Lankamuslim.org

Archive for மே 1st, 2010

யாழ்ப்பாண முஸ்லிம்களின் அழிவுகளின் அவலங்கள்

leave a comment »

1990 இல் புலிகளால் யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஏனைய வடமாகாண முஸ்லிம்களுடன் அவர்களின் அனைத்து அசையும் அசையாத சொத்துகளும் புலிகளால் கொள்ளையிடப்பட்ட பின்னர் இரண்டு மணித்தியால அவகாசத்தில் யாழ்ப்பாண நகரை விட்டும் ஆயுத பயங்கரவாதத்தின் மூலம் வெளியேற்றபட்டனர்  மீள்குடியேற்றங்கள் நடை பெருவதாக செய்திகள் தெரிவித்தாலும் யாழ்ப்பாண முஸ்லிம் பகுதிகளுக்கு சென்று பார்பவர்களுக்கு இங்கு இருந்த முஸ்லிம்கள் எவ்வளவு மோசமாக பாதிக்க பட்டுள்ளார்கள் என்பதும் தற்போது கடைப்பிடிக்கபடும்  மீள்குடியேற்ற  நடைமுறை இவர்களில் தேவையில் ஐந்து வீதத்தையும் கூட பூர்த்தியாக்காது  என்பதை கண்டுகொள்ளமுடியும் அவர்கள் அனைத்தையும் இழந்துள்ளார்கள்  யுத்தம் வடபகுதியில் நடைபெற்றுள்ளதா என்பதை  முஸ்லிம் பிரதேசங்கள்களில்தான்  கண்டுகொள்ளமுடியும்    அந்த அளவுக்கு மிகவும் மோசமாக ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உட் கட்டமையும் அழிக்கப்பட்டுள்ளது வடபகுதியில் முஸ்லிம் பிரதேசங்களையும் ஏனைய பிரதேசங்களையும் பார்பவர்களுக்கு புரிந்து கொள்ளமுடியும் விரிவாக பார்க்க…

Written by lankamuslim

மே 1, 2010 at 9:46 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசு இலக்கு வைக்கும் புலிகளின் சர்வதேச வலையமைப்பு

leave a comment »

https://i0.wp.com/www.zeroriflescope.co.uk/images/snipertarget.jpg
புலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப் பட்டாலும் பிரபாகரனின் கொள்கையை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு  செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . ஆரம்ப காலங்களிலும் சிறுசிறு குழுக்களாக அமைப்புகளாக ஆரம்பித்துத்தான் புலிகள் பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்தனர். அதுபோன்ற ஒருநிலையை மீண்டும் ஏற்படுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் .சர்வதேச மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் எமக்கு வெற்றியை தருகிறது. மலேஷிய நாட்டுடன் நாம் புலனாய்வுத்துறையுடனும், இராஜதந்திர உறவின் ஊடாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாகத்தான் அந்த நாட்டிலிருந்து சில பயங்கரவாதிகளை கைது செய்ய முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்  இதனை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் புலனாய்வுத்துறையை பலப்படுத்தி இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று .ஆணையிறவில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Written by lankamuslim

மே 1, 2010 at 9:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது