Lankamuslim.org

இரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது

leave a comment »

qazasaqazபிரதான முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் செயற்படுவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பயணிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் தன்னிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

உம்ரா கடமையை முடித்துவிட்டு நானும், றிஷாத் பதியுதீனும் மக்காவில் வைத்து தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக கூட்டாகவும் தனியாகவும் சந்தித்து பேசினோம். இப்போதையே சூழ்நிலையில் மக்களின் அபிலைாஷைகளை மதித்து, ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் மைத்திரி – மஹிந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதில்லை என்ற தீர்மானத்தை ஒருமித்து எடுத்துள்ளோம்.

தற்போதைய ஒற்றுமையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதில் றிஷாத் பதியுதீன் ஆர்வமாக இருக்கிறார். இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதால் ஏற்படும் சாதக, பாதங்கள் பற்றி விரிவாக ஆராயவேண்டும். இந்த விடயத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சாமர்த்தியமான முறையில் வியூகம் வகுக்கப்படவேண்டும். கட்சியின் உள்நோக்கம் சம்பந்தமாக தவறான எடுகோள்கள் வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இரு கட்சிகளுக்கும் இடையில் இருக்கின்ற சந்தேகங்கள், எடுகோள்களின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்படுவதால் கட்சி சோரம்போய்விட்டதா என்ற சிலரின் அச்சம் நியாயமானது.

ஆனால், நாங்கள் முதலில் எங்களுக்குள் நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இருக்கவேண்டும். அத்துடன், இரு கட்சிகளும் ஒருமித்து செயற்படுவது தொடர்பாக மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நேற்று (11) நடைபெற்ற கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறியுள்ளார்.

கட்சியின் தலைவர்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் இரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது என்பதுதான் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்

Written by lankamuslim

நவம்பர் 12, 2018 இல் 10:06 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக