Lankamuslim.org

Archive for மே 4th, 2010

ஆளும் , எதிர் தரப்புகளை உள்ளடக்கிய புதிய தமிழ் , முஸ்லிம் அம்மைப்பு !

leave a comment »

சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் தமிழ்  , முஸ்லிம்களை உள்ளடக்கிய புதிய அமைப்பு ஒன்றை உருவாக்குவதில் எதிர் தமிழ் , முஸ்லிம் கட்சிகள் அக்கரை காட்டுவதாகவும்  புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்ததினால் சிறுபான்மை தமிழ் , முஸ்லிம் மக்களுக்கு ஏற்படும் பிரதி கூலங்களைக் கருத்தில் கொண்டு அந்த மக்களை  பிரதிநிதித்துவப்படுத்தும்  அரசாங்க , எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சார் அமைப்புகளின் முக்கியஸ்தர்களை  உள்ளடக்கிய பொதுவான அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன என்ற தகவல்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் முக்கியஸ்தர் நிசாம் காரியப் பர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அதே வேளை இன்று  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தெரிவித்ததாக இன்று தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவிதுள்ளார்   இந்த சந்திப்பின்போது, தற்கால அரசியல் நிலைவரம் மற்றும் அரசியலமைப்பு மாற்றத்தின்போது தமிழ், முஸ்லிம் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவிருப்பதாகவும் ஹஸன் அலி குறிப்பிட்துள்ளார்  என்பது குறிபிடதக்கது .

Written by lankamuslim

மே 4, 2010 at 5:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அவசரகால சட்டம் புதிய வடிவம் பெறுகின்றது

leave a comment »

வெளிவிவகார அமைச்சர்  ஜீ.எல். பீரிஸ் :

அவசரகால சட்டத்தின் அதிகளவிலான விதிகளை நீக்கும் இடத்துக்கு தற்போது நாங்கள் வந்துவிட்டோம். ஒரு வருடத்துக்கு முன்னர் காணப்பட்ட நிலைமையில் இதனை செய்திருக்க முடியாது. ஆனால் தற்போது இதனை எம்மால் செய்ய முடியும். அன்று காணப்பட்ட அச்சுறுத்தல் இன்று இல்லை. முக்கியமாக சரியான நேரத்தில் சரியானதைச் செய்யவேண்டும் என்று நம்புகின்றோம். அதனைத்தான் செய்கின்றோம்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 4, 2010 at 11:31 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மத்திய கிழக்கு பிரச்சனைகளுக்கு காரணம் மேற்குலகின் நீதிமறுப்பு: Robert Fisk

with one comment

மத்திய கிழக்கு  பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் நீதிமறுக்கப்படுவதாகும் என பிரபல பிரிட்டன் பத்திரிகையாளர் ராபட் பிஸ்க் – Robert Fisk தெரிவித்துள்ளார். செப்டம்பர் 11 அமெரிக்கா மீதுதான  தாக்குதல், பலஸ்தீன், இஸ்ரேல் ,ஈராக், ஆப்கானிஸ்தான் பிரச்சனைகளுக்கெல்லாம் நீதி மறுக்கப்படுவதும் ஒரு பிரதான  காரணமாகும். இத்தகைய நிகழ்வுகள் ஏன் நடக்கிறது? என்பது குறித்து மேற்கத்திய ஊடகங்கள் சுதந்திரமாக  சிந்தித்துப் பார்க்கவேண்டும் அவை பக்க சார்பான போக்கை கைவிடவேண்டும்   என  பிரபல பிரிட்டன் ஊடகவியலாளர் Robert Fisk தெரிவித்துள்ளார் .

செண்டர் ஒப்   இண்டர்நேசனல் அண்ட் ரீஜனல்   ஸ்டடீஸ்   the Center for International and Regional Studies (CIRS) என்ற  அமைப்பு பல்கலை கழகம் ஒன்றில்  the Georgetown University School of Foreign Service in Qata ‘  வைத்து ஏற்பாடுச் செய்த நிகழ்ச்சியில் “மறுக்கப்பட்டும்  நிலை: மத்திய கிழக்கில்   மேற்கு  ஊடகத்துறை  ‘ “State of Denial: Western journalism in the Middle East,” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியுள்ளார் அங்கு கருத்து தெரிவித்த Robert Fisk –வீடியோ இணைப்பு

Written by lankamuslim

மே 4, 2010 at 10:25 முப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஊடகம் இனிமேல் பூடகமில்லை பாகம் ஆறு

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதம் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி”.

இப்பகுதிக்கட்டுரையியின் முந்தியபகுதியில்  முன்னாள் ஸ்ரீ பாலகுமாரன் இளைய அப்துல்லாஹ் என்றபெயரில் முஸ்லிம் மதத்தவராக மாறி வட மாகான முஸ்லிம் மக்களுக்காக புலிகளின் மிலேச்சத்தனமான முஸ்லிம் விரோத செயற்பாடுகளையும் இனப்படுகொலைகளையும் காட்டமாக கண்டிக்காது மேலுக்கு வட மாகான முஸ்லிம் வெளியேற்றம் பற்றி நாசூக்காக கண்டித்தமை தவிர புலிகளின் வேறு எந்தப்படுகொலை தொடர்பாகவோ பொதுவான மக்கள் விரோத செயற்பாடுகள் தொடர்பாகவோ கண்டிக்கவில்லை. மேலும் வட மாகாணத்தில் சகல மக்களையும் போல் மண்சுமந்த மேனியராய் வாழ்ந்திருந்த முஸ்லிம் மக்களை புலிகள் பலவந்தமாக வெளியேற்றியதை -இன சுத்திகரிப்பு செய்ததை- இவர் தனது நூலொன்றில்  செத்த ஆட்டின்  உண்ணியாக     கழற்றப்பட்டோம்  என குறிப்பிட்டது தீபத்தில் பணிபுரிவது பற்றி தான் “முட்டாள்களின் கூடாரத்தில் இருக்கிறேன் ” என்று அவர் கூறியதைவிட  முட்டாள்தனமான உதாரணமாகும் செத்த ஆட்டில் (வடபுலத்தில்)  “இரத்தம் உறிஞ்சும் உண்ணிகளாக”  முஸ்லிம்களை காட்டி இவர் என்ன சொல்லவருகிறார் என்பதை உங்களின் பகுப்பாய்வுக்கு விட்டு விடுகிறேன். ஆனால் விரிவாக பார்க்க..

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 4, 2010 at 10:12 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு-இந்தியத் தூதுவர் சந்திப்பு

leave a comment »

https://i0.wp.com/www.lankaenews.com/English/files/news/2078Sambandan_J.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்றை நேற்று நண்பகல் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தவுடன் மேற்கொண்டுள்ளனார் அவருடன் தெரிவித்துள்ளதாக செய்திகள் குறிபிடுகின்றன.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து அந்தப் பிரதேச மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எம்முடன் அரசாங்கம் திறந்த மனதுடன் பேசினால்  கலந்தாலோசனை நடத்தினால்  நாம் எமது  முழு ஆதரவையும் வழங்குவோம்.

பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தவின் அழைப்பின் பேரில் அவரை நேற்று நண்பகல் சந்தித்தனர். அப்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு இந்தியத் தூதுவரிடம் உறுதியாகத் தெரிவித்தனர்.
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 4, 2010 at 9:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது