Lankamuslim.org

Archive for மே 9th, 2010

இன்றும் இரண்டாவது நாளாக வீடுகள் உடைப்பு

with one comment

இணைப்பு-2

தமிழ்மிரர் இணையத்தள செய்தி:

கொம்பனித்தெரு பிரதேசத்தில் இன்றும் இரண்டாவது நாளாக சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த வீடுகள் என்று நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் வீடுகள் அகற்றப்பட்டுக்கொண்டிருப்பதை தமிழ்மிரர் இணையதளம் நேரடியாக சென்று அவதானித்து. வீடுகளை அகற்றும் நடவடிக்கைக்கு பாதுகாப்பாக 50க்கும் மேற்பட்ட படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 21 வீடுகள் தற்போது தரை மட்டமாக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

1985ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச, பிரதமராக இருந்த காலப்பகுதியில் மேற்படி வீடுகள் தமக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும், இதற்கான வீட்டு உறுதிப் பத்திரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு குறிப்பிட்டனர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 9, 2010 at 8:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அக்குறணை நகரில் இஸ்லாமிய மாநாடு

leave a comment »

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி   நிறுவனத்தின் உப பிராந்திய மாநாடு -இஜ்திமா- அக்குறணை நகரின் நடைபெறுகின்றது இன்று 9.5.2010 மாலை  3.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை  நடைபெறும் மாநாடு ‘வணக்கத்துக்குரிய இறைவனை வணங்குவது எப்படி ‘ என்ற தலைப்பில் நடைபெறுகின்றது நேற்று  பெண்களுக்கான மேற்படி குறித்த தலைப்பில் பிராந்திய மாநாடு -இஜ்திமா -காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை நடைபெற்றமை குறிபிடத்தக்கது    தற்போது  பிராந்திய மாநாடு  அக்குறணை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல்  அஸ்னாவில் நடைபெறுகின்றது      இதில்  சுமார் 1500 வரையிலான  மக்கள்   கலந்து கொண்டுள்ளனர் என்று எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார் இங்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி   நிறுவனத்தின் அமீர் -தலைவர்- உஸ்தாத் ரசீத் ஹஜ்ஜூல்  அக்பர்,   உஸ்தாத் ரம்சி, உஸ்தால் மின்ஹாஜ்   ஆகியோரின் உரைகள் இடம்பெறுகின்றது

Written by lankamuslim

மே 9, 2010 at 8:15 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

போலியான தகவல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் மறுப்பு

leave a comment »

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு பிரிந்து அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளார்கள் என்றும் இதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றது என்று சிங்கள மொழி வாராந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலியிடம் தொடர்புகொண்ட போது அவர் குறித்த செய்தியை மறுத்து இவ்வாரான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் சில ஊடங்கள் திட்டமிட்டு இவ்வாறான போலியான தகவல்களை பரப்புவதாகவும் , முஸ்லிம் காங்கிரஸின் தலைமையுடன் உறுப்பினர்கள் மிகவும் நெருக்கமாக உள்ளதாகவும் தெரிவித்துள்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணையவுள்ளார்கள் என்ற செய்தியை மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் தகவல் -எமது பிராந்திய செய்தி தொடர்பாளர்

Written by lankamuslim

மே 9, 2010 at 3:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாமிய கண்காட்சி – மனித நாகரிகத்துக்கு முஸ்லிம்களின் விஞ்ஞானப் பங்களிப்பு

leave a comment »

பேருவலை ஜாமியா நளீமியா:
அல் குர் ஆனின் விஞ்ஞான அற்புதங்களும் ,மனித நாகரிகத்துக்கு முஸ்லிம்களின் விஞ்ஞான பங்களிப்பும் என்ற தலைப்பில்  பேருவலை ஜாமியா நளீமியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தின் வருகின்ற ஜூன் மாதம் 12, தொடக்கம் 15 ஆம் திகதி வரையுள்ள  நாட்களில் நடைபெறவுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 9, 2010 at 2:49 பிப

வடமாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் ஜனாதிபதியின் மேற்பார்வையில் ?

leave a comment »

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரான  ரிஷாட் பதியுதீன் வடமாகணத்தில் இருந்து புலிகளின் பயங்கரவாதத்தால் வெளியேற்றப்பட்ட  வடமாகண முஸ்லிம்களின் தேவைகள் ஜனாதிபதியின் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் . புதிதாக பாராளுமன்றம் தெரிவான எம் . எப் ஹுனைஸ் ஜனாதிபதின் அறிவுறுத்தல் பிரகாரம் மீள் குடியேற்ற அமைச்சர்களின் பாராளுமன்ற தொடர்பாளராக செயல்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கடந்த அமைச்சரவையில் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன் புதிய அமைச்சரவையில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக நியமிக்கபட்டும் மீள் குடியேற்ற அமைச்சராக  புத்தள மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் மில்றோய் பெனாண்டோ நியமிக்க பட்டமை குறிபிட தக்கது
நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி பாராளுமன்ற உறுபினராக தெரிவுசெய்யப்பட்ட  எம் . எப் ஹுனைஸ்  ஆகியோருக்கு புத்தளம் புளிச்சாகுளம் பகுதியில் அளிக்கபட்ட  வரவேற்பு வைபவத்தில்  இதனை தெரிவித்துள்ளார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 9, 2010 at 12:16 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது