Lankamuslim.org

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்

leave a comment »


பான் கீ மூனிடம் அரசாங்கம் கோரிக்கை

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளர் பான் கீ முனை இன்று சந்தித்தார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகளின் போது இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் பலவும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்நிலையிலேயே வெளிவிவகார அமைச்சரின் இந்த அமெரிக்க விஜயம் இடம்பெற்றுள்ளது. இதன்போதே ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் அமைச்சர் மேற்கண்டவாறான கோரிக்கையினை விடுத்துள்ளார். அத்துடன் இந்த விடயத்தினை மேலும் சிக்கலாக்க வேண்டாம் என்றும் அவரிடம் தெரிவித்துள்ள அமைச்சர், நாட்டு மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார் Dailymirror

Written by lankamuslim

மே 24, 2010 இல் 4:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக