Lankamuslim.org

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கிறது 16 பேர் சஹீத் 1400 காயம் !!

leave a comment »

hjgyutyhjnbnM.ரிஸ்னி முஹம்மட்: பலஸ்தீன காஸா பிரதேசத்தில் பலஸ்தீனர்கள் சயோனிஸ ஆக்கிரமிப்பில் இருக்கும் தமது வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான ஆர்ப்பாட்டம் ஒன்றை காஸா – இஸ்ரேலிய எல்லைப்பகுதியில் அமைதியான முறையில் மேற்கொண்டிருந்த போது ஆக்கிரமிப்பு சயோனிஸ படைகளின் கண்மூடித்தனமான துப்பாக்கி தாக்குதலுக்கு 16 பலஸ்தீனர்கள் பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1400 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் .

இந்த போராட்டத்தை ஏட்பாடுசெய்திருந்த Great Return March (GRM) அமைப்பு இது பற்றி குறிப்பிடும்போது துப்பாக்கிகள் இன்றி ஆயுதங்கள் இன்றி பலஸ்தீன கொடிகளுடன் சொந்த இடங்களுக்கு செல்வதை வலியறுத்துவதை நோக்காக கொண்டு வெள்ளிக்கிழமை 29 அமைதியான போராட்டத்தை அறிவித்தபோது காஸா எல்லையில் சயோனிஸ ஆக்கிரபிப்பு இராணுவம் சீனைப்பர்கள் ,டாங்கிகள் சகிதம் பெருமளவில் குவிக்கப்பட்டனர் , ஐநாவினாலும் பலஸ்தீனர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும் அவர்கள் அதை கோரியதற்காக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது .

ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்துக்கு Great Return March (GRM) சொந்த இடங்களுக்கு திரும்பி செல்வதற்கான ஆர்ப்பாட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

பலஸ்தீன – ஆக்கிரமிப்பு இஸ்ரேல் எல்லையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்றும் இன்றும்  இலச்சக்கணக்கானவர்கள் அப்பகுதியில் திரண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர். அவர்களை இஸ்ரேல் படையினர் படுமோசமாக தாக்கிவருகின்றனர்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை துப்பாக்கிச்சூடு நடத்தியும் பலஸ்தீனர்கள் வசிப்பிடங்களை நோக்கி குண்டு தாக்குதல்களை நடத்தியும் வருகின்றது இன்று சனிக்கிழமையும் தாக்குதல்கள் மேட்கொள்ளப்பட்டுள்ளது அதில பலர் படுகாயமைடைந்துள்ளனர் அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

“திரும்புவதற்கான மாபெரும் பேரணி” என்றழைக்கப்படும் இந்த பேரணிக்காக இஸ்ரேலின் எல்லைப்பகுதிக்கு அருகில் பலத்தீனர்கள் பல முகாம்களை அமைத்துள்ளனர் ஆக்கிரமிப்பு இஸ்ரேலில் உள்ள தங்களின் வீடுகளுக்கு தாங்கள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆறு வாரகால போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் .

1976 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பலத்தீனர்களின் பூமியை ஆக்கிரமிப்பு செய்தபோது நடத்திய தாக்குதலில் ஆறு பாலத்தீனியர்கள் உயிரிழந்த தினம் மார்ச் 30 ஆம் திகதி இந்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதுடன் 1948 ஆம் ஆண்டு சட்டவிரோத இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான பலத்தீனர்கள் இடம்பெயர்ந்த நிகழ்வை குறிக்கும் நக்பா (பெரும் ஆபத்து) தினம் கடைபிடிக்கப்படும் மே மாதம் 15 ஆம் தேதி இந்த போராட்டம் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் சூழல் போராட்டத்தை தொடர வழியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இஸ்ரேலிய தாக்குதல் தொடர்பாக சுயாதீன விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டானியோ கட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

hjgyutyhjnbn

 

Written by lankamuslim

மார்ச் 31, 2018 இல் 7:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக