Lankamuslim.org

ஒஸ்கார் விழாவை புறக்கணிக்கப் போவதாக ஈரான் அறிவிப்பு

leave a comment »

முஸ்லிம்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தை கண்டித்து ஒஸ்கார் விருது விழாவை புறக்கணிக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது.முஹம்மது நபியை கேவலமாக சித்தரித்து அமெரிக்காவில் வெளியான திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தப் படத்தை கண்டித்து ஒஸ்கார் விருதுக்கு தங்கள் நாட்டிலிருந்து படங்களை அனுப்பி வைக்கப் போவதில்லை என ஈரான் நாட்டு கலாசாரத்துறை அமைச்சர் முஹம்மது ஹொசினி அறிவித்துள்ளார்.

இவர் கூறுகையில், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இந்த ஆண்டு ஒஸ்கார் விருது விழாவை ஈரான் புறக்கணிக்கிறது என்பதை அதிகார பூர்வமாக அறிவிக்கிறேன். இதே போன்று மற்ற முஸ்லிம் நாடுகளும் ஒஸ்கார் விழாவை புறக் கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஒஸ்காருக்கு அனுப்புவதாக இருந்த ‘ஏ கியுப் உப் சுகர்’ படத்தை நிறுத்தி வைப்பது குறித்து அதன் தயாரிப்பு நிறுவனத்துடன் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

 

 

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2012 இல் 7:42 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக