Lankamuslim.org

கட்டார் அமீர் ஷேக் ஹமாத் காஸா விஜயம் ‘அரசியல் முற்றுகையை உடைக்கும் முதல் அரபு தலைவர்’

leave a comment »

ஏ.அப்துல்லாஹ் : கட்டார் நாட்டின் தலைவர் (அமீர்) ஷேக் ஹமாத் பின் கலீபா அல் அல்தானி, இன்று பலஸ்தீனில் ஹமாஸ் நிர்வாகத்தில் இருக்கு காஸாவுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொள்கிறார். கட்டார் நாட்டின் 254 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான அபிவிருத்தி திட்டத்தை காஸாவின் ஆரம்பித்து வைக்கவே இவர் காஸா செல்கிறார் .

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசால் காஸா கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் முற்றுகைக்குல் சிக்கியுள்ள நிலையில் காஸாவுக்கு உதவித் தொகையுடன் நுழையும் முதல் தலைவராக ஷேக் ஹமாத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

கட்டார் வழங்கும் நிதியில் கான் யூனுஸ் பிரதேசத்தில் வறியவர்களுக்கு 1000 வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளதுடன் இஸ்ரேலின் தாக்குதலினால் சிதைந்துள்ள காஸாவின் நகரங்களில் சிலவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

ஹமாஸ் பேச்சாளர் தாஹிர் அல் நூன் கட்டார் அமீரின் விஜயம் தொடர்பாக தெரிவித்துள்ள தகவலில் “இந்த பயணம், பெரும் அரசியல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது” என்றும் “அவர் அரசியல் முற்றுகையை உடைக்கும் முதல் அரபு தலைவர்.” என்றும் தெரிவித்துள்ளார் .

எகிப்தின் ஜனாதிபதி முஹம்மத் முர்ஷி விடுத்துள்ள அறிக்கையில், கட்டார் அமீரின் காஸா விஜயத்தை வரவேற்றுள்ளதுடன். அவரின் விஜயம் பிரதேசத்தின் மக்கள் மீதான முற்றுகையை உடைக்கும் எகிப்தின் முயற்சியின் ஒரு பகுதி என்றும் தெரிவித்துள்ளார் .

கடந்த ஆண்டு இஹ்வான்கள் எகிப்தின் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர். அதன் செல்வாக்கை பிராந்தியத்தில் செயல்படுத்துவதன் வெளிப்பாடுதான் கட்டார் அமீர் ஷேக் ஹமாத்தின் உதவிக் தொகையுடன்  காஸாவுக்கான விஜயம் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர் .

கட்டார் நாட்டின் தலைவர் (அமீர்) ஷேக் ஹமாத் பின் கலீபா அல் அல்தானி பலஸ்தீன விடுதலை அமைப்புக்களை ஒன்றுமை படுத்தும் வேலையிலும் கடந்த ஆண்டு ஈடுபட்டிருந்தார். என்பதும் அரபு பிராந்திய அரசியலில் இவரின் செல்வாக்கு சாதகமாகவும் , பாதகமாகவும் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Written by lankamuslim

ஒக்ரோபர் 23, 2012 இல் 12:53 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக