Lankamuslim.org

வானாறு முஸ்லிம் கிராமத்தை கந்தளாய் பிரதேசசெயலர் பிரிவுடன் இணைக்க வேண்டாம்

leave a comment »

திருமலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வானாறு முஸ்லிம் கிராமத்தை திருமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் பிரதேசசெயலர் பிரிவுடன் இணைப்பதற்கு அங்கு வாழும் முழு முஸ்லிம்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்க படுகின்றது  கந்தளாய் பிரதேசசெயலகம் சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் ஐந்து பிரதேச செயலகங்களுள் ஒன்று. வானாறு கிராமம் கிண்ணியா பிரதேச செயலகத்தின்கீழ் வருகிறது. கிண்ணியா பிரதேச செயலகம் பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்டுள்ளது. திருமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகங்களுள் சேருவில, கந்தளாய், கோமாரங்கடவல, மொரவேவா, பதவியா ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட பிரதேசசெயலகப் பிரிவுகளாகும். வானாறு முஸ்லிம் கிராமத்தை கந்தளாய் பிரதேச செயலகத்துடன் இணைப்பதன் உள்நோக்கம் தங்களுடைய பகுதியில் பெருமெடுப்பிலான சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காகவே என அப்பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே திருமலை மாவட்டத்தில் தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பல கிராமங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஊடாக சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தற்போது முஸ்லிம் கிராமங்களிலும் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பிப்பதற்கான ஒரு நடவடிக்கையே இது என்று அப்பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர் என்று செய்திகள் தெரிவிகின்றன

Written by lankamuslim

மே 30, 2010 இல் 8:44 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக