Lankamuslim.org

Archive for ஓகஸ்ட் 18th, 2009

B.A.S சுபியான் மொவ்லவி ஆகஸ்ட் 17 திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து தனது ஆதரவை வழங்குவதாக குறிபிட்டார்

leave a comment »

picture by chandana perera

picture by chandana perera

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான உறுபினராக தெறிவான    சுபியான் மொவ்லவி ஆகஸ்ட் 17 திகதி  ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸவை அலறி மாளிகையில் சந்தித்து தனது ஆதரவைஆளும் கட்சியான ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்குவதாக குறிபிட்டார்

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் ஆளும் கட்சியான ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத் தேர்தலில்

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில்  வெற்றி பெற்ற  சுயேச்சைக்குழு 1 (கப்பல்) 1750  (5.62 வீதம்) வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை பெற்றது .

படம் “லங்காபுவத்”

Written by lankamuslim

ஓகஸ்ட் 18, 2009 at 9:06 பிப

ACMC முஸ்லிம் உறுப்பினருக்கு பிரதி மேயர் பதவியை வழங்க முடியாது –UPFA

leave a comment »

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ACMC கட்சி கோருவதனைப் போன்று யாழ்ப்பாண மாநகரசபையின் பிரதி மேயர் பதவியை அவர்களுக்கு வழங்க முடியாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு UPFA அறிவித்துள்ளது.தேர்தல்களுக்கு முன்னர் இவ்வாறான ஓர் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தல்களின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட தமது கட்சி உறுப்பினர் ஒருவரை பிரதி மேயர் பதவிக்கு அமர்த்துமாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிசாட் பதியூதீன் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் தேர்தல்களில் களமிறங்கிய அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.

எவ்வாறெனினும், யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தல்களில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுக்கு மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகள் கிடைக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆலோசனை செய்ததன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 18, 2009 at 4:50 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உடைகளில் மாற்றம் ஏற்படாதவரை தேசிய உரிமை குறித்து சிந்திக்க முடியாது

leave a comment »

நமது உடைகளில் மாற்றம் ஏற்படாதவரை நாட்டின் தேசிய உரிமை குறித்து எதனையும் சிந்திக்க முடியாதென சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.கடந்த சனிக்கிழமை சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவியேற்ற ஜானக்க பிரியந்த பண்டாரவிற்கு இரந்தினபுரி மாநகர சபை மண்டபத்தில் துன் ஹெல தேசிய இயக்கம் மற்றும் பிரதேச பௌத்த அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

பௌத்த நாடான இலங்கையில் உயர் பதவி வகிப்பவர்கள் மற்றும் அரச தொழில் புரிபவர்கள் கோட்,சூட் மட்டுமே அணிய விரும்புகின்றனர். இவ்வாறானதொரு சூழ் நிலையில் இலங்கையின் தேசிய உரிமை, கலாசாரம் குறித்து சிந்திக்க முடியாது.

இன்று சப்ரகமுவ மாகாண தலைவரான ஆளுநர் தேசிய உடையில் காணப்படும் நிலையில் அதனை இம்மாகாண மக்களும் பின்பற்றுவார்களென நம்புகிறேன்.

இவர் மிக உயர் பதவிகள் பல வகித்த காலத்தில் பௌத்த கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். இதன் காரணமாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவரை சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமித்துள்ளார்.

இளம் வயதுடைய இந்த ஆளுநருக்கு இப்பதவி மிகவும் பொருத்தமானது. எனவே இங்குள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இந்த ஆளுநரினூடாக சிறந்த நன்மையை அனுபவிப்பார்கள் என்பது மட்டும் உண்மை. பதவியினால் ஒரு சிலருக்கு பெருமை, ஒரு சிலரினால் அப்பதவிக்கு பெருமை. அந்த வகையில் ஆளுநர் பதவிக்கு பிரியந்த பண்டார பெருமை. சேர்த்துள்ளார்.

அர்த்தமுள்ள பௌத்த தர்மங்களின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல இது போன்றவர்கள் நாட்டுக்கு தேவை. பௌத்த தர்மம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு இன்றைய தலைவர்கள் பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற் கொண்டு வருகின்றனர்.

thinakkural

Written by lankamuslim

ஓகஸ்ட் 18, 2009 at 12:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாம் பயங்கரவாதிகளினால் விரட்டியடிக்கப்பட்டு வந்தவர்கள் சாதாரனமாக யுத்தால் இடம்பெயர்தவர்கள் இல்லை

leave a comment »

http://www.lankamuslim.org  யுடன் தொடர்பு கொண்டு கோரிக்கை விடும் Jaffna Muslim Students forum.

தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் சமூகத்தினருக்கு 1990 ஆண்டு ஒக்டோபர் என்பது மறக்கமுடியாத ஆண்டாகும். அவர்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பல பயங்கர படுகொலைகளை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகளால் செய்யப்பட்ட ஆண்டாகும். இந்த ஆண்டோடு 19 ஆண்டுகள் நிறைவடைய போகின்றது ஆனாலும் இன்னும் வடக்கு முஸ்லிம்கள் பற்றி அரசின் கவனம் போதுமான முறையில் திரும்பவில்லை  அன்று பயங்கரவாதிகளினால் விரட்டியடிக்கப்பட்டு  வந்த குடும்ப சனத்தொகையை விட தற்பொழுது பன்மடங்கு கொண்ட சனத்தொகையைக் கொண்டுள்ளனர் என்றும் நாம் பயங்கரவாதிகளினால் விரட்டியடிக்கப்பட்டு வந்தவர்கள் சாதாரனமாக யுத்தால் இடம்பெயர்தவர்கள்      இல்லை எனவே இதனையும் கருத்திற் கொண்டு வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின்கீழ் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்குமாறு வேண்டுகோள் விடுப்பதுடன்  தற்போது மூடப்பட்டிருக்கும் புத்தளம் மன்னார் வீதி நவீன வீதியாக அபிவிருத்தி செய்து திறக்கப்பட வேண்டும் என்றும்   தற்போது வடக்கு முழுமையாக பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இன்நிலையில் புத்தளம் மன்னார் வீதியை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய துரித  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மிகவும் பின்போடபட்ட நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்   தற்போதுள்ள நல்ல சூழலை தோற்றுவித்த இறைவனுக்கு  நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 18, 2009 at 12:02 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன மத கட்சிகளை தடை செய்யும் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்திற்கு எதிரான மனுக்கள் மீது ஆகஸ்ட் 31 இல் விசாரணை

leave a comment »

அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பது தொடர்பில் தற்போது நடைமுறையிலிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்திலுள்ள பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சபைக்கு புதிதாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

சம்பந்தப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் தினம் குறித்து உயர்நீதிமன்ற பதிவாளரால் மனுதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி சார்பிலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது அதே தினத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி.யும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.யும் இணைந்து கடந்த 12 ஆம் திகதி மனுவொன்றை தாக்கல் செய்திருந்ததுடன்,

அத்துடன், மறுதினம் ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் சார்பில் தலா ஒவ்வொரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் மொத்தமாக 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

Written by lankamuslim

ஓகஸ்ட் 18, 2009 at 10:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது