Lankamuslim.org

தவ­றான முன்­னு­தா­ர­ணங்­களை கொண்டு எதிர்­காலம் அமைந்­து­விடக் கூடாது: JVP

leave a comment »

jvp_srilankaமஹிந்­தவை எதிர்த்­த­தற்­காக ரணிலை ஆத­ரிப்­ப­தாக அர்த்­த­மில்லை. ரணிலை பிர­த­ம­ராக ஆத­ரிக்­க­ப்போ­வதும் இல்லை, தேர்­தலில் அவர்­க­ளையும் வீழ்த்த வேண்­டு­மென மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக தெரி­வித்தார்.

இதே­வேளை, எம்மை ஐக்­கிய தேசியக் கட்­சிக்­கா­ரர்கள் என கூறும் தரப்­பினர் தான் தேசிய அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து ஆட்சி செய்­தனர். ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது ஓடி ஒளிந்­த­வர்கள் எம்­மீது விரல் நீட்டத் தகு­தி­யில்­லை­யென அவர் குறி­பிட்டார்.

நிகழ்­கால அர­சியல் நெருக்­க­டிகள் மற்றும் ஜே.வி.பி. மீதான குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைத்து எம்மை பச்சை நிற­மாக்க சிலர் முயற்­சித்து வரு­கின்­றனர். ஆனால் நாம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அங்­கத்­த­வர்கள் அல்ல. ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட வேண்­டிய அவ­சி­யமும் எமக்கு இல்லை. எம்மை ஐக்­கிய தேசியக் கட்­சி­யெனக் கூறும் நபர்கள் கடந்த காலங்­களில் எங்­கி­ருந்­தனர் என கேட்க விரும்­பு­கின்றேன். மஹிந்­த­வுடன் இன்று கைகோர்த்து செயற்­படும் நபர்கள் சிறிது காலத்­துக்கு முன்னர் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இருந்­தனர். அப்­போது பிர­தமர் ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்­த­போது ரணிலை பாது­காத்த நபர்கள்தான் இன்று எம்மை ஐக்­கிய தேசியக் கட்­சிக்­கா­ரர்கள் என்று கூறு­கின்­றனர். மஹிந்த அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ராக உள்ள இரு­வரும் அன்று ரணி­லுடன் அவ­ரது ஆட்­சியில் கூட்­டணி அமைத்­த­வர்கள். இன்று அவர்கள் தமது தவ­று­களை மறைத்­துக்­கொள்ள எம்­மீது பழி­சு­மத்­து­கின்­றனர்.

நாம் எப்­போதும் பாரா­ளு­மன்ற விதி­மு­றைக்­க­மைய செயற்­பட்டு வரு­கின்றோம். பாரா­ளு­மன்ற விதி­மு­றைக்கு முர­ணாக சர்­வா­தி­கார போக்கில் ஜனா­தி­பதி செயற்­பட்டு மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மித்து சட்­ட­வி­ரோத அமைச்­ச­ர­வையை நிய­மித்­த­மைக்கும் பாரா­ளு­மன்ற அங்­கீ­காரம் இல்­லாது தேர்தல் ஒன்­றினை நடத்த முற்­பட்­ட­மைக்கு எதி­ரா­கவே நாம் மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதி­ரான நம்­பிக்­கை­யிலா பிரே­ரணை ஒன்­றினை கொண்­டு­வந்தோம். அதில் வெற்றி பெற்­று­விட்­டதால் நாம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்­கின்றோம் என அர்த்தம் இல்லை. ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்­தாலும் நாம் ஆத­ர­வாகவே வாக்­க­ளிப்போம். எமக்கு தேர்தல் நடத்­தக்­கூ­டாது என்ற நோக்கம் இல்லை. வெகு விரைவில் பொதுத் தேர்­த­லுக்கு செல்ல வேண்டும். ஆனால் அது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தேர்­த­லாக அமைய வேண்டும். அத­னையே நாம் வலி­யு­றுத்தி வரு­கின்றோம்.

தாம் நினைத்த நேரத்தில் அர­சி­ய­ல­மைப்­பினை மீறி தமது அர­சியல் நல­னுக்­காக ஆட்­சியை மாற்­றி­ய­மைக்க இட­ம­ளிக்க முடி­யாது. தவ­றான முன்­னு­தா­ர­ணங்­களை கொண்டு எதிர்­காலம் அமைந்­து­விடக் கூடாது. மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக இன்று பாரா­ளு­மன்­றத்தில் உள்­ள­வர்கள் பணத்­துக்­கா­கவும் அதி­கா­ரத்­துக்­கா­கவும் எவ்­வாறு மோதிக்­கொள்­கின்­றனர் என்­பது நாட்டு மக்­க­ளுக்கு நன­றா­கவே தெரி­கின்­றது. இவ்­வா­றான ஆட்சி மோகம் கொண்ட வெறி­யர்­களை போல மக்கள் விடு­தலை முன்­னணி ஒரு­போதும் பாரா­ளு­மன்­றத்தில் நடந்து கொண்­ட­தில்லை. எம்மைக் குறை­கூறும் நபர்கள் எவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவின் பணத்துக்கும் மஹிந்த ராஜபக் ஷவின் பணத்துக்கும் விலை போயுள்ளனர் என்பது இன்று ஊடகங்களின் மூலமாக வெளியில் வருகின்றன. ஜனாதிபதியே தமக்கு பெரும்பான்மையை தக்கவைக்க பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்றார். இந்த நிலையில் எவரும் எம்மை குறைகூறத் தகுதியில்லாதவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.VV

Written by lankamuslim

நவம்பர் 24, 2018 இல் 11:53 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக