Lankamuslim.org

முஸ்லிம்களை வதைக்கும் சீனாவின் தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி வலியுறுத்தியுள்ளது

leave a comment »

qawqaqaqzaq.jpg

சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மோசமாக நடத்தப்படுவதற்கு  துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது , “மனிதகுலத்திற்கு வெட்கக்கேடை ஏற்படுத்தும் செயல்  ‘ என இதனை வர்ணித்துள்ள துருக்கி  தடுப்பு முகாம்களை  மூடுமாறும்  வலியுறுத்தியுள்ளது  , துருக்கி வெளிநாட்டு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  சீனா  தடுப்பு முகாம்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான  உய்குர் முஸ்லிம்கள்களை தடுத்துவைத்திருப்பது இரகசியமான விடயமல்ல , அந்த துருக்கிஷ் முஸ்லிம்  மேற்கு சீனாவில் அழுத்தம் மற்றும் “திட்டமிட்ட  சீரழிவை ” எதிர்கொள்கிறார்கள்  என தெரிவிவிக்கப்பட்டுள்ளது .

சீனாவில் முஸ்லிம்கள் மூர்க்கமான அரச அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றார்கள்,  முஸ்லிமகளை பெரும்பான்மையாக கொண்ட மிக பெரிய மாகாணமான ஷின்ஜியாங் மாகாணத்தில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான  உய்குர் முஸ்லிம்கள் சீன கம்யூனிஸ தடுப்பு முகாம்களில் விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளர் , அவர்கள் அங்கு இஸ்லாத்தை கைவிடுமாறு நிர்பந்திக்கப்படுவதாகவும் , பன்றி இறைச்சி உண்ணவும் , கம்யூனிஸ சித்தாந்தகோட்பாடுகளை மனனமிடவும் நிர்பந்திக்கப்படுவதாகவும் இவற்றை செய்யமறுப்பவர்கள் கடுமையான சிந்தரவதைகளை எதிர்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது

”முஸ்லிம்கள் மஸ்ஜித்துக்களில் நுழையும் போது கடுமையாக சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன் ,தொழுபவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றார்கள், தாடி வைப்பவர்கள் , ஹிஜாப் அணிபவர்கள் பயங்ரகரவாத சந்தேகநபர்களாக அடையப்படுத்தப்படுகின்றார்கள், சீன கம்யூனிஸ அதிகாரிகளினால் முஸ்லிம்களின் DNA மாதிகரிகள் , குரல் மாதிரிகள், கருவிழித்திரை மாதிரிகள், கைரேகைகள் , இரத்த வகை என்பன சேகரிக்கப்படுகின்றது,இது தவிர முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் அதீநவீன தொழில்நூற்ட்ப சாதனங்களால் கண்காணிக்கப்படுகின்றது இது பற்றி கருத்துரைத்துள்ள அமெரிக்காவில் வாழும் உய்குர் மனித உரிமை செயல்பாட்டாளர் ஒருவர் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் குறிப்பாக ஷின்ஜியாங் மாகாணம் பறவைகளை போன்று காட்சி தரும் அதிநவீன ட்ரொன்ஸ் இயந்திரங்களால் கண்காணிக்கப்படுவதாகவும் இந்த முறை ஹஜ்ஜுக்கு சென்ற பலர் GPS கருவைகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றார்.”

மூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்

qawqaqaqzaq.jpg

Written by lankamuslim

பிப்ரவரி 10, 2019 இல் 8:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக