Lankamuslim.org

Archive for மே 24th, 2010

இலங்கை இஸ்லாமிய அழைப்பு பணியின் ஒரு புதிய அத்தியாம்

with 2 comments

இஸ்லாமிய அழைப்பு பணியை சர்வதேசரீதியாக  ஜனரஞ்சகமாக மேற்கொண்டு வரும் அனைவராலும் அறியப்பட்ட டாக்டர் ஸாகிர் நாயக் இலங்கையில்   நேற்று  23-05-2010 ஞாயிறு- கொழும்பு சுகததாச வெளியரங்கில் நேற்று  மாலை 6.00 தொடக்கம் இரவு 9.00 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்ட   நிகழ்ச்சியில் “Peace through religion” மதத்தின் ஊடாக  சமாதானம் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்   இந்த நிகழ்சிக்கு இலங்கை பூராவும் இருந்து 45,000 கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் இந்த நிகழ்வில் இருவர் இஸ்லாத்தை தமது வாழ்க்கை முறையாக ஏற்று கொண்டுள்ளனர்  என்பதுடன் அதிகமான முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் கலந்து கொண்டு தமது வினாவுக்கு  விளக்கங்களை பெற்றுகொண்டனர்

இங்கு கருத்து தெரிவித்த ஒரு கிருஸ்தவ சகோதரர் “இவ்வளவு காலமும்  கிருஸ்தவ ஆலையங்கள்  கற்றுத்தராத பைபிளை சில நிமிடங்களில் நீங்கள் எனக்கு கற்று தந்தீர்கள்” என்று குறிபிட்டார்  என்பதுடன் விளக்கங்களின் பின்னர்   இஸ்லாத்தை ஏற்றுகொண்டார்  இன்னும்  பலர் தமது சந்தேகங்களுக்கு தெளிவை பெற்றுகொண்டனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2010 at 8:15 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அனர்த்த நிவாரண களத்தில் இஸ்லாமிய நிறுவனங்கள்

leave a comment »


இலங்கையில் பல பிரதேசங்களில் தற்போது அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தனது சமூக சேவை  பிரிவை நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது   இலங்கை ஜமாஅதே இஸ்லாமி இருபது வருடங்களுக்கும்  அதிகமான  வருடங்கள் சமூக சேவை பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனமாகும்  தற்போது இது  கொழும்பு மற்றும்  பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் இந்த நிவாரண நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றது , அதேவேளை  அல் முஸ்லிமாத் என்ற முஸ்லிம் பெண்களுக்கான அமைப்பும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது என்பது குறிபிடதக்கது  முஸ்லிம் நிறுவனங்களில் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில்  நாட்டில் உள்ள அணைத்து மஸ்ஜிதுகளின் ஊடாகவும் நிவாரண பணிகளுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மஸ்ஜிதுகளில் இதற்கான அறிவித்தல்களை காணக் கூடியதாகவுள்ளது என்று எமது செய்தியாளர்கள் தெரிவிக் கின்றனர்

Written by lankamuslim

மே 24, 2010 at 6:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்

leave a comment »


பான் கீ மூனிடம் அரசாங்கம் கோரிக்கை

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளர் பான் கீ முனை இன்று சந்தித்தார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2010 at 4:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ மஸ்ஜித் விவகாரம்

leave a comment »

இணைப்பு-2

குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெல்சிறிபுர கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் துரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான கோகறல்லயில் உள்ள அமாம்பொல பகுதியில் மஸ்ஜித் ஒன்றில் கடந்த வியாழன் 20.5.2010- இரவு மஹ்ரிப் தொழுகையின் பின்னர் 7.00 மணியளவில் நுழைந்த சிங்கள இன குழுவொன்று அங்கிருந்த மின்சார விளக்குகள் ஏனைய உபகரணங்கள் என்பன வற்றை அடித்து உடைதுள்ளதுடன் மஸ்ஜிதின் கட்டிட தொகுதிக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர் என்று அங்கிருந்து நாம் பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன அதை தொடர்ந்து அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அங்கு கூடிய முஸ்லிம்கள் ஜும்மாஹ் தொழுகையை சேதமாக்க பட்ட மஸ்ஜிதுக்கு வெளியில் வீதியில் நடாத்த ஆயதங்களை செய்த போது போலீஸ்  விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2010 at 10:06 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது