Lankamuslim.org

Archive for மே 31st, 2009

தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் சேர்த்து வடக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் திட்டம் – இராணுவத் தளபதி சரத்பொன்சேகா

இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்க்கும் நோக்கில் முல்லைத்தீவில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டி லிருந்து மீட்கப்பட்ட வடமாகாணத்தின் பாது காப்பு மேலும் பலப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து இந்த மாகாணத்தின் பாதுகாப்பை அவர்கள் மூலமே உறுதிப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள வாரஇதழொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டி யொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணம் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அந்த மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து கிழக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது போன்றே இந்த நடவடிக்கையும் அமையுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தை இராணுவம் ஆரம்பித்த போது 1,20,000 படை வீரர்களே இருந்ததாகவும் அது யுத்த காலத்துக்குள்ளேயே 2,00,000 ஆக அதிகரிக்கப்பட்டதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, அரச தொலைக் காட்சி சேவை ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார்.

படை வீரர்களின் எண்ணிக்கையை மூன்று இலட்சமாக அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்க்கும் நோக்கில் முல்லைத்தீவில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி

வடக்கிலிருந்து இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் வகையில் முல்லைத்தீவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவிக்கின்றார்.

இந்த காணி ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைக்கபடப்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் முதற் கட்டமாக 1000 தமிழ் இளைஞர் யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட விருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்த்தின் பின்னரே இந்த ஆட்சேர்ப்பிற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள போதிலும் தேவை ஏற்பட்டால் அதற்கு முன்னதாகவே பின்னனி ஆராயப்பட்டு ஆட்சேர்ப்புகள் இடம் பெறலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதே வேளை பொலிஸ் தகவல்களின் படி கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் ஆகிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் பிரிவு புதிதாக ஏற்படுத்தப்பட்டு அதற்கான பிரதி பொலிஸ் மா அதிபரும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் விடுவிக்கப்டப்ட பிரதேசத்தில் முழங்காவில், சிலாவத்துறை, விடத்தல் தீவு, மடு மற்றும் இலுப்பக்கடவை ஆகிய இடங்களில் 5 பொலிஸ் நிலையங்கள் திறக்கபபட்டுள்ளன. இதனைத் தவிர புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மாங்குளம் மற்றும் ஒமந்தை ஆகிய இடங்களில் ஏற்கனவே பொலிஸ் நிலையங்கள் திறக்கபபட்டு விட்டன.

நாச்சிக் குடா, பூநகரி, வெல்லான்குளம் முருகண்டி ,மல்லாவி ,கணகராயன்குளம் ,புளியன்குளம் ,முல்லைத்தீவு, அலம்பில், குமணமலை, ஒட்டிசுட்டான், நெடுங்கேனி, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி , ஆணையிறவு, பரந்தன், இரனைமடு, சாலை மற்றும் கொக்காவில் உட்பட 21 பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படவிருப்பதாகவுமபொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத் தகவல்களின் படி ஆரம்பத்தில் தற்காலிககட்டிடங்களில் இவை இயங்கும் நிரந்தர கட்டிடம்அமைப்பதற்காக தலா 200 எக்கர் காணி தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள,இதனை அரசாங்கத்திடம் பெறவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

thenee.com

Written by lankamuslim

மே 31, 2009 at 6:49 பிப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ். மாநகர சபைக்கு சிங்கள முதல்வர்!: கனடிய ‘கீதவாணி’ வானொலியின் விஷமத்தனம்!!

கனடாவில் ஒலிபரப்பாகும் புலிகளின் பிரச்சார வானொலிகளில் ஒன்றான ‘கீதவாணி’, தனது மே 29, 2009 திகதிய காலைச்செய்தியில் மிகப்பெரிய பொய்யொன்றை அவிழ்த்துவிட்டுள்ளது. அதாவது, யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக (Mayor) அரசாங்கம் நியமிக்கப்போவதாகவும், அவர் கொழும்பில் இருந்து செயற்படுவார் என்றும், அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், முன்பு யாழ்.மாநகர சபை முதல்வராக இருந்து, (புலிகளால் கொலைசெய்யப்பட்ட) அல்பிரட் துரையப்பாவும் அவ்வாறு நியமிக்கட்டவர் என்றும், அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டது. யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை என்பனவற்றுக்கு தேர்தல் நடாத்துவதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டதைத் தொடர்ந்தே, கீதவாணி இந்தப் புளுகு மூட்டையை அவிழ்த்துக் கொட்டியுள்ளது.

இந்தச்செய்தியை செவிமடுக்கும் கனடாவில் வாழ்கின்ற (புலிகளின் அபிமானத்துக்குரிய) ‘இளையோர் சமூகம்’ என்ன முடிவுக்கு வந்திருப்பார்கள்? ‘யாழ்.மாநகர சபை முதல்வர் என்பவர் மக்களால் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படுபவர் அல்ல, இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்படுபவர் முன்னர் யாழ்.மாகரசபை முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பாவும் அவ்வாறு நியமிக்கப்பட்டவர் தான் அத்துடன் அல்பிரட் துரையப்பாவும் ஒரு சிங்களவர் என்றபடியால்தான் அவரை இலங்கை அரசாங்கம் அப்போது முதல்வராக நியமித்தது’ என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்!

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வாழ்கின்ற ஒரு இலட்சத்து, நான்காயிரம் வாக்காளர்களை முட்டாள்களாகவும், கனடாவில் வாழ்கின்ற சுமார் இரண்டரை லட்சம் தமிழர்களை படுமுட்டாள்களாகவும் நினைத்துக்கொண்டு, கீதவாணி செய்துள்ள இந்த விஷமத்தனத்துக்கு, அதன் தீவிர புலிச்சார்பு நிலையைத்தவிர வேறு எந்தக்காரணமும் இல்லை.

வன்னி யுத்தம் நடைபெற்ற இறுதிநாட்களில் கீதவாணி செய்துவந்த பொய்ப்பிரசாரங்களுக்கும், விஷமத்தனங்களுக்கும் அளவு கணக்கே இல்லை. இந்த வானொலியின் உரிமையாளரான நடா.ராஜ்குமார் என்பவர், தினசரி மதியவேளையில் நேயர்களுடன் நடாத்தும் நேரடி உரையாடலில், புலிகளுக்கு சாதகமான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, நேயர்கள் என்ற போர்வையில் புலி ஆதரவாளர்களின் அப்பட்டமான வன்செயல் கருத்துகளை ஒலிபரப்பி, கனடா வாழ் தமிழ் சமூகத்தை வன்முறை உணர்வுகளுக்கு தூண்டிவந்துள்ளார். ஒருமுறை இவர் கொடுத்த தலைப்பில் கருத்து தெரிவித்த புலி ஆதரவாளர் ஒருவர், ‘ராஜீவ் காந்தியைக் கொன்றது போல, தமிழக முதல்வர் கருணாநிதியையும் எப்பொழுதோ கொன்றிருக்க வேண்டும்’ என அப்பட்டமாகத் தெரிவித்து, கீதவாணியில் அது வெளிப்படையாக ஒலிபரப்பப்பட்டது. இது போன்ற வன்முறையை தூண்டிவிடும் கருத்துக்கள் டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, கருணா, பிள்ளையான், மகிந்த ராஜபக்ச போன்றோரைப் பற்றியும் தாராளமாக கூறப்பட்டு வந்துள்ளன.

கனடாவில் அண்மைக்காலங்களில் புலிகளால் நடாத்தப்பட்ட வீதி ஆர்ப்பாட்டங்களின் போது, பல வன்முறைச் சம்பவங்களும், சட்டமீறல் சம்பவங்களும் நடைபெற்றதற்கு, கீதவாணி வானொலியில் ராஜ்குமார் போன்றவர்களும், இன்னொரு கனடிய தமிழ் வானொலியான (இளையபாரதியின்) ‘கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்’ செய்தி வாசிக்கும் புலிகளின் மிகத்தீவிர விசுவாசியான (பருத்தித்துறையில் உள்ள இ.போ.ச பஸ் டிப்போவில் முன்பு பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய) தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் என்பவரும், செய்துவந்த புலிசார்பு வன்முறைப் பிரச்சாரங்களும் காரணமாகும். அத்துடன் புலிகளால் நடாத்தப்படும் சி.எம்.ஆர் (Canadian Multicultural Radio) வானொலியும், கனடாவில் வெளிவருகின்ற 15க்கும் அதிகமான புலி ஆதரவு இலவசப் பத்திரிகைகளும், புலிகளுக்கு ஆதரவான பொய்ச்செய்திகளை வெளியிட்டு கனடிய தமிழ்மக்களின் காதில் பூச்சுற்றி அவர்களை முட்டாள்களாக்கி வந்துள்ளன.

அண்மையில் கீதவாணி வானொலி உரிமையாளர் ராஜ்குமார், சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்ரபோல், மற்றும் இலங்கை, இந்திய அரசுகளால் தேடப்பட்டு வரும் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் (கே.பி) என்பவரையும், புலிகளின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளர் எனக் கூறிக்கொள்ளும் தயா மோகன் என்பவரையும் நேரடியாகப் பேட்டிகண்டு ஒலிபரப்பினார். எனவே இதிலிருந்து ஒரு உண்மை தெரியவருகிறது. கீதவாணி வானொலி உரிமையாளருக்கு கே.பியின் இருப்பிடம் ஓரளவுக்கு தெரிந்திருப்பதுடன், அந்த மிகப்பெரிய பயங்கரவாதியின் நேர்காணலை ஒலிபரப்பும் துணிச்சலும் அவருக்கு இருக்கின்றது. எனவே கனடிய அரசும், இலங்கை அரசும் கனடாவில் செயல்படுகின்ற புலிச்சார்பு வானொலிகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் விடயத்தில் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இல்லையென்றால் இந்த ஊடகங்கள் கனடிய தமிழ் சமூகத்தை ஒரு வன்முறை மனோபாவமுள்ள சமூகமாக மாற்றி, ஓரளவு உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமைதிப்பூங்காவாகத் திகழ்கின்ற கனடாவை நெருக்கடிக்குள் ஆழ்த்தக்கூடும்.

அத்துடன், கனடாவில் வாழ்கின்ற தமிழ்மக்கள் இந்த ஊடகங்கள் செய்கின்ற பொய்ப்பிரசாரங்களை இனிமேலும் நம்பி ஏமாறுகிற நிலையிலிருந்தும் விடுபடவேண்டும். புலித்தலைமை முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியவர்களும் கோழைகளைப்போல இலங்கை அரசாங்கத்திடம்  உயிர்ப்பிச்சை கேட்டு நிற்கின்றனர். இந்த நிலையில், கனடாவில் செயற்படுகின்ற தமிழ் ஊடக மாபியாக்களுக்குப் பின்னால் புலிகள் நிற்கிறார்கள் என அஞ்சி, கனடிய தமிழ் வர்த்தகர்கள் இந்த ஊடகங்களுக்கு விளம்பரம் வழங்குவதையும் கைவிட வேண்டும். கனடிய தமிழ் சமூகத்தை புலிகள் தொடக்கி வைத்த வன்முறைச் சிந்தனையிலிருந்து விடுவிப்பது, ஜனநாயக சிந்தனையுள்ள ஒவ்வொரு கனடிய தமிழனினதும் கடமையாகும்.

theneeweb.de

Written by lankamuslim

மே 31, 2009 at 6:36 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு தேர்தலில் ஜ.ம.சு.கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட தமிழ்கட்சிகள் மறுப்பு!

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறுவிடுத்த கோரிக்கையை அரசுக்கு அதரவு வழங்கும் ஈ.பி.டி.பி. உட்பட ஏனைய மூன்று தமிழ் கட்சிகள் நிராகரித்துள்ளன.

ஈ.பி.டி.பி., புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய நான்கு கட்சிகளையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், அரசாங்கத்தின் கோரிக்கையை அக்கட்சிகள் நிராகரித்துள்ளன.

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறு தம்மிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டணியிலேயே போட்டியிடப்போவதாகக் கூறினார்.

எனினும், வன்னியிலிருந்து பலர் இடம்பெயர்ந்திருப்பதால் தமது உறவினர்கள் எங்கு உள்ளனர் என்று தெரியாத நிலையில் பெரும்பாலான மக்கள் இருப்பதால் தேர்தல் நடத்துவதற்கு இது சிறந்த தருணம் இல்லையெனவும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தலில் தமது கட்சி தனித்துப்போட்டியிடவிருப்பதாக ஈ.பி.டி.பி. தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். இந்த இரண்டு தேர்தல்களையும் நடத்துவதற்கு அரசாங்கத்தால் இயலுமாயின் வடக்கியிலுள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்களை அரசாங்கத்தால் நடத்த இயலுமென நம்புவதாக அவர் தெரிவித்தார்.

“இந்தத் தேர்தல்களை நடத்துவதற்கு இது சரியான தருணமா என்பது பற்றி நாம் எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ஆராய்ந்து வருகிறோம்” என்றார் அமைச்சர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எனினும்இ புதிய கூட்டணியில் போட்டியிடத் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

neruppu.com

Written by lankamuslim

மே 31, 2009 at 6:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது