Lankamuslim.org

Archive for ஜூன் 2010

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அரசாங்கம் பேசுமா ?

leave a comment »

தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் – முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் பின்னர் அரசாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தின் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் என்று நம்புவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தெரிவித்துள்ளார் இவர் தொடர்ந்து இது குறித்து தெளிவுபடுத்துகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வுகளின் அடிப்படையிலேயே பாராளுமன்ற நடவடிக்கைகளிலும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்திலும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். சிறுபான்மை அரசியல் கட்சிகளின் ஒற்றுமை தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் ஆதிக்கம் செலுத்தும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 7, 2010 at 4:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேலிய தாக்குதலில் இலங்கையை சேர்ந்த அஹமத் லுக்மான் -நலீப்- படுகாயம்

with 8 comments

இணைப்பு-1,2

இங்கு தரப்படும் படங்களில்  அஹமத் லுக்மான் மற்றும் அவரின் சகோதரி மர்யம் இடது மற்றும் மனைவி ஜெரி ஷபல் ஆகியோர் ஸ்தான்புல் வைத்தியசாலையில் காணப்படுகின்றனர்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் நிவாரண உதவி கப்பல்கள் மீது நடத்திய தாக்குதலில் இலங்கையை சேர்ந்த சில முஸ்லிம்கள் கப்பல்களில் இருந்துள்ளனர் அவர்கள் இருவர் ஒரு குடும்பத்தை சேர்ந்த 21 வயது நிரம்பிய அஹமத் லுக்மான் மற்றும் இவரின் சகோதரி தஸ்லீம் மரியம் இருவரும் சகோதரர்கள் இவர்கள் டாக்டர் லுக்மான் தாலிப் என்பவரின் பிள்ளைகள் என்று அறிய முடிகின்றது எ இதில் அஹமத் லுக்மான் காலில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் துளைத்த கடும் காயங்களுடன் தற்போது துருக்கியின் ஸ்தான்புல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார் இவர்கள் கள்- எளியவை சொந்த இடமாக கொண்டவர்கள் என்று அறிய முடிகின்றது இவர்கள் உறவினர்கள் கொழும்பு மற்றும் பேருவளை பிரதேசங்களில் வசிக்கின்றார்கள் இந்த தகவல் பற்றி எமது பேருவளை செய்தியாளர் தெரிவிக்கையில் அவர்கள் தற்போது துருக்கியில் இருப்தாகவும் உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்றும் ஆனால் கப்பலில் தாக்குதலின் பின்னர் 12 மணித்தியாலங்கள் அஹமத் லுக்மாநுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டு இருந்ததாகவும் அஹமத் தின் குடும்பத்தவர்கள் தெரிவித்ததாக எமக்கு தெரிவித்தார் அஹமத் லுக்மான்- நலீப் -என்பவர் ஆஸ்திரேலியாவில் சட்டத்துறை மாணவர் என்பதும் மரியம் என்பவர் குவைத் நாட்டில் மருத்துவ மாணவி என்றும் தெரிய வருகின்றது

அஹமத் லுக்மான் சகோதரி மர்யம் மனைவி ஜெரி ஷபல் ஆகிய மூவரும் நிவாரண உதவி கப்பலில் சென்றுள்ளனர் அஹமத் லுக்மானின் மனைவி ஆஸ்திரேலியா பெண் இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் இவர் தற்போது மூன்று மாத கற்பிணி இவரும் கப்பலில் சென்றார் இதில் சகோதரி மர்யம் மனைவி ஆகியோரும் சிறு காயம் அடைந்துள்ளனர்

அஹமத் லுக்மான், சகோதரி மர்யம், ஜெரி ஷபல் உட்பட கப்பலில் சென்ற அனைவருக்கும் Lankamuslim.org பாராட்டுகளை தெரிவிக்கின்றது

இங்கு தரப்படும் படங்களில்   அஹமத் லுக்மான் மற்றும் அவரின் சகோதரி  மர்யம் இடது மற்றும் மனைவி ஜெரி  ஷபல்   ஆகியோர் ஸ்தான்புல் வைத்தியசாலையில் காணப்படுகின்றனர்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் நிவாரண உதவி கப்பல்கள் மீது நடத்திய தாக்குதலில் இலங்கையை சேர்ந்த சில முஸ்லிம்கள் கப்பல்களில் இருந்துள்ளனர் அவர்கள்  இருவர் ஒரு குடும்பத்தை சேர்ந்த 21 வயது  நிரம்பிய   அஹமத் லுக்மான்   மற்றும் இவரின்  சகோதரி தஸ்லீம் மரியம் இருவரும் சகோதரர்கள் இவர்கள்  டாக்டர் லுக்மான் தாலிப்  என்பவரின் பிள்ளைகள்  என்று அறிய முடிகின்றது என்று தெரிவிக்க படுகின்றது இதில் அஹமத் லுக்மான் காலில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் துளைத்த  கடும் காயங்களுடன் தற்போது துருக்கியின் ஸ்தான்புல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார் இவர்கள் கள்- எளியவை சொந்த இடமாக கொண்டவர்கள் என்று அறிய முடிகின்றது இவர்கள் உறவினர்கள் கொழும்பு மற்றும்  பேருவளை பிரதேசங்களில் வசிக்கின்றார்கள்   இந்த தகவல் பற்றி எமது பேருவளை செய்தியாளர் தெரிவிக்கையில் அவர்கள் தற்போது துருக்கியில் இருப்தாகவும் உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்றும் ஆனால் கப்பலில் தாக்குதலின் பின்னர் 12 மணித்தியாலங்கள் அஹமத் லுக்மாநுக்கு   மருத்துவ  உதவி மறுக்கப்பட்டு இருந்ததாகவும் அஹமத் தின்  குடும்பத்தவர்கள் தெரிவித்ததாக எமக்கு தெரிவித்தார்  அஹமத் லுக்மான்- நலீப் -என்பவர் ஆஸ்திரேலியாவில் சட்டத்துறை மாணவர் என்பதும் மரியம் என்பவர் குவைத் நாட்டில் மருத்துவ மாணவி என்றும்  தெரிய வருகின்றது

அஹமத் லுக்மான்  சகோதரி  மர்யம் மனைவி ஜெரி  ஷபல்   ஆகிய மூவரும்  நிவாரண உதவி கப்பலில் சென்றுள்ளனர் அஹமத் லுக்மானின் மனைவி ஆஸ்திரேலியா பெண் இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் இவர்  தற்போது  மூன்று  மாத கற்பிணி இவரும் கப்பலில் சென்றார்  இதில் சகோதரி மர்யம் மனைவி ஆகியோரும்  சிறு காயம்   அடைந்துள்ளனர்

அஹமத் லுக்மான், சகோதரி  மர்யம், ஜெரி  ஷபல் உட்பட கப்பலில் சென்ற அனைவருக்கும் Lankamuslim.org பாராட்டுகளை தெரிவிக்கின்றது

Written by lankamuslim

ஜூன் 7, 2010 at 1:17 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி இன்று வெளியாகின்றது

leave a comment »

கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளை  இன்று  திங்கட்கிழமை 7ஆம் திகதி பிற்பகல் 2.30 அளவில் வெளியிடவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

இன்று  திங்கட்கிழமை 7ஆம் திகதி பிற்பகல் 2.30 அளவில் பல்கலைக்கழக ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறவுள்ள வைபவத்தின்போது வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படவுள்ளன. இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22,800 பேர் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் இந்த தொகை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது  மாணவர்கள் தொகை 1000 த்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது  அத்தோடு யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் அனைவரும் அங்கேயே தமது பாடத்துறையை தொடரவேண்டுமெனவும் எக்காரணம் கொண்டும் வேறு பல்கலைக்கழகங்களுக்கு அவர்கள் இடமாற்றம் அல்லது இணைப்புச் செய்யப்படமாட்டார்கள் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

ஜூன் 7, 2010 at 9:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று பேசும்

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு மிடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் 4.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்புக்கு முன்னோடியாக நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்று ள்ளது. ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப் பட்டுள்ளது. இச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று கலந்துகொள்வதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப்பின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி யைச் சந்திக்கும் முதலாவது சந்திப்பு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது

Written by lankamuslim

ஜூன் 7, 2010 at 8:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனையில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

leave a comment »

கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் உள்ள தேவ சாந்தி என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்றில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன அம்பாறைப் மற்றும் கல்முனை பொலிஸார் வெள்ளிக்கிழமை காலை முதல் பாண்டிருப்பு பிரதேசத்தை சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை நடத்தியுள்ளனர் அதன்போது மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை செய்திகள் தெரிவிக்கின்றது இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் இரகசிய தகவல் ஒன்றை அடுத்து செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது
குறித்த அந்த வீட்டு பின்பகுதியில் உரப்பையினுள் கிரிஸ் பூசிய நிலையில் பீப்பாய் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர் . இந்த ஆயுதங்களை வைத்திருந்தார் என்கிற சந்தேகத்தில் பேரில் வீட்டு உரிமையாளரான பொன்னையா தேவ சாந்தி -வயது 40- என்ற பெண்னும் கைது செய்யப்பட்டுள்ளார் .

Written by lankamuslim

ஜூன் 6, 2010 at 2:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் , கற்பிட்டி பிரதேசங்களில் மீன்பிடி வலைகள் பறிமுதல்

leave a comment »

புத்தளம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களின் கடற்கரைப் பகுதிகளில் 25இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் தடை செய்யப்பட்டவை என்று கூறி புத்தளம் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்ட மீன்பிடி வலைகளை அழிப்பதற்கான புத்தளம் நீதிவான் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவிக்க படுகின்றது குறித்த திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்டவை என்று தெரிவிக்கப்படும் இந்த மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதால் கடல் வளம் அழியும் அபாயம் இருக்கிறது என்பது உண்மையாக இறுப்பினும் புத்தளம் கற்பிட்டி போன்ற பகுதிகளில் முஸ்லிம் , தமிழ் , சிங்கள குடும்பங்களை சேர்ந்த மிகவும் வறிய நிலையில் உள்ளவர்கள்தான் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையால் இந்த புத்தளம் கடற்றொழில் திணைக்களம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை உடனடியாக அவர்களின் குடும்பங்களை பாதிக்கும் என்று எமது புத்தள செய்திகள் தெரிவிக்கிறது

Written by lankamuslim

ஜூன் 6, 2010 at 1:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை ஐ நா பிரதிநிதி தலைமையில் இஸ்ரேலிய மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை

leave a comment »

ஆக்கிரமிக்க பட்டுள்ள பலஸ்தீன மற்றும் சிரிய பிரதேசங்களிலுள்ள மக்களின் மனித உரிமைகளை மீறும் இஸ்ரேலிய நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபைத் தூதுக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹன தலைமை தாங்கவுள்ளார் மேற்குக் கரை, காஸா பள்ளத்தக்கு, கிழக்கு ஜெருசேலம் மற்றும் சிரியா மலைப்குன்று என்ற பிரதேசம் ஆகியவற்றில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து குழுவினர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.இலங்கை, மலேசியா மற்றும் செனகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த விசாரணை ஆணைக்குழுவில் அங்கம் விகிக்கிப்பர் .

இந்த விசேட விசாரணை தூதுக் குழு ஜூன் மாதம் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை எகிப்துக்கும், 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ஜோர்டானுக்கும், 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை சிரியாவுக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

ஜூன் 5, 2010 at 11:03 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடி புதிய வைத்தியசாலை கட்டுமான வேலைகள் பெரும்பாலும் பூர்த்தி

leave a comment »

சுனாமியால் முற்றாக அழிவடைந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் முழுமையான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது எதிர்வரும் ஜூலை மாத நடுப்பகுதியில் இப்புதிய வைத்தியசாலை பொதுமக்களின் பாவனைக்காக  திறந்து வைக்கப்படும் என்று தெரிகின்றது இவ்வைத்திய சாலையை நிர்மாணிப்பதற்காக நோர்வே நாட்டு மக்கள் சார்பாக நோர்வே செஞ்சிலுவைச் சங்கம் 670 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தது .

இதில் 470 மில்லியன் ரூபா செலவில் இப்புதிய வைத்தியசாலைக் கட்டிடம் சகல வசதிகளுடன் அழகிய தோற்றத் தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மிகுதி 200 மில்லியன் ரூபாவுக்கும் இவ்வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய உபகரணங்கள் வழங் கப்படவுள்ளன. சுனாமியின்போது முற்றாக அழிவடைந்த இவ்வைத்தியசாலையை உடனடியாக மீள மைத்துக் கொள்ள முடியாதவாறு இங்குள்ள அரசியல் தலைமைகளின் செல்வாக்குத் தாக்கம் அமைந்ததிருந்தது. அது 2006ம் ஆண்டு நடைபெற்ற நகர சபைத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் தெளிவாகவே வெளிப்பட்டது. எனினும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிப் பிரிவு மேற்கொண்ட விடாத் தொடரான நடவடிக்கைகளின் காரணமாகவே நோர்வே செஞ்சிலுவைச் சங்கத்தினர் அந்நாட்டு மக்களின் நிதிப் பங்களிப்பில் இவ்வைத்திய சாலையை முழுவதும் புதிதாக நிர்மாணிக்க முன் வந்தனர் என்று காத்தான்குடியில் இருந்து வெளியாகும் வார உரைகல் என்ற பிராந்திய பத்திரிகை தெரிவித்துள்ளது

Written by lankamuslim

ஜூன் 4, 2010 at 5:18 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேல் மேற்கொள்ளும் பயங்கரவாதத்தை எதிர்த்து இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது

leave a comment »

பலஸ்தீனத்திற்கு எதிராக  இஸ்ரேல் மேற்கொள்ளும் பயங்கரவாத யுத்தத்தையும் கஸாவில் மீது இஸ்ரேல் கடைபிடித்து வரும் அணைத்து வகையான முற்றுகையையும் கண்டித்தும் இஸ்ரேலுடனான இலங்கையின் இராஜதந்திர தொடர்புகளை கைவிடுமாறுமாறு கோரியும் இன்று வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் பெரும் ஆர்பாட்டம்  இடம்பெற்றது இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேலுக்கும்  அமெரிக்காவுக்கும்  எதிரான பதாகைகளை சுமந்து சென்றனர் மேல் மாகாண  சபை உறுப்பினர்   முஜீபுர் ரஹ்மான் மற்றும் ஊடகவிலாளர் நிசார் தீன்  ஆகியேர் கலந்து கொண்டிருப்பதை படத்தில் காணலாம்   . கஸாவில் அடக்குமுறைக்கும் பொருளாதார முற்றுகைக்கும் உட்பட்டுள்ள  மக்களுக்கான நிவாரணங்களை எடுத்துச் சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர் 60 பேர் படு காயம் அடைந்தனர் இந்த இஸ்ரேல் பயங்கரவாதத்தை கண்டிப்பது இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான நோக்கமாகும் – பிந்திய செய்திகளின் படி குறைந்தது 9 பேர் கொல்லப்படும் 50 பேர் துப்பாக்கி சூட்டு  காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்-

இஸ்ரேல் சர்வதேச சட்டத்திற்கு அடிப்பணியும் வரை அந்நாட்டுடன் இருக்கும் இராஜதந்திர உறவுகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி சுதந்திர பாலஸ்தீன நண்பர்கள் அமைப்பு Friends of free Palestine – மற்றும் சில அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன

Written by lankamuslim

ஜூன் 4, 2010 at 4:33 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாத்தளை நகரில் இஸ்லாமிய வானொலி ஒலிபரப்பு நிலையம்

with one comment

மாத்தளை நகரில் ஜம்யதுல் உலமா சபையின் நகர கிளையின் ஏற்பாட்டில் மாத்தளை F.M என்ற பெயரில் ஒரு இஸ்லாமிய   வானொலி ஒலிபரப்பு நிலையம் ஒன்று நாளை முதல் 91.6. என்ற F.M அலைவரிசையில் தனது ஒலிபரப்பை தொடங்கவுள்ளது இந்த வானொலி ஒலிபரப்பு நிலையம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தின் வார இறுதி நாட்களான சனிக்கிழமையும் ஞாயிற்றுகிழமையும்  காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணிவரையும் ஒலிபரப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது  என்று எமது மாத்தளை செய்தியாளர் தெரிவிக்கின்றார்,கல்வி , கலாச்சாரம் , சுகாதாரம் , இஸ்லாமிய சட்ட கலை , சிறுவர் நிகழ்ச்சி ,  பெண்களுக்கான நிகழ்ச்சி, குத்பா பேருரைகள் என்பன இதன் நிகழ்ச்சி தலைப்புகளாக இருக்கும் என்றும் இந்த வானொலி ஒலிபரப்பு நிலையம் மாத்தளை டவுன் மஸ்ஜித் வளாகத்தில் அமைத்துள்ள கட்டிட தொகுதியில் இயங்கும் என்று தெரிவிக்கின்றார் இலங்கையின் பல முஸ்லிம் பிரதேசங்களில்  இவ்வாறான இஸ்லாமிய வானொலி , மற்றும் தொலைகாட்சி சேவைகள் இயங்குவது குறிபிடதக்கது

Written by lankamuslim

ஜூன் 4, 2010 at 3:02 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேலிய பயங்கரவதத்தை கண்டித்து இன்று கொழும்பில் ஆர்பாட்டம்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும்  பயங்கரவாத யுத்தத்தையும்  கஸாவில்  மீது இஸ்ரேல்  கடைபிடித்து வரும் அணைத்து வகையான முற்றுகையையும்  கண்டித்தும்  இஸ்ரேலுடனான இலங்கையின் இராஜதந்திர தொடர்புகளை கைவிடுமாறுமாறு கோரியும்  இன்று  வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர்   கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் பெரும் ஆர்பாட்டம் ஒன்று  இடம்பெறவுள்ளது. கஸாவில் அடக்குமுறைக்கும் பொருளாதார முற்றுகைக்கும் உட்பட்டுள்ள  முஸ்லிம்  மக்களுக்கான நிவாரணங்களை எடுத்துச் சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்  60 பேர் படு காயம் அடைந்தனர் இந்த இஸ்ரேல் பயங்கரவாதத்தை கண்டிப்பது இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான நோக்கமாகும்

இஸ்ரேல் சர்வதேச சட்டத்திற்கு அடிப்பணியும் வரை அந்நாட்டுடன் இருக்கும் இராஜதந்திர உறவுகளை  நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி    சுதந்திர பாலஸ்தீன நண்பர்கள் அமைப்பு மற்றும்   சில அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள்  இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

Written by lankamuslim

ஜூன் 4, 2010 at 10:19 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதியால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனம்

leave a comment »

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு  குழு தலைவர்களாக  அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும்   வட மாகா ஆளுநார் ஜீ.ஏ. சந்திரசிறியும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக கைத்தொழில் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று  திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும்  மீன் பிடித்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயும் நியமிக்கப்பட்டுள்ளார்  மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரா பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரா நாடளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார்

Written by lankamuslim

ஜூன் 4, 2010 at 8:43 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளத்தில் இராஜச காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள்

leave a comment »

புத்தளத்தில் இரண்டு இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கபட்டுவருகின்றது புத்தள நகரை அண்டிய பகுதியியில் 18 காற்றாலைகளும் மற்றையது மாம்புரியில் 8 காற்றாலைகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது இவை இலங்கையின் முதல் காற்றாலை மின் உற்பத்தி நிலையயங்கள் என்பது குறிபிடதக்கது மிக விரைவில் இயங்கவுள்ளதாக தெரிவிக்க படுகின்றது இவை செனக் தனியார் நிறுவனத்தால் நிறுவப்படுகின்றது பார்பதற்கு மிகவும் பிரமாண்டமான் தேற்றத்தில் அமைக்கப்படும் காற்றாலை கோபுரங்கள் ஒவ்வொன்றும் இராஜச மூன்று விசிறிகளை கொண்டுள்ளது இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று படங்களும் எமது புத்தள செய்தியலரால் எடுக்கப்பட்டவை இதில் ஒரு படத்தில் ஒரு காற்றாலை கோபுரத்தின் அருகில் வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அந்த வேனை பார்ப்பதன் ஊடாக கோபுரங்களில் பிரமாண்டத்தை விளன்கிகொள்ளமுடியும் . இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்துள்ள கல்லடி மின் விநியோக நிலையத்துக்கு வழங்கப்பட்டு,அங்கிருந்து விநியோகப் பணிகள் இடம்பெறும் என்று தெரிவிக்க படுகின்றது

Written by lankamuslim

ஜூன் 3, 2010 at 8:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

போதைபொருள் பாவனை தவிர பாரதுரமான குற்றசெயல்கள் புத்தளத்தில் இல்லை

leave a comment »

புத்தளம்  போலீஸ் அத்தியட்சர் தெரிவிப்பு:

புத்தளம் நகரில் அமைந்துள்ள மெளலா மக்கான் மஸ்ஜித்தில் – மர்கஸ்-  ஏற்பாடு செய்யப்பட்ட    பாதுகாப்பு , சட்டம் ஒழுங்கு தொடர்பான    புத்தளம்  போலீஸ் அத்தியட்சருக்கும் பொது மக்களுக்குமான சந்திபொன்றில் உரையாற்றிய  போலீஸ் அத்தியட்சர்   தர்மசேன முஸ்லிம் பெற்றோர் தமது பிள்ளைகளை போதை பொருட்களுக்கு  அடிமையாகவிடாது பாதுகாத்து கொள்ளவேண்டும் போதை பொருள் குற்ற செயலுக்கு எதிராக நாமும் இந்த பிரதேச முஸ்லிம்களும் இணைத்து செயல்படுவோம் , தற்போது இங்கு கஞ்சாவும் அதிகம் பாவிக்க படுகின்றது இது  தவிர பாரதுரமான குற்றசெயல்கள் புத்தளத்தில் இல்லை என்று கூறலாம் என்று தெரிவித்துள்ளார் மேலும் அவர் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்யும்போது  ஹெல்மட் அணித்து செல்லுங்கள் சட்டத்தை அமுல்படுத்துவது உங்கள் பாதுகாப்புக்குதான் என்றும் ஒரு நாளைக்கு முஸ்லிம்கள் 5 தடவைகள் மஸ்ஜிதுக்கு வருவது மகிழ்ச்சி தருகின்றது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 3, 2010 at 11:21 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முல்லை முஸ்லிம்களை மீண்டும் மீள்குடியமர்த்த உத்தரவு ?

leave a comment »

முல்லை முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர் M.C.M.ஸுபைர், தொண்டர்களும்

முல்லைத்தீவு மாவட்டத்தில்  மக்களை மீள்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முல்லை மாவட்ட த்துகான மாநாட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கபடுகின்றது  எதிர்வரும் 7ஆம் திகதி இவர்களை மீள்குடியமர்த்த பணிக்கப்பட்டுள்ளது . அதே வேளை மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ கடந்த வாரம் இந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகள் பாரியளவில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கின்றனர். இவற்றை அகற்றும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே அதிகளவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளமை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 3, 2010 at 8:57 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேலிய தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம்

leave a comment »

பாலஸ்தீன் காஸாவை நோக்கிச் சென்ற நிவாரண உதவி கப்பல்களின் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது இந்த தாக்குதல் இலங்கை அரசுக்கும் , மக்களுக்கும் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் . சம்பவத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் இலங்கை அரசு தனது அனுதாபத்தினையும் தெரிவிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது

முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமுகமாக நிவாரண உதவிப் பொருட்கள் கொண்ட 6 கப்பல்கள் கொண்ட நிவாரண தொகுதியை திங்ககிழமை சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய படை சுற்றிவளைத்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இதில் 6 துருக்கி நாட்டு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது இதில் 20 பேர் கொல்லப்பட்டும் பலர் காயம் அடைத்துமுள்ளனர்

Written by lankamuslim

ஜூன் 2, 2010 at 5:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற எதிர்பார்ப்பும் சவால்களும்

leave a comment »

