Lankamuslim.org

காஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா?

leave a comment »

modiலத்தீப் பாரூக்: பெப்ரவரி 14ல் பாஷ்மீரின் புல்வாமா பிரதேசத்தில் நடந்த அசம்பாவிதம் காஷ்மீர் மக்களை கொடமைக்கு உற்படுத்துவதன் மூலம் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதை புதுடில்லிக்கு மீண்டும் ஒரு தடவை நினைவூட்டி உள்ளது. நரோந்திர மோடி தலைமையிலான அரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையில் அதிகரித்து வரும் இராணுவ ஒத்துழைப்புக்களையும் இது கோடிட்டுக் காட்டி உள்ளது. இந்த இரு தரப்புமே முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தக் குற்றங்களுக்கு புகழ் பெற்றவை என்பதும் இங்கு நினைவூட்டத்தக்கது.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்பது இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். 1947 பிரிவினைக்குப் பின் காஷ்மீர் பிராந்தியம் பற்றி அந்த மக்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளும் வகையில் கருததுக் கணப்பு ஒன்று நடத்தப்படும் என்று இந்தியா வழங்கிய எல்லா விதமான வாக்குறுதிகளையும் மீறி அது தனக்குரிய பிராந்தியம் என இந்திய அரசு தொடர்ந்து அடம்பிடித்து வருகின்றது. மோடி அரசு இந்த வாக்குறுதிகளை அப்பட்டமாக அலட்சியம் செய்து வருகின்றது. அவரது பிஜேபி அரசு ஆப்கானிஸ்தான் வரை எல்லையைக் கொண்டுள்ள காஷ்மீர் பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என உரிமை பாராட்டி வருகின்றது.

மோடியும் அவரது இந்துத்வா சக்திகளும் இஸ்ரேலிய படைகளின் பூரண ஆதரவைப் பெற்றுள்ளன. ஆதன் அடிப்படையிலேயே இராணுவ கெடுபிடியும் அங்கு தொடருகின்றது. குhஷ்மீர் மக்கள் கடந்த ஆண்டு கிளர்ந்து எழுந்த போது மோடி அவர்கள் மீது பெலட் குண்டுகளை மழையாகப் பொழிந்தார். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் வேதனைகளை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் வெல்ல இந்தியா 70 வருடங்களாகப் போராடி வருகின்றது. இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போல் அவர்களுக் சமாதானமாகவும் இணக்கத்தோடும் வாழலாம் என்று அவர்களை இணங்க வைக்க இந்தியா தன்னால் முடிந்த அளவு போராடி வருகின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்தியா இந்த விடயத்தில் தோல்வியையே தழுவி வருகின்றது. காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் இந்திய அரசுக்கு கிடையாது. தூன் வழங்கிய வாக்குறுதிகளை முறையாக அமுல் செய்யாமல் உலகை ஏமாற்றும் முயற்சியிலேயெ இந்தியா தொடர்ந்தும் ஈடபட்டு வருகின்றது.

1986ல் பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றுக்கு இந்தியாவின் மன்னாள ப்ழரத மந்திரி ராஜீவ் காந்தி வழங்கிய பேட்டியில் ‘காஷ்மீரில் இழைத்த கொடுமைகள் காரணமாக இந்தியா காஷ்மீரை இழந்து விட்டது’ என்று குறிப்பிட்டிருந்தார். மோடி பதவிக்கு வந்தது முதல் முன்னொருபோதும் இல்லாத வகையில் இந்தக் கொடுமைகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டன. ஆமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய சக்திகளால் சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக உருவாக்கப்பட்ட எதிர்ப்பலைகளும், பதகமான சூழ்நிலைகளையும் மோடி மிகவும் சாதுரியமாக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள் கூட பயங்கரவாதமாக சித்திரக்கப்பட்டன. இதன் எதிர்விளைவுகளில் ஒன்று தான் புல்வாமா சம்பவம். இந்திய அடக்குமறைகளுக்கு முடிவு காணப்படும் வரை இவ்வாறான சம்பவங்கள் இன்னும் தொடருவதற்கான வாய்ப்பக்களே காணப்படுகின்றன.

பாகிஸ்தானுக்குள் நடத்திய தாக்குதலின் மூலம் இந்திய விமானப்படை ஜேய்ஷ் ஏ முஹம்மத் தீவிரவாதிகள் 300 பேரை கொன்று குவித்ததாகக் கூறி இந்தியப் பிரதமர் மோடி உலகளாவிய ரீதியில் நகைச்சுவைக்கு ஆளாகிவிட்டார். இவ்வாறு எவருமே கொல்லப்படவில்லை என்பதே உண்மையாகும். தமது பொய் பிரசாரங்களின் மூலம் பிஜேபி யை ஆட்சி பீடத்தில் அமர வைத்த இந்திய ஊடகங்கள் இந்த விடயத்திலும் மொடியின் பொய்யை தொடர்ந்து பிரசாரம் செய்ததால் நம்பகத் தன்மையை இழந்து நின்றன.

காஷ்மீரில் இடம்பெற்றுவரும் மக்களுக்கு எதிரான கொடூரங்களில் இந்திய அரசுக்கும் இஸ்ரேலிய படைகளுக்கும் உள்ள ஒத்துழைப்பையும் புல்வாமா சம்பவம் கோடிட்டக் காட்டி நிற்கின்றது. இந்த சம்பவம் நடந்த ஒரு சில நர்களில் அதுபற்றி பிரிட்டிஷ் ஊடகவியலாளா றொபர்ட் பிஷ்க் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பல மாதங்களாகவே இஸ்ரேல் இந்தியாவின் தேசியவாதப் போக்குள்ள பிஜேபி அரசுடன் தோளோடு தோள் கோர்த்து நிற்பதை அவதானிக்க முடிகின்றது. இது வெளியில் பேசப்படாத ஆனால் அரசியல் ரீதியாக ஆபத்தானதாகக் காணப்படுகின்றது. இஸ்லாத்துக்கு எதிரான இந்தக் கூட்டணி உத்தியோப்பற்றற்ற ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு கூட்டணியாகவே உள்ளது. இஸ்ரேலிய ஆயுத விற்பசைன் சந்தையின் மிகப் பெரிய கொள்வனவாளராகவும் இந்தியா தற்போது மாறியுள்ளது.

எனவே பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலின் போது இஸ்ரேலிய தயாரிப்பான சுயகயநட ளுpiஉந-2000 “ளஅயசவ டிழஅடிள” பாவிக்கப்பட்டன என்று இந்திய ஊடகங்கள் அடித்த தம்பட்டம் வெறும் தற்செயலான பிரசாரம் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிராந்தியத்தில் சமாதானத்தை விரும்பும் சகலருக்குமான ஒரு அழைப்பு மணி என புல்வாமா சம்பவத்தை வர்ணித்துள்ள மதிப்புக்குரிய இந்திய செயற்பாட்டாளரும் பத்தி எழுத்தாளருமான ராம் புனியானி இவ்வாறு கூறிகின்றார்.

இந்தத் தாக்குதலின் பின் நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் குழப்பத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. புல மாநிலங்களில் காஷ்மீர் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. காஷ்மீர் மக்களைப் புறக்கணிக்குமாறு மேகாலயா ஆளுனர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பஜ்ரங்தல், விஷ்வ ஹிந்து பரிஷத், காரதீய ஜனதாக் கட்சி போன்ற இந்துத்வா குழுக்களும் அவற்றின் ஆதரவாளர்களும் பாரத் மாதாகீ ஜேய் என்ற தேசியவாதப் போர்வையில் பல்வேறு வர்ணங்களுக்கள் மறைந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களையும் முஸ்லிம்களைப் பாகிஸ்தானுடன் இணைத்து அதற்கு எதிரான கொஹங்களையும் எழுப்பி பதற்றத்தை ஏற்படுத்துவதற்கான பகீரதப் பிரயத் தனத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுபம் கெர், சொனு நிகம் போன்றவர்கள் மதச்சார்பற்ற போக்கிற்கு எதிராகவும், தாராள சிந்தனை உள்ள மக்களுக்கு எதிராகவும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் முஸ்லிம்களை பல்வேறு குழுக்களும்ட அச்சுறுத்தி வருகின்றனர். ஜம்மு பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல் நீடித்து வருவதால் அங்கு ஊரடங்கு சட்டம் அவசியம் தேவைப்படுவது போன்ற ஒரு நிலை ஏற்படுத்தப் பட்டுள்ளது. பிஜேபியின் காஷ்மீர் மாநிலத் தலைவர் ரவீந்திர ராய்னா, பாராளுமன்ற உறுப்பினர் ஜுகால் கிஷோர் ஆகியோர் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

முஸ்லிம்கள் மீதான தொடர் வன்முறைகள் காஷ்மீரில் மட்டுமன்றி இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களையும் அச்சத்துக்கு ஆளாக்கி உள்ளது. இந்தோனேஷியா பாகிஸ்தான் என்பனவற்றுக்கு அடுத்த படியாக இந்தியா உலகின் மூன்றாவது பெரிய முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட நாடாகும். இது சுமார் 18 கோடியாகும். பழிவாங்கல் சூழ்நிலையை உருவாக்குவது நிலைமையை மேலும் மோசாக்கும்.

மோடியின் வழிகாட்டியான எல். கே அதவானி மன்னர் ஒரு தடவை ரத யாத்ரா என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தூபமிட்டது போல் நரேந்திர மோடியும் ஏதாவது செய்வாரா என்ற அச்சம் இன்று மேலோங்கி உள்ளது. பார்பரி மஸ்ஜிதை தகர்த்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழிக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தும் வகையில் அன்று அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை இந்திய புலனாய்வு சேவையான றோவின் ஓய்வு பெற்ற முன்னாள் தலைவரும் புலனாய்வு பணியகத்தின் முன்னாள் விஷேட பணிப்பாளருமான அமர்ஜித் சிங் துலாத் இன்றைய அரசின் பழிவாங்கும் கொள்கை முதிர்ச்சி அற்றது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டி உள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளின் மன்னெற்றத்தக்கு அர்த்தபூர்வான நீண்டகால ராஜதந்திர அனுகுமுறையே சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குடந்த முப்பது வருடங்களாக நான் அவதானித்து வரும் காஷ்மீரில் இதுபோன்ற ஒரு தாக்குதலை நான் கண்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் எப்போதோ இழக்கப்பட்டு விட்டது. இந்தியா மீண்டும் காஷ்மீரைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை. இவை எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு சமாதானத்தில் நாட்டம் காட்டுவதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மக்களுக்கு கௌரவத்துட்டம் நீதி நேர்மையுடனும் கூடிய சமாதானம் வழங்கப்பட வேண்டும். காஷ்மீர் எமது பிரிக்க முடியாத ஒரு அங்கம் எனக் கூறும் எங்களுக்கு இந்த சமாதானத்தை வழங்குவது ஒன்றும் கஷ்டமாக இருக்கப் போவதும் இல்லை. அந்த மக்கள் அதற்கு தகுதி உடையவர்கள். அவர்களுக்கு அது கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

இந்துஸ்தான் டைம்ஸின் பத்தி எழுத்தாளர் பியாசிறி தாஸ்குப்தா நன்றாகப் படித்த இளம் காஷ்மீரிகள் பலர் என் ஆயுதம் ஏந்துகின்றார்கள். காஷ்மீரில் ஆயுதம் ஏந்துபவர்கள் பெரும்பாலும் மிகவும் இளவயதினராக இருப்பதும் படித்தவர்களாக இருப்பதும் மத்திய தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் எப்போதுமே அவதானிக்கப்பட்ட ஒரு அம்சமாக உள்ளது.

உலகிலேயே மிக அதிக அளவில் இராணுவ மயமாக்கப்பட்ட பகுதியாக காஷ்மீர் காணப்படுகின்றது. சுமார் ஆறு லட்சம் படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இது ஒவ்வொரு 20 சிவிலினுக்கும் ஒரு படை வீரர் என்ற விகிதத்தில் உள்ளது. பொது மக்கள் வாழும் பகுதிகளில் அடர்த்தியான இராணுவ பிரசன்னம் ஏற்கனவே மூச்சு விட முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. இங்கு அமுலில் உள்ள விஷேட இராணுவ ஆயுதப்படை அதிகார சட்டங்கள் இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளன. பிடிவிறாந்து இன்றி கைது செய்தல், கண்டபடி தேடுதல் நடத்தல், எந்த ஒரு இடத்துக்குள்ளும் அத்துமீறி பிரவேசித்தல், இந்த சட்டத்தின் கீழ் செயற்படும் ஆயுத படையினருக்கு சட்டபூர்வமான விடுபாட்டுரிமை என பல விடயங்களுக்கு இந்த சட்டம் கைகொடுக்கின்றது.

காஷ்மீரில் உள்ள ஆயுதக் குழுக்களொடு படித்த இளைஞர்களட பலர் இணைந.து கொள்ள இந்த உறுதழயான இராணுவ பிரசன்னம் ஒரு மக்கிய காரணியாக அமைகின்றது. முக்களை படைபலத்தை கொண்டும் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டும் கட்டுப்படுத்தலாம் என்று இந்தியா கருதுகின்றது. இந்த சிந்தனையை இந்தியா அவசரமாக மீளாய்வு செய்ய வேண்டும். 2012 இன் ஆரம்ப பகுதியில் சட்ட விரோத மரண தண்டனைகள் மற்றும் கொலைகள் பற்றி ஆராய்ந்த ஐ.நா விஷேட அதிகாரி கிறிஸ்டொப் ஹீன்ஸ் காஷ்மீரில் அமுலில் உள்ள இராணுவ விஷேட அதிகார சட்டம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த சட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டள்ளதை நான் ஆதாரபூர்வமாகத் தெரிந்து கொண்டேன். இதன் விளைவாக அப்பாவி உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. ஜம்மு, காஷ்மீர் மற்றும் அஸாமில் இவை இடம்பெற்றுள்ளன. ஆண்டைய மாநிலங்களில் உள்ளவர்களும் இதற்கு சாட்சிகளாக உள்ளனர். இது வெறுப்புக்குரிய ஒரு சட்டமாகவே காட்டப்படுகின்றது. இது காட்டுமிராண்டித் தனமானது என்று மாநில மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் என்னிடம் கூறினார்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் யார் ஆடட்சியில் இருந்தாலும் சரி காஷ்மீர் பிரதேசத்துக்குள் அளவக்கு அதிகமாக இராணுத்தை குவித்து வைத்திருக்கக் காரணம் காஷ்மீர் மக்கள் தான் என்று அவர்கள் மீதே தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டுக் கொண்டிருக்கும். மோடியின் தலைமையிலும் இந்த நிலை மாறவில்லை. பிஜேபியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான வினய் சாஷ்டிரபதி காஷ்மீர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களாலேயெ உருவாக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளார். வுரலாற்றியலாளர் றாம் குஹா தனது ‘டூ மெனி மஸ்டேக்ஸ்’ என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

‘கடந்த பல வருடங்களாக காஷ்மீர் பற்றியும் காஷ்மீர் மக்களைப் பற்றியும் வெளியிடப்பட்ட பல மடத்தனமான கூற்றுக்கள் உள்;ளன. ஷேக் அப்துல்லாஹ்வின் சட்ட விரோத கைதும் தடுத்து வைப்பும் ஊழல் மோசடிக்குப் பேர் போன பக்ஷி குலாம் மொஹம்மதை வைத்து அவரை ஓரம் கட்டியமையும், அடுத்தடுத்து நடந்த தேர்தல்களை சூறையாடியமை, அரசியல் யாப்பின் 370வது ஷரத்து நீக்கப்படும் என்ற தொடர் அறிவிப்பு, பலஸ்தீன் திபெத் போன்று அக்கிரமிப்பாளர்கரளக் கொண்டு பூமியை அபகரித்தமை, கடந்த இரண்டரை தசாப்தங்களுக்கு மேல் அளவு கடந்த இராணுவ பிரசன்னம், பொலிஸ் மற்றும் இராணுவ துப்பாக்கிப் பிரயோகங்கள் மூலம் இடம்பெற்ற அப்பாவி மக்களின் கொலைகள், பெண்கள் மீதான பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தொடர்ச்சியான கற்பழிப்பும் சித்திரவதைகளும் என எல்லாமே தண்டிக்கப்படாத குற்றங்கள் ஆகிவிட்டன. இதில் எது அந்த மக்களாலேயே தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்ட வினைகள் என்று வினய் சாஷ்டிரபதியால் விளக்க முடியுமா?’ என்று கௌ;வி எழுப்பி உள்ளார்.

புல்வாமா விடயத்தில் ஆதில் அஹமத் தாரின் தந்தை தனது மகன் ஏன் ஆயுதக் குழுவோடு இணைந்து கொண்டார் என்று விளக்கி உள்ளார். அவர் ஒரு முறை இராணுவத்தால் நிறுத்தப்பட்டு எந்தக் காரணமும் இன்றி மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு இம்சிக்கப்பட்டுள்ளார். ஆன்று முதல் தான் ஆயுத பாணிகளோடு இணைய வேண்டும் என்ற அவருக்குள் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தோடு தொடர்புடைய எல்லோருமே ஏதோ ஒரு வகையான ஆபத்தை எதிர் நோக்கி உள்ளனர். குடந்த காலங்களைப் போலே இந்தப் பிரதேசத்துக்கு மீண்டும் வன்முறை திரும்பிவிட்டது. குடந்த காலங்களில் பல தடவைகள் செய்யப்பட்ட அதே தவறுகள் மீண்டும் தலையெடுத்துள்ளன.

யுத்தத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இப்போது வெளிப்படையாகக் குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமாதானத்துக்கான அழைப்பை விடுத்துள்ளார். இந்த சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா? (முற்றும்)

Written by lankamuslim

மார்ச் 19, 2019 இல் 9:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக