Lankamuslim.org

Archive for மே 29th, 2010

வீடுகள் தகர்ப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை!

leave a comment »

கொம்பனித்தெரு பகுதியிலுள்ள வீடுகளை சட்டவிரோதமாக கட்டப்பட்டவை என்று கூறி   இடித்து தகர்த்து   அகற்றியமை தொடர்பான  பாராளுமன்றத்தில்  ஒத்திவைப்பு வேளை பிரேரணை  ஒன்று  கொண்டுவரப் படவுள்ளதாக  தெரிய வருகின்றது சட்டவிரோதமாக கட்டிடங்கள்  என்று  தகர்க்கப்பட்டமையால் முஸ்லிம்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்    எதிர் வரும் பாராளுமன்ற அமர்வின் போது  இந்த ஒத்திவைப்பு  பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வீடுகள் தகர்க்கப்பட்டமையை பாராளுமன்றத்தில் பாராளுமன்ற  உறுபினர்களின் கவனத்துக்கு கொண்டுவந்து அங்கு  பாதிக்கப் பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு உரிய நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க முழு முயற்சிகளையும் மேற்கொள்ள  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

மே 29, 2010 at 2:43 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை கடலுக்கு சென்ற மூன்று ஆழ்கடல் மீனவர்களை காணவில்லை !

leave a comment »

கல்முனை பிரதேசத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மூன்றுஆழ்கடல் மீன்பிடி மீனவர்களை காணவில்லை  கடந்த 18ம் திகதி பகல் 2மணியளவில்  ஆழ்கடல் இயந்திரப்படகு மூலம் மீன்பிடிக்கச் சென்ற இந்த மூன்று மீனவர்களும்   நேற்று இரவுவரை  கரைக்குத் திரும்பவில்லையென கல்முனையில் .இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன  இயந்திரப்படகு மூலம் கடலுக்கு சென்ற  கல்முனைக்குடியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் மற்றும்  ஹஜ்  முஹம்மட் அஸ்வர்  வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.மாஹிர் ஆகியோர்  காணாமல் போயுள்ளவர்களாவர். இது சம்பந்தமாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக ஆழ்கடல் இயந்திரப்படகு உரிமையாளர் எம்.றபீக் தெரிவித்துள்ளாக அறிய முடிகின்றது

Written by lankamuslim

மே 29, 2010 at 1:58 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேர்தல் முறை மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

leave a comment »

தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துகள் ஆளும்தரப்பிலும் எதிர் தரப்பிலும் தோன்றியுள்ளதால், இவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் முறை தொடர்பான மாற்றங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது முன்னர் இந்த வருடம் நவம்பர் மாதம் முடிவதற்கு முன்னர் தேர்தல் முறை மறுசீரமைப்பு ஒன்றை கொண்டுவர அரசு முடிவு செய்திருந்தது எனிலும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படாததன் காரணமாகவே அரசு இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்க படுகின்றது.

தேர்தல்முறை மாற்றம் தொடர்பான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு அரசியல் கட்சிகளுக்கும், சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனிலும் ஒருசாரார் தேர்தல் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையை மீண்டும் அமுல்படுத்துமாறும் மற்றும் ஒருபிரிவினர் விகிதாசார பிரதிநிதித்துவ முறையையும் , தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையையும் உள்ளடக்கிய ஒரு கலப்புத் தேர்தல் முறையை கொண்டுவருமாறும் கூறுவதாக தெரிவிக்கபடுகின்றது

தற்போது உள்ள தேர்தல் முறையை மாற்றும் போது தமது பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையிலான முறை ஒன்றை அமுலுக்கு கொண்டுவருமாறு முஸ்லிம் , தமிழ் கட்சிகள் வலியுறுத்து வருகின்றமை குறிபிடதக்கது மேலும் அரசுக்கு ஆதரவு வழங்கிவரும் முஸ்லிம் , தமிழ் கட்சிகள் தமது பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையிலான முறை ஒன்றுக்கே தமது ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது

Written by lankamuslim

மே 29, 2010 at 12:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இப்பாகமுவ மஸ்ஜித் நிர்மாண பணிகளை மீள ஆரம்பிக்கப் பணிப்பு

leave a comment »

இணைப்பு-3

குருநாகல் மாவட்டத்தில்  இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெல்சிறிபுர கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் துரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான கோகறல்லயில் உள்ள ஹெலை பகுதியில் அமைத்துள்ள  நூர் ஜும்மாஹ் மஸ்ஜிதின் உள்பகுதியினுள் 20.5.2010 அன்று நுழைந்த பெரும்பான்மை இன   குழுவொன்று அங்கிருந்த மின்சார விளக்குகள் ஏனைய உபகரணங்கள் என்பன வற்றை அடித்து உடைதுள்ளதுடன் மஸ்ஜிதின் கட்டிட தொகுதிக்கும் சேதம் ஏற்படுத்தினர்  இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆந்த மஸ்ஜிதின் நிர்மான பணிகளை மீட்டும் தொடங்குமாறு மஸ்ஜித் நிர்வாகத்தை கேட்டுள்ளது இந்த மஸ்ஜித் தாக்கப்பட்டது தொடர்பாக இப்பாகமுவ பிரதேச செயலாளர் மேற்கொண்டு வரும் விசாரணை அறிக்கை வெசாக் விடுமுறைகளுக்குப் பின்பே தமக்கு கிடைக்கும் என்றும் எனிலும் அதற்கு முன்பே மஸ்ஜித் நிர்மான பணிகளை ஆரம்பிக்குமாறு நிர்வாகத்தினரை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுகொண்டுள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 29, 2010 at 11:47 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது