Lankamuslim.org

முஹம்மட் பின் ஸல்மானும், அப்துல் பதஹ் சிஸியும் யாரின் காவலர்கள் ?

with one comment

jhuyghjikஎஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி):அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உலகம் வெள்ளை மேலாதிக்க சிந்தனை மற்றும் சுயநலம்மிக்க வறண்ட முதலாளித்துவ கொள்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பூகோள சுற்றுசூழல் பாதுகாப்பு, சுகாதாரம், மனித உரிமைகள் என்பனவற்றை கருத்தில் கொள்ளாது பேராபத்து நோக்கி முன்நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது இப்படி பொதுவில் டிரம்பின் ”வெள்ளை”மாளிகை நிர்வாகத்தை அடையாளப்படுத்தினாலும் முஸ்லிம் மத்திய கிழக்கு என்ற எல்லைக்குள் வைத்து டிரம்பின் நடவடிக்கைகளை அவதானிக்கும் போது அதன் கொடூரமான மற்றும் முஸ்லிம் உம்மாவை மிக அண்மித்து நிற்கும் அதன் மிக ஆபத்தான பரிமாணத்தையம் மத்திய கிழக்கில் அதன் ஆதரவாளர்களையும் மிக தெளிவாக கண்டுகொள்ள முடிகிறது.

jhuyghjikடிரம்ப் நிர்வாகம் சியோனிச இஸ்ரேலுடன் இணைந்து ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவுக்கும் பேரிழப்பை ஏற்படுத்தும் ஒரு புதிய பூகோள மீள்கட்டமைப்புக்கு மத்திய கிழக்கை வேகமாக உட்படுத்துவதை மிகவும் தெளிவாக அவதானிக்க முடிகிறது, 1980 களில் இருந்து இந்த அரசியல், பூகோள மீள்கட்டமைப்பு ”The Greater Middle East” அல்லது “The New Middle East” அல்லது “The Great Middle East Project” எனவும் அடையாளப்படுத்தப்பட்டாலும். இத் திட்டம் ட்ரம் -நெதன்யாஹு கூட்டுமுயற்சியின் கீழ் மத்திய கிழக்கின் அதன் பாதுகாலவர்களின் பாரிய பங்களிப்புடன் புதிய உத்தேவேகத்தை பெற்று விட்டது .

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ச் புஷ்ஸூம் இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஒல்மெர்டும் (Olmert) இணைந்து 2006 யில் உத்வேகப்படுத்திய ”புதிய மத்திய கிழக்கு” திட்டத்தை விடவும் டிரம்- நெதன்யாஹு இணைந்து சவூதி முடிக்குரிய மன்னர் முஹம்மட் பின் ஸல்மான் , எகிப்து சர்வாதிகாரி அப்துல் பதாஹ்  அல் சிஸி ஆகியோரின் ஆதரவுடன் மீள்கட்டமைத்து வரும் புதிய மத்திய கிழக்கு பேராபத்தை கட்டியம் கூறுகிறது .

புதிய ஒரு மத்திய கிழக்கை உருவாக்கவும் திட்டம் ஒரு புதிய திட்டமல்ல  ஆனால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அணுகுமுறையில் மாறிமாறி அதிகாரத்துக்கு வந்த அமெரிக்க அதிபர்கள் மத்தியில் வேறுபாடுகள் நிறையவே காணப்படுகின்றது. . இருந்தலும் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட், அமெரிக்க உளவு நிறுவனமான CIA ஆகியவற்றின் மூலமான செயல்பாடுகள் ஒரு சீரான வேகத்தில் அதன் இலக்கு நோக்கி செயல்பட்டுவந்துள்ளதாக பாதுகாப்பது மற்றும் திட்டமூலோபாய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவது அவதானிக்கத்தக்கது. தற்போது டிரம் நிர்வாகம் இத்திட்டத்துக்கு புதிய வேகத்தை வழங்கியுள்ளது .

hjyughjமத்திய கிழக்கு நாடுகளில் அதிகார பீடத்தில் தமது ஆட்களை  நியமித்தல், அங்கு இருக்கும் சர்வாதிகாரிகளுக்கு தமது ஆதரவை, உதவிகளையும் வழங்கி எழுச்சிபெறும் இஸ்லாமிய சக்திகளை அழித்தல், பூகோள ரீதியில் மத்திய கிழக்கை மேலும் பல்வேறு துண்டுகளாக உடைத்தல் இவற்றின் மூலமாக மத்திய கிழக்கின் வளங்களை இலகுவாக சுரண்டல், இஸ்ரேலுக்கு சவாலான நாடுகளை பலவீனப்படுத்தி அவற்றை அரசியல் ரீதியில் அடிமைப்படுத்திவைத்திருத்தல் இதன் மூலமாக மத்திய கிழக்கின் எஜமானனாக இஸ்ரேலை உருவாக்குதல் இதன் மூலம் மத்திய கிழக்கில் முஸ்லிம் உம்மா ஒருபோதும்  எழுச்சிபெற்றுவிட்டது இருத்தலை உத்தரவாதப்படுதல்  போன்ற பல்வேறு திட்டங்களுடன் நகரும் டிரம்ப் – இஸ்ரேல் வேலைத்திட்டம் மத்திய கிழக்கில் பலமான நாடுகளான சவூதி, எகிப்து, ஈரான் , துருக்கி, ஜோர்டான் ,துபாய் ஆகிய நாடுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவும் அவற்றை பயன்படுத்தவும் நாடுகளின் அரசியல் சூழலுக்கு ஏற்ப வித்தியாசமான அணுகுமுறைகளை கையாண்டுவருகின்றது.

நகரும் டிரம்ப் – இஸ்ரேல் வேலைத்திட்டம் சவூதியில்   பின் ஸல்மானையும் , எகிப்தில் சிஷியையும்   தமது ”புதிய மத்திய கிழக்கு” திட்டத்துக்கு பலமான ஆதரவாளர்களாக பயன்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளது, இந்த இரு ஆட்சியாளர்களுக்கு அவர்களின் அதிகாரத்தை அந்நாடுகளில் பாதுகாக்கும் உத்தரவாதத்தை வழங்கி அவர்களை புதிய மத்திய கிழக்கு திட்டத்தின் சக்தி வாய்ந்த ,நம்பிக்கைக்குரிய முகவரல்களாக உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்ற அரசியல் விமர்சன குற்றச்சாட்டுக்கள் பல ஆதாரங்களை கொண்டுள்ளன.

அண்மையில் சவூதியில் ஏட்பட்டுள்ள அரசியல் அதிரடிகள் தொடர்பில் The Associated Press யின் வெள்ளைமாளிகைக்கான செய்தியாளர் Jonathan Lemire வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில் மூலமும் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம் சவூதியில் தனது இஸ்ரேலிய மருமகனான Jared Kouchner, உடன் இணைந்து புரட்சியை திட்டமிட்டதாகவும், தமது ஆள்தான் தற்போது சவூதி அதிகார பீடத்தில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், சவூதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானை குறிப்பிட்டு வெள்ளைமாளிகை நண்பர்களுக்கு டிரம்ப் சொன்னதாக அந்த வெள்ளைமாளிகைக்கான செய்தியாளர் குறிப்பிடுகிறார் .

இதன் மூலம் டிரம்ப் பின் ஸல்மானின் போட்டியாளர்களை நசுக்கிவிட்டு பின் ஸல்மானை அதிகாரத்தில் அமரச் செய்து முஹம்மத் பின் சல்மான் மூலமாகவும் எகிப்து சர்வாதிகாரி ஷிசி  மூலமாகவும் முஸ்லிம் உம்மாவை அடக்கிவைத்திருப்பதுடன்   புதிய மத்திய கிழக்கை உருவாக்கவும் அதற்காக பிராந்தியத்தில் பலமான மேலுமொரு மோதலொன்றை உருவாக்கவும் இதன் மூலம் இஸ்ரேலிய, அமெரிக்க அரசியல் ,பொருளாதார , இராணுவ நலன்களை பலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்  என்ற அரசியல் வாதம்  முன்வைக்கப்பட்டு வருகின்றது, குறிப்பாக இஸ்லாமிய சக்திகளை ஒடுக்கவும், மறுபுறம் நிலையான ஷீயா -சுன்னாஹ் மோதலை முஹம்மத் பின் ஸல்மானை வைத்து கட்டமைக்கவும் திட்டமிட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. .

முஹம்மத் பின் ஸல்மானை அமெரிக்க -சயோனிச கூட்டு சத்தி நன்றாக பயன்படுத்துகின்றது என்பதற்கு மற்றுமொரு சிறந்த உதாரணமாக பின்வரும் சம்பவமும் சுட்டிக்காட்டப்படுகின்றது, கடந்த நவம்பர் மாதம் சவூதி இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசை அவசரமாக அழைத்து டிரம்பின் பலஸ்தீன் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் ,ஈரான், ஹிஸ்புல்லாஹ் உடனான உறவை முறித்துக்கொள்ளுமாறும் தவறினால் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறும் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தன , இது தொடர்பாக அப்பாஸ் பின்னர் தெரிவித்துள்ள தகவலில் தான் சவூதிக்கு அழைக்கப்பட்டு கிழக்கு ஜெருசலம் இன்றிய துண்டாடப்பட்ட மேற்கு கரையை ஏற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் மேலும் பலஸ்தீனியர்கள் தங்கள் தலைநகராக கிழக்கு ஜெருசலம் கொடுக்கப்பட மாட்டார்கள், எனவும் பலஸ்தீனிய அகதிகள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கு தமது சொந்த பூர்வீக இடங்களுக்கு திரும்புவதற்கு உரிமை இல்லை. எனவும் தெரிவிக்கப்பட்டதாகவும் பலஸ்தீன் நிர்வாக தலைவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது, என்றாலும் இதற்கு பிந்திய தகவல்கள் மொஹமத் பின் ஸல்மான் அப்பாஸை எந்த திட்ட த்தையும் ஏற்றுக்கொள்ளுமாறு பலவந்தப்படுத்தவில்லை என வெளிவந்தாலும் பின் ஸல்மானினால் மேற்றசொன்னவை ஒரு தெரிவாக முன்வைக்கப்பட்டுள்ளமை அவரின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகின்றது என விமர்சங்கள் முன்வைக்கப்படுகின்றது .

அதேவேளை டிரம்ப்பின் ஜெருசலம் பிரகடனத்தை மற்ற முஸ்லிம் நாடுகளையும் எகிப்தையும் போன்று சவூதியும் பகிரங்கத்தில் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

எகிப்து சர்வாதிகாரி ஷிசி  இஸ்ரேலிய மற்றும் டிரம்பின் திட்டத்துக்கு முழு விசுவாசமாக செயல்பட்டு வருவதைக் காட்டும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. டிரம்ப்பின் ஜெருசலம் பிரகடனத்தை ஏனைய நாடுகளைப்போன்று எகிப்தும் வெளிப்படையில் நிராகரித்தாலும் உண்மையில் சர்வாதிகாரி ஷிசியின் நிர்வாகம் மறைமுகமாக பின் கதவால் அமெரிக்க – இஸ்ரேல் திட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைதான் எடுத்துள்ளது என்பதற்கு பின்வரும் சம்பவம் ஓர் சிறந்த உதாரணமாக உள்ளது.

அமெரிக்க நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள (Tapes Reveal Egyptian Leaders’ Tacit Acceptance of Jerusalem Move) என்ற தலைப்பிலான தகவல் ஒன்றில் இந்த உண்மை ஓரளவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எகிப்து மீடியாக்களின் பிரபல Talk shows நிகழ்ச்சி நடத்துனர்கள மற்றும் ஊடக பிரதானிகளுக்கு தொலைபேசியில் தொடர்பை ஏட்படுத்தியுள்ள எகிப்து ஷிசி  நிர்வாகத்தின் புலனாய்வு பிரிவின் முக்கிய அதிகாரி கெப்டன் அஷ்ரப் அல் கோலி  (Capt. Ashraf al-Kholi) , தெரிவித்துள்ள தகவலில் “நமது நாடும் எல்லா அரபு சகோதரர்கள் போல், டிரம்பின் இந்த முடிவை பகிரங்கமாக கண்டனம் செய்துள்ளது ஆனால் இஸ்ரேலுடன் மோதுதல் என்பது எகிப்தின் தேசிய நலன் சார்ந்த விடயமல்ல ஆகவே எகிப்திய ஊடகங்கள் டிரம்பின் அந்த முடிவை  கண்டனம் செய்வதற்குப் பதிலாக, மக்களை  அந்த முடிவை ஏற்றுக்கொள்வதற்கு இணங்க செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் அவர்களிடம் தெரிவித்துள்ள அறிவுறுத்தலின் பலஸ்தீனியர்கள் மேற்குக் கரையோர நகரத்துடன் (றமழ்லா) திருப்தி பட்டுக்கொள்ளவேண்டும்    எனவும் இதற்காக அவர்கள் யுத்தம் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான நான்கு குரல் பதிவுகளை The New York Times. பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் எகிப்தின் Talk shows நிகழ்ச்சி நடாத்துனர் Azmi Megahed அதை உறுதிபடுத்தியுள்ளார். வெளியாகும் இந்த தகவல்கள் சர்வாதிகாரி சிஸிக்கும் ,முடிக்குரிய மன்னர் மொஹம்மத் பின் சல்மானினதும் உண்மையான அரசியல் நிலைப்பாடுகளை காட்டுவதுடன் உண்மையில் அவர்கள் யார் என்பதையும் அடையாளப்படுத்துவதாக உள்ளது .

சர்வாதிகாரி ஷிசியும் , பின் ஸல்மானும் டிரம்பின் ‘ஜெருஸலம் இஸ்ரேலின் தலைநகரம்’ என்ற பிரகடனத்தை ஏற்றுக்கொண்டு இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிப்பதன் மூலம் தமது நாடுகளில் தம் சர்வாதிகாதை அமெரிக்காவும், இஸ்ரேலும் பாதுகாக்கும் என்ற உத்தரவாத்தை பெற்றுக்கொண்டுள்ளனர் என்ற அரசியல் குற்றசாட்டை இருவரின் ஏனைய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது நிராகரிக்க கூடியதாக இல்லை .

மத்திய கிழக்கில் அடுத்த இரு பலமான நாடுகளான
துருக்கி மற்றும் ஈரான் நாடுகளின் அதிகாரபீடத்தை பலவீனப்படுத்த பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன அண்மையில் ஜனாதிபதி எர்துவான் தலைமையிலான துருக்கி அரசாங்கத்தை இராணுவசதிப் புரட்சி மூலம் கவிழ்க்க முயன்றமை இதற்கு சிறந்த உதாரணமாகவும், இது தவிர மத்திய கிழக்கில் நான்கு நாடுகளின் எல்லைகளில் பரந்துவாழும் குர்திஸ் மக்களை பயன்படுத்தி மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையைக் குழைக்கும் நடவடிக்கைகளை அவதானிக்க முடிகிறது , ஈரானின் கிழக்கில் இருந்து மேற்கே மத்தியதரைக் கடல் ஈராக், சிரியா மற்றும் துருக்கி வழியாக விரிந்து கிடக்கும் குர்திய மக்கள் தொகுதிக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், தேசியம், தேசம் என்ற கனவை முன்னரை விடவும் வேகமாக ஊக்குவித்து வருகின்றமை மற்றுமொரு உதாரணமாக முன்வைக்கமுடியும்.

பிராந்தியத்தில் குர்திய இன ஆயுதக்குழுக்களை பலப்படுத்தி, பயன்படுத்துவது மிக பொருத்தமானதாக அமெரிக்காவும் இஸ்ரேல் கருதுகிறது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பார்வை முன்னரை விடவும் தற்போது குர்திஸ் இன மக்களின் மீது மையம் கொண்டுள்ளமைக்கு PYD- (Democratic Union Party), YPG-(People’s Protection Units) SDF –(The Syrian Democratic Forces) போன்ற அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு போஷிக்கப்படுகின்றமை இதற்கு சிறந்த சான்றாக அமைகின்றது .

அமெரிக்க – இஸ்ரேலிய கனவு மெய்ப்பட்டு புதிய மத்திய கிழக்கு உருவாக்கப்படுமாக இருந்தால் மத்திய கிழக்கை பலவந்தமாக உடைக்கும் சத்திகள் பலம் பெரும் புதிதாக பல நாடுகள் தோன்றும் சிரியா மூன்று துண்டுகளாகவும் துருக்கி, ஈராக், ஈரான், யெமன் மேலும் ஒவ்வொன்றும்  இரண்டாகவும், மூன்றாகவும் உடைக்கப்படும்,  பின் ஸல்மான் கூறுவதை போன்று ”Modern Islam” தவிர்ந்த இஸ்லாமிய சக்திகள் பிராந்தியத்தில் இருந்து முற்றாக தடைசெய்யப்படும் மேலும் பல முஸ்லிம் பூமிகளை விழுங்கிக்கொண்ட பிராந்திய வல்லரசாக இஸ்ரேல் நிமிர்ந்து நிற்கும் என்பதுடன் இஸ்ரேலை நேரடியாகவும் ,பகிரங்கமாகவும் ஆதரிக்கும் நாடுகளும் உருவாக்கப்பட்டு விடும் .

1924 ஆம் ஆண்டு உஸ்மானிய கிலாபத் உடைக்கப்பட்டு முஸ்லிம் தேசமும் அதன் வளங்களும் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கிடயில் பங்கீட்டுக்கு உட்படுத்தப்பட்டபோதும் முஸ்லிம் உலகம் ஒரு புதிய ஒழுங்கிற்கு உட்படுத்தப்பட்டது .அந்த புதிய ஒழுங்கு முஸ்லிம் உம்மாவை சிந்தனாரீதியிலும் , பௌதீக ரீதியிலும் மீள் ஒழுங்கிற்கு உட்படுத்துவதை இலக்காக கொண்டதாக இருந்தது .முஸ்லிம் உம்மாவை இஸ்லாத்தை விட்டு தூரப்படுத்தல் , இஸ்லாத்தை அரசியலில் இருந்து அகற்றிவிடுதல் என்ற சித்தாந்தவேலைத்திட்டத்தை முன்னெடுத்துடன் புவிசார் எல்லைகளை புதிதாக வரைந்து பல முஸ்லிம் தேசங்களை புதிதாக கட்டமைத்து முஸ்லிம் உம்மாவை பலவீனப்படுத்துவதில் வெற்றிபெற்றது.

அதன் பின்னரும் பல்வேறு காரணங்களுக்காக உலகை ஒழுங்கு இடம்பெற்றுள்ளது மேற்கு நாடுகள் நன்கு திட்டமிட்ட முறையில் தமது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதிய முஸ்லிம் மத்திய கிழக்கு மாற்றஙக்ளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் தற்போது புதிய மத்திய கிழக்கு நோக்கிய அமெரிக்க -சயோனிச நகர்வு பாரதூரமானதாக பார்க்கப்படவேட்டியுள்ளது.

சிலர் சவூதியும், எகிப்துன் துபாயும் ,ஜோர்டானும் உட்பட 57 முஸ்லிம் நாடுகளுடன் இணைந்து டிரம்பின் ஜெருசலம் பிரகடனத்தை நிராகரித்தமை மத்திய கிழக்கில் டிரம்பின் புதிய ஒழுங்கு திட்டத்துக்கு ஏட்பட்டுள்ள தடை என கருதுகின்றனர் ஆனால் அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் அதை அப்படி பார்க்கவில்லை முஸ்லிம் நாடுகளின் கூட்டு பிரகடனத்தை மிக குறைவான தாக்கத்தை கொண்டவை, ஒவ்வொரு முஸ்லிம் நாடும் தமது தேசம் ,தேசியம் என்பதை மையப்படுத்தி செயல்படும் என்பதால் அந்நாடுகளின் பிரகடனம் நடைமுறையில் மிக குறைந்த தாக்கம் கொண்டது என்றே ஆரம்பத்தில் இருந்தது தெரிவித்து வந்தது, அமெரிக்காவின் அந்த நம்பிக்கை மெய்ப்படுவதைத்தான் நாம் மேற்கண்ட தகவல்கள் உறுதிப்படுத்துவதாக உள்ளதுடன் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கும் தகவல்களும் உறுதிப்படுத்துவதாக உள்ளது . ஆக எப்படி இவர்கள் முஸ்லிம் உம்மாவின் பாதுகாவலர்களாக முடியும் ???

இது எஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி) BA.Hons (special in political science)  எழுதி  கடந்த மாதம் ”எங்கள்தேசம்” பத்திரிகையில் வெளிவந்த  கட்டுரையின் web version

Written by lankamuslim

மார்ச் 30, 2018 இல் 7:32 முப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Mohammed bin Salman, the crown prince of Saudi Arabia, known as MBS, has met leaders from a number of right-wing Jewish organisations during his tour of the United States.

    The groups, which have donated millions to illegal settlement building and the fight against BDS (the Boycott, Divestment and Sanctions) movement, include officials from AIPAC, Stand Up for Israel (ADL) and the Jewish Federations of North America (JFNA).

    According to a leaked copy of his itinerary, Haaretz reported that MBS also met with leaders from the Conference of Presidents, B’nai B’rith and the American Jewish Committee (AJC).

    AIPAC, ADL and the JFNA have long targeted BDS, a non-violent movement that seeks to economically pressure Israel into providing equal rights and a right of return to Palestinians.

    Some of the pro-Israel US groups have spent millions in lobbying for the Combating BDS Act, a bill that seeks to stifle BDS.

    SalahuDeen

    மார்ச் 30, 2018 at 4:18 பிப


பின்னூட்டமொன்றை இடுக