Lankamuslim.org

பாதிக்கப்பட்ட விவசாயங்களுக்கு 30 நாட்களுக்குள் நஷ்டஈடு

leave a comment »

விவசாய நிலங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக 5 குழுக்கள் கொழும்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார் வெள்ளம் காரணமாக 4 இலட்சம் ஏக்கர்களுக்கும் அதிகமான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ள

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, ஆகிய பகுதிகளுக்கு விவசாய காப்புறுதிசபைக் குழுக்கள் சென்று சேத மதிப்பீடுகளை ஆரம்பித்துள்ளன விரிவாக அடுத்துவரும் 30 தினங்களுக்குள் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது விவசாய காப்புறுதி சபையில் காப்புறுதி செய்தவர்களுக்கே முதலில் நஷ்டஈடு வழங்கப்படும். காப்புறுதி செய்யாதவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Written by lankamuslim

ஜனவரி 18, 2011 இல் 6:28 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக