Lankamuslim.org

லிபியாவில் சனிக்கிழமை தேர்தல்

leave a comment »

முஹம்மட் அம்ஹர்: லிபியாவில் உள்ளநாட்டு முறுகல் நிலைக்கும் மத்தியில் இந்த மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை தேசிய பேரவைக்கான தேர்தல் இடம்பெற உள்ளது. உருவாக்கப்படும் தேசிய பேரவை பிரதமர் ஒருவரையும் , அமைச்சர்களையும் தெரிவு செய்யவுள்ளதுடன், நாட்டின் புதிய அரசியல் அமைப்பை வரைவதற்காக 200 அங்கத்தவர்கள் கொண்ட பேரவை ஒன்றையும் தெரிவு செய்யவுள்ளது , அந்த பேரவை மூலம் வரையப்படும் யாப்பு மக்கள் அங்கீகாரம் வேண்டி அதன் மீதான மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும் , அந்த வரைவு யாப்பாக மக்களினால் அங்கீகரிக்கப்பட்டால். வரும் ஆறு தாதங்களில் பொது தேர்தல் இடம்பெறும் .

நடைபெறப் போகும் தேசிய பேரவைக்கான தேர்தலில் 2.7 மில்லியன் பேர் வாக்களிக்கவுள்ளனர். இந்த நிலையில் இன்று பென்காசியில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தை லிபியாவின் கிழக்கு பிராந்தியத்திற்கு கூடிய சுய ஆட்சி கோரும் குழுவினர் பிரிவினர் தாக்கியுள்ளனர் இதன்போது பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது .

21-10-2011- அன்று  கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி நிகழ்த்திய குத்பா உரையில் ‘இஸ்லாமிய ஜனநாயக குடியரசொன்றை எகிப்து, லிபியா, தூனிஸியா உள்ளிட்ட நாடுகளின் புரட்சியாளர்கள் நிறுவ வேண்டும்’ என்று அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது   .

எமது முந்திய கட்டுரை:

கேணல் கடாபி: ஒரு சரித்திரத்தின் சரிவு

Written by lankamuslim

ஜூலை 2, 2012 இல் 10:10 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக