Lankamuslim.org

அநுராதபுரம்- குருநாகல் சந்தியில் மிக நீண்ட காலமாக வசித்து வந்த 52தமிழ், முஸ்லிம் குடும்பங்கள்

M.ரிஸ்னி முஹம்மட்:  அநுராதபுரம், குருநாகல் சந்தியில் மிக நீண்ட காலமாக வசித்து வந்த 52  முஸ்லிம், தமிழ், குடும்பங்கள்  புனித பிரதேச சட்டவிரோத கட்டிடம் அகற்றல் என்ற திட்டத்தின் கீழ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

பல தசாப்த காலமாக குருநாகல் சந்தியில் வசித்து வரும் இந்தக் குடும்பங்களை நகர அபிவிருத்தி அதிகாரசைபையும் தேசிய பௌதீகவியல் திட்டமிடல் திணைக்களமும்  இணைந்து அங்கிருந்து வெளியேற்றியுள்ளன. வீடுகள், கட்டிடங்கள் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு நீராவியடி பகுதியில் பத்து பேர்ச்சஸ் வீதம் காணிக்ள வழங்கப்படவிருப்பதுடன் வீடுகள் உடைத்ததற்கான நட்டஈடாக உரிமையாளாக்ளுக்கு தலா ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவீதம் வழங்கப்படுகுpன்றது. தற்போது தாம் வசிக்கும் காணிகளின் பெறுமதி 40 லட்சத்துக்கும் அதிகமாகும். இவற்றைப் பெற்றுக்கொண்டு சிறுதொகைப் பணத்தையும் நகரிலிருந்து சுமார் எட்டு கிலோமீற்றர் தொலைவில் காணிகளும் வழங்கி தாங்கள் அதிகாரிகளால் ஏமாற்றப்படுவதாக தெரிவித்துள்ள குடியிருப்பாளர்கள் தமக்கு நியாயத்தைப் பெற்றுத்தர எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லையென்று தெரிவித்துள்ளனர்.

திடீரென பொருள் பண்டங்களை எடுத்துக் கொண்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டதால் இருப்பிடங்களை தேடிக் கொள்ள முடியாது பல குடும்பங்கள் இப்பகுதியிலுள்ள மர நிழல்களில் நாட்களைக் கழித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

மே 22, 2009 இல் 2:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது