Lankamuslim.org

டொனால்ட் டிரம்பின் ஆதரவுடன் தன் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறார் பின் சல்மான்

leave a comment »

qazaqaqசவூதி அரச குமாரன் முஹம்மத் பின் சல்மான் சவூதி நாட்டில் முதன் முறையாக அணு ஆலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். சக்தி மீள்சுழற்சி, தன்னியக்க ஆற்றல், பரம்பரை மருத்துவம் ஆகியன தொடர்பான நீண்டகால அணுத்துறை தொடர்பான திட்டங்களை பின் சல்மான் ஆரம்பித்து வைத்துள்ளார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் திற்கான மன்னர் அப்துல் அஸீஸ் நகரத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது விமான கைத்தொழில் ஆலையையும் பின் சல்மான் திறந்து வைத்துள்ளார். உல கத்தில் மிகப் பெரிய சூரிய சக்தி ஆலை யொன்றை சவூதி நிர்மாணிக்க வுள்ளது. ஈரான் அணுவாயுதத்தை வைத்தி ருக்குமாயின் அணுவாயுதங்களை உற் பத்தி செய்வதற்கு சவூதியும் தயாராக வுள்ளது என்று கடந்த மார்ச் மாதம் பின் சல்மான் தெரிவித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஊடகவியலாளர் ஜமாலின் படுகொலையுடன் நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டு குற்றம்சாட்டப்படும் அரச குமாரன் பின் சல்மான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் சவூதி மீதான அவரின் பிடியை உறுதிப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ,

சவூதியையும் ,ஈரானையும் மத்திய கிழக்கில் மோதலுக்கு உட்படுத்தினால் மத்திய கிழக்கை முழுமையாக அடிமைப்படுத்தி அதன் வளங்களை முழுமையாக சுரண்டுவதுடன் ,’ஜனநாயகபூர்வமான’ இஸ்லாமிய மக்கள் எழுச்சியையும் முடக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மத்திய கிழக்கு திட்டத்தின் முக்கிய முகவராக பின் சல்மான்பயன்படுத்தப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்

இதேவேளை அரச குமாரன் பின் சல்மான் தன்னை பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகள் மத்தியில் உறுதிப்படுத்தும் நோக்கில் ராஜதந்திர சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது

Written by lankamuslim

நவம்பர் 25, 2018 இல் 6:46 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக