Lankamuslim.org

20 ஆவது திருத்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பொது தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது – அனுர குமார

leave a comment »

Anuraநாட்டில் பாராளுமன்றம் ஒன்றுக்கான கால எல்லை 2020 செப்டம்பர் (02) ஆம் திகதி வரை உள்ளது. இந்த நிலையில் 20 தாவது திருத்த சட்டத்தை கொண்டுவந்து அது பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பாராளுமன்ற கால எல்லைக்கு முன்பாகவே பொது தேர்தல் ஒன்றை நடத்த வாய்ப்புள்ளது.

என தெரிவித்த ஜே.வி.பி.தலைவர் அனுர குமார திஸாநாயக்கா 20தாவது திருத்த சட்டத்தை வாசிக்காதவர்கள் அதனூடான அறிவை பெற்று கொள்ளாதவர்கள் ஜே.வி.யின் நடவடிக்கை மீது குறை கூறுகின்றார்கள் எனவும் தெரிவித்தார். மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நுவரெலியாவுக்கு கடந்த முதலாம் திகதி சென்ற அனுரகுமார திஸாநாயக்க நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச தோட்டப்பகுதிகள் பலவற்றிக்கும் சென்று மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டார்.

அந்தவகையில் அக்கரப்பத்தனை பசுமலைக்கு சென்ற அவர் அங்கு மக்களை சந்தித்த பின் ஊடகவியலாளர்களை சந்தித்த போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது.நாட்டில் 20 தாவது அரசியலைப்பு திருத்த சட்டம் ஒன்று பாராளுமன்றத்திற்கு கொண்டு வரும் அதே சமயத்தில் இதனூடாக அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் ஒன்று கொண்டு வரப்படும் என்றால் அதனை மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி. முன்னின்று ஆதரிப்பதாக தெரிவித்தார்.

அதற்கு மாறாக விரைவில் பாராளுமன்றத்தை கலைத்து தனிநபர் ஆட்சி ஒன்றுக்கு தயாராக நினைப்பதை நாம் எதிர்ப்பதாக தெரிவித்த அவர் முதலாத்துவ ஆட்சி அதிகாரத்தை சிலர் அதிகாரத்திற்கு வரக்கூடிய மஹிந்த போன்ற தலைவர்கள் வீசும் எழும்பும் துண்டுகளுக்கு அழைந்து 20 ஐ ஆதரிக்க கூடும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் 20 ஐ எதிர்ப்பதால் மஹிந்த அணியினர் எம்மை எதிர்கின்றனர். இவர்களுக்கு 20 தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் போதிய அறிவு இல்லையென சுட்டிக்காட்டினார்.இந்த நாட்டில் 40 வருடங்களுக்கு அதிகமான ஆட்சியில் அதிகாரம் பெற்ற ஜனாதிபதி முறைமையிலான ஆட்சியே இருந்து வருகிறது.

கடந்த காலங்களில் அரசாங்கத்தை கொண்டு செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக மக்களுக்கு பல கருத்துக்களை எடுத்துரைத்து ஆட்சிக்கு வந்தார்.அந்தவகையில் மஹிந்த ராஜபக்ச கடந்த 2005 தொடக்கம் 2015 வரை ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி முறைமை தொடர்பில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாட்டில் போதை பொருள் பாவனை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்கெய்ன் பாவிக்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது புன்னகையிட்ட அவர் போதை பொருளை நாட்டுக்கு கொண்டுவரும் நபர்களை அரசாங்கத்திற்குள் வைத்து கொண்டு வியாபாரிகளை வெளியில் தேடுகின்றனர்.

அதேவேளையில் கொக்கெய்னுக்கும் எமக்குள் வெகு தூரம் அதை பாவிக்கும் அளவிற்கு எமது கொள்கையில்லை.மாறாக நாட்டு மக்களுக்கு எவ்வளவோ நல்ல விடயங்கள் செய்யவேண்டியுள்ளதால் அது தொடர்பில் நாம் கவனம் செலத்தி வருகின்றோம் என்றார்.

Written by lankamuslim

மார்ச் 3, 2019 இல் 7:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக