Lankamuslim.org

தீ வைப்பு: குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டியது பொலீஸாரின் பொறுப்பாகும்: அமைச்சர் ரிஷாத்

with 3 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: அநுராதபுரத்தில் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தீ வைப்பு சம்பவத்தின் பின்னணயில் உள்ளவர்களை கைது செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது பொலீஸாரின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில். வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன்,இவ்விடயத்தில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு பொலீஸ் அதிபரிடம் வேண்டுகோளொன்றையும் விடுத்துள்ளார்.

அநுராதபுரத்தில் பள்ளிவாசல் தீவைக்கப்பட்டது முஸ்லிம்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.இவ்வாறான சம்பவங்கள் இனி மேலும் நடை பெறுவதற்கு இடம் கொடுக்க முடியாது.இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும்,அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பொலீஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார்.

அதே வேளை இன்று(20120.10.31) காலை வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.றன்ஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன்,பள்ளிப் புனரமைப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடினார்.இப்புனரமைப்பு பணிக்கு முதலமைச்சர் 5 இலட்சம் ரூபாவினை வழங்க முன்வந்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 இல் 9:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. குற்றச் செயல்கள் நடந்தால் அதனைக் கண்டு பிடிக்கும் பொறுப்பு பொலிஸாருடையது என்று யாரும் கூறினால்தான் அவர்களுக்குத் தெரியூமோ எனக் கேட்கத் தோன்றுகின்றது.

    கண்டு பிடிப்பது போலிஸாரின் கடமை. அதனை யாரும் அவர்களுக்குக் கூற வேண்டியதில்லை. ஆனால் கண்பிடிக்காமல் இருக்கும்படி கூறாமல் இருந்தால் போதுமானது.

    nizamhm

    ஒக்ரோபர் 31, 2012 at 10:49 பிப

  2. azwar nana innum arikkai vidavillaye.

    analyser

    ஒக்ரோபர் 31, 2012 at 11:15 பிப

  3. முதலில் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வகை செய்யுங்கள் அல்லது சர்வதேச முஸ்லிம் உம்மாவிடமாவது முறையிடுங்கள் எத்தனை நாளைக்கி எதுவுமே செய்யாமல் காலம் கடந்தும் ஜனாதிபதின் அதிகாரிகளை நம்பி அவர்களிடம் முறையிட்டுகொண்டிருப்பது எங்கேயோ நடக்கிறது என்று அதீத அக்கரை அற்று இருந்தால் நாளை நமக்கும் நம் ஊருக்கும் இந்த நிலையாக வெகு காலமாகாது ஆதலால் அரசியல்வாதிகளை இது குறித்து நடவடிக்கை எடுக்க சிவில் அமைப்புகள் அழுத்தம் கொடுக்க வேணடியதும் இந்த வன் முறைகள் குறித்து சர்வதேசம் அறிந்துகொள்ள வகை செய்வதும் காலத்தின் தேவை???

    PMAMF Mohammed H.I.R.A.Z

    நவம்பர் 1, 2012 at 8:34 முப


பின்னூட்டமொன்றை இடுக