Lankamuslim.org

Archive for ஜனவரி 2011

இந்திய விமானபடை தளபதி இலங்கையில்

leave a comment »

இந்திய விமானபடை தளபதி எயார் சீப் மார்ஷல் பிரதீப் வசந் நாயிக் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவரை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து இலங்கை விமான படை தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க வரவேற்றார். பாகிஸ்தான் இராணுவ தளபதியும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இருக்கின்றார் என்பது குறிபிடத்தக்கது

Written by lankamuslim

ஜனவரி 16, 2011 at 10:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கிழக்கின் நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார்

leave a comment »

நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கின் பலபகுதிகளுக்கு விஜயம் செய்யது நிலமையை நேரில் பார்வையிட்டுள்ளார் கல்முனை ,சாய்ந்தமருது மருதமுனைப், நிந்தவூர், ஆகிய பிரதேசங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேங்களுக்கு விஜயம் செய்து வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டதுடன் இடம்பெயாந்த மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .

இதன் போது பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், கல்முனை பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம், மற்றும் மாநகர முதல்வர் மசூர் மௌலானா கிழக்க மாகாண சபை உறுப்பினர்களான முபீன், முஜீட் ஆகியோரும் சென்றிருந்தனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 16, 2011 at 2:14 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் ஆணைக்குழு முன் சாட்சியம்

with 4 comments

ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.பஷீர் கற்றறிந்த பாடங்கள் மீளிணக்க ஆணைக்குழுவின் முன் அளித்த சாட்சியம்

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை சென்ற மாதம் 7ம திகதி வெள்ளிக்கிழமை 2011ல் புத்தளம் கச்சேரியில் நடைபெற்றபோது அங்கு இலண்டனிலுள்ள முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.பஷீர் சட்டத்தரணி (இலங்கை) சொலிசிட்டர் (இங்கிலாந்து) சாட்சியமளித்தார். அவரின் சாட்சியத்தில் ஒரு எடுபகுதி (excerpt) இங்கு பதிவிலிடப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 16, 2011 at 7:26 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

சபரிமலை அருகே இலங்கையர் உட்பட 107 பக்தர்கள் பலி

leave a comment »

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சபரிமலை அருகே நேற்று அதிகாலை நடந்த விபத்தில் 107 பக்தர்கள் உயிரிழந்தனர். 90 க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனரென அறிவிக்கப்பட் டுள்ளது. சபரிமலையில் மகர ஜோதியை தரிசித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவரும் அடங்கு வார்.இவர் தெனியாயவைச் சேர்ந்த உஷான் காந்த் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் பலர் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 16, 2011 at 7:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர் பசில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு

leave a comment »

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் உடனடியாக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார் என்று அறிய முடிகின்றது.வெள்ள நிலவரம் குறித்த உயர்மட்ட மாநாடு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கிழக்கு முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன், பிரதியமைச்சர்களான வி.முரளீதரன், பஷீர் சேகு தாவூத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மாகாண அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், வீதிகள், விவசாய நிலங்கள் என்பன குறித்து உடனடியாக ஆய்வறிக்கை சமர்பிக்குமாறும், அதற்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ் உறுதியளித்துள்ளார்

Written by lankamuslim

ஜனவரி 15, 2011 at 7:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் மன்னார், மன்னார் யாழ்ப்பணம் புதிய பாதை !

leave a comment »

எதிர்வரும் 16ம் திகதி 288 மீற்றர் நீளமான சங்குப்பட்டிப் பாலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது துபாய் வழங்கிய 800 மில்லியன் ரூபா கடனுதவி மூலம், கடந்த 8 மாத காலமாக நிர்மாணிக்கப்பட்டுவந்த பாலம் தற்போது பூர்த்தியான நிலையை அடைந்திருப்பதாக தெரிவிக்கபடுகின்றது

இதனால் யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்குமான போக்குவரத்துத் தூரம் 120 கிலோமீற்றரால் குறையும் என்றும் ஏ 32 வீதி ஊடான போக்குவரத்து எதிர்வரும் 16ம் திகதியுடன் தொடங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகின்றது இதன்மூலம், கொழும்பிலிருந்து புத்தளம் மன்னார் ஊடாகக் யாழ்ப்பாணத்தை அடைய போக்குவரத்துத் தூரம் 120 கிலோமீற்றரால் குறைவடைவதுடன் , பயண நேரமும் 3 மணித்தியாலத்தால் குறையும் என்றும் எதிர்பார்கப்படுகின்றது எனினும் புத்தளம் மன்னார் பாதை கடந்த வருடம் திறக்கப்பட்டாலும் நிர்மா வேலைகள் தொடர்ந்து விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 15, 2011 at 4:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் பிரதேசங்களில் மஸ்ஜிதுகள் ஊடாக நிவாரணம் சேகரிக்கும் பணி தொடர்கின்றது

with one comment

கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவென நாடு பூராவுமுள்ள மஸ்ஜிதுகளின் ஊடாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மக்களிடம் பொருட்கள் , பணம் ஆகியவற்றை பிரதேச கிராம மஸ்ஜிதுகளிடம் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது நேற்று வெளிக்கிழமை நாடுபூராவுமுள்ள 2500 ஜும்மாஹ் மஸ்ஜிதுகளின் -கிழக்கின் பாதிக்கப்டாத பகுதிகளில் மஸ்ஜிதுகள் ஊடாகவும்- ஏனைய  மஸ்ஜிதுகளின் ஊடாகவும்

இன்னும் பல பகுதிகளில் வாகனங்களில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலமாகவும் நிவாரண உதவிகளுக்கான வேண்டுகோள் விடுக்கபட்டுள்ளதாவும் நாட்டின் பல பாகங்களிலும் நிவாரண உதவிகள் சேகரிக்கப்பட்டு கடந்த இருதினங்களாக கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தற்போதும் அந்த பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் எமது lankamuslim.org செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் விரிவாக படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 15, 2011 at 11:09 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு பிரதேசத்துக்கு 345 மெ. தொ. உணவு நேற்று அனுப்பி வைப்பு

with 2 comments

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்கவென இந்திய அரசாங்கத்தின் முதல் தொகுதி நிவாரணப் பொருள்கள் நேற்று (14) விமானம் மூலம் கொண்டுவரப் பட்டன. 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான 25 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்கள் விசேட விமானத்தின் மூலம் நேற்றுப் பகல் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது.

இவற்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்திய அரசின் சார்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா நிவாரணப் பொருள்களை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 15, 2011 at 10:48 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மண் சரிவு அச்சுறுத்தல் 700 குடும்பங்கள் அவசர வெளியேற்றம்

leave a comment »

மலையகத்தில் மண் சரிவு அச்சுறுத்தல் மிக்க இருப்பிடங்களிலிருந்து சுமார் 700 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் இருநூறு குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினதும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினதும் மாவட்ட மட்ட இணைப்பாளர்கள் நேற்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் மேஜர் எச். ஆர். கே. பி. ஹேரத் குறிப்பிடுகையில், மழை காலத்தைத் தொடர்ந்து திடீரென வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக கண்டி மாவட்டத்தில் 1215 முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கப் பெற்றன  விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 15, 2011 at 10:41 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மூதூருக்கான தரைவழிப் போக்குவரத்துகள் முற்றாகத் துண்டிப்பு

leave a comment »

மூதூருக்கான தரைவழிப் போக்குவரத்துகள் முற்றாகத் துண்டிக்கப்பட்ட நிலையிலிருப்பதால் அங்குள்ள மக்களுக்கான உணவு விநியோகம் சிரமத்துக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கபடுகின்றது மூதூருக்கு வருகின்ற அல்லையூடான வீதி கிண்ணியா ஊடான வீதி ஆகியன வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, அதிக சேதத்துக்கும் உள்ளாகியுள்ளன.

இதனால் கடல் போக்குவரத்து மட்டுமே தற்போது உள்ளது. எனவே மூதூர் மக்களுக்கான உணவு விநியோகம் கடல்மார்க்கமாக மட்டுமே இடம்பெற்று வருகின்றது. நேற்று வியாழக்கிழமை தகவல்களின்படி மூதூரில் 1909 குடும்பங்களைச் சேர்ந்த 8044 பேர் இடம்பெயர்ந்து 15 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு விநியோகம் பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது

Written by lankamuslim

ஜனவரி 14, 2011 at 4:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் தாயும் அவரின் மகள்மாரும் கைது

leave a comment »

கண்டியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடினார்கள் என்ற சந்தேகத்தில் வயோதிப முஸ்லிம் தாயும், அவரது இரு புதல்விகளும் ஜனாதிபதி மாளிகை பகுதியில் பாதுகாப்புக்கு நடவடிக்கையில் கண்டி பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 3.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முஹம்மது ஹமீது உம்மா என்ற வயோதிபத் தாயும் அவரது இரு புதல்விகளுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளதுடன் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 14, 2011 at 3:59 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உள்ளூராட்சி தேர்தல்களில் முஸ்லிம் பிரதேசங்களில் அதிகமான சுயேச்சை குழுக்களை களமிறக்கதீர்கள்

leave a comment »

அஷ்ஷேய்க் மசீஹுத்தீன் இனாமுல்லாஹ் விடுத்திருக்கும் உள்ளூராட்சி தேர்தல்கள் 2011 தொடர்பான அறிவித்தலை lankamuslim.org இணயத்தளம் இலங்கை முஸ்லிம்களுக்கு முன்வைக்கின்றது அவரின் அறிக்கையில் முஸ்லிம் பிரதேசங்களில் அதிகமான சுயேச்சை குழுக்களை களமிறக்கதீர்கள்- என்ற தலைப்பில் ‘ போருக்குப் பின்னரான இலங்கையில் சிறு பான்மையினர் தமது அடையாளங்களை தக்க வைத்துக் கொள்வதில் பெரும் சவால்களை இந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் எதிர்கொள்கின்றனர்.

தேசியக் கட்சிகளிலோ, முஸ்லிம் கட்சிகளிலோ பட்டியலில் இடம் கிடைக்காதவர்கள் அல்லது அவற்றின் அரசியலில் திருப்தி காணதவர்கள் சிதறுண்டு நாடு முழுவதும் வெவ்வேறு சின்னங்களில் கேட்பதன் மூலம் முஸ்லிம் பிரதி நிதிதுவங்கள் இழக்கப் படுகின்ற அதேவேளை விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 14, 2011 at 3:24 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

வெள்ளத்தில் மூழ்கி சிறுவன் வபாத் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

leave a comment »

ஏறாவூர் பிரதேசத்தில் முகம்மது சுஹைப் என்ற 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் நேற்று மாலை அவரின் வீட்டுக்கு அருகாமையிலுள்ள சிறிய பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்த போது தவறி வீழுந்த போது வெள்ளத்தில் அடித்து செல்லபட்டு வெள்ளத்தில் மூழ்கி காணாமற்போயுள்ளார். இன்று காலை சிறுவனின் ஜனாஸா அப்பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பாரிய வெள்ளப் பெருக்கையும் மண்சரிவையும் ஏற்படுத்தியுள்ள அனர்த்தத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது காயமடைந்தவர்கள் 47 என்றும் காணாமல் போனவர் 10 பேர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 14, 2011 at 10:23 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொத்துவில் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்

leave a comment »

அம்பாறை மாவட்டம் பொத்துவில் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட மீனவர்கள் 10 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று அறிய முடிகின்றது.

கடுமையான மழையையும் பொருட்படுத்தாமல் மீன்பிடிக்கச் சென்று காணமாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கடற்படையினரின் மூன்று படகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மற்றுமொரு படகு காணாமல் போயுள்ளதாகவும் அதனைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது ஆனாலும் இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை

Written by lankamuslim

ஜனவரி 13, 2011 at 8:55 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அதாவுல்லாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

leave a comment »

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாவிற்கு எதிராக இன்று பகல் பாராளுமன்ற செயலாளரிடம் எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அமைச்சர் அதாவுல்லாவின் அசமந்த போக்கினை முன்மொழிந்தே ஐக்கிய தேசிய கட்சியின் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்ற செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளனர் என எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

ஜனவரி 13, 2011 at 8:47 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அனர்த்தத்தில் மரணித்தவர்கள் 23 பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 100,000

leave a comment »

பாரிய வெள்ளப் பெருக்கையும் மண்சரிவையும் ஏற்படுத்தியுள்ள அனர்த்தத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது காயமடைந்தவர்கள் 46 என்றும் காணாமல் போனவர் 2 பேர்  என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 511 முகாம்களில் 2 இலட்சம் 1 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளதுடன் 2800 வரையான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 11,338 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது சுமார் நூறு வருடங்களுக்குப் பின்னர் இந்த மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 13, 2011 at 8:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கிலும் , மத்தியிலும் மழை தனிந்துள்ளது !

leave a comment »

இன்று காளையுடன் கிழக்கு, மற்றும் மத்திய மாகாணங்களில்   மழை  தணிந்து  நாள் முழுவதும் வெயில் காணப்பட்டதாகவும் கிழக்கு மண்ணை ஆக்கிரமித்திருந்த வெள்ள நீரும் இப்போது  வடிந்து கொண்டிருப்பதாகவும் ஆனாலும்  மாலையில்     மத்திய மாகாணத்தில் பல பகுதிகளிலும் சிறு தூற்றல் ஏற்பட்டுள்ளது என்றும்.

இன்று மேற்கில் கொழும்பு , நீர்கொழும்பு பகுதிகளிலும்  வடமேற்கு  புத்தளம் ,பகுதிகளிலும்  வடக்கு மன்னார் ஆகிய பிரதேசங்களில் இன்று பகல் தொடக்கம் மழை சீரற்ற காலநிலை நிலவுவதாக எனது llankamuslim.org செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Written by lankamuslim

ஜனவரி 13, 2011 at 7:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பெய்து வரும் கடும் மழையினால் சில பகுதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் நிலை

leave a comment »

இன்று காலை தொடக்கம் மத்திய மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தொடர்ந்து பெய்து வரும் பெருமழை காரணமாக மத்திய மாகாணத்தில் பாறைகள் மற்றும் மண்சரிவு அபாயமும் கிழக்கு மாகாணத்தில் வெள்ள நீர் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக எனது மத்திய மற்றும் கிழக்கு செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

காங்கேயனோடை நெருப்பு மஸ்தான் பள்ளிவாசலில் தங்கியிருந்த நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் அகதிகள் அப்பிரதேசத்தில் வெள்ள நீர் மட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று (12.01.2011) புதன்கிழமை மாலை அங்கிருந்து அவசர அவசரமாக வேறிடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர் என்று காத்தான்குடி செய்திகள் தெரிவிக்கின்றன விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 12, 2011 at 11:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மழை அனர்த்தத்தில் மரணித்தவர்கள் 18 ஆகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 950,000 ஆகவும் உயர்வு

leave a comment »

நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 18 பேர் மரணித்துள்ளதாகவும் 9 இலட்சத்தி 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2 இலட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் 4 இலட்சம் ஏக்கர் பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது

Written by lankamuslim

ஜனவரி 12, 2011 at 9:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பெருவெள்ளத்தால் மேலும் மோசமடையும் கிழக்கு மாகாணம்

with one comment

இணைப்பு3 மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 1220 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளடன், 3452 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார் காத்தான்குடியிலும் பிரதேசத்தில் இன்று பிற்பகல் மழை மிகவும் கடுமையாகப் பெய்து வருவதாகவும் மட்டகளப்பு கல்முனை, சாய்ந்தமருது , நிந்தவூர், சம்மான்துறை பொத்துவில் திருகோணமலை கின்னியா, மூதூர் போன்ற பிரதேசங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன்

நேற்று இரவு அம்பாறை வளாத்தபிட்டிய நீர்தாங்கி இரண்டு இடங்களில் உடைப்பு எடுத்தால் நிந்தவூர், மற்றும் கரத்தீவு பிரதேசங்கள் நீரில் முழ்கியுள்ள என்று நிந்தவூர் தகவல்கள் தெரிவிக்கின்றன இது ஏற்கேனவே மோசமடைந்திருக்கும் வெள்ள அபாயத்தை மேலும் மோசமடையச் செய்திருப்பதாகவும் மழை தொடர்ந்து பெய்தால் கிழக்கிலும் ,மத்திய மாகாணங்களில் உள்ள நீர் தாங்கிகள் உடையும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது விரிவாக Video, Pic இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 12, 2011 at 7:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

The Trend மாதாந்த ஆங்கில இஸ்லாமிய சஞ்சிகை வெளிவந்துள்ளது !

with one comment

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ‘The Trend’ என்ற பெயரில் மாதாந்த ஆங்கில சஞ்சிகை ஒன்றை வெளியீட்டுள்ளது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது 50 வருட இஸ்லாமிய அழைப்பு பணியின் ஒரு மயில் கல்லாக இந்த ஆங்கில சஞ்சிகையை வெளியீட்டுள்ளது  இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ‘அல்ஹசனாத்’ என்ற மாதாந்த தமிழ் சஞ்சிகையை கடந்த 40 ஆண்டுகளாக வெளியிட்டு வருவதுடன் ‘பிரபோதைய’ என்ற மாதாந்த சிங்கள சஞ்சிகையை பல ஆண்டுகளாகவும், மாதம் இருமுறை வெளிவரும் ‘எங்கள் தேசம்’ – மானிடம் வாழும் இடமெல்லாம் எங்கள் தேசம் – என்ற தமிழ் பத்திரிகையையும் பல ஆண்டுகளாக வெளியீட்டு வருகின்றது.

இந்த முயற்சிகளின் ஒரு மயில் கல்லாக த ரேந்த் -The Trend- என்ற ஆங்கில சஞ்சிகை வெளியிட்டுள்ளது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் The Trend மாதாந்த ஆங்கில சஞ்சிகை வெளியீட்டு விழா கடந்த 11ஆம் திகதி கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் மண்டபத்தில் நடைபெற்றது விரிவாக படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 12, 2011 at 2:22 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாணம் சென்ற யாழ் முஸ்லிம்கள் நடமாடும் சேவையில் கலந்து கொண்டனர்

leave a comment »

கடந்த 9 ஆம் திகதி  யாழ்ப்பாணத்தில்  மீள் குடியேறும்  நோக்குடன் புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள்  யாழ்ப்பாணத்தில் 11 ஆம் திகதி செவ்வாயன்று  ஒஸ்மானியா கல்லூரியில் யாழ்ப்பாண அரசாங்க அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்ட  நடமாடும் சேவையில் கலந்து கொண்டு தமது மீள் குடியேற்றத்துக்கான   பதிவுகளை மேற்கொண்டுள்ளனர் என்று எமது lankamuslim.org செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

புத்தளத்தில் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த   யாழ் முஸ்லிம் மக்களின்  370 பேர் கடந்த 9 ஆம் திகதி இரவு 10 மணியளவில்  6 பஸ்களில் புறப்பட்டு யாழ்ப்பாணம்  சென்றார்கள் என்ற செய்தியை படங்களுடன் lankamuslim.org வெளியிட்டது யாழ்ப்பாணம் , கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது விரிவாக  படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 12, 2011 at 12:28 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைமையில் நிவாரண ஏற்பாடுகள்

leave a comment »

இன்று நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அதன் தலைமையகத்தில் இன்று மாலை ஒரு மகாநாட்டை ஏற்பட்டு செய்துள்ளது இந்த மகாநாட்டில் பல இஸ்லாமிய, மற்றும் பொது அமைப்புகளின் பங்குபற்றியுள்ளன.

இந்த மகாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள, ஏற்பட்டு வரும் அனர்த்த நிலையை எதிர்கொள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் வழிகாட்டலில் செயல்படுவதாக தீர்மானிக்கபட்டுள்ளது இதற்கமைய நாடு முழுவதிலுமுள்ள மஸ்ஜிதுகளின் ஊடாக நிவாரண உதவிகளுக்கான வேண்டுகோள் விடுக்கப்படுவதுடன் மஸ்ஜிதுகளின் ஊடாக நிவாரணங்களை சேகரித்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது   என்று எமது கொழும்பு lankamuslim.org செய்தியாளர் தெரிவிக்கின்றார் இது தவிர ஏற்கனவே பல முஸ்லிம் அமைப்புகள் கடந்த மூன்று நாட்களாக சமைத்த உணவு, மற்றும் மருத்துவம் என்பன வற்றை வழங்கிவருகின்றது

Written by lankamuslim

ஜனவரி 11, 2011 at 11:16 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி வெள்ள நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

leave a comment »

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நடவடிக்கைகளை இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் சமூகசேவை பிரிவு அம்பாறை , மட்டகளப்பு , திருகோணமலை ஆகிய மாவட்டங்களில்  முன்னெடுத்து வருகின்றது இந்த பிரதேசங்களில் தற்போதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களிலும் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருகின்றது.

இவர்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகளை வழங்குவற்கான நடவடிக்கைகளை ஜமாஅதே இஸ்லாமியின் சமூகசேவை பிரிவு மேற்கொண்டு வருவதாகவும் எனினும் தற்போது பெருகிவரும் வெள்ளம் இதற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் சேவையில் ஈடுபட்டுள்ள ஜமாஅதே இஸ்லாமியின் சமூகசேவை பிரிவின் இணைப்பாளர் அஜ்மல் எமது lankamuslim.org செய்தியாளருக்கு சற்று முன் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

ஜனவரி 11, 2011 at 10:18 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கில் ஓயாத மழை : மக்கள் அவதி 14 பேர் பலி : ஹெலி, படகுகளில் நிவாரணம்

with one comment

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டோர் தொகை 8 இலட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 86,344 பேர் 203 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் நேற்று கூறியது.

வெள்ளம் மற்றும் மண் சரிவினால் இறந்தோர் தொகை 14 ஆக உயர்ந்துள்ள தோடு 12 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித் துள்ளது. வெள்ளத்தினால் கிழக்கு மாகா ணத்தில் இயல்பு நிலை முற்றாகப் பாதிக் கப்பட்டுள்ளது விரிவாக Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 11, 2011 at 1:17 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளத்தில் நிருவாக அலகுகளில் பாரிய அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றது: எஹ்யா

with one comment

கடந்த வெள்ளிக்கிழமை நல்லிணக்க ஆணைக்குழுவின் புத்தளம் மாவட்டத்திற்கான அமர்வில் சாட்சியமளித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹ்யா ஆப்தீன் அவர்கள் தெரிவித்த முக்கிய விடையங்கள் இங்கு தருகின்றோம்

புத்தளம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் புத்தளம் தேர்தல் தொகுதியில் வாழுகின்ற மூவின மக்களும் பலதரப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றார்கள். புத்தளத்தில் இருக்கின்ற மக்களுடைய நிருவாக அலகுகளிலேயே பாரிய அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தை இந்த நல்லினக்க ஆணைக்குழு முன் சமர்பிக்க விரும்புகின்றேன் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 10, 2011 at 6:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடமாகாண முஸ்லிம்களின் வாக்கு பதிவு தொடர்பான முக்கிய தீர்மானம்

leave a comment »

புத்தளத்தில் வாழும் வடமாகாண முஸ்லிம்களின் வாக்காளர் பதிவு நடவடிக்கை தொடர்பாக பிரதி தேர்தல் ஆணையாளருடனான விசேட சந்திப்பின்போது   முக்கிய தீர்மானங்கள் எடுக்கபட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி எமது lankamuslim.org செய்தியாளருக்கு தெரிவித்தார்.

இதன் பிரகாரம் வடக்கிலிருந்து புலிகளின் வெளியேற்றப்பட்டு புத்தளம் பிரதேசத்தில் வாழும் வட மாகாண முஸ்லிம்களுக்காக வாக்குச்சாவடிகள் அமைப்பதை எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் பின்னார்தான் நிறுத்த வேண்டும் என்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கையையும் ஏற்று இணக்கம் காணப்பட்டதாகவும்  விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 10, 2011 at 4:01 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தொடரும் மழையினால் உயிர் இழப்புக்களும் சேதங்களும் அதிகரித்து செல்கின்றது

leave a comment »

கடும்மழை, வெள்ளம், மண்சரிவால் நாட்டின் கிழக்கு, மத்திய மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது , 10 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மத்திய மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ,மண்சரிவில் இரு பிள்ளைகள் உயிருடன் புதையுண்டுள்ளனர். சுமார் 50வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 8 இலட்சம் மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கண்டி 2ஆம் இராஜசிங்க மாவத்தையில் இடம்பெற்ற மண் சரிவினால் உயிரிழந்த 5 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது இதுவரை 9 பேர் உயிர் இழந்துள்ளனர் அன்று அறிவிக்கப் பட்டுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 10, 2011 at 11:34 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ் நோக்கி 370 பேர் 6 பஸ்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்

with 2 comments

புத்தளத்தில் வாழ்ந்து வந்த யாழ் முஸ்லிம் மக்களின் மற்றுமொரு தொகுதியினர் நேற்று இரவு யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றுள்ளனர். 1990 ஆம் ஆண்டு புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த 20 வருடங்களா புத்தளத்தில் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த இவர்கள் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று இரவு 10 மணியளவில் 370 பேர் 6 பஸ்களில் புறப்பட்டு  சென்றுள்ளனர்.

இவர்கள் புத்தளத்தில்  பெற்றுவந்த உளர் உணவு பங்கீடுகளை நிறுத்திவிட்டு யாழ்ப்பாணத்துக்கு மீள் குடியேற்றதுக்கான பதிவுகளை மேற்கொள்ளவெனவும் யாழ்ப்பாணத்தில் வாழ்வியல் சாத்திய கூறுகளை கண்டறியும் முகமாக யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணமாகியுள்ளனர் என்று எமது புத்தளம் lankamuslim.org செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் படங்கள் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 10, 2011 at 10:43 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பேர் மரணம் 7 லட்சம் பேர் பாதிப்பு 50 ஆயிரம் பேர் இடம்பெயர்வு உடமைகளுக்கு பலத்த பாதிப்பு !

leave a comment »

கண்டி, மாத்தளை, தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் பல இடங்களில் மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது அந்த பகுதிகளில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன் இன்னும் பல கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் இலங்கையின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 7 லட்சம் பேர் பாதிக்கபடுள்ளதாகவும் 50 ஆயிரம் பேர்வரை இடம்பெயர்ந்துளதாகவும் இதுவரை 4 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மட்டகளப்பு, காத்தான்குடி, கல்முனை , சாய்ந்தமருது , நிந்தவூர், பொத்துவில் ஓட்டமாவடி, திருகோணமலை கின்னியா, மூதூர் போன்ற பிரதேசங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது அங்கு கடல்படை, விமானபடை ஆகியவற்றின் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் மீட்கப்பட்டு   விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 9, 2011 at 8:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மன்னாரில் கடத்தப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை

leave a comment »

மன்னாரில் கடந்த வியாழகிழமை மாலை 5.00 மணியளவில் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளினால் 4 பேர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் கருசல் கிராமத்தை சேர்ந்த ஜகாரில் ஜஸீல் என்ற முஸ்லிம் நபரும் கடத்தப் பட்டுள்ளார் மற்ற மூவரும் தமிழர்களாகும் இவர்களில் பேசாலையைச் சேர்ந்த சாரதியான தர்மா, தோட்டவெளி பகுதியைச் சேர்ந்த சிகை அலங்காரம் செய்யும் கமல் மற்றும் பெரியகமத்தை சேர்ந்த தில்லை நாதன் ஆகியோர் தனித்தனியே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் இவர்களுடன் பிறிதொரு இடத்தில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப் பட்ட ஒரு பெண் உட்பட்ட அனைவரும் விடிவிக்கபடுள்ளனர் என்று தெரிவிக்கபடுகின்றது.

Written by lankamuslim

ஜனவரி 9, 2011 at 4:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டின் பல பாகங்களில் கடும் மழை

leave a comment »

நாட்டின் பல பாகங்களில் நேற்று மாலை தொடக்கம் கடும் மழை பெய்துவருன்றது இதனால் பல அனர்த்தங்களும் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் அறிய முடிகின்றது கொழும்பு ,கண்டி , மாத்தளை, உட்பட கிழக்கு , மற்றும் வடக்கின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது மட்டகளப்பு மாவட்டம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாகவும் இன்று காலை 4:00 மணி முதல் வீசி வரும் கடுமையான காற்று ஆகியவற்றால் மாவட்டம் மிகவும் மோசமான அநர்த்த நிலையை எதிர்கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறையினையும் மட்டக்களப்பினையும் இணைக்கும் குருக்கல் மடத்தில் அமைந்துள்ள பாலம் உடைந்து வீழ்ந்துள்ளதாகவும் இதனால் அம்பாறைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான போக்குவரத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது பெய்து வரும் மழை கண்டி மாவட்டத்திலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது

Written by lankamuslim

ஜனவரி 9, 2011 at 1:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சூடான் இரண்டாக உடைக்கப் படுகின்றது மேற்கின் திட்டம் வெற்றிபெறுகின்றது ?

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

ஒரு தொகுப்பாக: டொக்டர் யூசுப் அல் கரழாவி சூடானின் தென்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் சூடான் வடக்கு , தெற்காக பிரிவதற்கு ஆதரவாக வாக்களிக்க கூடாது என்று மார்க்க தீர்ப்பு வழங்கியுள்ளார் இந்த பிரிவினை அமெரிக்காவும் ,மேற்கு நாடுகளும் முஸ்லிம் உலகின் ஒற்றுமையை உடைக்கும் இலக்குடன் ஆதரவளிக்கும் பிரிவினை இன்று தெற்கு பிரிவினை நாளை சூடானிலிருந்து டார்பூரை பிரிக்கும் பிரிவினை தொடரும் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் இன்று மேற்கு நாடுகள் ஒன்றாக இருக்கின்றன நாம் பிரித்து போய் இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்க நாடுகளில் பெரிய நிலபரப்பை கொண்ட நாடான சூடானின் விளங்குகின்றது சூடானில் கடந்த 16 வருடங்களாக சூடுபிடித்துள்ள சூடான் அரசுக்கும் தென்பகுதி ஆபிரிக்கப் பழங்குடியின சூடான் மக்கள் விடுதலை இராணுவம்-SPLA- இடையிலான 2005 ஆம் ஆண்டு வரை நடந்த கலகத்தில் பல ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் விரிவாக பார்க்க

Written by lankamuslim

ஜனவரி 9, 2011 at 12:14 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

அஷ்ஷெய்க் ரிஸ்வான் -நளீமி வபாத்தாகியுள்ளார்

leave a comment »

நேற்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் விபத்துக்குள்ளாகி கால்கள் இரண்டையும் இழந்திருந்த சிகிச்சை பெற்றுவந்த அஷ்ஷெய்க் ரிஸ்வான் -நளீமி- இன்று மாலை வபாத்தாகியுள்ளார்-இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்-

கலியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர் நேற்று புகையிரதத்திலிருந்து இறங்க முயன்றபோது தவறி புகையிரத தண்டவாள பகுதியினுள் விழுந்துள்ளார் இரண்டு கால்களும் முற்றாக துண்டாடப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவின் விசேட கண்காணிப்பு பகுதில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் இன்று மாலை வபாத்தாகியுள்ளார்- அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை வழங்குவானாக – ஆமீன்

Written by lankamuslim

ஜனவரி 8, 2011 at 10:18 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஊடகவியலாளர் ஒருவரை தாக்கியதாக கைதான கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு பிணை

leave a comment »

கல்முனை பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த கல்முனை மாநகரசபை உறுப்பினர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கல்முனை நகரில் பிரதேச ஊடகவியலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Written by lankamuslim

ஜனவரி 8, 2011 at 6:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை இந்திய பயணிகள் கடல் போக்குவரத்து விரையில் ஆரம்பம்

leave a comment »

இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் பயணிகள் கடல் போக்குவரத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று பிற்பகல் கொழும்பில் கைச்சாத்திடப் பட்டுள்ளது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் அலரி மாளிகையில் கைச்சாத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், இந் தியா சார்பில் உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, இலங்கை சார்பில் துறை முகங்கள், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் சுஜாதா குரேயும் கைச் சாத்திட்டனர்.

இதன்படி கொழும்பு- தூத்துக்குடி, தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் போக்கு வரத்து சேவை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. முதலில் கொழும்புக்கும், தூத்துக்குடிக்குமிடையில் முதலில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 8, 2011 at 2:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக முன்னாள் யாழ்.மாநகர பிரதிமேயர் பஷீர்

leave a comment »

இனங்கள் மத்தியில் நல்லுறவு நீடித்து நிலைத்திருக்கும் வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் அமையவேண்டும் என்று யாழ்.மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.ஜீ.பஷீர் வலியுறுத்தினார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு புத்தள மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது யாழ்.மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் எம்.ஜீ.பஷீர் சாட்சியமளித்தார்.

எமது நாட்டில் நிலவிய நீண்டகால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் சகல இனங்களும் ஒன்றிணைந்து வாழ வழி ஏற்பட்டுள்ளதுடன் அது நிலைத்திருக்க நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்யவேண்டுமென’ அவர் தெரிவித்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 8, 2011 at 11:55 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விளக்கமறியலில் உள்ளவர்களுக்கு விடுதலை

leave a comment »

பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை பெறக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் குற்றஞ் சுமத்தப்பட்டவர்கள் மாகாண ரீதியிலான மேல் நீதிமன்றங்களில் பிணை கோரக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

ஜனவரி 7, 2011 at 7:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மன்னாரில் முஸ்லிம் வாலிபர் உட்பட நான்கு பேர் கடத்தல்

leave a comment »

மன்னாரில் நேற்று மாலை 5.00 மணியளவில் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளினால் 4 பேர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் கருசல் கிராமத்தை சேர்ந்த ஜகாரில் ஜஸீல் என்ற முஸ்லிம் நபரும் கடத்தப் பட்டுள்ளார் மற்ற மூவரும் தமிழர்களாகும் இவர்களில் பேசாலையைச் சேர்ந்த சாரதியான தர்மா,  தோட்டவெளி பகுதியைச் சேர்ந்த சிகை அலங்காரம் செய்யும் கமல் மற்றும் பெரியகமத்தை சேர்ந்த தில்லை நாதன் ஆகியோர் தனித்தனியே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

ஜகாரில் ஜஸீலை வெள்ளை நிற டொல்பின் வேனில் கடத்திச்செல்லும் போது அவரின் உறவினர்களும் நண்பர்களும் அவரை விடுவிக்க கடுமையாக முயன்றும் முடியாது போயுள்ளது ஜகாரில் ஜஸீலை கடத்தி வேனில் கொண்டு செல்லும் செய்தியை அறிந்து கொண்ட அவரின் தாயின் சகோதரியும் அவரின் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 7, 2011 at 6:02 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் மீள் குடியேற்றம் தொடர்பான பொய்யான தகவல்கள்

leave a comment »

யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பாக தெரிவித்துள்ள செய்தியில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது சொந்த பிரதேசங்களில் தற்போது மீள் குடியேறி வருவதாகவும் இதுவரை 650 வரையான குடும்பங்கள் தம்மை யாழ்ப்பாணத்தில் பதிவு செய்துள்ளதாகவும் இருப்பினும் சிலர் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறத் தவறினால் அவர்களின் யாழ்ப்பாண பதிவுகள் ஏற்றுகொள்ளப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளதாக பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவாதாகவும் அதில் எந்த வித உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் தாம் விரும்பும் எந்த நேரமும் யாழ்ப்பாணம் வரலாம் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எந்த பாகுபாடும் இன்றி தான் செய்து கொடுக்க தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 7, 2011 at 8:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

308 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல்: அரசாங்கம் அறிவிப்பு

leave a comment »

308 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுமென அரசாங்கம் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால் நேற்று நள்ளிரவு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டிலுள்ள 330 உள்ளூ ராட்சி மன்றங்களில் 308 மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.

பதவிக்காலம் குறைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்தும் பொருட்டும், அதன் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமைய விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 7, 2011 at 7:23 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு நோக்கி முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பயணம் !!

leave a comment »

வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு புலிப் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்டு கடந்த 20  ஆண்டுகளாக புத்தளத்தின் பல பகுதிகளில் வசித்து வரும் முஸ்லிம்களில் தமது புத்தள பதிவுகளை தாங்கள் பெற்றுவந்த உளர் உணவு பங்கீடுகளையும் நிறுத்திவிட்டு வடமாகாணம் நோக்கி ஒரு தொகுதியினர் எதிர் வரும் 9 ஆம் திகதி செல்லவுள்ளனர்.

இவர்களில் மன்னார் ,யாழ்ப்பாணம் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களின் தகவல்களை பதிவு செய்யும் வேலை புத்தளத்தின் பல பகுதிகளில் நடைபெறுகின்றது இன்று வரை மன்னாரை சேர்ந்தவர்கள் 500பேர் வரையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் 200 பேர் வரையும் குடும்பம் என்ற வகையில் பதிவுகளை செய்துள்ளது என்று எமது புத்தளம் lankamuslim.org செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 6, 2011 at 5:37 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டகளப்பு உன்னிச்சை கிராமத்து முஸ்லிம்கள் 25 ஆண்டுகளின் பின்னர் மீள் குடியேற்றம் !

leave a comment »

மட்டகளப்பு மாவட்டம் உன்னிச்சை இருநூறுவில் கிராமத்து மக்கள் 1985 ஆம் ஆண்டு புலி பயங்கரவாதத்தால் அவர்களின் சொந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்டனர் மட்டகளப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமான பயங்கரவாதத்தின் பாதிப்புகளை அனுபவித்தவர்களில் இவர்களும் முதன்மையானவர்கள் இவர்களின் 25 ஆண்டுகால வாழ்கையில்  திருப்பு முனையாக இவர்களில் 400 குடும்பங்களை மீள் குடியேற்ற தேவையான நடவைக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்னும் சில வாரங்களில் இவர்கள் தமது சொந்த பிரதேசத்தில் மீள் குடியேற முடியும் என்று வவுணதீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார் இதற்கான ஏற்பாடுகளை அலி சாஹிர் மௌலானாவும் மேற்கொள்வதாக தெரிவிக்கபடுகின்றது.

கொலை, கொள்ளை, தீவைப்பு, பாலியல் வன்முறைகள் என்று அணைத்து வதைகளையும் சுமந்தவர்கள். இவர்கள் தமது சொந்த பிரதேசத்தை விட்டும் விரட்டப்பட்டு இந்த ஜனவரி மாதத்துடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றது இவர்கள் வடக்கு முஸ்லிம்களை விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 6, 2011 at 10:29 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிங்களவர்கள் மட்டுமே இலங்கையின் தேசிய இனம்: உதய கம்மன்பில

with one comment

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாச்சியமளிதுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில நேற்றைய ஆணைக்குழுவின் அமர்வின்போது தெரிவித்த கருத்துகளில் முக்கியமான விடையங்களை மட்டும் இங்கு தருகின்றோம் இலங்கையை பொறுத்தவரை சிங்கள மக்கள் மட்டுமே ஒரு இனமாக கருத முடியும் அந்த வகையிலேயே எமது வரலாறு கலாசாரம் அமைந்துள்ளது.

இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அங்கு அவர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக பார்க்கலாம் அதாவது தாய் மக்களின் நாடு தாய்லாந்து போன்று ஜப்பானியர்களின் நாடு ஜப்பான் இலங்கையின் தேசிய இனமாக சிங்கள மக்களை மட்டுமே பார்கலாம்  அவர்கள் சுயாட்சியையே  சுய நிர்ணய உரிமைகளையோ கோரமுடியாது சிறு மக்கள் பிரிவினருக்கு உள்ள உரிமையையே அனுபவிக்கமுடியும் எஎன்று தெரிவித்துள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 6, 2011 at 9:34 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வன்னி பாராளுமன்ற உறுப்பினராக பாருக் பதவிப் பிரமாணம்

leave a comment »

வன்னி பாராளுமன்ற உறுப்பினராக பாரூக் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் மாரடைப்பு காரணமாக வபாத்தானார் அதை தொடர்ந்து வெற்றிடமான வன்னி பாராளுமன்ற இடத்துக்கு எம்.பீ. பாரூக் நியமிக்கட்டுள்ளார் இவர் கடந்த தேர்தலில் நூர்தீன் மசூருக்கு அடுத்தபடியாக வாக்குகளை பெற்றிருந்தார்

மர்ஹும் நூர்தீன் மசூர் விட்ட இடத்திலிருந்து வன்னி மாவட்ட மக்களுக்கு சேவையாற்றப்போவதாக தெரிவித்துள்ள புதிய பாராளுமன்ற உறுப்பினரான பாருக் மன்னார் பெரிய புல்லாச்சி பொற்கேணியை பிறப்பிடமாக கொணடவரென்பதும், தற்போது சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

ஜனவரி 5, 2011 at 3:48 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தின் போது

leave a comment »

எல்லை நிர்ணயக் குழுவை அமைப்பதைத் தவிர்க்கவே உள்ளூர் அதிகார சபைகள் -விசேட ஏற்பாடுகள்- சட்ட மூலத்தை நிறைவேற்றுவதை அரசு பிற்போட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டிய ஐ.தே.க. இது தொடர்பில் தம்முடன் செய்துகொண்ட இணக்கப்பாட்டை அரசு உடைத்து விட்டதாகவும் கூறியுள்ளது

உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் தொடர்பில் ஒரு விடயத்தைத் தவிர ஏனையவற்றிற்கு நாம் இணங்கினோம். பாராளுமன்றத்தில் அதனை நிறைவேற்றுவதற்குத் தயாராகவே நாம் வந்தோம். ஆனால், இன்று இச் சட்டமூலத்தை நிறைவேற்றாது பிற்போடுவதாக அரசு கூறுகின்றது என்றும் நேற்று தெரிவித்துள்ளார் விவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 5, 2011 at 12:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு, கிழக்கில் தொடர்ந்து அடைமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

leave a comment »

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் அடங்கலாக சில மாவட்டங்களில் அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக எமது பிரதேச நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

அடைமழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அவ்வாறான வீதிகள் ஊடான வழமையான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 5, 2011 at 10:13 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரிட்டனில் இஸ்லாத்தை ஏற்று கொள்பவர்களின் எண்ணிக்கை 100,000 த்தை எட்டுகின்றது !

leave a comment »

பிரிட்டனில் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை  ஒரு லட்சியத்தை-100,000- எட்டுகின்றது இவர்களில் பிரிட்டிஷ்  பெண்கள் இஸ்லாத்தை ஏற்று கொள்பவர்களில் முன்னிலையில் உள்ளனர் என்று நேற்று-3.01.2011- லண்டனில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாக வோல்ஸ் ஒன்  லைன்-walesonline- தெரிவித்துள்ளது.

அந்த ஆய்வறிக்கை நம்பிக்கை விவகாரங்கள் -Faith Matters- என்ற அமைப்பு சார்பில் கெவின்  பிரிஸ்-Kevin Brice-  என்ற  ஸ்வன்சியா பல்கலை கழக -Swansea University-ஆய்வாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது    அதன் கணக்கெடுப்பில்   பிரிட்டனில் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டில் 600,00 ஆயிரம் வரை இருந்து தற்போது 900,00 ஆயிரம் தொடக்கம் 1 லட்சம் -100,000 – வரையில் அதிகரித்திருக்கும் என்று  தெரிவித்துள்ளது , கடந்த ஆண்டில் மட்டும் 2010- பிரிட்டனில் 5200 பேர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றது விரிவாக பார்க்க

Written by lankamuslim

ஜனவரி 5, 2011 at 10:02 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாராளுமன்றத்தில் உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம்

with one comment

உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்டமூம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலம்  இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று  பிரதமர் தி. மு. ஜயரத்ன இரு தினங்களுக்கு முன்னர்   தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது

Written by lankamuslim

ஜனவரி 4, 2011 at 4:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மன்னார், புத்தளம் நோக்கி நல்லிணக்க ஆணைக்குழு

leave a comment »

கடந்த வருடம் மே மாதம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எதிர்வரும் 7ஆம் திகதி தொடக்கம் ,9ஆம் திகதி வரையான நாட்களில் புத்தளம் மற்றும் மன்னாருக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்ட செயலகத்திலும் 8ஆம் திகதி சனிக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் நானாட்டான் மற்றும் சிலாவத்துறை மக்களுக்கான அமர்வு இடம்பெறவுள்ளது

8ஆம் சனிக்கிழமை திகதி மாலை மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்திலும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மடு உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்திலும் பொதுமக்களின் சாட்சியங்களை ஆணைக்குழு பதிவுசெய்யவுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 4, 2011 at 9:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு மீண்டும் உறுப்பினர் பதவி !

leave a comment »

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், 19 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரப்பூர்வமான நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்தியாவின் இந்தப் பொறுப்பானது இரண்டு ஆண்டுகள்(2011-2012) வரை நீடிக்கும். இந்தப் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுடன் சேர்ந்து ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் நாடுகளும் பங்கேற்கின்றன. ஆங்கில எழுத்துகளின் அகர வரிசைப்படி ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாடு பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பினை ஏற்றுச் செயல்படும் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 4, 2011 at 8:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈரான் அமெரிக்க உளவு விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது !

leave a comment »

ஈரான் இரண்டு அமெரிக்க ஆளில்லா உளவு விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது என்று ஈரான் புரட்சி பாதுகாவலர் இராணுவ முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிபிடுகையில் அமெரிக்கா வழமையாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வான் எல்லைகளை அத்துமீறுவது வழக்கம் ஆனால் சில வேளைகளில் எமது மண்ணிலும் அத்துமீறுகின்றது என்று நேற்று -2.01.2011 – தெரிவித்துள்ளார்

ஈரான் புரட்சி பாதுகாவலர் இராணுவ முக்கிய அதிகாரி மேலும் கருத்துரைகையில் எனது பிராந்தியத்தில் உள்ள அணைத்து எதிரிகளின் தளங்களையும் தாக்கக்கூடிய வல்லமை எமக்கு உண்டு முன்னர் எமது கடல் பரப்பில் எதிரிகளின் நாசகாரி கப்பல் வந்தால் அது ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது இன்று அது மாறிவிட்டது எதையும் தாக்கும் வல்லமை ஈரான் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் விரிவாக

Written by lankamuslim

ஜனவரி 3, 2011 at 12:20 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்தும் கூட்டாகவும் போட்டி

leave a comment »

நடைபெரபோகும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சில இடங்களில் தனித்தும் வேறுசில இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டாகவும் போட்டிடபோவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி மன்றங்களையும் ஜனவரி 10ஆம் திகதி கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் நாளை 04.01.2011 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் அதன் பெயரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்று மாற்றியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Written by lankamuslim

ஜனவரி 3, 2011 at 9:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நடைமுறையில் உள்ள தேர்தல் முறையில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் !

leave a comment »

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் நாளை 04.01.2011 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பிரதமர் தி. மு. ஜயரத்ன தெரிவித்துள்ளார். அந்த திருத்தசட்டமூலம் தொடர்பில் விவாதிப் பதற்கும், கருத்துக்களை முன்வைப்பதற்கும் பிரதான எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அவகாசம் வழங்கப்படும் எனவும்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ள உள்ளூராட்சி தேர்தல் முறையின் கீழ் இடம்பெறும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலங்கள் மார்ச் மாதம் நிறைவடைய வுள்ளது நேற்று மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

ஜனவரி 3, 2011 at 8:43 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மீள் திரும்பும் யாழ் முஸ்லிம்களின் மீளாத் துயரம்: ஒரு மனிதாபிமான வேண்டுகோள்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்:புத்தளத்தில் தாங்கள் பெற்றுவந்த (உணவு)பங்கீடுகளை நிறுத்திவிட்டு நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்கு மீள் குடியேற சென்ற  முஸ்லிம்களின் மீள் குடியேற்ற பதிவுகள் மீள் குடியேற்ற செயற்பாடுகள்  ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.  இது யாழ் முஸ்லிம்கள்   மீண்டும் கூட்டாக அதிகளவில் திரும்புவதில் எதிர்மறையான பாதிப்பை உண்டாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை யாழ்ப்பானத்திலிருந்து 1990 ல் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் 558 குடும்பங்கள் யாழ் திரும்பியுள்ளனர். இவர்களில் பெரும்பாலான குடும்பங்கள் புத்தளத்திலும் கூட எவ்வித வாழ்வாதாரமுமற்ற நில உடமையற்ற குடும்பங்களாகும். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் ,பள்ளிவாசல்கள் , மதரசாக்கள் போன்ற  பொதுவிடங்களில் தங்கி வருகிறார்கள். சென்ற வாரம் மேலும் 89குடும்பங்கள் மீள் திரும்பியதை  தொடர்ந்து அப்பொது தங்குமிடங்கள் நெரிசலுக்கு உள்ளாகியுள்ளன விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2011 at 9:56 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது