Lankamuslim.org

Archive for ஜூன் 2nd, 2010

இஸ்ரேலிய தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம்

leave a comment »

பாலஸ்தீன் காஸாவை நோக்கிச் சென்ற நிவாரண உதவி கப்பல்களின் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது இந்த தாக்குதல் இலங்கை அரசுக்கும் , மக்களுக்கும் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் . சம்பவத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் இலங்கை அரசு தனது அனுதாபத்தினையும் தெரிவிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது

முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமுகமாக நிவாரண உதவிப் பொருட்கள் கொண்ட 6 கப்பல்கள் கொண்ட நிவாரண தொகுதியை திங்ககிழமை சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய படை சுற்றிவளைத்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இதில் 6 துருக்கி நாட்டு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது இதில் 20 பேர் கொல்லப்பட்டும் பலர் காயம் அடைத்துமுள்ளனர்

Written by lankamuslim

ஜூன் 2, 2010 at 5:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற எதிர்பார்ப்பும் சவால்களும்

leave a comment »

மௌலவி B.A.S.சுபியான்

யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற எதிர்பார்ப்பும் சவால்களும் என்ற  தலையில் புத்தளம் தில்லையடியில் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய மக்கள் பணிமனை தலைவரும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருமான மௌலவி B.A.S.சுபியான்

எமது மக்கள் தற்போது தமது சொந்த பிரதேசங்களுக்கு மீட்டும் சென்று மீள் குடியேற கூடிய யுத்தமற்ற  சூழ்நிலை உருவாகியுள்ளது ஆனால் மீள் குடியேற முடியாதவாறு பல பிரச்சனைகளை எமது மக்கள் எதிர்கொள்கின்றனர் அந்த பிரச்சனைகள் என்ன ? என்பதை எடுத்து காட்டுவதும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதை ஆராய துண்டுவதும் இந்த கருத்தரங்கின்  பிரதான நோக்கம் என்றார் மேலும் அவர்  யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் வாழ்ந்த வீடுகள் , சிலவற்றிலும் , மற்றும் வர்த்தக நிலையங்களிலும் அதன் உரிமையாளர்கள் அல்லாத நபர்கள் இருந்து வருகின்றனர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 2, 2010 at 9:59 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது