Lankamuslim.org

Archive for ஜனவரி 16th, 2011

இலங்கையில் அதிக காலம் ஓய்வூதியம் பெற்றவராக ஒரு மௌலவி பதிவாகியுள்ளார்

leave a comment »

இலங்கையில் அதிக காலமாக ஓய்வூதியம் பெற்று வந்தவராக 106 வயதில் சில தினங்களுக்கு முன்னர் வபாத்தான  ஹெம்மாதகம, திம்புல்லவாவ பிரதேசத்தை சேர்ந்த ஏ.ஆர். எம் சரீப் என்ற மௌலவி ஆசிரியர் கருதப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது இவர் தனது 106 வயதில் வபாத்தாகியுள்ளார்.

இவர் கடந்த 55 வருடங்களாக ஓய்வூதியம் பெற்று வந்ததாக தெரிவிக்கபடுகின்றது இவருக்கு முன்னர் அதிக காலம் ஓய்வூதியம் பெற்றவராக அமைச்சர் சரத் அமுனுகமவின் தாயார் கருதப்படுகின்றார் இவர் 104 வயதில் கடந்த வருடம் மரணமாகியுள்ளார்

Written by lankamuslim

ஜனவரி 16, 2011 at 11:02 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய விமானபடை தளபதி இலங்கையில்

leave a comment »

இந்திய விமானபடை தளபதி எயார் சீப் மார்ஷல் பிரதீப் வசந் நாயிக் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவரை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து இலங்கை விமான படை தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க வரவேற்றார். பாகிஸ்தான் இராணுவ தளபதியும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இருக்கின்றார் என்பது குறிபிடத்தக்கது

Written by lankamuslim

ஜனவரி 16, 2011 at 10:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கிழக்கின் நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார்

leave a comment »

நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கின் பலபகுதிகளுக்கு விஜயம் செய்யது நிலமையை நேரில் பார்வையிட்டுள்ளார் கல்முனை ,சாய்ந்தமருது மருதமுனைப், நிந்தவூர், ஆகிய பிரதேசங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேங்களுக்கு விஜயம் செய்து வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டதுடன் இடம்பெயாந்த மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .

இதன் போது பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், கல்முனை பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம், மற்றும் மாநகர முதல்வர் மசூர் மௌலானா கிழக்க மாகாண சபை உறுப்பினர்களான முபீன், முஜீட் ஆகியோரும் சென்றிருந்தனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 16, 2011 at 2:14 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் ஆணைக்குழு முன் சாட்சியம்

with 4 comments

ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.பஷீர் கற்றறிந்த பாடங்கள் மீளிணக்க ஆணைக்குழுவின் முன் அளித்த சாட்சியம்

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை சென்ற மாதம் 7ம திகதி வெள்ளிக்கிழமை 2011ல் புத்தளம் கச்சேரியில் நடைபெற்றபோது அங்கு இலண்டனிலுள்ள முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.பஷீர் சட்டத்தரணி (இலங்கை) சொலிசிட்டர் (இங்கிலாந்து) சாட்சியமளித்தார். அவரின் சாட்சியத்தில் ஒரு எடுபகுதி (excerpt) இங்கு பதிவிலிடப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 16, 2011 at 7:26 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

சபரிமலை அருகே இலங்கையர் உட்பட 107 பக்தர்கள் பலி

leave a comment »

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சபரிமலை அருகே நேற்று அதிகாலை நடந்த விபத்தில் 107 பக்தர்கள் உயிரிழந்தனர். 90 க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனரென அறிவிக்கப்பட் டுள்ளது. சபரிமலையில் மகர ஜோதியை தரிசித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவரும் அடங்கு வார்.இவர் தெனியாயவைச் சேர்ந்த உஷான் காந்த் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் பலர் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 16, 2011 at 7:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது