்த பாரிய விபரீதங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயத்தில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

கிழக்கில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலய வளாகம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. இருந்தும் நற்பிட்டிமுனை கரையோரத்தில் வசித்த மக்கள் இப்பாடசாலை மாடிக் கட்ட டங்களில் தங்கியிருந்தனர். அதனால் இப்பாடசாலைக்கு மேலும் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வெள்ளம் காரணமாக நூறு அடி நீளமான சுற்றுமதில் முற்றாக சரிந்து ள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 19, 2011 at 10:00 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சுடானின் பிரிவினையில் சுகம் தேடும் புலிகள் !

with one comment

வடக்குச் சூடானில் முஸ்லிம்களும் தெற்குச் சூடானில் ஆபிரிக்கப் பண்டைய மதநம்பிக்கைகளை, மரபுப்பழக்கங்களை பின்பற்றி வருகின்ற இனக்குழுக்களும் வாழ்கின்றன இவர்களுகிடையான மோதலை நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த மேற்குலகம் சுடானை தென்பகுதி என்றும் தர்பூர் என்றும் கூறு போட தொடங்கியுள்ளது இதன் விளைவாக கடந்த கிழமை சூடானின் தென்பகுதி பிரிந்து செல்வதா இல்லையா என்ற தீர்மானத்தை மேற்கொள்ளும் தேர்தல் நடைபெற்றுள்ளது இதன் பெரும்பாலான வாக்காளர்கள் பிரிவினைக்கு சார்பாக வாக்களிதுள்ளதாக உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் இறுதி முடிவு  பெப்ரவர் மாதம் 14 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று எதிர்பர்க்கப்படுகின்றது இந்த நிலையில் தெற்கு சூடான் கொண்டாட்டங்களில் பங்குகொள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற புலிகள் அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்று தெரிவிக்கப்படும் விசுவநாதன் ருத்திரகுமாரன் இது பற்றி வெளியிட்ட செய்தியில் இப்படி கூறுகின்றது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 18, 2011 at 8:07 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் பாகிஸ்தான் இந்திய படைகளின் தளபதிகள் சீனா தளபதி ?

leave a comment »

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஷ் கயானி நாளை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். என்று தெரிவிக்கப்படுகின்றது விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க – கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதியை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விமான நிலையத்தில் விரவேற்கவுள்ளார்.

மூன்று நாள் இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி நாட்டின் முக்கியஸ்தர்கள், முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  அதேவளை இந்திய விமானபடை தளபதி எயார் சீப் மார்ஷல் பிரதீப் வசந் நாயிக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்தார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 18, 2011 at 7:13 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உள்ளூராட்சி தேர்தல் திட்டமிட்டபடி ஏற்பாடுகள்

leave a comment »

திட்டமிட்டபடி வடக்கு கிழக்கு உட்பட நாடு பூராவும் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட உள்ளதாக தேர்தல் செயலகம் நேற்று தெரிவித்தது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராயும் உயர் மட்ட மாநாடு நேற்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக் கவின் தலைமையில் நடைபெற்றுள்ளது ஏற்கனவே அறிவித்த படி 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும் குறிப்பிட்துள்ளார்

Written by lankamuslim

ஜனவரி 18, 2011 at 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பெருவெள்ளம் வடிந்து வருவதால் மக்கள் வீடு திரும்புகின்றனர் ?

leave a comment »

பெருவெள்ளத்தின் காரணமாக கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற நேர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அவசர அவசரமாக வெளியேறியதில் தங்களுடைய உடைமைகள் பலவற்றை விட்டுவிட்டுச் சென்றிருந்தனர். அவை தற்போது வெள்ளத்தால் சேதப்பட்டிருப்பதை அவதானித்தபடி இவர்கள் பெரும்பாலும் வீடு திரும்பிவருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது  இவர்கள் வளர்த்துவந்த கால்நடைகளும் வெள்ளத்தில் பலியாகியிருந்தன என்பது குறிபிடத்தக்கது.

தேசிய அளவில் இந்த வெள்ளத்தால் கிட்டத்தட்ட நாற்பது பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஏராளமான விளைநிலங்களும் நீரில் மூழ்கி பயிர்கள் நாசமடைந்துள்ளன விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 18, 2011 at 6:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாதிக்கப்பட்ட விவசாயங்களுக்கு 30 நாட்களுக்குள் நஷ்டஈடு

leave a comment »

விவசாய நிலங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக 5 குழுக்கள் கொழும்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார் வெள்ளம் காரணமாக 4 இலட்சம் ஏக்கர்களுக்கும் அதிகமான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ள

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, ஆகிய பகுதிகளுக்கு விவசாய காப்புறுதிசபைக் குழுக்கள் சென்று சேத மதிப்பீடுகளை ஆரம்பித்துள்ளன விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 18, 2011 at 6:28 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்

with 2 comments

எஸ்.எம்.எம்.பஷீர்

“தேடி சோறு நிதம் தின்று ,பலசின்னஞ் சிறு கதைகள் பேச, மனம்வாடி துன்பம் மிக உழன்று, பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி – கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?”  -சுப்ரமணிய பாரதி

சென்ற வாரம் நான் கற்றறிந்த பாடங்களும் மீளினக்க ஆணைக்குழுவின் முன் அளித்த சாட்சியத்தின் ஒரு எடுபகுதி -லங்காமுஸ்லிம் உட்பட- சில இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டவுடன் ஐக்கிய ராச்சியத்தில் இயங்கும் டி.பீ.சீ எனும் வானொலியில் முழங்கும் பிரசங்கிகளான புளட் ஜெகநாதனும், ஈ.என்.தீ.எல்.எப் ராமராஜனும் கொதித்தெழுந்து வரிந்து கண்ட்டிக்கொண்டு தாங்கள் நீண்ட காலமாக என்மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியை கக்கினார்கள் அதன் விளைவாகவே இதனை எழுத வேண்டி நேரிட்டது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 18, 2011 at 5:45 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

துனீசியா ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் நாட்டை விட்டு ஓட்டம் ஆர்பாட்டங்கள் தொடர்கின்றன

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

OurUmmah: ஒரு தொகுப்பாக:- ஆபிரிக்காவின் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள அரபு முஸ்லிம் நாடான துனீசிய ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் பின் அலி – Zein al-Abideen Bin Ali- துனீசியாவில் இருந்து ஓடித்தப்பி சவூதி அரேபியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த தகவலை சவூதி மன்னர் அரசு நேற்று சனிக் கிழமையன்று 14.01.2011 உறுதி செய்துள்ளது.

வேலை இல்லாமை ஊழல், பொருட்களின் விலையேற்றம் போன்ற காரணங்களுடன் சமூக சீர்கேடுகள் ,விபச்சாரம் , மதுபாவனை போன்றவற்றுகான அரசின் அனுமதி போன்றவைகள் மக்கள் வீதிக்கு வந்து கிளர்ச்சி செய் தூண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகின்றது இந்த மக்கள் புரட்சி சவூதி ,எகிப்பது , போன்ற அரப்பு நாடுகளின் அரசியல் தலைமைகளை ஆட்டம் காண செய்துள்ளதாகவும் துனீசிய மக்கள் புரட்சி போன்று ஏனைய அரபு நாடுகளிலும் ஏற்படலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிகாட்டுகின்றனர் -The revolution of the Tunisian people has left many Arab leaders panicking,” said political analyst Sami al-Buhairi. “What happened to Bin Ali was an unprecedented humiliation for an Arab leader.”- விரிவாக பார்க்க

Written by lankamuslim

ஜனவரி 17, 2011 at 1:36 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் பாராட்டு

with one comment

ஏறாவூர் பிரதேசசபையை நகரசபையாக தரமுயர்த்தியதன் மூலம் அமைச்சர் அதாவுல்லா ஏறாவூரின் நாயகனாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஏறாவூர் பிரதேசசபையை நகரசபையாக தரமுயர்த்தியமைக்காக ஏறாவூர் மக்களின் சார்பாகவும் எனது தனிப்பட்ட முறையிலும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்தற்ற மாகாணசபை உள்ளூராட்சி அமைச்சராகவிருந்தபொழுது ஆரம்பித்து வைத்த இந்த முயற்சியை எனது வேண்டுகோளையும் ஏற்று சரியான நேரத்தில்  அமைச்சர் என்ற அந்தஸ்தைப் பயன்படுத்தி முடித்து வைத்தமையானது உங்களை எமது ஊரின் வரலாற்றில் நாயகனாகப் பதிவு செய்துள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 17, 2011 at 1:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் அதிக காலம் ஓய்வூதியம் பெற்றவராக ஒரு மௌலவி பதிவாகியுள்ளார்

leave a comment »

இலங்கையில் அதிக காலமாக ஓய்வூதியம் பெற்று வந்தவராக 106 வயதில் சில தினங்களுக்கு முன்னர் வபாத்தான  ஹெம்மாதகம, திம்புல்லவாவ பிரதேசத்தை சேர்ந்த ஏ.ஆர். எம் சரீப் என்ற மௌலவி ஆசிரியர் கருதப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது இவர் தனது 106 வயதில் வபாத்தாகியுள்ளார்.

இவர் கடந்த 55 வருடங்களாக ஓய்வூதியம் பெற்று வந்ததாக தெரிவிக்கபடுகின்றது இவருக்கு முன்னர் அதிக காலம் ஓய்வூதியம் பெற்றவராக அமைச்சர் சரத் அமுனுகமவின் தாயார் கருதப்படுகின்றார் இவர் 104 வயதில் கடந்த வருடம் மரணமாகியுள்ளார்

Written by lankamuslim

ஜனவரி 16, 2011 at 11:02 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது