Lankamuslim.org

லிபியாவின் புதிய பிரதமராக முஸ்தபா அபூ ஷக்கூர்

leave a comment »

முஹம்மட் அம்ஹர்: லிபியாவின் புதிய பிரதமராக முஸ்தபா அபூ ஷக்கூர் புதிய லிபிய பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . கடாபிக்கு ௭திராக கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் ௭ழுச்சியைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக சேவையாற்றிய மஹ்மூத் ஜிப்ரிலை அவர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

பொறியியல் கலாநிதியான முஸ்தபா அபூ ஷக்கூர் கேணல் கடாபியை நீண்ட காலமாக அமெரிக்காவில் இருந்து ௭திர்த்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமரை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது . முதல் சுற்று வாக்கெடுப்பில் ஜிப்ரில் முதலிடத்திலிருந்தபோதும், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் 96 வாக்குகளை பெற்று முஸ்தபா அபூ ஷக்கூர் அவரை இரு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

மேற்படி பிரதமர் தெரிவுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேளையிலேயே , பென்காஸியிலுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் அலுவலகம் தாக்கப்பட்டது .தாக்கப்பட்டதில் லிபியாவுக்கான அமெரிக்கக் தூதுவரும் ஏனைய மூவரும் கொல்லபட்டனர் குறிப்பிடத்தக்கது.

லிபிய திரிபோலி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற ஷாகுர் அமெரிக்காவுக்கு சென்று பொறியியல் கலாநிதிப் பட்டத்தை பெற்றுகொண்டார் .சில வருடங்களாக துபாயில் இருந்த இவர் கடந்த வருடம் லிபியா திரும்பி லிபிய தேசிய அதிகாரமாற்று சபையில் ஆலோசகராக பணியாற்றியுள்ளார் .

லிபிய பாராளுமன்றம் பெரும்பாலும் சுயேற்சை குழுக்கள் மூலம் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களால் நிரம்பியுள்ளது என்பது சுட்டக் காட்டத் தக்கது . அதேவேளை அமெரிக்கா லிபியாவில் தனது கால்களை  மிகவும் ஆழமாக பதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது .

Written by lankamuslim

செப்ரெம்பர் 14, 2012 இல் 8:30 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக