Lankamuslim.org

நபிகள் குறித்த படத்துக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது

leave a comment »

BBC Tamil: இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது நபியைத் தவறாக சித்தரித்திருப்பதாகக்கூறப்படும் ஆங்கிலத் திரைப்படத்திற்கெதிராக நான்காவது நாளாக இன்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 21 முஸ்லீம் அமைப்புக்கள் இணைந்து இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கர் ஒருவர்தான் அத்திரைப்படத்தினைத் தயாரித்தார் என்பதால், அதிபர் ஒபாமாவைத் தாக்கி முழக்கங்கள் எழுப்பியும், அமெரிக்கக் கொடிக்கு தீயிட்டும், தங்கள் சினத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். ஆனால் அவர்கள் அண்ணாசாலை அமெரிக்கதுணைத் தூதரகம் அருகே அனுமதிக்கப்படவில்லை. அச்சாலையின் வேறு ஒரு பகுதியில் மட்டும் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

அப்படியும் மாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஒரு சிலர் போலீஸ் தடையினை மீறி அமெரிக்கத் துணைத்தூதரகம் பக்கம் செல்ல முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓரிரு வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டது. லேசான தடியடி நடத்தி அவர்களைப் போலீசார் கலைத்துவிட்டனர். மற்றபடி அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. ஆனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மாற்றம்

இதனிடையே சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் திரிபாதி திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஜார்ஜ் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றப்பட்ட திரிபாதி, சிறைத்துறை ஏடிஜிபியாகப் பொறுப்பேற்கிறார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2012 இல் 7:45 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக