Lankamuslim.org

Archive for மே 23rd, 2010

Dr. ஸாகிர் நாயக் இன்று கொழும்பில்

leave a comment »

இஸ்லாமிய அழைப்பு பணியை சர்வதேசரீதியாக  ஜனரஞ்சகமாக மேற்கொண்டு வரும் அனைவராலும் அறியப்பட்ட டாக்டர் ஸாகிர் நாயக் இலங்கை இன்று வருகின்றார் – இன்ஷா அல்லாஹ்-  இன்று 23-05-2010 ஞாயிறு- கொழும்பு சுகததாச வெளியரங்கில் இன்று மாலை 6.00 தொடக்கம் இரவு 9.00 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  நிகழ்ச்சியில் “Peace through religion” மதத்தின் ஊடாக  சமாதானம் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தவுள்ளார்  இதற்கான ஏற்பாடுகளை  ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனம் மேற்கொள்கின்றது அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Written by lankamuslim

மே 23, 2010 at 3:22 பிப

யாழ்ப்பாணம் பெரிய பள்ளி Grand Mosque 20 வருடங்களின் பின்னர் திறக்கபடுகின்றது

with 2 comments

யாழ்ப்பாணம் பெரிய பள்ளி- The Jaffna Grand Mosque இந்த  மாதம் 28 ஆம் திகதி மீண்டும் திறக்கபடும் என்று அந்த மஸ்ஜிதின் நிர்வாகம் அறிவித்துள்ளது இந்த மஸ்ஜிதின் படங்கள் தகவல்கள் என்பன எமது இணையத்  தளத்தில் பதிவுகள் செய்யப்பட்டு அது பற்றிய தகவல்களும் தொடர்ந்தும் வழங்கபட்டது தற்போது புனர் நிர்மான வேலைகள் நடைபெறுகின்றது இந்த மஸ்ஜித் முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ளது இது யாழ்ப்பாணத்தின் முதல் ஜும்மாஹ் மஸ்ஜித் என்பது குறிபிடதக்கது , இது 1713 ஆண்டு  கட்டப்பட்டுள்ளது அதன் பின்னர் நான்கு தடவைகள் விஸ்தரிக்க பட்டுள்ளது , 20 வருடங்களின் பின்னர் இந்த மாதம் 28ஆம் திகதி வெள்ளி  கிழமை  சும்மாஹ் தொழுகையுடன் மஸ்ஜித் இயங்க மீண்டும் ஆரம்பிக்கும் இன்ஷா அல்லாஹ- சிறப்பு குத்பா பேருரை அஷ்ஷெய்க் M .Jஅப்துல் ஹாலிக் அவர்களால் நடத்தப்படும் 1996 இல் யாழ் குடாநாடு  புலிகளின்  பிடியில் இருந்து விடுவிக்கபட்ட  பின்னரும்  யாழ்ப்பாணம் பெரிய பள்ளி- The Jaffna Grand Mosque – முஸ்லிம்கள் அங்கு இல்லாமையால் கைவிடப்பட்ட சிதைந்த நிலையில் இருந்தமை குறிபிடதக்கது  யாழ் குடாநாட்டில் 20 கும் அதிகமான மஸ்ஜிதுகள் இருக்கின்றன தற்போது படிப்படியாக    மஸ்ஜிதுகள்  பழையை நிலைக்கு ஓரளவு திரும்பி வருகின்றது என்பது மிகவும் மகிழ்ச்சியான தகவல்

Written by lankamuslim

மே 23, 2010 at 11:16 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது