Lankamuslim.org

Archive for ஜனவரி 25th, 2011

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலத்தில் 58,000 குடியிருப்புகளை நிர்மாணிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது

leave a comment »

Ourummah: காஸா மார்க்க விவகாரங்களுக்கான அமைச்சு இஸ்ரேல் ஆக்கிரமித்த ஜெருசலத்தில் 2020 ஆண்டுக்கு முன்னர் 58,000 யூத குடியிருப்புகளை நிர்மாணிக்க போடப்பட்டுள்ள திட்டம் தொடர்பில் தனது கவலையை வெளிபடுத்தியுள்ளது ஆக்கிரமிப்பு இஸ்ரேல், ஜெருசலத்தை யூதர்களுக்கான தலைநகராக அறிவித்து வருவதுடன் ஜெருசல 2020-Jerusalem 2020- என்ற திட்டத்திற்கு யூதர்களை கவரும் வகையில் பெரும் தொகை நிதியையும் ஒதுக்கி வருகின்றது

இந்த கட்டுமான திட்டம் ஜெருசலத்தில் இருக்கும் அரபு முஸ்லிம் மக்களை வெளியேற்றி அந்த நகரத்தை யூதர்களுக்கான புனித நகரமாக மாறிக் கொள்வதை இலக்காக கொண்டுள்ளது என்று – 24.01.2011-தெரிவித்துள்ளது விரிவாக

Written by lankamuslim

ஜனவரி 25, 2011 at 12:02 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அநுராதபுரம் சிறைச்சாலையில் மோதல் துப்பாக்கி சூடு

leave a comment »

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதல்களில் கைதிகள் 3 பேர் உயிரிழ ந்துள்ளதுடன் ,21 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 13 கைதிகளும், 8 சிறை அதிகாரிகளும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கபடுகின்றது தமது வசதிகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது அதிகாரிகள் தாக்கியதாகவும், கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

50 க்கும் மேற்பட்ட சிறைச்சாலைக் கைதிகள் கூரை மீது ஏறி மறியல் செய்ததுடன் அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது கற்க ளால் தாக்குதல் நடத்தியதாகவும் பின்பு இந்த நிலைமை மோசமடைய கலகக்காரர்களாக மாறிய கைதிகள் சிறைச் சாலைக்குள் தீ வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர் என்றும் இதன்போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுகின்றது

Written by lankamuslim

ஜனவரி 25, 2011 at 8:49 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய மீனவர்களை கொல்வது யார் ? இலங்கை தொடர்ந்து மறுத்து வருகின்றது

leave a comment »

கடந்த ஜனவரி 12ஆம் திகதி மற்றும் 23ஆம் திகதிகளில் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மீன்பிடித்துறை அமைச்சு இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை மனிதநேயத்துடன் நடத்துவது என்ற கொள்கையில் இலங்கை அரசாங்கம் உறுதியாக உள்ளதென அறிவித்துள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மனிதநேயத்துடனேயே நடத்துவதாகவும், அத்துமீறி அவர்கள் எவ்வாறான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதில்லை யென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 25, 2011 at 6:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கஷ்மீரில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற முயற்சி கஷ்மீரில் மீண்டும் பதட்டம்

leave a comment »

இந்திய குடியரசு தினத்தன்று, கஷ்மீரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாக பாரதிய ஜனதா கட்சி என்ற இனவாத கட்சி அறிவித்துள்ளதை அடுத்து, காஷ்மீரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது . ஏராளமான இந்திய பொலிஸார் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பா.ஜ., மாநில துணைத் தலைவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு, பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய குடியரசு தினத்தன்று காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றப் போவதாக பா.ஜ. அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காஷ்மீர் மாநில பா.ஜ. இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 25, 2011 at 6:24 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது