Lankamuslim.org

காஸா மீதும் சூடான் மீதும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தாக்குதல்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: இஸ்ரேலிய விமாங்கள் சூடான் தலைநகர் காட்மண்டுவில் அமைந்துள்ள ஆயுத தொழில்சாலையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. என சூடான் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக கருது வெளியிட்ட சூடான் கலாசார ,மற்றும் தகவல் அமைச்சர் அஹ்மத் பிலால் ஒஸ்மான் எமக்கு இஸ்ரேலை தவிர வேறு எதிரிகள் கிடையாது அவர்கள்தான் இந்த தாக்குதல் நடத்திருக்கவேண்டும் . சூடான் உரிய நேரத்தில் இதற்கு பதில் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவித்துள்ள தகவலில் நான்கு விமானங்கள் கிழக்கு பக்கத்தில் இருந்து வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது , இதை பலரும் பார்த்துள்ளார்கள் . தாக்கப்பட்ட ஆயுத தொழிச்சாலை எமது நாட்டின் இராணுவத்துக்கான ஆயுதங்களை தயாரிக்கும் இடமாகும் , ஆனால் இஸ்ரேல் இந்த ஆயுதங்கள் ஹமாஸுக்கு சென்று கிடைப்பதாக கருதுகிறது அதன் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார் .

இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் , இருவர் காயமடைந்துள்ளனர். இதற்கு முன்னரும் இஸ்ரேல் சூடான் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படை பலஸ்தீனிய காஸா மீது நடத்திய தாக்குதலில் ஐந்து பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காசாவின் வடக்கு எல்லைப் பகுதியில் இரண்டு தடவைகள் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே நேற்று இரவு மூன்று பலஸ்தீனிய போராளிகள் இந்த பகுதியில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்த தாக்குதல்களுக்கான பதில் தாக்குதல்களை ஹமாஸ் மேற்கொண்டு வருகிறது .பாலஸ்தீனத்தின் போராளிகள் குழு ஒன்றை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலின் இராணுவத் அதிகாரி ஒரோவர் தெரிவித்துள்ளார்.

கட்டார் அமீர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு காஸா வந்து சென்றதை தொடர்ந்து இஸ்ரேல் இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

Written by lankamuslim

ஒக்ரோபர் 24, 2012 இல் 8:36 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக