Lankamuslim.org

அநுராதபுரம் மல்வத்து ஒழுங்கை மஸ்ஜித்துக்கு நிதி கிடைத்துள்ளது ஆனால் நீதி ?

with one comment

 M.ரிஸ்னி முஹம்மட்:  ஹஜ்ஜுப் பெருநாள் தினமான கடந்த சனிக்கிழமை அதிகாலை  பெளத்த மக்களை பெரும்பான்மையாக கொண்ட அநுராதபுரம் நகரில் இரண்டாவது தடவையாகவும் எரியூட்டப்பட்ட ‘மல்வத்து ஒழுங்கை மஸ்ஜித்துக்கு’ இன்று பகல் பாதுகாப்பு எதுவும் வழங்கப்பட வில்லை.

அதேவேளை எரியூட்டப்பட்ட மல்வத்து ஒழுங்கை மஸ்ஜித்தை பார்வையிட நேற்று வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ் .எம் ரஞ்சித் சென்றுள்ளார் . இதன்போது மஸ்ஜித் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அவர் மஸ்ஜித்தை மீள்நிர்மாணம் செய்வதற்கு 5 லட்சம் ரூபாவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளதுடன்.  இன்று -31.10.2012- அந்த தொகையை முதலமைச்சர் அளுவலங்கம் வந்து பெற்றுகொள்ளுமாரும் குறித்த மஸ்ஜித் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார் .

அதேவேளை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் நேற்று முன்தினம் 29ஆம் திகதி மஸ்ஜிதை பார்வையிட்டதுடன் மீண்டும் இதனைப் புனரமைத்து தொழுகையை நிறைவேற்றுமாறும் இதற்காக தன்னால் முடியுமான உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார் .

ஆனால் மஸ்ஜித் எரியூட்டலுடன் சம்பந்தபட்ட எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. குறித்த மஸ்ஜித் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரும் எரியூட்டப்பட்டுள்ளது. அப்போதும் எவரும் கைதுசெய்யப் படவில்லை. என்று குறித்த மஸ்ஜித்தின் முன்னாள் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார் .

அதேவேளை ஆளும் தரப்பு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ள தகவலில் அநுராதபுரம் மஸ்ஜித் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஜனாதிபதி போலீஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .

அநுராதபுரம் நகரின் மல்வத்து ஒழுங்கை மஸ்ஜிதுத்க்கு நிதி கிடைக்கலாம்   ஆனால் நீதி ? இதுவரை  கிடைக்கவில்லை. இந்த மஸ்ஜித்துக்கு மட்டுமல்ல இலங்கையில்  தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள எந்த மஸ்ஜித்துக்கு  நீதி கிடைக்கவில்லை என்பதுதான் இலங்கை முஸ்லிம்களின் மனப்பதிவாகும் .

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 இல் 2:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. நிதியோ, நீதியோ கிடைக்காவிட்டால் கூடப் பரவாயில்லை. இனிமேலாவது இது போன்ற இறைவழிபாட்டுத் தலங்கள் மேலான அடாவடித்தனமான குற்றச் செயல்கள் நடவாமல் இருப்பதை அரசு உறுதி செய்யூமா?

    இது மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி! இதற்குக் கொடுக்கப்படும் பதிலிலிலேயே முஸ்லிம்களின் பதற்றமும், அச்சமும், அமைதியின்மையூம் அகலும்! அல்லது நீடிக்கும்!!

    nizamhm

    ஒக்ரோபர் 31, 2012 at 6:42 பிப


பின்னூட்டமொன்றை இடுக