Lankamuslim.org

எகிப்து இராணுவம் மக்கள் அழிப்புக்கு தயாராகிறதா ?

leave a comment »

El-Sisiஏ.அப்துல்லாஹ் : இராணுவ சதிப்  புரட்சியில்  ஈடுபட்ட இராணுவம் இஹ்வான்களுக்கு 48 மணித்தியால அவகாசம் வழங்கியுள்ளது . இராணுவ சதிப் புரட்சியின் பின்னர் இராணுவம் அறிவித்துள்ள தீர்வு யோசனையில் ‘ரோட் மெப்’   இஹ்வான் 48 மணித்தியாலத்தில் (சனிக்கிழமை மாலை நேரத்துக்கு முன்னர்) கையளித்திடவேண்டும் என்று அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது  என்று சர்வதேச செய்திகள் குறிப்பிடுகிறது.

அந்த இராணுவ அறிக்கையில் மேலும் , “நாம் எந்த நடவடிக்கை தொடங்க  மாட்டோம்  ஆனால் நிச்சயமாக இஹ்வான்  தலைவர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்களிடமிருந்து வரும்  வன்முறை அல்லது கருப்பு பயங்கரவாதஅழைப்புகளுக்கு  எதிராக கடுமையாக செயல்படுவோம் ..” எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதேவேளை  ‘வன்முறை’ மற்றும் ‘பயங்கரவாதத்தை’   எதிர்த்து போராட தனக்கு ஆதரவை வெளிப்படுத்தி எகிப்திய மக்கள் , வெள்ளிக்கிழமை நாடுதழுவிய   ஆர்ப்பாட்ட பேரணியை நடத்த வேண்டும் என்று   இராணுவ அமைச்சர்  அல்-சிஸி  நேற்று  சர்ச்சைக்குரிய   அழைப்பு ஒன்றை  விடுத்திருந்தார்.

அதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட இஹ்வான் அமைப்பு   இராணுவத்தின்  இந்த போராட்ட அழைப்பு எம்மை   எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது எமது அமைதி ஆர்ப்பாட்டங்கள் தொடரும்.  அல்-சிஸியின்  ஆர்ப்பாட்ட அழைப்பு “பொறுப்பற்ற” மற்றும் “சிவில் யுத்தம்  ஒன்றுக்கான  அறிவிப்பு” என்று இஹ்வான்களின்   மூத்த தலைவர் இஸாம் அல்-எரியான் குறித்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்  .

அதேவேளை நாளை வெள்ளிக்கிழமை  நாடு முழுவதும் முர்ஷிக்கு ஆதரவாக பாரிய அமைதி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்கப்படும் அதேவேளை இராணுவ சதிப் புரட்சியை ஆதரித்தும் எகிப்தின் தலைநகரில் ஆர்ப்பாட்டம்  இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில்  இராணுவம் அதன் முகப்பு நூலில் “வன்முறை மற்றும் பயங்கரவாதம்” ஆகியவறில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக  தமது     துப்பாக்கிகள் திரும்ப தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

அமைதி பேரணி மற்றும் அமைதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் முர்ஷியின்  ஆதரவாளர்களை நோக்கி இராணுவம் “வன்முறை மற்றும் பயங்கரவாதம்” என்ற பதங்கள் பயன்படுத்தியுள்ளமையும், “வன்முறை மற்றும் பயங்கரவாதம்” ஆகியவறில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக     துப்பாக்கிகள் திரும்ப தயாராக இருப்பதாக அறிவித்துள்ளமையும் நாளை வெள்ளிகிழமை இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக அமைதி ஆர்பாட்டத்தில் ஈடுபடப்போகும்      மக்களுக்கு எதிராக விடுக்கபட்டுள்ள கொலை அச்சுறுத்தலாக பார்க்கப் படுகிறது .

இந்நிலையில் இராணுவத்தின் ஆர்ப்பாட்டதுக்கான  அழைப்பை இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூரும் வரவேற்றிகிறார் . பயங்கரவாததுக்கு  எதிரான போராட்டம் மற்றும் புரட்சியை பாதுகாக்க அனைத்து மக்களும் வீதியில் இறங்க வேண்டும் என்று இராணுவத்தால் நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் அஹ்மத் அல் மஸ்லமானி கூறியுள்ளார். இராணுவத் தரப்பு மற்றும் முர்ஷி  எதிர்ப்பாளர்கள் இஹ்வான்களை  பயங்கரவாதிகள்  என குறிப்பிடுவது அண்மை காலத்தில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 இஹ்வான் அமைப்பின் அரசியல் பிரிவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி உட்பட 11 அரசியல் கட்சிகளைக் கொண்ட கூட்டணியின் அழைப்பில், கெய்ரோ பேரணியில் ஒன்றுதிரளுமாறு ஆதரவாளர்களை கோரியுள்ளது.

‘இராணுவத் தலைமையினால் முன்னெடுக்கப்பட்ட சதிப் புரட்சியை சர்வதேச சமூகம், ஐ. நா. மற்றும் மனித உரிமை அமைப்புகள் நிராகரிக்க வேண்டும். இது பிராந்தியத்தில் பதற்றத்தையே ஏற்படுத்தும்’ என்று முர்ஷி  ஆதரவு கூட்டணியின் அழைப்பு விடுத்துள்ளது.

இராணுவத் தளபதியின் அழைப்பு குறித்து சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தலைவரில் ஒருவரும் முர்ஷி அரசில் அமைச்சராக இருந்தவருமான அம்ர்  வேல்ட் ஸ்ட்ரீட் -ஜெர்னல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ‘ஸிசி  தனது தோல்வியை தவிர்க்க ஏனைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் தனது கடைசி முயற்சியை கையாண்டிருக்கிறார். அது நாட்டை சிவில் யுத்தத்திற்கு இட்டுச் செல்லும். இது மிக அபாயகரமானது’ என எச்சரித்துள்ளார் .

இராணுவத் தளபதியின் ஆர்ப்பாட்ட அழைப்பை எகிப்தின் பிரதான அரசியல் குழுக்களான ஸலபிக்களின் அந் நூர் கட்சி மற்றும் ஏப்ரல் 6 புரட்சியின் இளைஞர் முன்னணி ஆகியன நிராகரித்துள்ளன.‘அணி திரள்வுக்கு எதிராக அணி திரள்வது சிவில் யுத்தத்திற்கே வழிவகுக்கும்’ என்று அந்  நூர் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

 ஏப்ரல் 6 இளைஞர் முன்னணி-‘பாதுகாப்பு மற்றும் வன்முறையை தடுக்கும் தனது பணியை நிறைவேற்ற மக்கள் ஆதரவு செயற்பாடு தேவையில்லை. இந்த தற்போதைய பதற்றத்தை மேலும் மோசமாக்கி நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்புக்கே பாதகமாக அமையும்’ என அந்த முன்னணி எச்சரித்துள்ளது.

இராணுவ தளபதியின் அழைப்பு குறித்து தாம் மிக  அவதானத்துடன் இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ‘இந்த அழைப்பு மேலும் வன்முறையை அதிகரிக்க சாத்தியப்பாடுகள் இருப்பது குறித்து நாம் அவதானமாக இருக்கிறோம்’ என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜேன் பசஜி குறிப்பிட்டுள்ளார் .

அதேவேளை இராணுவத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப எகிப்தின் பல தனியார் தொலைக்காட்சிகளும் முன்வந்துள்ளன. 10 தனியார் தொலைக்காட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் வழமையான ரமழான் நிகழ்ச்சிகளை நிறுத்தி இந்த பேரணியை நேரடியாக ஒளிபரப்பப் போவதாக கூறியுள்ளன.

எகிப்தின் பெரும் பாலான தனியார் தொலைக்காட்சிகள் இராணுவ சதிப் புரட்சிக்கு ஆதரவாகவும் இஹ்வான் அமைப்புக்கு எதிராகவும் பக்கச் சார்பாக செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.  தற்போது எகிப்து இராணுவம் ‘அவசரகால எச்சரிக்கை நிலையை   பிரகடனப் படுத்தியுள்ளது.

Written by lankamuslim

ஜூலை 25, 2013 இல் 5:30 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக