Lankamuslim.org

திரைப்படத்துக்கு பின்னால் அமெரிக்க சியோனிச அரசியல் அமுக்க சக்திகள்

with one comment

முஹம்மட் அம்ஹர்: இறைவனின் இறுதித் தூதரை மிகக் கேவலமாக விமர்சிக்கும் திரைப்படத்திற்கு எதிராக உலகளாவிய அளவில் பாரிய எதிர்ப்பு வலுத்து வருகிறது. இன்று வெள்ளிகிழமை உலகில் பல பகுதிகளில் பாரிய ஆர்பாட்ட பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது . குறித்த அவதூறான திரைப்படம் மூலம் முஸ்லிம்கள் திட்டமிட்டு வன்முறையை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனர் இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளது. லிபியாவில் அமெரிக்க தூதர் உள்பட நான்குபேரின் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

இறைவனின் இறுதித் தூதரை அவமதிக்கும் புத்தங்கள் ,நாடங்கள் திரைப்படங்கள் கேலிச் சித்திரங்கள் முஸ்லிம் உம்மாவுக்கு புதியவை அல்ல. தற்போதைய சம்பவத்தின் பின்னணியில் சியோனிச மற்றும் மேற்கு உளவு அமைப்புகள் அமுக்க குழுக்களுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டபடுகிறது. இஸ்லாமிய விரோத சக்திகள் தமது நிகழ்ச்சி நிரலுக்கு தேவையான வன்முறை ஒன்றை உலகளாவிய அளவில் தோற்றுவிக்க மேற்கொள்ளும் நகர்வுகளில் இது பிரதானமானதாக கருதப்படுகிறது . இதன் மூலம் உலகின் பல பகுதிகளில் வன்முறையை தூண்ட குறித்த சக்திகள் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் பல சர்வதேச இஸ்லாமிய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்காவில் இயங்கும் முக்கிய சியோனிச அரசியல் அழுத்தகுழு முக்கியஸ்தர்கள்தான் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் என்று PressTv தெரிவித்துள்ளது . குறித்த திரைப்படத்தை கலிபோர்னியாவில் ஷாம் சியோனிச யூதன் இதை தயாரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது .

இரண்டு மணிநேரம் நீண்ட இத்திரைப்படத்தை எகிப்தில் ஒரு கோப்டிடக் கிறிஸ்தவர் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து யூட்யூப் இணையதளத்தில் பதிவு செய்ததைத் தொடர்ந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. கிட்டத்தட்ட 5 மில்லியன் டாலர் செலவழித்து தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் பின்னணியில் 100 க்கும் மேற்பட்ட யூத அமைப்புகள் நிதியுதவி அளித்துள்ளதாக டெய்லி மெயில் தெரிவிக்கிறது.

Written by lankamuslim

செப்ரெம்பர் 14, 2012 இல் 8:27 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. தனக்கு ஒரு நண்மை கிடைக்க ஒரு நன்மையையோ,அன்றி ஒரு தீமையையோ செய்யத்தயங்காத நாடு அமெரிக்கா. அப்படியான அமெரிக்கா தான் முஸ்லிம்களை இம்சிக்க திரைப்படமும் தயாரிக்கும் என்பது இப்போது விளங்குகிறது.
    அண்மைக்காலமாக முஸ்லிம்தேசங்களுடன் விரோதித்துக் கொண்டுள்ள அமெரிக்கா, இந்து சமுத்திரத்தை ஆக்கிரமிக்க, முயற்சிக்கின்றது. அதற்கு வாய்ப்பாக ஐ.தே.கா.ஆளும் இலங்கையை உருவாக்க பொன்சேக்காவை தேர்தலில் இறக்கியது. அவருக்கு சப்போட்செய்ய ரணில், ஹக்கீம் போன்றவற்றை விலைக்கு வாங்கிக் கொடுத்தும் தேசாபிமானிகளும்,முஸ்லிம்சமுக நலன்விரும்பிகளும் அரசோடு இணைந்த நின்றதால் அத்தந்திரம் பலிக்காமல் போனது.
    மட்டுமல்லாமல் மகிந்த அரசானது, அமெரிக்கா சார்பை விடுத்து தேசாபிமானத்துடன் சீனச்சார்பை எடுத்துள்ளது. அதையும் தடுக்க ஜெனீவாவை அமெரிக்கா கையிலெடுத்த போது இலங்கை முஸ்லிம்கள் அரசைக்காக்க முன்வந்தனர்.
    அதுவும் பிழைத்துப்போகவே தமிழரின் பிரச்சினையை அமெரிக்கா கையிலெடுத்து புலிகளின் கனவான இணைந்த வடகிழக்கை நனவாக்க த.தே.கூட்டமைப்பை களத்தில் இறக்கியது.
    கிழக்குமாகாண சபைக்கான தேர்தலும் கோள் பண்ண முஸ்லிம்களும் அரசுசார்பு நிலை எடுக்கத்தொடங்கினர்.
    முஸ்லிம்கள் அரசை நெருங்கினால் அமெரிக்க எதிர்பார்ப்பு அடிபட்டு விடும் என நாட்டுக்குள் ஊடுருவியுள்ள அமெரிக்க நாசகார சக்திகள் விரைந்து செயற்பட…
    கக்கீம் ஆறுசீட்விடயத்தை வலுவாகப்பிடித்து தனித்து களமிறங்கினார்.எதனைச் சொல்லி வாக்குக்கேட்பது எனக் கலங்கிய கக்கீமுக்கு அதிஸ்டம் ஏற்பாடு செய்யபர்பட்டது .ஆம். பள்ளியுடைப்பு சம்பவநங்கள் அங்காங்கெ உருவாக்கப்பட்டன. ஆஹா அடித்தது லக்கு எனப்புறப்பட்ட கக்கீம்கம்பனி பள்ளியையே முலதனமாக்கி மக்களை உருவேற்றி நல்ல பலன் கண்டுள்ளது. ஆனால் கக்கீமே எதிர்பாராவண்ணம் பிஎம.ஜிஜியும் நீளநீள நோட்டீசுகளாக விட்டு மிகவும் கட்சிதமாக கக்கிமே மூக்கில் விரல் வைக்குமளவுக்கு அவர்களும் பள்ளியை முலதனமாக்கி ஆதாயம் தேடிக்கொண்டுள்ளனர். ஆனால் பிஎம்ஜிஜியால் பிரதிநிதித்துவத்தை இழந்த மூதூர்போன்ற பிரதேசங்களுக்கு ஆறுதல்சொல்லத்தான் யாருமில்லை.
    மரத்துக்கும், கொடிக்கும் பாய்ந்த பாய்ந்து ஓட்டுப்போட்டவர்கள், கிழக்கு தேர்தலை கோள் பண்ணி அதற்கு முஸ்லிம்களது ஆதரவு அவசியம் எனத்தெரிந்த ஜனாதிபதி, ராஜதந்திரம் தெரியாவரா? இப்படியான சூழ்நிலையில் பள்ளிவாசலை; உடைப்பாரா? என நாரே தக்குப்பீர்களால் தாக்குண்டவர்களும், மசுறாசபை கதைசொல்லல்களால் வசமிழந்தவர்ளும் யோசிக்காமல் போனது தான் கவலைக்குரியது. மக்களை அந்தக் கோணத்தில் சிந்திக்க விடாதவர்களது அயோக்கியத்தனம். தண்டிக்கத்தக்கது.

    roshaen

    செப்ரெம்பர் 14, 2012 at 9:52 பிப


பின்னூட்டமொன்றை இடுக