Lankamuslim.org

முன்னாள் DIG நாலக்க டி சில்வா ஐந்தாவது தினமாக CID யில்

leave a comment »

DIGதீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் மாலக்க சில்வா மூன்றாவது முறையாக இன்று (25) மீண்டும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழக்கிழமை (18) மற்றும் வெள்ளிக்கிழமை (19), திங்கட்கிழமை (22), செவ்வாய்க்கிழமை (23) ஆகிய மூன்று தினங்களாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியிருந்ததோடு மூன்று தினங்களும் அவரிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்ததோடு, கடந்த செவ்வாய்க்கிழமை அவரிடம் சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவரை இன்றைய தினமும் (25) அங்கு முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா,கடந்த புதன்கிழமை (17) அவரது பதவியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் மத்திய ஆயுத களஞ்சியத்திலிருந்து, தீவிரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) வழங்கப்பட்ட எல்.எம்.ஜி. (Light Machine Gun) வகை துப்பாக்கிகள் இரண்டு காணாமல் போன விடயம் தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2018 இல் 7:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக