Lankamuslim.org

ஸாராஹ்வின் வழக்கு மீண்டும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி

leave a comment »

ஸாராஹ் மாலினி பெரேரா  19.5.2010 நீதிமன்றில்  தன் மீது சுமத்த பட்டுள்ள குற்றங்களை மறுப்பதற்காக ஆஜரானார் நேற்று நடைபெற்ற வழக்கில் இவரின் சட்டத்தரணி ஸாராஹ் பௌத்த மதத்தை நிந்திக்க முனைய வில்லை என்றும் கிரிமினல் குற்றம் இவர் மீது சுமத்துவதற்கான எந்த அடிப்டையும் இல்லை என்றும் தனது வாதத்தை முன் வைத்துள்ளார் எனிலும் நேற்று நடைபெற்ற வழக்கை நீதிபதி ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார் இருந்த போதும் இந்த வாழ்கை மீளாய்வு செய்யுமாறு வழக்கு இலங்கை சட்டமா அதிபருக்கு- Attorney General of Sri Lanka அனுப்பிவைக்க பட்டுள்ளது என்பது குறிபிடதக்கது

இவர் மீது இரண்டு சட்டத்தின் இரு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது ஆந்த இரண்டு சட்ட பிரிவுகளும் மற்றவர்களின் மதத்தை நிந்திப்பதன் ஊடாக அவர்களை நிந்திப்பது தண்டனைக்குரிய குற்றமாக கூறுகின்றது அதன் முதல் சட்ட பிரிவில் குற்ற வாளியாக காணப் பட்டால் கூடியது ஒரு வருடமும் இரண்டாவது சட்ட பிரிவில் குற்ற வாளியாக காணப் பட்டால் கூடியது இரண்டு வருடங்களும் இரண்டு பிரிவுகளிலும் அபராதத்துடன் தண்டனையும் வழங்க முடியும் என்று அவரின் சட்டத்தரணி Lakshan Dias கூறியுள்ளார்

Written by lankamuslim

மே 20, 2010 இல் 11:46 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக