Lankamuslim.org

துருக்கி:கட்சியின் மாநாட்டில் பிரதமர் அர்துகான் , ஜனாதிபதி முர்ஸி, ஹமாஸ் தலைவர் உரை

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்:  இஸ்லாமிய பின்புலத்தை கொண்ட துருக்கியை ஆளும் நீதிக்கும் ,அபிவிருத்திக்குமான கட்சியின் மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் இடம்பெற்றுள்ளது .அதில் துருக்கி பிரதமர் ரஜப் தையூப் அர்துகான் உரையாற்றியுள்ளார். அந்த மாநாட்டில் எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸியும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார் . நீதிக்கும் ,அபிவிருத்திக்குமான கட்சியின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கலந்து கொண்ட குறித்த மாநாட்டில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் அடங்களாக சில வெளிநாட்டு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர் .

அங்கு உரையாற்றிய துருக்கி பிரதமர் ரஜப் தையூப் அர்துகான் (துருக்கியில்) ‘ நாட்டில் இராணுவ சதிப் புரட்சிகளின் காலம் முடிந்து விட்டது’ என்றும் இஸ்லாமிய பின்புலத்தை கொண்ட ஆளும் கட்சி ஒரு தசாப்தகாலம் அதிகாரத்தில் இருந்ததன் பின்னர் முஸ்லிம் உலகிற்கு ஒரு உதாரணமாக உருவாகியுள்ளது. என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த கிழமை துருக்கிய நீதிமன்றம் சதிப் புரட்சி மூலம் துருக்கியின் அரசாங்கத்தை வீழ்த்த முயற்சித்த 300 இராணுவ அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளதை தொடர்ந்து துருக்கியில் இராணுவ சதிப் புரட்சிகளின் காலம் முடிந்து விட்டது என்று பிரதமர் என்றுஅர்துகான் தெரிவித்துள்ளார் .

தொடர்ந்தும் அங்கு உரையாற்றியுள்ள பிரதமர், எங்களை நாங்கள் ‘பழமைவாத ஜனநாயகவாதிகள்’ என்று அழைக்கிறோம் .நாம் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன மீதான மாற்றம் என்பதில் கவனம் செலுத்துகிறோம் .”இந்த நிலைப்பாடு நம் நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் சென்றுள்ளது. அனைத்து முஸ்லிம் நாடுகளுக்கும் ஒரு உதாரணமாக மாறிவிட்டது.” என்றும் தெரிவித்துள்ளார் .

அதேவேளை “துருக்கி இஸ்லாத்தின் பிரகாசமான முகத்தை காட்டுகிறது” என்று ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் காலித் மிஷால் மாநாட்டில் தெரிவித்துள்ளார் . மேலும் அவர் உரையாற்றுகையில் ‘அர்துகான் நீங்கள் இப்போது துருக்கியின் ஒரு தலைவர் மட்டுமல்ல , முஸ்லிம் உலகிலும் ஒரு தலைவர் ” என்று தெரிவித்துள்ளார் .

பலஸ்தீனர்கள் தொடர்பாக உரையாற்றிய துருக்கி பிரதமர் அர்துகான் அல்லாஹ் வழங்கிய உயிர் உடலில் இருக்கும்வரை அவர்களுக்கு என்றும் துணையாக இருப்பேன் , நான் எந்த பொறுப்புக்கள ,பதவிகளை வகித்தாலும் அவர்களுடன் நான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் உரையாற்றியுள்ள எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி இரண்டு நாடுகளும் பாலஸ்தீனியர்கள் மற்றும் சிரிய மக்கள் பக்கம் நிற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  “இரத்தம் சிந்தப்படும் நிலை முடியும் வரை , கொடுமையான ஆட்சி போய் சிரிய மக்கள் தாம் உரிமைகளை அடையும் வரை நாம் சிரிய மக்கள் பக்கம் இருப்போம் , ” என்றும் தெரிவித்துள்ளார் .

சிரியா தொடர்பாக பேசிய துருக்கி பிரதமர் அர்துகான் “நாங்கள் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்: உங்கள் நிலைப்பாட்டை தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள் . வரலாறு கொடூரமான அரசுகளுடன் சேர்ந்து நிற்பவர்களை மன்னிக்காது ” என்றும் தெரிவித்துள்ளார் .

Written by lankamuslim

ஒக்ரோபர் 1, 2012 இல் 11:15 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக