Lankamuslim.org

மேற்கின் இரட்டை நிலைப்பாட்டால் உலகம் பூராவும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகிறது

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: மனிதர்களுக்கான இறைவனின் இறுதித் தூதரை மிக மோசமான முறையில் அவதூறுக்கு உட்படுத்தி அமெரிக்காவில் தயாரிக்கப் பட்ட திரைப்படத்துக்கு எதிராகவும் , அமெரிக்கா குறித்த திரைப்படத்தை தடை செய்யாமையை கண்டித்தும் இன்று வெள்ளிகிழமை உலகின் பல நாடுகில் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருகிறது.

எகிப்து , துணூசியா , சூடான் ஆகிய நாடுகளில் தற்போதும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவடுகிறது ,துணூசியா , சூடான் ஆகிய நாடுகளில் அமைதியாக தொடங்கிய ஆர்பாட்டம் வன்முறையாக மாறிவருகிறது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கிறது. எகிப்து இஹ்வானுல் முஸ்லிமூன், அமைதியான ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவளை இன்று கட்டாரில் இறுதித் தூதர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள அவதூறுகளை கண்டித்தும் இறுதித் தூதருக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (14.09.2012) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபடுமாறு சர்வதேச ஜம்இயதுல் உலமாவின் தலைவர் அல்லாமா யூசுப் அல் கர்ழ்தாவி அழைப்பு வித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்துக்கு எதிரான இஸ்லாத்தையும் அதன் அடையாளங்களையும் மிக மோசமாக சித்தரிக்கும் நக்கல் நையாண்டிக்கு உட்படுத்தும் புத்தங்கள் ,நாடங்கள், திரைப்படங்கள் கேலிச் சித்திரங்கள் ஆகியவற்றை மேற்கு உலகம் அனுமதிக்கக் கூடாது என்று முஸ்லிம் உலகம் தொடர்ந்தும் கோரிவரும் நிலையிலும் ‘கருத்து சுதந்திரம்’ அவற்றை நாம் தடைசெய்ய மாட்டோம் என்று மேற்கு உலகம் தொடர்ந்தும் கூறிவருகிறது .

அதேவேளை யூதர்கள் ஜெர்மனியில் இனப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஆராயவும் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அவற்றை கட்டுரைகளாக , செய்திகளாக வெளியிடுவதையும் மேற்கு நாடுகள் தண்டனைக்குரிய குற்றமாக பார்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான எமது முந்திய கட்டுரை:

மேற்கும் அதன் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமையும்

Written by lankamuslim

செப்ரெம்பர் 14, 2012 இல் 8:28 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக