Lankamuslim.org

இப்பாகமுவ மஸ்ஜித் நிர்மாண பணிகளை மீள ஆரம்பிக்கப் பணிப்பு

leave a comment »

இணைப்பு-3

குருநாகல் மாவட்டத்தில்  இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெல்சிறிபுர கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் துரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான கோகறல்லயில் உள்ள ஹெலை பகுதியில் அமைத்துள்ள  நூர் ஜும்மாஹ் மஸ்ஜிதின் உள்பகுதியினுள் 20.5.2010 அன்று நுழைந்த பெரும்பான்மை இன   குழுவொன்று அங்கிருந்த மின்சார விளக்குகள் ஏனைய உபகரணங்கள் என்பன வற்றை அடித்து உடைதுள்ளதுடன் மஸ்ஜிதின் கட்டிட தொகுதிக்கும் சேதம் ஏற்படுத்தினர்  இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆந்த மஸ்ஜிதின் நிர்மான பணிகளை மீட்டும் தொடங்குமாறு மஸ்ஜித் நிர்வாகத்தை கேட்டுள்ளது இந்த மஸ்ஜித் தாக்கப்பட்டது தொடர்பாக இப்பாகமுவ பிரதேச செயலாளர் மேற்கொண்டு வரும் விசாரணை அறிக்கை வெசாக் விடுமுறைகளுக்குப் பின்பே தமக்கு கிடைக்கும் என்றும் எனிலும் அதற்கு முன்பே மஸ்ஜித் நிர்மான பணிகளை ஆரம்பிக்குமாறு நிர்வாகத்தினரை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுகொண்டுள்ளது

இந்த மஸ்ஜித் இட நெருக்கடி காரணமாக மஸ்ஜித்தை விரிவாக்க எடுக்கப்பட்ட முயற்சியை விரும்பாத பெரும்பான்மை இன விசமிகள்  குழுவொன்று இதை செய்துள்ளது  .  இந்த மஸ்ஜித்தை  விஸ்தீரனம் செய்வதற்கான முயற்சியில் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக மஸ்ஜித்தின்  நிர்வாக சபையினர் ஈடுபட்டு வந்த போதும் .   விசமிகள்   குழுவொன்றின்    எதிர்ப்பின் காரணமாக விஸ்தரிப்பு  நடவடிக்கை தொடர்ந்தும் தடுக்கபட்டதாகவும் .  இந்த மஸ்ஜிதை  விஸ்தீரனம் செய்வதற்கான அனுமதியை இப்பாகமுவ பிரதேச செயலாளர் வழங்கியிருந்தார் என்றும் . இதற்கிணங்க நிர்வாக சபையினர் மஸ்ஜித்தை  விஸ்தீரனம் செய்யும் நடவடிக்கையில் நேற்று முதல் ஈடுபட்டனர் என்று அங்கிருந்து நாம் பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன அதை தொடர்ந்து அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அங்கு கூடிய முஸ்லிம்கள் ஜும்மாஹ் தொழுகையை சேதமாக்க பட்ட மஸ்ஜிதுக்கு வெளியில் வீதியில் நடாத்த ஆயதங்களை செய்த போது போலீஸ்  விரிவாக பார்க்கஅதனை தடுத்துள்ளது அதை தொடர்ந்து போலீஸும் முஸ்லிம்களும் இணைந்து சேதமாக்கப்பட்ட மஸ்ஜித் துப்பரவு செய்யப்பட்டு அங்கு தொழுகையும் நடைபெருள்ளதாக அங்கிருந்து எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதுவரை மஸ்ஜித்தை தாக்கியவர்கள் எவரும் கைதாக வில்லை என்றும் அறிய முடிகின்றது

Written by lankamuslim

மே 29, 2010 இல் 11:47 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக