Lankamuslim.org

புலம்(ன்) பெயர் புலிகளுள் பெரும் மோதல். கே.பி துரோகியென துண்டுப்பிரசுரம்,தேசத்துரோகம்- வைகோ

பத்மநாதனின் அறிவிப்பு தேசத்துரோகம் ஆகும் வைகோ

மே 18 ஆம் நாள் அன்று, பிரபாபரகன் உயிருடன் இருக்கிறார் என்று, ”சேனல் 4” என்ற இலண்டன் தொலைக்காட்சியில் அறிவித்த விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத்தொடர்புப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், திடீரென்று அந்தர் பல்டி அடித்து, ‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று அறிவித்தது, கடைந்து எடுத்த அயோக்கியத்தனமான துரோகச் செயல்ஆகும்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஏகப் பிரதிநிதியாக அறிக்கை விடும் அதிகாரம் அவருக்குக்கிடையாது. மிக அண்மையில்தான், அவர் இந்தப் பொறுப்புக்கே நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களோடும், துரோகம் செய்து வெளியேறியவர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, விடுதலைப்புலிகள் அமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.
வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிடிக்குள் பத்மநாதன் சிக்கி இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன

பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19.05.2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார்.இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்களஅரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத் தன்மையற்றது.

புலம்(ன்) பெயர் புலிகளுள் பெரும் மோதல். கே.பி துரோகியென துண்டுப்பிரசுரம்.

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தியை புலிகளின் சர்வதேச தொடர்பாளர் எனக் கூறப்படும் கே.பி அறிவித்ததைத் தொடர்ந்து புலம் பெயர்ந்து வாழும் அவ்வியக்கத்தினரிடம் பாரிய மோதல்கள் வெடித்துள்ளது. இவ்வாரத்தை துக்கவாரமாக கடைகளை அடைத்து பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துமாறு புலிகளின் ஒரு தரப்பினர் வேண்டுகோள்விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் பிரபாகரன் இறந்து விட்டதாக ஊடகங்களுக்கு அறிவித்த பத்மநாதன் மாபெரும் துரோகி என துண்டுப்பிரசுரங்கள் பிராண்ஸ் நாடெங்கும் வினியோகிக்கப்பட்டும், ஒட்டப்பட்டும் உள்ளது. அதே நேரம் கே.பி பெரிய சக்தி ஒன்றுக்கு விலை போய் உள்ளதாக தெரிவித்துவரும் லண்டனில் உள்ள புலிகளின் ஒரு பிரிவினர் எவரும் கடைகளை பூட்டவோ அஞ்சலிகளைச் செலுத்தவோ வேண்டாம் என கடை உரிமையாளர்களிடம் நேரடியாக சென்று தெரிவித்து வருவாக கூறப்படுகின்றது.
இங்கே பிரபாகரனின் விசுவாசிகள் அவருக்காக அஞ்சலி செலுத்தவும் புலித்தொழிலாளிகள் தொடர்ந்தும் தமது வருவாயை மேம்படுத்த பிரபாகரன் கொலைசெய்யப்பட்டுள்ள செய்தியை மறைக்கவும் முண்டியடிப்பது அவதானிக்கப்படுகின்றது.

collection

Written by lankamuslim

மே 26, 2009 இல் 5:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது