Lankamuslim.org

ஜனாதிபதி பிழையான தகவலால் வழி நடாத்தப் பட்டாரா?

with 2 comments

கொம்பனித்தெரு பகுதியிலுள்ள வீடுகளை  இடித்து தகர்த்து அகற்றியமை பற்றி ஆஸாத் சாலி

கொம்பனித்தெரு பகுதியிலுள்ள வீடுகளை  இடித்து தகர்த்து அகற்றியமை பற்றி கருத்து தெரிவித்துள்ள கொழும்பு நகர முன்நாள் பிரதிமேயர்  ஆஸாத் சாலி   கொம்பனித்தெருவில் வசிக்கும் ஒரு சிலர் என்னுடன் தொடர்பு கொண்டு மியூஸ்  வீதியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான 21 வீடுகளை உடைப்பதற்கு  உள்ளதாகவும் அதனால் உடனடியாக அவ்வீடுகளை விட்டும் வெளியேறுமாறு அறிவித்தல் வந் துள்ளதாகவும்  தெரிவித்தார்கள்

அப்போது நான் வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்திக்க விருப்பதாகவும்  அதற்கு முன்னர் எனக்கு அது சமந்தமான அனைத்து ஆவணங்களையும் கொண்டுவந்து தருமாறு கேட்டு கொண்டேன் எனிலும் எந்தவொரு தகவல் களையும்  எனக்கு தரவில்லை

எனினும்  நான் ஜனாதிபதியை சந்தித்த போது  இவ்வீட்டு பிரச்னை சமந்தமாக பேசினேன் அதாவது இவ்விடத்தில் இவர்கள் கடந்த 85 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றார்கள் அதனால் ஒன்றும் செய்து விடவேண்டாம்  என்றேன் அதனை அவர் ஏற்றுகொண்டார் விரிவாக பார்க்க

அதன் பிற்பாடு ஜனாதிபதிக்கு யாரோ பிழையான தகவல் ஒன்றை கொடுத்துள்ளனர் . அதாவது இவ்விடத்தில் இறைச்சிக்கடை இருந்ததாகவும் மூன்று  மாதத்துக்கு முன்னர் தான் இவ்விடத்தில் வீடு  கட்டியதாகவும் அவருக்கு பிழையான தகவல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது

நகர அபிவிருத்தி அதிகார சபையினர் வீடுகளை உடைபதட்கு அங்கு வந்தபோது சிலர் என்னிடம் வந்து நான் கேட்ட அனைத்து ஆவணங்க ளையம் சமர்ப்பித்தனர் அப்போது   நான் ஜனாதிபதியோடு தொடர்பு கொண்டேன் அவர் கண்டிக்கு சென்றிருந்தார் அதனால் எனக்கு அவருடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை

எனினும் நாம் அவர்கள் அனுப்பிய அனைத்து ஆவணங்களையும் வைத்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுபியுள்ளேன் இது சமந்தமாக மிக விரைவில்  ஜனாதிபதியுடன் கலைந்துரையாடி நல்ல ஒரு தீர்வினை பெற்று கொடுப்பேன் இதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ  செய்திருந்தாலும் வேறு யார் செய்திருந்தாலும் சரி இதனை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்

இதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ  செய்திருந்தாலும் வேறு யார் செய்திருந்தாலும் சரி இதனை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்
ஒரு சில அரசியல் வாதிகள் இப்பிரச்சினையில் என்னை மாட்டிவிட முயல்கிறார்கள் குறிபிட்ட அரசியல் வாதிகள் என்மீது குற்றம் சாட்டுவது போலியாகும்

அங்குள்ள மக்கள் ஒரு அரசியல் வாதியிடம் இந்த வீட்டு  பிரச்சினையை ஒப்படைக்காமல் பலரிடம் ஒப்படைத்துள்ளனர் இதன் காரணமாக இப்பிரச்சினை விடையத்தில் தன்னால் சுயாதீனமாக இயங்க முடியாது போய்விட்டது . மிக விரைவில் ஜனாதிபதியோடு பேசி அவர்களுக்கு நல்லதொரு தீர்ப்பை பெற்று கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

மே 17, 2010 இல் 11:38 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. பார்த்தீர்களா எவ்வாறு வக்காலத்து வாங்குகிறார் என்று. ஆமா கடமயைத்தானே செய்கிறார். ………………. பொறுத்திருந்து பார்ப்போம் சொல்வது உண்மையா என்று……

    bishru

    மே 17, 2010 at 4:38 பிப

  2. சகோதரர் ஆசாத் சாலி அவர்களே ! இந்த பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு காண்பீர்கள் என்று உங்களை நாம் நம்புகிறோம் . அமைச்சரிடம் பேசுகிறோம்,ஜனாதிபதியுடன் பேசுகிறோம் என்று பிரச்சினைக்கு தீர்வு காணமல், இழுத்தடித்துக்கொண்டு காலத்தை கடத்தும் அரசியல்வாதி அல்லாமல், சமூகத்துக்காக பாடுபடும் ஒருவராக உங்களைப் பார்கிறோம். இல்லையேல் நீங்களும்………………………………………..

    Sahib

    மே 17, 2010 at 6:12 பிப


பின்னூட்டமொன்றை இடுக