மௌலவி B.A.S.சுபியான்

யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற எதிர்பார்ப்பும் சவால்களும் என்ற  தலையில் புத்தளம் தில்லையடியில் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய மக்கள் பணிமனை தலைவரும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருமான மௌலவி B.A.S.சுபியான்

எமது மக்கள் தற்போது தமது சொந்த பிரதேசங்களுக்கு மீட்டும் சென்று மீள் குடியேற கூடிய யுத்தமற்ற  சூழ்நிலை உருவாகியுள்ளது ஆனால் மீள் குடியேற முடியாதவாறு பல பிரச்சனைகளை எமது மக்கள் எதிர்கொள்கின்றனர் அந்த பிரச்சனைகள் என்ன ? என்பதை எடுத்து காட்டுவதும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதை ஆராய துண்டுவதும் இந்த கருத்தரங்கின்  பிரதான நோக்கம் என்றார் மேலும் அவர்  யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் வாழ்ந்த வீடுகள் , சிலவற்றிலும் , மற்றும் வர்த்தக நிலையங்களிலும் அதன் உரிமையாளர்கள் அல்லாத நபர்கள் இருந்து வருகின்றனர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 2, 2010 at 9:59 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மீள்குடியேற சென்ற முல்லைத்தீவு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றம்

leave a comment »

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் வெளியேற்றம்

முல்லைத்தீவிலிருந்து கடந்த 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டிருந்த  முஸ்லிம்கள், நாட்டில் தற்போது சமாதானமான சூழ்நிலை உருவாகியதை அடுத்து தமது சொந்த இடமான முல்லைத்தீவிற்கு திரும்பிச்சென்றிருந்த போது முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்  நீங்கள் ஏற்கனவே குடியேறிய பகுதிகளில் இருப்பதுதான் உங்களுக்கு பொருத்தமான இங்கு மீண்டும் வருவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று கூறி சென்றவர்களை பலவந்தமாக திருப்பி அனுப்பியதாக முல்லைதீவை சொந்த இடமாகவும் மீள்குடியேற சென்று திரும்பியவருமான  எம் .ஆர்  நௌசாத் Lankamuslim.org க்கு தெரிவித்தார் இந்த சம்பவம் 29.5.2010 அன்று நடைபெற்றுள்ளது

அதே வேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறுவதற்காக சென்ற முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறுமாறு அந்த மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இராணுவத்தினர் மூலம் உத்தரவிட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் தமக்கு  தெரிவித்ததாக  தமிழ்மிரர், முஸ்லிம் காடியன் ஆகியனவும்  தெரிவித்துள்ளன மேலும் பலவழிகளில் எம்மால் இந்த தகவல் உறுதிசெய்யபட்டுள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 1, 2010 at 5:25 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் மாணவிகள் பௌத்த சாஸ்டாங்கங்களை பின்பற்றவேண்டுமா ?

leave a comment »

பாடசாலை ஒன்றுக்குள் நுழைய முன் ஜிஹாபை அகற்றும் மாணவியர்

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு 10 எல்லைக்குள்  அமைந்திருக்கும் பௌத்த பெண்கள் பாடசாலையான  பெஸிபத்தேரியன் என்ற பாடசாலையில் 1200 மாணவிகள் கற்று வருகின்றார்கள். இவர்களில் மருதானை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை சார்ந்த 600 முஸ்லிம் மாணவிகள் கற்பதாக தெரியவருகின்றது.

100 வருடங்களாக  இந்த பாடசாலை இயங்கி வருவதாகவும் பாடசாலை தொடங்கியதில் இருந்து அங்கு முஸ்லிம் மாணவிகள் கற்றுவருவதாகவும் கடந்த சில மாதங்களாக புதிதாக வந்த  பாடசாலை அதிபர்  முஸ்லிம் மாணவிகளையும்  பாடசாலையில் மாதாந்தம் நடைபெறும் பௌத்த சாஸ்டாங்கங்கள், சடங்குகள் என்பனவற்றில் கலந்து  கொள்ளுமாறு உத்தரவுகளை பிறப்பித்து நடைமுறை படுத்தி வருவதாக மாணவிகள் பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 1, 2010 at 10:29 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது